தமிழ் பேசும் முஸ்லிம்களும் தங்கத் தலைவன் பின்னால் அணி திரள வேண்டும்: மௌலவி எஸ்.எம்.சகீல் வேண்டுகோள்
வவுனியா பிரகனடத்தை நிறைவேற்ற தமிழ்பேசும் முஸ்லிம்களும் தங்கத் தலைவன் பிரபாகரன் பின்னால் அணி திரள வேண்டும் என்று யாழ்ப்பாண இஸ்லாமிய மக்கள் பணிமனை செயலர் மௌலவி எஸ்.எம்.சகீல் வேண்டுகோள் விடுத்தார்.
கிளிநொச்சியில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்த் தேசிய எழுச்சி நிகழ்வில் அவர் ஆற்றிய உரை:
ஆண்டாண்டு காலமாக ஆண்டுவந்த பூமியையும் வீதிகளையெல்லாம் சிங்கள ஆக்கிரமிப்பாளர்கள் சுற்றிவளைத்தனர்.
சிங்கள அரசுகள் தமிழ்பேசும் மக்களுக்கு எதிராக செயற்பட்டன. எங்களுடைய உரிமைகளை நாங்கள் பெற்று வாழ்வதற்குக் கூட தடை விதித்தனர்.
அந்த நிலைமையில் தான் இந்தப் போராட்டம் உருவாக்கப்பெற்றது.
இந்தப் போராட்டத்திலும் முஸ்லிம்கள் என்றும் சளைத்தவர்கள் அல்லர். தமிழர்களும் முஸ்லிம் மக்களும் ஒன்றிணைந்தவர்களாகவே இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற வரலாறுகளையும் நாங்கள் பார்க்கின்றோம்.
எங்களுடைய தாயக கடமை என்று புறப்பட்ட இந்தப் போராட்ட பயணத்திலே நாம் தமிழ்பேசும் மக்கள் என்ற வகையில் கைகோர்த்தவர்களாக என்றும் செயற்படவேண்டும்.
தலைவர் பிரபாகரன் பின்னணியிலே தங்களுடைய வரலாற்றை தமிழர்கள் முன்னெடுத்துச் செல்லுகின்றார்கள். இது பாராட்டப்படக்கூடிய விடயம்.
நாம் நியாயத்தைப் பேசுகின்றோம். உண்மையை இந்த உலகிற்கு, இந்த மண்ணுக்கு, சர்வதேசத்திற்கு நாங்கள் புலப்படுத்துகின்றோம்.
ஆனால் நாங்கள் ஓர் குடும்ப உறவைக் கொண்டவர்கள். தமிழ்மக்கள், முஸ்லிம் சமூகங்களும் ஒரு குடும்ப உறவைக் கொண்டவர்கள். எங்களுக்குள் பல பிரச்சனைகள் எழலாம். அதனை நாங்களே தீர்ப்போம்.
எங்களுடைய குடும்பமே பேசித்தீர்த்துக்கொள்ள முடியும். இதற்குள் அன்னியவர்களின் ஊருடுவல் எங்களுக்குத் தேவையில்லை.
வவுனியா எழுச்சி நிகழ்வில் எடுத்த முடிவுகளை நிறைவேற்ற தங்கத்தலைவன் பின்னால் அணிசேர தமிழர்கள் மற்றுமல்ல தமிழ்பேசும் மக்கள் அனைவரும் தயாராக இருக்கிறார்கள் என்றார் அவர்.
..புதினம்..
21 comments:
கரிகாலன்,
இது செய்திக்கும் பார்வைக்கும் நன்றாகத்தான் இருக்கின்றது; ஆனால், நடைமுறையிலே கிழக்கிலே வர தமிழ்ப்பேசும் எல்லா மக்களும் புரிந்துணர்வோடு நிறைய உழைக்கவேண்டியிருக்கின்றதெனத் தோன்றுகின்றது.
நன்றி பெயரிலி!
உங்கள் கருத்தோடு நானும் உடன்படுகிறேன்.தற்போது கிழக்கில்
ஓரளவு சுமுக நிலை புரிந்துனர்வு ஏற்பட்டு வருவதாகவே தோன்றுகின்றது.
