இந்த குஷ்பு மேட்டருக்கு பின்பு பிரபலமாகிவிட்டது செருப்பு,துடைப்ப மேட்டர்.செருப்பை வைத்து தொழில் புரிவோரை அவமானப்படுத்தியது என்று பதிவுகள் வேறு. இதுவும் ஒருசெருப்பை பற்றிய பதிவுதான்.இணையத்தில் கண்ட ஒரு படத்தினைதான் இங்கு நீங்கள் பார்க்கின்றீர்கள்.பல வரிகளில் சொல்வதை ஒரு புகைப்படம் சொல்லிவிடும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.அதேபோல இந்த படத்திலுள்ள செருப்பையும் அணிந்திருக்கும் கால்களையும்பார்த்தவுடன் ஒரு இனம்தெரியாத சோகம் எழுகிறது மனதில்.அத்துடன் உடனடியாக இந்த செருப்புக்கும்,கால்களுக்கும்சொந்தக்காரனின் முகத்தினை பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுகிறது.வறுமையும் இயலாமையும் எப்படி மனிதனை ஆட்டுவிக்கிறது என்பதனை முகத்தில் அறையும் விதமாய்சொல்கிறார் இப் படப்பிடிப்பாளர்.ஒரு நல்லபுகைப்படபிடிப்பாளனின் வெற்றி இப்படியான விடயங்களில் தான்தங்கி இருக்கிறது. ஹவானாவில் இப்படம்
பிடிக்கப்பட்டதாக தெரிகிறது.மேலதிக விபரங்கள் புரிந்துகொள்ளமுடியவில்லை.
செருப்பணிந்தவன் சப்பாத்து அணிந்தவனை ஏக்கத்துடன் பார்க்கிறான்.ஆனால் கால் இல்லாதவன் அவன் கால்களை ஏக்கத்துடன் பார்ப்பதை மறந்துவிடுகிறான்.
5 comments:
ஹவானா நாட்டில் ??
கரிகாலன் படம் மனதை என்னமோ செய்கிறது. ஒரு படம் ஆயிரம் செய்திகளை சொல்ல வல்லது.
நான் ஊரில் இதுபோல் பல பெரியவர்களை, ஏழைகளைப் பார்த்து இருக்கிறேன்.
.
உங்களின் பதிவுகள் தெளிவான பார்வையுடன் இருக்கின்றன.
கரிகாலன்,
எனக்கு இந்தப் படத்தைப் பார்த்தபோது இன்னொரு சம்பவம் ஞாபகத்துக்கு வருகிறது.
1998 இன் இறுதிப்பகுதியில் வன்னியல் நிறையப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு இருந்தது. மிதிவண்டியோ உதிரிப்பாகங்களோ வன்னிக்கு எடுத்துவரத்தடை. எங்காவது களவாக இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள்ளால் கொண்டுவந்தால்தான் உண்டு. அப்படிக் கொண்டுவரும் சந்தர்ப்பத்தில் இராணுவத்தினராற் கொல்லப்பட்ட பொதுமக்களும் உள்ளனர்.
அப்படியான நேரத்தில் சைக்கிள் ரியூப்புக்குப் பதிலாக ரயருக்குள் வைக்கோல் அடைந்து ஓடும்முறையொன்று வன்னியில் பரிசீலிக்கப்பட்டது. வட்டக்கச்சியில் அப்படி ஓரிருவர் ஓடியதாகவும் நானறிந்தேன்.
நல்ல பதிவு.வறுமையைப் போக்கும் வசதி பூமியிலுண்டு.ஆனால் மூலதனத்தைப் பெருக்கும் அதிகாரவர்க்கம் அதை அனுமதிப்பதில்லை.இவர்களுக்காக இருக்கும் அரசுகளோ மக்களையின்னும் ஏழைகளாக்கியபடி...
நன்றி
கல்வெட்டு,வசந்தன்,சிறீரங்கன்
கருத்துகள் சொன்ன உங்களுக்கு நன்றிகள்.
Post a Comment