பிளாக்பெரி போன்களின் தாயகம் கனடா என்பது பலருக்கு தெரியாத விடையம்.பிளாக்பெரி போன்களை தயாரிக்கும் RIM research in mortion நிறுவனம் இருபது வருடங்களுக்கு முன்பு வோட்டலூ என்ற நகரத்தில் தான் தனது முதலாவது ஸ்மார்ட்போன் ஆன பிளாக்பெரி தயாரிப்பை தொடங்கியது
வோட்டலூ நகரம் என்பது ரொரன்டோ நகரத்தில் இருந்து 100 km தொலைவில்அமைந்திருக்கும் ஒரு சிறிய நகரம் ,சனததொகை அண்ணளவாகஒரு லட்சம் பேர்.
.ஒரு பல்கலைக்கழகமும அங்கு அமைத்திருக்கிறது .20ஆண்டுகளுக்கு முன் 1992ஆம் ஆண்டில் மைக் லசாரிடிஸ், ஜிம் பால்சிலி எனற இருவரின் முயற்சியால் வாட்டர்லூ நகரம், உலக தொழில்நுட்ப வரைபடத்தில் முக்கியத்துவம் பெற்றது.
ஒரு லட்சம் பேர் வசிக்கும் அந்த குட்டி நகரத்தில் அடுத்த சில ஆண்டுகளில் அபரிமித வளர்ச்சி. எங்கு திரும்பினாலும்
பிளாக்பெரி ஸ்மார்ட்போன் போஸ்டர்கள், பேனர்கள்.
சொந்த கட்டிடங்களும், வாடகை கட்டிடங்களுமாக ரிம் நிறுவனத்தின் அலுவலகங்கள், போன் தொழிற்சாலைகள்தான் நகரின் மூலை
முடுக்குகளில் எல்லாம் வியாபித்திருந்தன.நகரத்துகே தனி மரியாதை
உலகம் முழுவதும் பரந்து விரிந்தது அதன் போன் சாம்ராஜ்யம். உள்ளூர் தொழிலதிபர் முதல் அமெரிக்க
ஜனாதிபதி ஒபாமா வரை பிளாக்பெரி போன் வைத்திருப்பதை கவுரவமாக கருதியதுண்டு.
10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் 16,500 ஊழியர்கள். அதில் வாட்டர்லூ நகரில் மட்டும் 9,000 பேர். இப்படி
உலா வந்த பிளாக்பெரி கடந்த 8 ஆண்டுகளில் முதல் முறையாக கடந்த 3 மாதத்தில் நஷ்ட கணக்கை வெளியிட்டுள்ளது.
இதற்கு காரணம் ஆப்பிள் ஐபோன், கூகுளின் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் வருகை. மற்றும் அவை பெற்றுள்ள வரவேற்பும் . கடந்த ஆண்டில் மொத்த
ஸ்மார்ட்போன் விற்பனையில் 11 சதவீதமாக இருந்த பிளாக்பெரி, கடந்த 3 மாதங்களில் 5 சதவீதமாக இறங்கி விட்டது.
இதனால் 6,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பப் போவதாக அறிவித்துள்ளது நிர்வாகம்.ஆனால் இந்தமாதம் அறிமுகப்படுத்த உள்ள 4G LTE BLACK BERRY PLAYBOOK ஆனது நிலைமையை ஒரளவு சமாளிக்கும் என எதிர்பாகிறது நிறுவனம் .
இந்தியாவிலும் பிளாக்பெரி போன்களின் விற்பனை சரிவதாக அண்மையில் புள்ளிவிபரங்கள் தெரிவித்திருந்தன .
எல்லாம் சரி.இந்த வோட்டலூ என்ற பெயரை எங்கோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கிறது என்று யோசிக்கிரிகளா? நெப்போலியனின் சரித்திரம் படித்தவர்களுக்கு தெரியும்.மேற்படி பிளாக்பெரி போன்களின் சரிவுக்கு இந்த நகரத்தின் பெயரும் கூட கரணமாக இருக்கலாம் .
4 comments:
அறியாத தகவல்கள்... பாராட்டுக்கள்...
தொடர வாழ்த்துக்கள்... நன்றி... (TM 1)
அவ்வப்போது ஸ்டைலை மற்றும் பொருட்களை மாற்றிக்கொண்டே இருக்கணும்.
பிளாக்பெரி போன்களின் தாயகம் கனடா என்பது பலருக்கு தெரியாத விடையம்......முற்றிலும் உண்மை !
good
Post a Comment