கடந்தகால தவறுகள் தமிழர் முஸ்லீம்கள்
இருபகுதியினருக்கும் பல படிப்பினைகளை பெற்றுத்தந்திருக்கிறது.
எனவே இனி வரும் காலங்களில் இரு பகுதியினருக்கும் இடையிலான புரிந்துணர்வு வலுப்பெறும் என்றே எண்ணுகிறேன்.
கரிகாலன், பெயரிலி கூறுவதுபோலத்தான் கிழக்கைப் போலவே வடபகுதி முஸ்லிம்களுக்கும் மீளக்குடியமர்வு, நஷ்ட ஈடுகள் என்று இரண்டு தர்ப்பினரும் பரஸ்பரப் புரிந்துணர்வுடன் உழைக்கவேண்டியிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் ஒரு ஆவணப்படம் பார்த்தபோது, யாழில் இருந்து விரட்டப்பட்டு, புத்தளத்தில் தற்போது வசிக்கின்ற முஸ்லிம்களின் அவலநிலையைப் பார்க்க பரிதாபமக இருந்த்து. இவ்வளவு கொடும் நிலையிலும் அவர்கள் புலிகளைப் பற்றியோ, தமிழ் மக்கள் பற்றியோ கடும் வார்த்தைகள் பேசாதது வியப்பாயிருந்தது. அனைவரின் பேச்சிலும் தாம் மிகவும் நம்பிக்கொண்டிருந்த தமிழ் மக்கள் தம் முதுகில் துரோகத்தனத்துடன் குத்திவிட்டார்கள் என்ற ஆதங்கமே நிறைந்திருந்தது. பத்து வருடங்களுக்கு முன் எனது ஊரை விட்டு துரத்தியடிக்கப்பட்ட எனக்கு 'நாம் பிழை செய்துவிட்டோம்' என்று ஒரு அறிக்கை அரசாங்கம் விடுவதால் எல்லாத் துயரங்களும் போகாதென்பது எவ்வளவு உண்மையோ அப்படியே பதினைந்து வருடங்களுக்கு முன் துரத்தப்பட்ட முஸ்லிம் மக்களுக்கும் நமக்கும் புரிந்துணர்வு வர நிரம்ப விடயங்களைச் செய்ய வேண்டிய நெடும் பாதை இருக்கின்றது என்றே நம்புகின்றேன்.
நன்றி டீ.சே
நீங்கள் கூறுவதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.அனால் இது ஒரு
வழிப்பாதை அல்ல.இருவழிப்பாதை .வடக்கிலிருந்து
முஸ்லீம்கள் விரட்டப்பட்டது கிழக்கில் நடந்ததன் எதிர் எதிர்வினைதான்.கிழக்கில் தமிழர்கள் சிங்கள இராணுவதினரை விட முஸ்லீம்
ஊர்காவல் படையினரால் அனுபவித்த
துன்பங்கள் அதிகம்.கிழக்குமாகாண தமிழ் மக்கள்
இனைக் கேளுங்கள் சொல்வார்கள்.
தம்மோடு கூட இருந்து உண்டு உறங்கி
தமது முதுகிலேயே குத்தி விட்டதாகவே
சொல்வார்கள்.
சிங்களவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும்
கலவ்ரம் வந்தபோது அபயமளித்தவர்கள்
தமிழர்கள்.
முஸ்லீம் ஊர்காவல் படையினரால் கொல்லப்பட்ட தமிழர்கள்
எத்தனை? அழிக்கப்பட்ட கிராமங்கள்
எத்தனை?பாலியல் வன்புணர்வு செய்து
கொல்லப்பட்ட தமிழ் பெண்கள் எத்தனைபேர்? இதை இப்போது யார்
பேசுகிறார்கள்?பாதிக்கப்பட்ட கிழக்கு
மாகாண மக்களிடம் கேளுங்கள்.கதைகதையாக சொல்லுவார்கள்.அவர்களுக்கு புனர்வாழ்வு செய்யப்போவது யார்?
