அண்மையில் யூரியுப்பில் எதேச்சையாக ஒரு வீடியோ காட்சியினைபார்க்க நேர்ந்தது .பார்த்ததும் அதிர்ந்து விட்டேன் .எப்படி பள்ளிக்குழந்தைகளுக்கு ஆங்கிலம் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று ,ஒரு வட இந்திய நகரத்தில் அல்லது கிராமத்தில் உள்ள பாடசாலையில் இப்படத்தினை எடுத்திருக்கின்றனர் .கிராமம் ஆகத்தான் இருக்கும்
எப்படி ஆங்கிலம் சொல்லிக்கொடுக்கின்றனர் பார்த்திர்களா?.முழுவதும் ஹிந்தியில் இருப்பதால் முழுவதும் விளங்கவில்லை, இருப்பினும் விடியோவினைப் பார்த்து புரிந்துகொள்ள முடிகிறது . எப்படி இவ்வாறு நடக்க அனுமதித்தனர் இந்த பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி யார் கவலைப்படுகிறார்கள் ?ஆங்கிலம் தெரியாத ஆசிரியர் பாடம் எடுக்க எப்படி அனுமதித்தனர் .சில பின்தங்கிய கிராமப்புறங்களில் ஆசிரியர் பணியாற்ற பின்னடிப்பதால் வேறு பாடமெடுக்கும் ஆசிரியர்களை ஆங்கிலம் எடுக்க அனுமதித்திருக்கிறார்கள் போலும் .அனால் அதற்காக இப்படியா சொல்லித்தருவார்கள்.சொல்லி கொடுக்கும் இவையெல்லாம் இன்றைய நாளில் சிறு பிள்ளைகள் கூட தவறின்றி சொல்வார்களே
வீடியோவைப்பாருங்கள் கொஞ்சம் ஒலியை அதிகப்படுத்திவிட்டு பாருங்கள் .
சன்டே—sande
மண்டே mande
அப்பிள் apil
மேங்கோ mego
இவை french அல்ல ஆங்கிலம்தான் ஆங்கிலம் தான் சொல்லித்தருகிறார்
.
என்ன அடக்கமாட்டாமல் சிரிப்பு வருகிறதா? சிரியுங்கள் ஆனால் வீடியோவை பார்த்து அல்ல இந்த சமுக அமைப்பினை பார்த்து சிரியுங்கள் ,வசதியுள்ளவனின் பிள்ளை நல்ல பாடசாலை ,நல்ல கல்வியினை பெறும் போது ஏழையின் பிள்ளை தரையினில் அமர்ந்து இப்படியான ஆசிரியர்களிடம் ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டிய அவலத்தினை எண்ணி சிரியுங்கள் .நாட்டின கல்வி முறையினை எண்ணி சிரியுங்கள்.
நன்றிகள்
7 comments:
எங்கே சிரிக்கிறது... வயிறு எரிகிறது...
நாட்டின் அவலநிலை...
நன்றி...tm2
உண்மையில் ஒரு சோகமே மனதில் இழையோடுகிறது மாணவர்களை பார்ஹ்து மாட்டும் அல்ல அந்த ஆசிரியர்களை பார்த்தும் தான் .
நன்றிகள்
திண்டுக்கல் தனபாலன்
அலுவலகத்தில் இருப்பதனால் வீடியோவை பார்க்க முடியவில்லை. ஆனால் படித்தவுடனே புரிந்துவிட்டது.
வாழ்க்கையில் கல்வி மிகவும் முக்கியமானது. இவ்வாறு கற்றுகொள்ளும் குழந்தைகளின் எதிர்காலமே பாதிக்கப்படுவது மிகவும் கொடுமையான செயல்.
நல்ல பதிவு.
இதைத் தானே சாட்டை படத்திலும் காட்சிப்படுத்தியுள்ளார். இயக்குநர்.
கொடுமை!!
மிகவும் வருந்தத்தக்க விடயம் நண்பரே..
Post a Comment