லண்டனை செர்ந்தவர்களால் நடத்தப்பட்ட ஒரு தமிழ் செய்தி இணையத்தளம் (அமெரிக்காவின் ஒரு பிரபலமான ஊடகத்தின் பெயரை கொண்டது).கடந்த மாதம் முதல் கனடாவினை சேர்ந்த்த ஒரு தொழிலதிபரால் வாங்கப்பட்டு புதிய
நிர்வாகத்தின் கீழ் என்று சொல்லி புது பொலிவுடன் இயங்கத்தொடங்கியுள்ளது.தொழிலதிபருக்கு சொந்தமானடையின் வினியோக வாகனங்களில் எல்லாம் அந்த இணையத்தளத்தின் பெயர் பொறிக்கப்பட்டுள்ள்துடன் பல த்மிழ் ஊடகங்க்ளில் எல்லாம் விளம்பரம் வேறு தடல்புடல்களாக. உண்மையினை அறியஎமது இணையத்தள்த்தினை பாருங்கள் என்று.
.அந்த தொழில் அதிபருக்கு திடீரென ஏன் இப்படி ஒரு சமபந்தமில்லாத துறையில் ஆசை என்று அவருக்கு நெருங்கியவர்களிடம் கேட்டபோது விளம்பரங்கள் மூலம் நிறைய காசு வரும் என்றுயாரோ சொல்லியிருப்பார்கள்போலும் என்றார்கள்.அத்துடன் பழம் தின்று கொட்டை போட்ட இன்னொரு இணையதளத்திற்கு போட்டியாகதானும் நடத்துவதாக சொன்னாராம்.
என்னவாவது செய்யுங்கள் அய்யா.செத்தவீட்டு விளம்பரங்களை யார் அதிகம் பிரசுரித்து யார் அதிக பணம் சம்பாதிப்பதுஎன்பதில் நீங்கள் போட்டிபோடுங்கள்.செய்திகளை யார் முந்தித்தருவது என்பதில் போட்டி போடுங்கள்
ஆனால் அழகியின் மார்பை கடித்த பூனை ,பார்க்க வீடியோ, பதினாலை கற்பழித்த நாற்பத்தியைந்து பார்க்க வீடியோ
இப்படியான செய்திகளை யார் முந்தித தருவது என்பதில்போட்டி போடாதீர்கள். தமிழ் கூறும் செய்தி உலகு நாறிவிடும். இப்பொது மட்டும் என்ன வாழுது என்கிறீர்களா?
இப்போது பார்க்கப் போனால் ப்ல தளங்கள் இப்ப்டியான செய்திகளை தருவதற்கே ஒரு பகுதியை ஒதுக்கிவைத்திருப்பதையும் காணமுடிகிறது.கேட்டால சொல்வார்கள் வாசகர்கள் இதைத்தான் விருமபுகிறார்கள்,அதுதான் நாம் பிரசுரிக்கிறோம் என்று.அப்படியான வாசகர்களுக்காக நீங்கள் ஏன் இப்படியான் ஆபாச செய்திகள்,ஆபாச வீடியோக்கள்,அபாச போட்டோக்கள் கொண்ட ஒரு ஆபாச இணைய தளத்தினை வடிவமைத்துஅவர்களின் ஆபாசமான ஆசைகளை நிறைவேற்றகூடாது. சிந்திப்பீர்களாக.தயவு செய்து மற்றவர்களை
சங்கடப்படுத்தாதீர்கள்.
இங்கு அப்படியான இணையத்தள்ங்கள் நடத்த எந்தவிதமான தடையும் இல்லை. சிறப்பாக செய்யலாமநான் சொல்லுவது உங்களுக்கு விளங்கியிருக்கும் என நினைக்கிறேன்.
அடுத்து யாரைப்பார்த்து யார் கொப்பி பண்ணுகிறார்கள் என்று தெரியாதவாறு ஒரே செய்திகள்தான் சகல இணையதளங்களிலும் பார்க்க முடிகிறது.
யாரோ சிலர் கஷ்டப்பட்டு பணம் செலவிட்டு செய்தி திரட்ட மற்றவர்கள் நோகாமல் நொங்கு குடிக்கிறார்கள்.அவரின்செய்தியை இவர் போட இவரின் விடையத்தினை அவர் போட மொத்தத்தில் யாரையும் யாரும் குற்றம் சொல்ல
முடியாதவாறு இருக்கீறது நிலமை.
ஆனால் பல் இணையத்தளங்கள்(செய்திதளங்கள்) தனித்தன்மையோடு ,இலாபநோக்கின்றி குறிப்பிட்ட நோக்கம் கருதி சிறப்பாக அன்று முதல் இன்று வரை இயங்கிவ்ருவதனையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.
No comments:
Post a Comment