எனவே தான் சொல்கிறேன்.இது இருவழிப்பாதை .இங்கு தவறுகள் கூட
இருவழி.புரிந்துணர்வு கூட இருவழியால்
வரவேண்டும்.இன்று புரிந்துணர்வு வரவேண்டும் என்பதற்காக முஸ்லீம்களால் செய்யப்பட்ட கொடுமைகளை மறந்து அவர்களுடன் கைகுலுக்கவும் தயாராக இருக்கும் கிழக்குதமிழ் மக்களை பற்றி சிந்தித்தீர்களா?
இதை எல்லாம் நான் கேட்பதால்
நாளையே புலிகளின் ஆதரவாளன் கரிகாலனின்
முஸ்லீம்கள் மீதான துவேஸம் என்று
செய்தி போடவே இங்கு பலர் காத்திருக்கின்றனர் என்பதையும் சொல்லிவிடுகிறேன்.நான்
சொல்வது என்னவானால் தவறுகள்
இருவழி.அதுபோலவே புரிந்துணர்வும்
இருவ்ழியாகவே இருக்க்வேண்டும்.
இலங்கை முஸ்லீம்களில் பெரும்பான்மையினர் வியாபாரிகள்.
அவர்கள் சிங்களவருடன் உறவைப்பேண
வேண்டிய நிலை கண்டிப்பாக உண்டு.
அத்துடன் இலாப நட்ட கணக்கில்
இலாபம் எங்கு இருக்கிறதோ அங்குதான் நிற்பான் நல்ல வியாபாரி.
புரிகிறதா?
/முஸ்லீம் ஊர்காவல் படையினரால் அனுபவித்த துன்பங்கள் அதிகம்/
இதிலும் உண்மையில்லாமலில்லை; ஆனால், அதற்கு எதிலுமே சம்பந்தப்படாத முஸ்லீங்கள் பாதிப்புக்குள்ளானது எவ்விதத்திலும் நியாயப்படுத்தமுடியாது.
/i couldn't understand since long time why in srilanka tamils yourselves identifing by 'tamils(only for hindus & christians) and muslims)/
This is a good question, but responding to this is little tricky considering the history and comtemporary situation.
/இலங்கை முஸ்லீம்களில் பெரும்பான்மையினர் வியாபாரிகள்.
அவர்கள் சிங்களவருடன் உறவைப்பேண
வேண்டிய நிலை கண்டிப்பாக உண்டு.
அத்துடன் இலாப நட்ட கணக்கில்
இலாபம் எங்கு இருக்கிறதோ அங்குதான் நிற்பான் நல்ல வியாபாரி.
புரிகிறதா?/
தனிப்பட்ட அளவிலே இது சரியான கருத்தென்று நினைக்கவில்லை. தெற்கிலும் மேற்கிலும் வியாபாரம் செய்த தமிழ்வர்த்தகர்கள் பலர்.
இன்னொன்று, தமிழரைவிட முஸ்லீங்கள் இலங்கை முழுக்கப் பரந்து வாழ்கின்றார்கள். வாழும் இடத்தினைப் பொறுத்து முஸ்லீங்களிடையே வித்தியாசங்களிருக்கின்றபோதுங்கூட.
/i couldn't understand since long time why in srilanka tamils yourselves identifing by 'tamils(only for hindus & christians) and muslims)/
This is a good question, but responding to this is little tricky considering the history and comtemporary situation.
Can to tell or try to send some links to know??( really vey eger to know)
hope someone who knows it better (than me) may elaborate it; else, let me look for the links and post later.
// தெற்கிலும் மேற்கிலும் வியாபாரம் செய்த தமிழ்வர்த்தகர்கள் பலர்.//
பெயரிலி நீங்கள் கூறியபடி தமிழர்கள் வர்த்தகம்
செய்தனர்.அனால் அவர்களின் பெரும்பாலோரின் குடும்பங்கள் வடக்கு கிழக்கில் தான் வாழ்ந்தன.வன்முறைகள்
இடம் பெற்றபோது அவர்களில் பலர் வர்த்தக நடவடிக்கைகளை மூடிவிட்டனர்.அல்லது தமிழர்கள் வாழும் இலங்கையின் மற்றைய பகுதிக்கு
மாற்றிவிட்டனர்.இதனால் சிங்களவர்களுடன் தங்கிவாழவேண்டிய
தேவை இல்லை.
கரிகாலன் உங்கள் பதிலுக்கு நன்றி.
........
நீங்கள் கேட்ட இதே கேள்வியை நாலைந்து வருடங்களுக்கு முன் ஒரு நண்பரிடம் கேட்டிருந்தேன். அதுவும் ஒருநாள் வானொலியில் நிகழ்ச்சி ஒன்று நடந்துகொண்டிருக்கும்போது, பல கிழக்கிலங்கையைச் சேர்ந்தவர்கள் வந்து தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டபோது, நான் அதுவரை அறியாத பல பக்கஙகளை அறிந்தபோது திகைப்பாயிருந்தது. அதைக்கேட்டபின் ஒரு முன்னைநாள் இயக்க நண்பரிடம் மெயில் எழுதும்போது ஏன் இந்தப்பக்கஙகள் வெளியில் அவ்வளவாய்க் கொண்டுவரப்படவில்லை என்று கேட்டிருக்கின்றேன்.தொடர்ந்து இதுகுறித்து இருவரும் பல மெயில்களில் உரையாடியிருக்கின்றோம். இந்த விவாதத்தின் நீட்சியிலேயே நான் 'நடுநிலைமை'என்பது ஒன்றே இல்லை, 'உண்மைகளை மட்டுமே பேசுதலே' மிகச்சரியானது என்ற ஒரு முடிவுக்கு வந்திருந்தேன். அந்தவகையிலேயேதான், சக்கரவர்த்தி எழுதிய 'யுத்தத்தின் இரண்டாம் பாகம்' சிறுகதைத் தொகுப்பு, முஸ்லிம்களுக்கு தமிழர்கள் நிகழ்த்திய வன்முறைகளை (உண்மையை) ஆவணப்படுத்துகின்றது என்று முன்பு ஒரு பதிவில் குறிப்பிட்டு எழுதியிருந்தேன்(அதில் நடுநிலைமை என்ற வார்தையைப் பயன்படுத்தவில்லை). சக்கரவர்த்தி ஒருபக்கத்திற்கு நிகழ்ந்த உண்மையை அடையாளப்படுத்தி இருந்தாரே தவிர 'நடுநிலைமை'யாகப் பேசவில்லை. அப்படியான ஒரு பார்வையைத்தான் இன்றும், புலி ஆதரவாளர்களிடமும் புலி எதிர்ப்பாளர்களிடமும் இருந்து பெற்றுக்கொள்கின்றேன். ஆதாரத்துடன் பேசப்படும் உண்மையான விடயங்களை எடுத்துக்கொண்டு மிச்சததை ஒதுக்கிக்கொள்கின்றேன். 'உண்மைக்குமுன் நடுநிலைமை என்பது இல்லை' என்பதுதான் என்னுடைய அபிப்பிராயமாக இன்றைய பொழுதில் இருக்கிறது. மற்றப்படி இரண்டு தரப்பினருக்கும் நிகழ்ந்த வன்முறைகளை (நீ செய்ததற்குத்தான் நான் இதைச் செய்தேன் என்ற) வாய்ப்பாடுகளால் நிரப்ப முடியாது. இரு தரப்பினருக்கும் நிகழ்ந்த 'உண்மைகள்' நிச்சயம் வெளிக்கொண்டுவரப்படவேண்டும் என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.அவ்வாறே பாதிக்கப்பட்டவர்களுக்கான தீர்வுகளும், ஆறுதல்களும்.
....
கிழக்கு மாகாணம் பற்றி எனக்கு அவ்வளவு ஆழ்ந்த அறிவு இல்லை என்றாலும், பல கிழக்குக் கிராமஙகள், ஒரு தமிழ்க்கிராமம், பிறகு முஸ்லிம்கிராமம் என்று மாறி மாறி அரணாகவும் அந்நியோன்னியமாகவும் இருந்திருக்கின்றது என்று அறிந்திருக்கின்றேன். அதை தமிழ், சிங்கள இனவாதிகள் திட்டம்போட்டுக் கலைத்துவிட்டார்கள் என்பது கவலையான விடயம். இன்று, முள்லிம்களும் தமிழர்களும் கிழக்கு மாகாணப்பிரதேசங்களில் பெரும்பான்மையாக வாழ்ந்த காலம் போய், சிங்கள குடியேறவாதிகள் பெரும்பான்மையாக வந்துகொண்டிருப்பதை செய்திகளின் ஊடாக அறிந்து கொண்டுதானே இருக்கின்றோம் :-(.
I have deleted my seconed comment bec of spelling mistakes. Thankx.
நன்றி டீ.சே
உங்கள் கருத்துக்களுக்கு.
நீங்கள் சொன்ன "உண்மைக்கு முன்னால்
நடுநிலைமை என்பதே இல்லை" என்பதை தான் நான் நம்புகிறேன்.யாராவது நடுநிலைமை என்று சொன்னால் அவர்கள் நிச்சயமாக பொய் சொல்கின்றனர் என்பதுதான் அர்த்தம்.ஏனெனில் யாரிடத்திலும்,எதனிலும் "சார்பு"என்பது மறைந்து கிடக்கிறது.அது ஊடகம் என்று சொன்னாலும் சரி மனிதர்கள் என்று சொன்னாலும் சரி.
இன்று முஸ்லீம்களுடன் நல்லுறவு வேண்டும் என்பதற்காக தமிழர்கள் பாதிக்கப்பட்ட சம்பவங்கள் பற்றிய
ப்க்கமே புரட்டப்படாமல் விடப்பட்டிருக்கிறது.இது கூட நாளை இன்னொரு மோதலுக்கு வழிவகுக்க கூடும்.
இந்திய வாசகரின் கேள்வி சுருக்கென்று ஏறுகிறது.
உண்மைதான்.
முஸ்லிம்கள் தம்மை தனித் தேசிய இனமாக அடையாளப்படுத்திக்கொண்டதற்கு தமிழ், இந்து உயர் வேளாள சாதியே அடித்தளம் போட்டது.
பின்னர் வேளாளரை மையப்படுத்திய தமிழ் தேசியவாதத்தினூடு,ஒரு போதையாய் இது அடிமட்டம்வரை பரவியது.
கிறிஸ்தவர்களை பார்க்கிலும் முஸ்லிம்கள் தம்மை தனித்த பழக்கவழக்கங்களோடு கட்டமைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
மதம்வழி வரும் அத்தகைய தனித்துவமான கட்டமைப்புகாரணமாக, சுயநல தமிழ் தேசியம் எப்போதும் அவர்களை ஒதுக்கியே வைத்தது.
இழிசாதியாக பார்த்தது
அவர்களை பகடைக்காய்களாக பாவித்தது.
தமக்கு தேவைப்பட்ட போது தமிழர் முஸ்லிம்களோடு கைகோர்த்தனர், தேவைப்படாதபோது விரட்டினர்.
தாம் நல்ல "சால்வைபிரட்டிகள்" என தமிழர்கள் வரலாற்றின் நெடுகிலும் நிரூபித்து வந்துள்ளனர்.
உச்சகட்டமாக, புலிகள் எனும் ஆயுதம் தரித்த, மக்கள் அங்கீகாரம் பெற்ற அரசியல் நிறுவனம், தாம் சார்ந்த தமிழ் வர்க்கத்தின் பெரும் எதிர்ப்புக்கள் எதுவுமின்றி, ஆதரவுடனேயே,
தமது அதிகாரப்பிரதேசத்தினுள் வாழ்ந்த முஸ்லிம்களை அநாதகளாக்கி, ஒரே நாளில் விரரட்டியடித்து, அவர்களது உடமைகளை பறித்து, நடுத்தெருவில் விட்டனர். ஓரினம் மீது கூட்டு வன்முறை புரிந்தவர். இனச்சுத்திகரிப்பில் ஈடுபட்டனர்.
விரட்டப்பட்ட முஸ்லிம்களின் உடைமைகள் எலாம் மலிவு விலைக்கு வீதியில் விற்கப்பட்டன.
