Tuesday, May 17, 2005

ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!

எல்லாரும் பூக்களின் படங்களை தங்களது வலைப் பதிவில் போட்டு
கலக்கிறாங்கள். சரி நாலு மாடுகள்(அவ்வளவு நல்லா இல்லை) ஆடுகள் எண்டே வைத்துக் கொள்ளுவம். நாலு ஆடுகள் வேலிக்குள்ளால பூந்து ஓடினா அஞ்சாவது ஆடும் வேலுக்குள்ளால ஓடும் என்பது எல்லாருக்கும் தெரியும்.

நான் தான் அந்த அஞ்சாவது ஆடு எண்டு வைத்து கொள்ளுங்களேன்.
படம் போடுவதுதான் என்று முடிவெடுத்தாச்சு எதைப் போடலாம்.
பனி, பனிக் கட்டிகள்,குளிர்,வசந்தகாலம் எல்லாம் பாத்து பாத்து அலுத்து போட்டுது. ஊரில்
எங்கடை வீட்டில் நிண்ட இந்த பூக்களை போடுவம் எண்டு யோசிச்சுப் போட்டு இதை போடுறன்.இதைப் பார்த்த உடனேயே எனக்கு பல
பழைய ஞாபகங்கள் எல்லாம் வருது. சில வேளை நீங்கள் வாசிப்பதற்கு
நிறைய பதிவுகள் கூட கிடைக்கலாம். சில வேளை இதைப் பார்க்கும் உங்களுக்கு கூட பல ஞாபகங்கள் வரலாம். ஒரு மாதிரி படம் போட்டாச்சு. அப்பாடா.
Image hosted by Photobucket.com



Image hosted by Photobucket.com

1 comment:

ஈழநாதன்(Eelanathan) said...

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
பொக்கிசம் போல பொத்தி வளர்த்த
செம்பருத்தியும் தேமாவும் ஞாபகம் வருதே