மூக்கு உடைபடுவது என்பார்களே அதனை நன்றாகவே அனுபவித்திருப்பார் இலங்கையின் இராணுவபேச்சாளர் பிரிகேடியர் தயா ரத்னாயக்கா
கடந்த ஞாயிற்றுக்கிழமைகொழும்பில் இருந்துவெளிவரும் "சண்டே லீடர்" ஆங்கிலப் பத்திரிகை
கருணா குழுவினரின் முகாம் ஒன்று வெலிகந்தைப்பகுதியில் இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடன் இயங்கி வருவதாக புகைப்பட ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டு இருந்தது. அதன் செய்தியாளர் நேரடியாக சென்று பார்த்துஅதனை எழுதியிருந்தார்.
இருந்தும் அதனை அடியோடு நிராகரித்தார் இராணுவப் பேச்சாளர். தமது பகுதிகளில் அப்படி ஒரு முகாம் இல்லைஎன பி.பி.சி க்கு கூட தெரிவித்திருந்தார்.அனால் இன்றைய செய்தி என்னவென்றால் எந்தப் பகுதியில் கருணா குழுவினரின் முகாம் இல்லை என்றாரோ அந்தப் பகுதியில் மோதல்கள் இடம்பெற்று அம் முகாமுக்கு பொறுப்பாக இருந்தவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.இதன்பின்னர் என்ன சொல்லப்போகிறார் இராணுவ பேச்சாளர்.?
No comments:
Post a Comment