இந்த அதிகார எக்காளத்தின் மூலம், விடுதலைப்புலிகளும், அவர்களுக்கு ஒத்தூதிய தமிழ்ச்சாதியும், செயற்பாட்டுவடிவில்,
முஸ்லிம்கள் தமிழர்கள் இல்லை என்றும்,
அவர்கள் தனியான தேசிய இனம் என்றும்,
தங்கள் தேசத்தில் அவர்களுக்கு இடமில்லை; அவர்கள் தமக்கென தனியாக தேசமொன்றை உருவாக்கிக்கொள்ளட்டும் என்றும்,
உலக அரங்கில் உரத்து, தெளிவாக அறிவித்தனர்.
முஸ்லிம்கள் தமிழர்களை விரட்டிய கிழக்கு நிலவரம் வேறு அடிப்படைகளை கொண்டது.
வடக்கு, கிழக்கு, தெற்கு முஸ்லிம்களை ஒன்றாக வைத்து, தட்டையான பார்வைமூலம் விமர்சிப்பது மகாதவறு.
கிழக்கு தமிழ் முஸ்லிம் விரோதம், தேசிய அரசியல் சார்ந்ததாய் உருவாகவில்லை. அதன் அடிப்படைகள் வேறு. என்னால் அதை சரிவர புரிந்துகொள்ள முடியவில்லை,
படு குழப்பங்களுடன் சில விஷயங்களை உணர்கிறேன்.
அம்பாறை, மட்டக்களப்பு மாவட்ட வலைப்பதிவர்கள் யாரவது இருந்தால் , அவர்கள் தமிழ் பேரினவாதிகளாக இல்லாதிருந்தால், நல்ல விளக்கங்கள் கிடைக்கக்கூடும்.
ஒரு தவறு இன்னொரு தவற்றை நியாயப்படுத்தாது.
கிழக்கு மாகாணத்தில் இஸ்லாம் தழுவிய தமிழ் மக்களின் இனப்பெருக்கத்துக்கு ஈடுகொடுக்குமளவுக்கு
நிலப்பரப்பு இல்லை. அம்பாறையில் பெரும்பகுதி பறிபோனதற்கு சிங்கள இனவெறியரின் வெறிப்போக்கு
மட்டும் காரணமல்ல. இஸ்லாமிய தமிழ்த் தலைவர்கள் தமது எதிர்காலத்தை எண்ணிப் பார்க்காது
ஆளும் கட்சிகளின் அடிவருடிகளானதே காரணம்.
இம் மன்னிக்க முடியாத குற்றத்தை முதலில் செய்தவர்
முதலியார் காரியப்பர். பின்பு அம்பாறை பறிபோனதன் பின்பு காலம் கடந்த நிலையில் ஞானம் பெற்ற
அவர் கதறி அழுத நிகழ்ச்சியும் எமக்குத் தெரியும்.
தந்தை செல்வா கல்லோயாத் திட்டம்
பற்றிக் கூறிய தீர்க்க தரிசனம்
தென்பகுதி முஸ்லிம்களில் பெரும்பான்மையோர் வியாபாரத்தை நம்பி வாழ்பவர்கள்.
ஆகவே, சிங்கள அரசுகளிடமிருந்து ஏற்றுமதி, இறக்குமதி அனுமதிப் பங்கைப் பெற,
அவர்களுடன் ஒட்டி உறவு கொள்கின்றார்கள். அவர்களது செயலை நாம் ஏற்பதற்கில்லை.
ஆனால், நோக்கம் புரிகின்றது.
எனினும், கிழக்கு மாகாண முஸ்லிம்களைப் பொறுத்த வரையில் அவர்கள் உழவர்கள். மண்ணோடு ஓட்டிய
வாழ்வைப் பெற்றவர்கள். 2 போக, 3 போக விளைச்சலுள்ள பூமிக்கு சொந்தக்காரர்கள் அவர்கள்.
இந்த மண்ணை இழக்கும் போது அவர்களது வாழ்வு எங்கே? எனவே, தான் தொலைநோக்குச்
சிந்தனையுள்ள தந்தை செல்வா 1955 இல் கல்லோயாத் திட்டம் என்பது அம்பாறையை அபகரிக்கும் செயல்.
தமிழ் மக்களையும் முஸ்லிம் மக்களையும் பார்த்துக் கூறிய அறிவுரை முன்கூட்டிய எச்சரிக்கை என்பது
இங்கு நினைவு கொள்ளத்தக்கது. அபிவிருத்தியின் பெயரில் இங்கு அபகரிப்பு நடக்கின்றது. இதை நீங்கள் தடுத்து நிறுத்த வேண்டுமென்று தந்தை கேட்டபோது, கிடைத்த பரிசு அவருக்கு நெற்றியில் கல்லெறிந்து காயப்படுத்தியமையேயாகும். 1955 இல் `வீரகேசரி'யில் வெளிவந்த முதற்பக்க செய்தி இதுவாகும்.
ஆனால், தந்தை உண்மைக் கிறிஸ்தவன் என்ற வகையில் `தந்தையே இவர்கள் செய்யும் செயல்
யாதென்றறியார்? இவரை மன்னித்திடுக' எனக் கூறிய கூற்றுகளை இன்றும் நினைக்கும் போது..
/'உண்மைகளை மட்டுமே பேசுதலே' மிகச்சரியானது என்ற ஒரு முடிவுக்கு வந்திருந்தேன்./
ப்ரோ ரப்பர், 'உண்மை என்றும் ஒன்றானதல்ல";
அதனால், "நிகழ்வுகளைப் பேசுவோம்; அதுவும் கிடைத்த தரவுகளாற் பேசுவோம்; எமது பார்வைகளால் அல்ல" ;-))
//'உண்மை என்றும் ஒன்றானதல்ல";
அதனால், "நிகழ்வுகளைப் பேசுவோம்; அதுவும் கிடைத்த தரவுகளாற் பேசுவோம்; எமது பார்வைகளால் அல்ல" ;-))//
ப்ரோ தெளிவுபடுத்தியமைக்கு நன்றி. //ஆதாரத்துடன் பேசப்படும் உண்மையான விடயங்களை // என்று முதல் பின்னூட்டத்தில் கூறப்பட்ட உண்மைகளைத்தான் நானும் குறிப்பிட விரும்பினேன் :-). அவரவர்க்குரிய 'உண்மைகளை' அல்ல. பிறகு பின்நவீனத்துவக்காரர்களும் அடிக்க வந்துவிடுவார்கள். உண்மை என்பது எப்படி ஒன்றாக இருக்கும். பல உண்மைகள்தானே உண்மை என்ற உண்மை உனக்குத்தெரியாத உண்மையற்றவனாய் இருக்கின்றாயே என்று (ஆகா ஒருவருக்கும் விளங்காத ஒரு சொற்றொடரை நானும் எழுதிவிட்டேன் :-))
/ஆகா ஒருவருக்கும் விளங்காத ஒரு சொற்றொடரை நானும் எழுதிவிட்டேன் :-)/
கேட்பவர்களுக்கு, -/பெயரிலி. இன் தமிழரகரமுதலியையே பார்க்கச்சொல்லிவிடுங்கள்; பிள்ளையார்பாவமெல்லாம், பெருச்சாளியிலேயே விழட்டும் ;-)
ரஜினி, விஜயகாந்த் போன்ற நடிகர்களுக்கு முஸ்லிம் ரசிகர்கள் இருக்கின்றனர். அப்படி தான் மௌலவி ஷகீல் பிரபாகரனுக்கு ரசிகராக இருக்கிறார்.
அனானிமஸ் சரியாச் சொன்னீங்க! தங்கத் தலைவர், தங்கத் தலைவர் எனக் கூவும் பொழுதே நினைச்சேன், இவர் மௌலவியா இருக்கமுடியாது ரசிகச் சிகாமணியாத் தான் இருக்கும்ன்னு. வாங்கிய காசுக்கு வாய்ப்பாட்டு பாடுராரு போல. இன்னும் கொஞ்சம் நாள் கழிந்தா தர்கா கட்டி வழிபாடும் ஆரம்பிச்சிடுவாரு பாத்துக்கிட்டே இருங்க.
Post a Comment