நாட்காட்டியில் நாம் நாட்களை பார்ப்பதற்கும் மற்றும் நல்ல நேரம் பிற காரியங்களுக்கும் பயன்படுத்துகிறோம்.சில நாட்காட்டிகளில் சில பல நல்ல வாசகங்கள் பொறிக்கப்பட்டிருப்பதையும் காணலாம்.இந்த அவசர உலகில் அதை நின்று நிதானித்து படிப்பதற்கு கூட முடிவதில்லை.நானும் இங்கு அவற்றை பதிய வேண்டும் என்று நினைத்து பல நாட்களாக முடியவில்லை. இன்று அவற்றில் சிலவற்றை தருகிறேன்.உங்களுக்காக மட்டுமல்ல எனக்காகவும் கூட.
மனைவி பற்றி சில வாசகங்கள்.
மனைவிக்கு உலகமாய் இரு: ஆனால் மனைவிதான் உலகம் என்று இருந்து விடாதே!
மனைவி உனக்காக எதையும் இழப்பாள், எதற்காகவும் உன்னை இழக்கமாட்டாள்.
நெஞ்சில் வஞ்சகம் கொஞ்சமும் இன்றி மனைவியை நேசித்துப்பார்,உன் தெய்வம் பூஜை அறையில் இல்லை,படுக்கை அறையில் தான்.
ஆணுக்கு கிடைக்கும் சீதனம் உழைத்துப் பெற முடியாத் பெண்ணின் குண நலன்களே தவிர, உழைத்துச் சம்பாதிக்கும் காசு பணம் அல்ல.
அன்பு செலுத்துதல் ஆணுக்கு அழகு:அதை புரிந்து கொள்ளுதல் பெண்ணுக்கு அழகு.
1 comment:
அருமையான வரிகள். ஆனால், பின்வரும் அறிவுமதியின் வரிகள்தான்(அப்படிதான் நினைக்கிறேன்), பெரும்பாலும் சாத்தியமாகின்றன. அதாவது, நாம் தெய்வமாக நினைத்தால் போதாது; தெய்வம் நம்மைப் பக்தனாகவாவது மதிக்க வேண்டும்.
"வரங்களே
சாபங்களானால்
இங்கே
தவங்கள்
எதற்காக?"
-ஞானசேகர்
Post a Comment