அன்புடன் ஆனந்தசங்கரி!
தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு நீங்கள் கடிதம் ஒன்றை எழுதியிருப்பதாகப் பத்திரிகை களில் வாசித்து அறிந்தேன்.பொதுத்தேர்தல் படுதோல்வியோடு, வெளிநாட்டுச் சுற்றுலா என்ற பெயரில் இங்கிலாந்து போன நீங்கள், மீண்டும் தமிழர் விடுதலைக் கூட்டணி பெயரிலான கடிதத் தலைப்போடு உங் கள் கைவரிசையைக் காட்ட ஆரம்பித்துவிட் டீர்கள்.வெளிநாட்டில் ஏந்திய கைகளுக்குக் கிடைத்த சன்மானத்துக்கு கைமாற்றாக அங்கு ஏவப்பட்ட பணியை நீங்கள் ஆற்றுகின்றீர்கள் என்பது எங்களுக்குப் புரிகின்றது.
தலைவர் பிரபாகரனுக்கு அரசியல் விவகாரங் களில் ஆலோசனைக் கடிதம் வரையும் தகுதி யும், தைரியமும் உங்களுக்கு உள்ளதாக நீங் கள் கருதும் நிலை இருப்பது ஈழத்தமிழர்களின் துரதிஸ்டமேயன்றி வேறில்லை.கருணா என்ற தனிமனிதப் பிறழ்வுடன் - நம்பிக்கைத் துரோகியுடன் - ஒரு விடுதலைப் போராட்டத் தலைவரை இணங்கிப்போக ஆலோ சனை கூறுகின்றீர்கள்.கருணாவின் தரத்தில் இருக்கும் உங்களுக்கு ஜாரியான கருணாவுடன் நீங்கள் இணங்கிப் போவதன் வெளிப்பாடே இக்கோரிக்கையன்றி வேறில்லை.கருணாவின் கழுத்தில் விழக்கூடிய யமனின் பாசக் கயிற்றிலிருந்து கருணாவை விடுவித்தால், உங்கள் பக்கமும் யமனின் வருகை இருக்கும் என்ற பயத்திலிருந்து நீங்கி விடலாம் என நப்பாசை கொள்கின்றீர்கள் போலும்.
ஜயா சங்கரியாரே!
இப்போது நீங்கள் அரசி யலில் போக்கிடமற்ற அநாதை, வெறும் துரும்பு. தமிழர் விடுதலைக் கூட்டணியின் கடிதத் தலைப் புத் தவிர, உங்களுக்குத் தடுப்புச்சுவர் வேறேது மில்லை. எனவே, உங்களுடன் மினக்கெடுவதற்கு புலிகளுக்கு தேவையோ, அர்த்தமோ, நேரமோ இருக்காது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. எனவே, பயமின்றி உங்கள் பித்தலாட்டத்தை நீங்கள் தொடருங்கள், என்ன வேடிக்கை மனிதர் இவர்! என்று ஒரு விதூகனைப் பார்த்து, அனு பவிக்கும் வாய்ப்பு தமிழருக்குத் தொடரட்டும்.
கருணாவைப் போன்று பல துரோகங்களைத் தமது விடுதலைப் போராட்டத்தில் கண்டவர் தலைவர் பிரபாகரன், அந்தத் துரோகத் தூசு களின் பட்டியலில் மற்றொரு தூசாக வலம் வரும் தாங்கள், விடுதலை வேள்வியின் தாற் பரியம் புரியாமல் உங்களின் குள்ளநரித்தன மான அரசியலின் அங்கமாக அதைக் கருதி தத்துவம் பேச முனைகின்றீர்கள்.நீங்கள் கேட்பதை சிங்களவர்களும், முஸ் லிம்களும் தருவார்களா? என்று தலைவர் பிரபாவிடம் நீங்கள் உங்கள் கடிதத்தில் கேட் பதில் விந்தையில்லை.ஏனென்றால் கேட்டும், இரந்தும் பெறும் பிச்சைதான் உரிமை என நினைப்பவர் - கருதிச் செயற்படுபவர் - நீங்கள்.
இந்தியாவிடமும், பிற ஈழத்தமிழர் விரோத சக்திகளிடமும் ஏந்திப்பெற்ற பிச்சைக்காக நீங்கள் அப்படித்தான் கேட்க வேண்டும். வேறு வழியில்லை. நீங்கள் கேட்பதற்கு உடன்படும் ஏதேனும் அரசு, அதன்பின் பதவியில் நிலைக்கமுடியுமா? என்று தலைவரைப் பார்த்து வினாவுவதன் மூலம் அவர்கள் தரக்கூடியதை மட்டும் கேளுங் கள் என்கிறீர்கள்.
நல்லது. சங்கரி ஐயோவே! கடந்த ஐம்பது ஆண்டு காலம் ஈழத்தமிழரை ஏமாற்றி, நீங்களும் உங்களைச் சார்ந் தோரும் நாடாளுமன்றை அலங்கரிப்பதற்காக காலத்துக்குக்காலம் முன்வைத்த கோரிக்கை கள் எவையேனும் அவ்வப்போது இருந்த அரசு களால் நிறைவேற்றப்பட்டனவா? தரப்பட்டனவா? அவை தரமாட்டா என்பதற்காக நீங்கள் கேட்காமல் விட்டீர்களா? இடைக்கால நிர்வாகமே இன்று எட்டமுடியாது என்று இப்போது கூறும் நீங்கள் தானே சுமார் 27 ஆண்டுகளுக்கு முன் னர் தனித் தமிழீழம் என்று பெரும் கதை அளந்தீர் கள். 2001 தேர்தல் வரை அதே கயிற்றை அவிழ்த்து விட்டீர்கள்.
தலைவர் பிரபாகரனையும் விடுதலைப் புலிக ளையும் பொறுத்தவரை ஈழத்தமிழர்களுக்கு நியா யமானதை அவர்கள் கேட்கிறார்கள். கொடுக்க வேண்டியது அரசின் கடமை. தவறினால் பிடுங்கி எடுக்கவும் முடியும்; எடுக்கவும் அவர்களுக்குத் தெரியும். அதனால்தான் அதை அவர்கள் கேட் கின்றார்கள்.இப்போது உயிரிழப்புப் பற்றி நீலிக்கண் ணீர் வடிக்கும் நீங்கள், அடுத்த மேதினம் தமி ழீழத்தில்! என்ற நிறைவேற்ற முடியாத விவ காரத்தை உங்களின் அந்நேரத் தலைவருடன் சேர்ந்து தமிழ் மக்களின் காதில் பூச்சுற்றலா கச் சுற்றிப் பேய்க்காட்டிய போது ஒரு தடவை சிந்தித்திருக்கலாம்.
உங்களைப்போன்று வாக்குகளுக்காக மணலைக் கயிறாகத் திரிக்கும் வாக்குறுதிகளை அவிழ்த்து விடுபவர்களல்லர் புலிகள்.சொன்னதைச் செய்யவும், செய்வதைச் சொல் லவும் திராணியும், வீரமும், வலுவும் பொருந்திய விடுதலைப் போராளிகள் அவர்கள்.அவர்கள் வெற்றுவேட்டு அரசியல்வாதிகளாக நினைத்து நீங்கள் பிரபலாபிப்பது உங்களின் அறியாத்தனத்தைக் காட்டுகிறதே அன்றி வேறில்லை.உங்கள் கடிதத்தில் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்குமாக நீங்கள் முதலைக் கண் ணீர் வடிப்பது வேடிக்கையாக இருக்கின்றது.இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை பற்றிய புலிகளின் திட்டம், இலங்கை அரசு பரிசீலிக்கக்கூடிய ஒன்றல்ல என்றும் நீங்கள் கூறியிருக்கின்றீர்கள்.
கடந்த பொதுத்தேர்தலுக்கு முன்னரே இந்த யோசனையைப் புலிகள் முன்வைத்து விட்டனர். அதுமட்டுமல்ல, அந்த யோசனையை தேர்தலில் ஒரு பிரேரணையாக முன்வைத்தே ஈழத்தமிழர் களின் பிரதிநிதிகள் போட்டியிட்டு தமிழ்மக் களின் ஏகோபித்த ஆதரவோடு தெரிவானார் கள். இந்தத் தன்னாட்சி அதிகாரசபை யோசனை ஈழத் தமிழர்களால் வாக்கெடுப்பு மூலம் அங் கீகரிக்கப்பட்ட ஒன்று என்பதை மறந்துவிடாதீர்கள். இன்று, அதற்கு நீங்கள் கொடுக்கும் பொருத்த மற்ற வியாக்கியானத்தை - தேர்தலுக்கு முன்னர் நீங்கள் கொடுத்திருப்பீர்களேயாயின், கடந்த பொதுத்தேர்தலில் உங்களுக்கு கிடைத்த ஐயாயி ரம் வாக்குகளும் ஐநூறாகியிருக்கும். தப்பி விட்டீர்கள் போங்கள்.
