Sunday, March 02, 2025

எலன் மாஸ்க்கும் கனேடிய குடியுரிமையும் !

 



ஈலன் மாஸ்க்கினை தெரியாதவர்கள் இன்றைய காலத்தில் இருக்க மாட் டார்கள் .டெஸ்ல்லா கார்களுக்கு சொந்தக்காரர் மட்டுமல்ல ஸ்ரார் லிங் ,ஸ்பேஸ் எக்ஸ் , எக்ஸ் போன்ற நிறுவனங்களுக்கும் சொந்தக்காரர் ஆவார் .. இவர் டிரம்புக்குடனான அரசியலுக்கு வரும் வரையில் இவர் ஒரு தீவிர வலதுசாரி என்ற விபரம் பலருக்கும் தெரியாத உண்மை ...

தென்னாப்பிரிக்காவில் பிறந்தாலும் இவரின் தாய் கனடாவை சேர்ந்தவர் என்பதால் இவர் கனடாவின் ஒரு பிரஜை என்பதும் குறிப்பிடத்தக்கது .அதாவது அமெரிக்க,கடா நாடுகளின் குடியுரிமையை இவர் வைத்தது இருக்கிறார் .

பிரச்சனை இங்கு எப்படி வந்தது என்றால் ட்ரம்பின் ஆதரவாளராக இவர் செயற்பட தொடங்கிய பின்னர், கடாவை பற்றி விமர்சனம் செய்த பின்னர்தான் கனேடிய மக்கள் கொதித்துழுந்து இருக்கிறார்கள் .

இவரின் கனேடிய குடியுரிமையை பறிக்க வேண்டும் என்று பெரும்பாலான மக்கள் கருதி அண்ணளவாக 250,000 பேர் பாராளுமன்றத்தில் மனு ஒன்றை கொடுத்து இருக்கிறார்கள் .பொதுவாக இப்படியான மனுவை பாராளுமன்றம் பரிசீலிக்க 500பேர் கையெழுத்து வைத்தாலே போதும் என்ற நிலையில் இங்கு 250,000 பேர் கையொப்பம் இட்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .குற்றச்சாட்டுக்களாக 25% வரி விதிப்பு ,கனடாவை அமெரிக்காவின் 51 வது மாநிலமாக இணைக்க திட்டமிடல் ,கனேடிய தேர்தல்களில் பாதிப்பை ஏற்ப்படுத்த முயற்சித்தது போன்றவை இதில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றது ,

இனி பாராளுமன்றம் என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும் ,குடியுரிமை பறிக்கப்பட போகிறதா ? இது தேச துரோக குற்றசாட்டுக்களில் அல்லது தகவல் மோசடி குற்றச்சாட்டுக்களில் சிக்கும் போதுதான் ஒருவரின் குடியுரிமையை பறிக்க முடியும் .இலகுவாக அவரது குடியுரிமையை பறிக்க முடியாதுன்றேட்வல்லுனர்கள் கருத்து தெரிவித்து உள்ளார்கள் ..

இருந்தாலும் அரசியலில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலைதான் இப்போது காணப்படுகிறது ,கீரியும் பாம்புமான ரஸ்யாவும் ,அமெரிக்காவுமே கைகுலுக்கி கொண்டுஇருக்கின்றன.இப்படி ஒரும்பவம் நடக்கும் என்று சில காலங்களுக்கு முன்னால் நினைத்து தான் பார்த்து இருக்க முடியுமா ?

மாற்றம் ஒன்றே மாறாதது




No comments: