தமிழ்மணம் மூலம் வலைப்பதிவுகள் மேய்தல் என்பது ஒரு சந்தோஷமான அனுபவம். பல வேறு விதமான பதிவுகள்,பல்வேறு விடயங்கள்.பல வித ரசனைகள், பல அனுபவசாலிகளின் அனுபவங்கள் இப்படி பல்வேறு நாடுகளில் இருந்து பல ஊர்களில் இருந்து பல்வேறு பதிவுகள்.நாகரீகமான வார்த்தையாடல்கள்,ஆரோக்கியமான கருத்து பரிமாற்றங்கள்,நாகரிகமான பின்னூட்டங்கள் இப்படிதான் போய்க்கொண்டிருந்தது வலைப்பதிவுலகம்.பின்பு காசி தனது பணம் நேரம் யாவற்றினையும் செலவு செய்து தமிழ்மணம் உருவாக்க புதுபொலிவு காட்டியது வலைப்பதிவுலகம்.இதற்கு முன்பும் பின்பும் மதியின் பங்களிப்பும் உண்டு.எண்ணிக்கையும் பெருகியது.பெருகிக்கொண்டிருக்கிறது.இது பிளாஷ் பாக்
என்னை பொறுத்தவரையில் வேலை அதனால் ஏற்படும் ரென்ஷன் போக்க நான் வருவதே தமிழ்மணத்துக்குதான்.(சிலர் தண்னியடிப்"பார்"கள்,நண்பர்களுடன் அளவளவுவார்கள்,சுற்றுவார்கள்)ஆனால் எனக்கு நண்பன் தமிழ்மணம் தான்.எனது வேலைகளைப்பு,பிற கவலைகள்யாவும் போக்குமெனது நல்லதொரு நண்பன் தமிழ்மணம் தான்.
வலைப்பக்கம் வந்தால் பொழுது போகும் எண்டால் சிலர் சீரியசாக தமிழில் உள்ள கெட்ட வார்த்தைகளைஎல்லாம் வலையில் கொட்டி "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்" என்ற ரீதியில் பின்னூட்டம் இட்டு பின்னூட்டப் பக்கம் எல்லாம் நாறுது. போதாததுக்கு சில நாட்களுக்கு முன்னர் எனது நண்பனுக்கும் அவரது மனைவிக்கும் இந்த தமிழ்மணத்தினை அறிமுகப் படுத்தி வைத்தேன்.இன்று அவர்கள் வீட்டுக்கு போனபோது நண்பனிடமும் அவரது மனைவியிடமும் எப்படி பொழுது போகுது,எப்படி பதிவுகள் எல்லாம் எப்படி என்று நண்பனிடம் கேட்க நண்பனின் மனைவி என்னை பார்த்த பார்வை ஒரு மாதிரி இருக்கவே, என்ன என்று நண்பனிடம் கேட்கவும், அவன் சில பதிவுகளுக்கான (ஆபாச) பின்னூட்டங்களை காட்ட நான் தலை குனிந்தபடி வீடு வந்து சேர்ந்தேன்.கஷ்டகாலத்திலும் ஒரு நல்ல காலம் நான் வலை பதிவது அவர்களுக்கு தெரியாது
காசி அரும்பாடுபட்டு நல்ல விஷயங்களுக்காக உருவாக்கிய தமிழ் மணத்தினை நாறடிக்கவென்றே பல அனாமதேயங்கள் அரும் பணியாற்றுகின்றார்கள். யார் யாருடைய பெயர்களில் எல்லாமோ பின்னூட்டம் இடுகின்றனர். யார் போலி யார் உண்மை என்றே தெரியாமல் இருக்கிறது.
ஒருவருடைய பெயரினை பாவித்து ஆபாசபின்னூட்டம் இடுவதில் அப்படி
என்ன அலாதி பிரியமோ நானறியேன்.
சாதி துவேசம்,மத துவேசம்,நடிகர்களுக்கு பின்னால் ஒரு கூட்டம் இப்படி பல கூட்டங்கள் இங்கு. படித்த படிப்புக்கும் ,வாழும் வாழ்க்கைக்கும், பண்புக்கும் சம்பந்தம் இல்லை என்பதனை நிரூபிக்கின்றன பல "அனாமதேயங்கள்".
ப்ளாக்கரில் அனாமதேய வசதி வைத்ததே சில நல்ல நோக்கங்களுக்காக இப்படி இவர்கள் துஷ்பிரயோகம் செய்வார்கள் என அவர்கள் நினைத்திருக்க
மாட்டார்கள். கிட்டத்தட்ட ப்ளாக் பண்ணி பிரைவேட் கோல் எடுப்பதை
கனடாவில்" பெல் கனடா" அனுமதித்திருப்பதற்க்கு என்ன காரணமோ அதுபோலவே பிளாக்கரும் இதற்கு வசதி செய்து தந்திருக்கின்றனர்.
ஒருவன் நல்லவனா கெட்டவனா என்பதனை மதத்தினூடாகவோ சாதியினூடாகவோ கண்கொண்டு நோக்காதீர்கள்.அது வலைப்பதிவுகளுக்கும் பொருந்தும்.ஒருவர் தனது கருத்தை எழுதுகிறார் என்றால் அவரின் கருத்துக்கு எல்லோரும் உடன்படுவார்கள் என்றுஎதிர் பார்ப்பது மடமை.நாலு பேர் நாலு கருத்து சொல்வார்கள்.ஒரு கருத்தினை எழுதுவருக்கு எழுத இருக்கும் உரிமை போலவே மற்றொருவருக்கு அக் கருத்தினை ஒட்டியோ வெட்டியோ பேச உரிமை உண்டு.மொத்தத்தில் எல்லொருக்கும் பேச்சுரிமை எழுத்துரிமை இங்கு (வலைப்பதிவில்)உண்டு.
இங்கு நான் என்ன சொல்ல வந்தேன் என்றால் அந்த எழுத்துரிமை மற்றவர்களின் உணர்வுகளைபுண்படுத்தாமல், மற்றவர்களின் மனதினை குத்திக்கிழிக்காமல் இருப்பதே சிறப்பு. நாலு கெட்ட வார்த்தைகளால் திட்டி யாருக்கு என்ன பயன்? உங்கள் குழந்தைகள் ,மனைவிகள் இவற்றினை படிப்பது இல்லை என்ற தைரியம் தானே? இப்படியான கெட்ட வார்த்தைகளை கொண்ட ஒரு மொட்டைக் கடிதம் உங்கள் வீட்டுக்கு வந்தால் உங்கள் மனம் என்ன பாடு படும் என்பதனை சிந்தித்தீர்களா?முகம் தெரியவா போகுது என்ற தைரியம் வேறு?ஒரு சபை நடுவே இப்படி கருத்து முரண்பாடுகள் ஏற்படும் போது இப்போது நீங்கள் பின்னூட்டம் இட்டதை போன்று பேசுவீர்களா?
உங்களுக்கு இருக்கும் பேச்சுரிமையினையோ எழுத்துரிமையோ மற்றவர்களின் மூக்கு நுனி வரைதான். எனவே நண்பர்களே! உலகெங்கினும் வாழும் பல முகம் தெரியாத பல தமிழ் சகோதர சகோதரிகள் பலரும் இப்பதிவுகளை படிக்கின்றனர், எழுதுகின்றனர் என்ற மனப்பான்மையுடன் நாகரீகமாக பண்பாக மற்றவர்களின் மனதினை குத்திக்கிழிக்காமல் சாதி மதம் புறம் தள்ளி எமது கருத்துக்களை எழுதுவோம்.அது பதிவாகட்டும் அல்லது பின்னூட்டமாகட்டும். ஒரு சபை நடுவே உங்கள் வேட்டி அவிண்டால் என்ன பாடுபடுவீர்களோ ,அதே போலதான் இப்படியான பின்னூட்டங்களை பார்க்கும் போது பலருக்கு இருக்கிறது.எனவே தயைகூர்ந்து எதையும் பண்பாக நாகரீகமாக விமர்சியுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இதற்கும் பல எதிர்வினைகள் வரும் என்று நினைக்கின்றேன்.
எல்லோம் ஒன்றிணைவோம்! இணையத்தால் தமிழ் வளர்ப்போம்.!
11 comments:
'பெடியன்'கள் மற்றவர்களின் வலைப்பதிவுகளை நிறுத்துவதை விட்டுவிட்டு இந்த ஆபாச வசைப் பேர்வழிகளைக்க் 'கவனிக்கலாமே'
என்னுடைய சோகத்தை அப்படியே எழுதியிருக்கின்றீர்கள், நன்றி.
இதுவிஷ்யமாக - அனாமதேயங்களை கண்டுகொள்ளவேண்டாம் என்று ஒவ்வொருவரும் சொல்லியே... இப்போது எல்லாருமே இந்த அருவெறுப்புக்களை பற்றி எழுதும் நிலை வந்துவிட்டது.
சமீபகாலமாக அரங்கேறிவரும் விஷம(ய)ங்களால் தமிழ்மணம் பக்கம் வரவே வெறுப்பாயிருக்கிறது...
யார், ஏன், எதற்கு...? என்று தெரியாமல்...நாம் அதில் இறங்கி அறிவுரை சொல்வதில் பயனில்லை. சேற்றை வைத்து விளையாடிட்டிருக்கறவங்கட்ட போய்
அப்படி செய்யாதே என்றால் நம்மீதும் வீசலாம். அதையும் மீறி வீசுபவனை அடக்க - அதற்கும் ஒருபடி மேலே/கீழே சென்று நாமும் வீசவேண்டி வரலாம்...
இறுதியில் அவனை ஒருவேளை அடக்கமுடியலாம் அல்லது நாம் சேற்றில்
அமுக்கப்படலாம் - எதுநடந்தாலும் நம்மீதும் சேறு அப்பியிருக்கும்.
அதிலும் இந்த விஷயங்கள் செய்வது, எழுதுவது ஒரு கூட்டமெல்லாம் அல்ல. தனி மனித ஜந்துக்கள்தான். அதனால் அவர்களுக்கு அறிவுரையோ அல்லது நமது
கருத்துக்களோ தேவையில்லை. நம்முடைய மனவருத்தம்கூட அவர்களுக்கு
சந்தோசமளிக்கலாம். அதனால், அவர்களை விட்டு முடிந்தவரை விலகியிருக்கலாம்.
மேலும், வலைப்பதிவில் எழுதும்போது அது பொதுவில் என்பதால், பெரும்பாலும் - தேவையற்ற அல்லது தவிர்க்கப்படமுடிந்தால் தவிர்க்கப்படக்கூடிய கருத்துக்கள், அது சாதியானாலும், கட்சியானாலும், நடிகரானாலும், இனமானாலும் தவிர்ப்பது நல்லது. இது என்னோட வ்லைப்பதிவு, என்னோட கருத்த சொல்றதுக்கு எனக்கு உரிமையிருக்கு - அதக்கேட்க நீயாரு? என்ற ஒரு மனநிலைதான் இது எல்லாவற்றுக்கும் ஆரம்பம்.
அதனால், என்னைப்பொருத்தவரை எனக்குப்பிடிக்காததை விட்டு
விலகியிருக்கிறேன். எனக்கே அடுத்தவர் அறிவுரை சொல்வது பிடிக்காதபோது -
பிற ஜந்துக்களுக்கு அறிவுரை கூறும் தகுதியுமில்லை, பாஷையும் தெரியாது.
மற்றப்படி எனக்கு எழுத்து, இலக்கியம், பொழுதுபோக்குக்கும் மேலாக மனிதம்,
நட்புதான் முக்கியம்... அதனால் நமது நட்பைத்தொடர்வோம்.
என்றென்றும் அன்புடன்,
அன்பு
//அங்கே பிரச்சனை சாதியை வைத்து என்றா நினைக்கிறீர்கள்?. அதெல்லாம் ஒன்று இல்லை.//
ஜாதி என்பதெல்லாம் பிரச்னை இல்லை. நானும் விஜயும் திட்டம்போட்டு அவர் சிங்கப்பூரில் இருந்தும் நான் சென்னையில் இருந்தும் அந்த மனம் பிறழ்ந்தவருக்கு பின்னூட்டங்கள் இட்டோம். மனிதன் ஆடிப்போய்விட்டார். இப்போது உங்களுக்கு ஒரு புதுத்தகவலைச் சொல்ல இருக்கிறேன். விஜயும் பிராமனர்தான்.
