Friday, September 02, 2005

உண்மை உண்மையைத் தவிர வேறொன்றில்லை

ன்று ஒரு பதிவு இட்டிருந்தேன் தமிழ் பேசும் முஸ்லீம்கள்...என்ற தலைப்பிலே எழுதியிருந்த ஒரு பதிவு பலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.அதில் பெயரிலி மற்றும் டீ.சே அவர்கள் "உண்மை"பற்றி சில உண்மைக்கருத்துக்களை உண்மையாகவே கூறியிருந்தனர்.பெயரிலியின் பின்னூட்டம் இடும் வேகம் ,விவேகம் ஆச்சரியத்தினை அளிக்கிறது.
நீண்டநாட்களின் பின்னர் பின்னூட்டகுளத்தில் தொபுக்கடீர் எண்டு மூழ்கி கரை ஏறியது மிகவும் சந்தோஷத்தினை தந்தது.

இது டீ.சே யின் பின்னூட்டத்தின் ஒரு பகுதி:-'உண்மைகளை மட்டுமே பேசுதலே' மிகச்சரியானது என்ற ஒரு முடிவுக்கு வந்திருந்தேன்.

இதற்குபெயரிலியின் பின்னூட்டம்:-
'///உண்மைகளை மட்டுமே பேசுதலே' மிகச்சரியானது என்ற ஒரு முடிவுக்கு வந்திருந்தேன்.///ப்ரோ ரப்பர், 'உண்மை என்றும் ஒன்றானதல்ல";அதனால், "நிகழ்வுகளைப் பேசுவோம்; அதுவும் கிடைத்த தரவுகளாற் பேசுவோம்; எமது பார்வைகளால் அல்ல" ;-))

இதற்கு டீ.சே யின் பதில் பின்னூட்டம்:-
ப்ரோ தெளிவுபடுத்தியமைக்கு நன்றி. //ஆதாரத்துடன் பேசப்படும் உண்மையான விடயங்களை // என்று முதல் பின்னூட்டத்தில் கூறப்பட்ட உண்மைகளைத்தான் நானும் குறிப்பிட விரும்பினேன் :-). அவரவர்க்குரிய 'உண்மைகளை' அல்ல. பிறகு பின்நவீனத்துவக்காரர்களும் அடிக்க வந்துவிடுவார்கள். உண்மை என்பது எப்படி ஒன்றாக இருக்கும். பல உண்மைகள்தானே உண்மை என்ற உண்மை உனக்குத்தெரியாத உண்மையற்றவனாய் இருக்கின்றாயே என்று (ஆகா ஒருவருக்கும் விளங்காத ஒரு சொற்றொடரை நானும் எழுதிவிட்டேன் :-))

உண்மையாகவே எனக்கு இவர்கள் உண்மையைப்பற்றி எழுதியிருக்கும் உண்மைக்கருத்துக்கள் புரியவில்லை.பெயரிலி சொன்ன உண்மையைப் பற்றிய உண்மைக் கருத்துக்கள் எனக்கு கொஞ்சம் விளங்குகிறது.ஏன் இப்படி உண்மையினைப் பற்றி உண்மையில் இவர்கள் எழுதிய உண்மைக்கருத்தினை புரிந்துகொள்ள உண்மையாகவே சிரமமாக இருக்கிறது என்று யோசித்தபோது இந்த கதை ஞாபகம் வந்தது.

எங்கோ எப்போதோ படித்தது.நீதிபதிகள் இருக்கிறார்களே இவர்களுக்கு உண்மையினை அறிந்து கொள்ளவேண்டிய தேவை, கட்டாயம் உண்டு.அவர்கள் எப்படி உண்மையினை அறிந்து கொள்கிறார்கள் என்பதற்கு உதாரணம்இந்த சம்பவம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு வக்கீல் முதன்முறையாக நீதிமன்றம் வருகின்றார் முதல் அனுபவம் வேறு.எனவே உணர்ச்சி வசப்படுகிறார்.கூச்சப்படுகிறார்.தடுமாறுகிறார்.

"தூரதிர்ஸ்டம் பிடித்த என் கட்சிக்காரர் விதிவசத்தால் அகப்பட்டுக் கொண்ட என் கட்சிக்காரர்...!இதற்கு மேல் பேசமுடியாமல் தடுமாறுகிறார்.இப்போது நீதிபதி சொல்கிறார்.

"உங்களிடம் வந்துவிட்ட உங்கள் கட்சிக்காரரின் நிலை எங்களுக்கு தெளிவாக புரிந்துவிட்டது...மேலே தொடர்ந்து வழக்கு விபரங்களை சொல்லுங்கள்!"

No comments: