Sunday, October 26, 2008

சுவிஸ், ஜேர்மன், டென்மார்க் நாடுகளில் ஏகன் திரைப்படம் ரத்து!




ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக எதிர்வரும் நவம்பர் 1ம் தேதி சென்னையில் நடிகர் சங்கம் நடத்தும் உண்ணாவிரத போராட்டத்தில் நாங்கள் ஏன் கலந்துகொள்ள வேண்டும் என நடிகர்களான அஜீத், அர்ஜுன் நிர்வாகிகளிடம் கேட்டிருந்தனர்.
நேற்று முன்தினம் தமிழ்வின் இணையத்தளத்தில் "ஈழத் தமிழருக்காக ஏன் ஆதரவு வழங்க வேண்டும்" என அஜித் கூறிய இச்செய்தி வெளிவந்த சிலமணி நேரங்களில் உலகத் தமிழர்கள் கொந்தளித்ததுடன், அஜித் நடித்த ஏகன் திரைப்பட இறுவட்டை கொள்வனவு செய்த புலத்தில் வாழும் தமிழ்த் திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இதனையடுத்து ஜேர்மன், பிரான்ஸ், சுவிஸ் நாடுகளில் புலப்பெயர் தமிழ்மக்கள் 25-10-2008 சனிக்கிழமை அன்று வெளியாகவிருந்த ஏகன் திரைப்படத்தை திரையிடவிடமாட்டோம் என்று ஆர்ப்பரித்ததுடன் நடிகர் அஜித் உண்ணாவிரதத்தில் பங்கேற்க இணக்கம் தெரிவித்திருந்தபோதிலும், சுவிஸ் வாழ் தமிழர்கள் ஏகன் திரைப்படத்தை திரையரங்குகளில் திரையிட அனுமதி வழங்க மறுத்து கொந்தளித்தனர்.

இம்மக்களின் கொந்தளிப்பைக் கண்டு ஏகன் படத்தை விநியோகம் செய்த IMV ஸ்தாபனத்தினர் இத்திரைப்படத்தை திரையிடமாட்டோம் என மக்களுக்கு உறுதிமொழி அளித்து அத்திரைப்படத்தை ரத்து செய்ததோடு மக்களின் நன்மதிப்பையும் பெற்றுள்ளனர்.

இதுதொடர்பாக சுவிஸ் திரையரங்குகளில் ஏகன் திரைப்படத்தை வெளியிட இருந்தவரான, கஜன் என்பவரை தமிழ்வின் தொடர்புகொண்டு கேட்டபோது அவர் இணையத்தளத்திற்கு கூறியதாவது,

"ஈழத்தமிழருக்கு ஆதரவு வழங்கி, நடிகர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்க மறுத்த நடிகர் அஜித் நடித்த ஏகன் திரைப்படத்தை வெளியீடு செய்யக்கூடாது என சுவிஸ் வாழ் தமிழ்மக்கள் கொந்தளித்ததை அடுத்தே இவ்வாறு முடிவு செய்துள்ளோம்" எனக் கூறினார்.

இதேவேளை, ஜேர்மன் மற்றும் டென்மார்க் நாடுகளிலும் தமிழ்மக்களின் கொந்தழிப்பை தொடர்ந்து, ஏகன் திரைப்படத்தை திரையிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி.
தமிழ்வின்.

1 comment:

Anonymous said...

சென்னையில் உள்ள ஐங்கரன் இன்டர்நேஷனல் அலுவலகத்திற்குள் இலங்கைத் தமிழர் என்று கூறிக்கொண்டு எவர் வந்தாலும் உள்ளே விடவேண்டாம் என்ற ஆணை பல மாதங்களாக உள்ளது, அதே ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பிரதான நாயகன் இப்படிக் கூறுவதில் வியப்பில்லை.

எய்தவன் இருக்க அம்பு நோகடிக்கப்படுகிறது.