//ஒருவர் அல்லது பலபேர் மீது இருக்கும் காழ்ப்பு உணர்ச்சி அதை காட்ட 'சாதி எதிர்க்கும் நல்ல பிள்ளை' எனக் காட்ட சாதி ஒரு கேடயம் அவ்வளவு தான்.//
ஆமாம். இது உண்மை. அவருக்கு ஏதோ காழ்ப்புணர்வுகள் என்று நினைக்கிறேன். அதனால்தான் தமிழா நடத்தும் முகுந்த் அவர்கள் திருமணம் செய்தபோது ஏன் கவுண்டர் என பத்திரிக்கையில் போட்டீர்கள் எனக் கேட்டார்.
//உண்மையில் சாதி பிரச்சனை என்பதில் அவருக்கு துளி கூட அக்கரை கிடையாது. சிண்டு முடிக்கும் வேலைக்கு ஒரு போர்வை தேவை. அது தான் 'சாதி எதிர்ப்பு'.//
ஆமாம் உண்மை. அவருக்கு சிண்டு முடிக்கும் வேலைதான் முக்கியம். அதனால்தான் அவர்போலவே நானும் விஜயும் சேர்ந்து பல பெயர்களில் எழுதி அவரைக் கலங்கடித்தோம். இப்போது அவருக்கு பலரின் சிண்டுகளை முடிந்தோம்.
//அவ்வளவு அக்கரை உள்ளவர் இணையத்தில் தட்டி தட்டி அதை ஒழிக்க முடியுமா?.//
உண்மை. அவரால் இணையத்தில் என்ன நல்லவற்றைச் செய்யமுடியும்? என்னையும் விஜயும் டோண்டும் போன்று ஜாதி சொல்லித் திரிய முடியுமா அல்லது வளர்க்க முடியுமா?
//நம்மூருல எயிட்ஸ்ல இருந்து வறுமையிலருந்து எவ்வளவோ பிரச்சனை.//
இது உண்மை. டோண்டு வந்தபோது பரப்பிவிட்டுச் சென்ற ஆட்கொல்லி நோய் இது.
//சொகுசாக எங்கோ உட்கார்ந்து அசிங்கமாக பேசி திரிவதை ஊருக்கு சென்று நேரடியாக எவ்வளவோ செய்யலாம்.//
உண்மை. அதனால்தான் நானும் அல்வாசிட்டி விஜயும் சேர்ந்து வலைப்பூ ஒன்றை ஆரம்பித்து இருக்கிறோம். இதில் உறுப்பினர் பதிவு இலவசம். நீங்கள் அங்கே பின்னூட்டி விருப்பம் சொன்னால் உங்களையும் சேர்த்துக் கொள்வோம்.
http://inaiyaporikki.blogspot.com/
எங்கள் ப்ளாக்கர் எண்
http://www.blogger.com/profile/10405297
//அட விடுங்க இந்த கருத்தை மனுசனுக்கு சொன்ன பரவாயில்லை. சுவர்கிட்ட சொல்லி என்ன ஆகப் போகுது.//
நானும் அல்வாசிட்டி விஜயும் சேர்ந்து மேற்கண்ட வலைப்பதிவைத் தொடங்கி நடத்துகிறோம். இதனை மற்ற நண்பர்களுக்கும் பெருமையாக சொல்லிக் கொளிகிறோம். குறிப்பிட்ட ஒருவரின் பெயரைக் கெடுப்பதற்காக அவரின் பெயரோடு சில காமத்தளங்களின் முகவரிகளை சம்பந்தப் படுத்தினோம். அங்கே நானும் விஜயும் ஆயுட்கால உறுப்பினர்கள்.
சிங்கப்பூரில் இருந்து அவர் கீழ்க்கண்ட ஐப்பிக்களில் இருந்து இந்த வலைப்பதிவுகளில் வேறு பெயர்களில் வந்து அவரை திட்டுவார்.
202.156.2.154
165.21.154.111
165.188.24.43
202.156.2.154
165.21.154.114
203.117.53.168
நான் சென்னையில் இருந்து கீழ்க்கண்ட முகவரிகளில் இருந்து வந்து அவரைத் திட்டுவேன்.
219.65.112.40
219.65.112.182
219.65.112.40
நீங்கள் எல்லாம் எனக்கும் விஜயுக்கும் டோண்டுக்கும் கொடுக்கும் ஆதரவைப் பார்த்து என் மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது.
கரிகாலன்,
சிந்திக்க வைக்கும் பதிவு ! அனைவரும் புரிந்து கொண்டால் நன்மை பயக்கும்.
அன்பு,
உங்கள் செறிந்த கருத்துக்களை மிக அருமையாக முன் வைத்துள்ளீர்கள் ! நன்றி !
//மற்றப்படி எனக்கு எழுத்து, இலக்கியம், பொழுதுபோக்குக்கும் மேலாக மனிதம்,
நட்புதான் முக்கியம்... அதனால் நமது நட்பைத்தொடர்வோம்.
//
அற்புதமான ஓர் சிந்தனை. நன்றி !
என்றென்றும் அன்புடன்
பாலா
அன்பு,
உங்கள் கருத்துக்களை வழி மொழிகிறேன். யாரென்றே தெரியாத ஒருவரிடம் நான் நட்போ/விரோதமோ பாராட்டிப் பழகாதவன் ஆகையால் எல்லாம் ஆடி அடங்கும் வரை விலகியிருக்க எண்ணியுள்ளேன்.
இருட்டு அறையில் குருட்டுத்தனமாய் எதிர்படுபவரையெல்லாம் தாக்குவதைவிட,
இன்னாருக்கு ஆதரவு/எதிர்ப்பு என கிளம்புவதை விட,
தள்ளியிருப்பது எவ்வளவோ நல்லது.
Pl. note that a comment posted in the name of "mayavarathaan" was not posted by the ORIGINAL MAYAVARATHAAN !!!!
Kasi's genuine efforts of creating thamizmaNam are literally being wasted by this approach of some persons using others' names for writing foul language and also spreading hatred :-(
இதைப் படிக்கும் அனைவருக்கும் ஒரு விண்ணப்பம்:
தயவு செய்து அனைவரும் நண்பர்களாக இருப்போம். ஆரோக்கியமாக விவாதம் செய்வோம். ஆபாசமான, அசிங்கமான சண்டைகள்
தயவு செய்து வேண்டாமே ! இருப்பதோ ஒரு 500 சொச்சம் தமிழ் வலைப்பதிவர்களே !!!
என்றென்றும் அன்புடன்
பாலா
நான் அவர் நடத்துவதாக எனது புதிய வலைப்பூவான http://inaiyaporikki.blogspot.com/ ல் பொய்யாக அவர் பெயரைக் கெடுக்க எழுதி இருந்தேன். உண்மையில் நானும் மாயவரத்தான் அவர்களும்தான் அந்த இரு தளங்களை நடத்துகிறோம். அதன் முகவரிகள்:-
http://www.kamalogam.com
http://antharangam.com
பார்ப்பனர்களை எதிர்க்கும் அந்த மடையனை சும்மா விடக்கூடாது.
மேலே வாலி என்ற பெயரில் பதிவு எழுதியவரின் ஐப்பி: 203.117.53.168
போலி மாயவரத்தான் என்ற பெயரில் எழுதியவரின் ஐப்பி எண்: 195.229.241.188
கரிகாலன்,
நேற்று என் பதிவிலயும் கைவரிசையைக் காட்டிட்டாங்க யாரோ அப்புறம் நான் அந்த மூண்று பின்னோட்டங்களையும் நிரந்தாரமா அழிச்சிட்டேன்.நாலு நல்ல விசயங்களைத் தெரிந்து கொள்ளத்தான் நான் சக்தியெல்லாம் தமிழ்மணத்துக்கு வாறதே…இப்படியான அநாமதேயக் கருத்துக் கந்தசாமிகளுக்கு யாராவது ஆப்பு வையுங்களேன்.
http://karthikeyan.50webs.com
Post a Comment