மட்டக்களப்பு - காத்தான்குடி எல்லைப் பகுதியில் மட்டக்களப்பு மாநகரசபையினால் அமைக்கப்பட்ட வரவேற்பு பெயர்ப்பலகை மை ஊற்றி சேதமாக்கப்பட்டது தொடர்பில் காத்தான்குடியில் உள்ள அதிருப்தியாளர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபையில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன் தலையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் மாநகர ஆணையாளர் சிவநாதன், உதவி முதல்வர் ஜோர்ஜ்பிள்ளை, காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவரும் மீரா ஜும்மா பள்ளிவாசல் தலைவருமான அல்காஜ் சுபைர், காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்வர், மீரா ஜும்மா பள்ளிவாசல் செயலாளர் ஐ.எல்.சபீர் உட்பட பள்ளிவாசல், மட்டக்களப்பு மாநகரசபை பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
இதன்போது கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் மட்டக்களப்பு - காத்தான்குடி எல்லையில் அமைக்கப்பட்டிருந்த வரவேற்பு பெயர்ப்பலகை இனந்தெரியாத விஷமிகளால் அகற்றப்பட்டு அது மீண்டும் அமைக்கப்பட்டிருந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் மீண்டும் அந்த வரவேற்பு பெயர்ப்பலகை மீது கறுப்பு மை ஊற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இந்த கூட்டத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன் மீண்டும் அதே இடத்தில் புதிய வரவேற்பு பலகை நிறுவுவதெனவும் அதற்கு காத்தான்குடி நகரசபை மற்றும் காத்தான்குடியின் மக்கள் பிரதிநிதிகளை அழைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையில் மீண்டும் ஒரு பிளவை ஏற்படுத்தும் இவ்வாறான செயல்களை வன்மையாக கண்டிப்பதாக இங்கு கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன், யார் தடுத்தாலும் அவ்விடத்தில் வரவேற்பு பலகை மீண்டும் நிறுவப்படும் என தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
கடந்த 30 வருடகாலத்தில் இரு சமூகமும் பல்வேறுபட்ட முரண்பாடுகளில் இருந்து விடுபட்டு இன்று ஒரு சிறந்த நிலையினை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும் நிலையில் இவ்வாறான செயற்பாடுகள் அதனை சீர்குலைக்கும் நடவடிக்கையாகவே நோக்கவேண்டியுள்ளது.
ஒரு சில விசமிகளால் மஞ்சந்தொடுவாய் எல்லையில் மட்டக்களப்பு மாநகரசபையினால் அமைக்கப்பட்டிருந்த “வணக்கம், மட்டக்களப்பு உங்களை வரவேற்கின்றது” என்ற பெயர்ப்பலகை அகற்றப்பட்டிருந்தது. வணக்கம் என்ற வார்த்தை கராம் என்று கூறியே அந்த பெயர்ப்பலகை அகற்றப்பட்டிருந்தது.
என்றாலும் பல இஸ்லாமிய சகோதரர்கள் அது குறித்து ஆதங்கப்பட்டனர். அவ்வாறு வணக்கம் என்றும் சொல்லும் வார்த்தை கராம் இல்லை. இது சில விஷமிகளின் விடயமாக உள்ளது. இதனை ஒரு சமூகத்தின் பெரியவர்கள் என்ற வகையில் இதனை அனுமதிக்க முடியாது என்று என்னிடம் தெரிவித்துள்ளனர்.
அதன் பின்னர் காத்தான்குடியில் உள்ள பல்வேறு அமைப்பினருடனும் கதைத்து காத்தான்குடி நகரசபைக்கு எழுத்து மூலம் அறிவித்து ஒரு புரிந்துணர்வின் அடிப்படையில் “வணக்கம், மட்டக்களப்பு உங்களை வரவேற்கின்றது” என்ற பெயர்ப்பலகை மீண்டும் நடப்பட்டது.
எனினும் மிகவும் மனம் வருந்தத்தக்க வகையில் ஒரு சில தினங்களுக்கு முன்னர் அந்த பெயர்ப்பலகையில் மை ஊற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதானது மிகவும் வருந்தத்தக்க செயலாகவுள்ளது என்றார்.
இது ஒரூ செய்தி இன்னொமொரு செய்தியை பாருங்கள் .
http://www.tamilwin.com/show-RUmqyERUOUhs2.html
இரண்டினையும் பற்றி என்ன நினைக்கிறீர்க ள்?
No comments:
Post a Comment