இலங்கை இனப்பிரச்சினைக்கு இந்திய அரசமைப்பு மாதிரியில் தீர்வு என்பது பற்றியும் உங்கள் கடிதத்தில் கூறியிருக்கிறீர்கள். இந்தியத்தரப்பு வீசிய எலும்புக்கு நன்றியாக இதை யாவது நீங்கள் கூறாவிட்டால் உங்களுக்கா கத் தொடர்ந்து வேறு யார்தான் இருப்பார்கள்? எனவே, இனத்தை விற்றாவது உண்ட வீட்டுக்கு நன்றி செய்ய முயல்கிறீர்கள். வாழ்க உங்கள் நன்றிமறவாப் பண்பு!வீரர்களோடுதான் எட்டப்பர்களும் வளர்ந் தார்கள். அதுதான் சரித்திரம் நமக்குத் தரும் கடந்தகால அனுபவம்.தந்தை செல்வாவுடனும், ஜீ.ஜீ.பொன்னம்பலத் தோடும் உறவாடிப் பழகியதை நீங்கள் உங்க ளுக்குச் சான்றிதழாகப் பட்டியலிடும்போது எட்டப் பர் கதைகள்தான் நினைவுக்கு வருகின்றன.
இறுதியாக, நாம் பழைய விடயங்களைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசுவதை நிறுத்த வேண் டும் எனத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருக்கின்றீர்கள்.அப்படிப் பேசுவதை நிறுத்தினால், உங்கள் துரோகச் செயல்களும் மறக்கடிக்கப்பட்டுவிடும் என்று எண்ணுகிறீர்;கள் போலும்.எத்தனை தடவை நீங்கள் மண்டியிட்டாலும் நீங்கள் புரிந்தசெயல்கள் - அதுவும் நீங்கள் அலங்கரித்த பதவி, உங்களுக்குத் தமிழினம் தந்த மரியாதை மற்றும் பொறுப்பு - ஆகியவற் றுக்கு மத்தியில் நீங்கள் செய்த வேலைகள், வரலாற்றில் என்றும் உங்களுக்கு மன்னிப்புத் தர இடமளிக்கா என்பதே உண்மை.
பிராயச்சித்தமே செய்யமுடியாத வகையில் பிழைமேல் பிழை - தவறு மேல் தவறு - புரிந்துவரும் நீங் கள், உங்களைப் பொறுத்தவரை ஆனந்தசங்கரி யாக இருக்கலாம். ஆனால், ஈழத்தமிழருக்கு துக்க சங்கடமே!
அன்புடன் தன்மானத் தமிழன்.
2 comments:
கரிகாலரே
உங்கள் இருவரின் உபயோகமற்ற பிரச்சினையில் "இந்தியாவிடமும், பிற ஈழத்தமிழர் விரோத சக்திகளிடமும் ஏந்திப்பெற்ற பிச்சைக்காக" மற்றும் "இந்தியத்தரப்பு வீசிய எலும்புக்கு நன்றியாக" என்றெல்லாம் இந்தியாவைத் தரக் குறைவாகப் பேசாதீர். நீங்கள் காலம் காலமாய் தமிழீழப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காத வகையில் போட்டுக் கொண்டிருக்கும் சண்டையால் தான் நாங்கள் எங்கள் அன்புக்குரிய பிரதமர் ராஜீவை இழந்தோம். வன்முறையைத் தவிர வேறேதேனும் உருப்படியாகத் தெரியுமா உங்களைப் போன்றோர்களுக்கு?
- இந்தியன்
அடே காங்கிரஸ் கோமாளி அனானிமஸ் இந்தியனே , எவனடா ராஜீவை அன்புக்குரியவ்னாக பார்க்கிறான். வ்ரலாற்றை புரட்டிப்பார், தலைவனென்ற பெயரில் அக்கோமாளி யும் அவன் குடும்பமும் அடித்த கொள்ளைகலும் கொலைகளும்.
- என்ன செய்வது , நானும் இந்தியன் தான்
Post a Comment