1) வெள்ளையா இருக்கவனுக்கு ஆங்கிலம் சரளமா பேசத் தெரியும்.
2) ஆங்கிலம் சரளமா பேசத் தெரிஞ்சவனுக்கு உலகமே தெரியும்.
3) நிறம் கம்மியா இருக்கவனுக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது.
4) தமிழ் பேசுறவனுக்கு தமிழைத் தவிர ஒன்றும் தெரியாது.
5) முதல் பெஞ்சில் உட்கார்ந்திருப்பவன் புத்திசாலி.
6) கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருப்பவன் மக்கு.
7) வேட்டிக் கட்டுனவங்க படிக்காதவங்க.
8) கையெழுத்து அழகா இருந்தா எழுதினது பாட்டி வடை சுட்ட கதையா இருந்தாலும் 100 மதிப்பெண்.
9) பொறியியலும் மருத்துவமும் படிப்பவன் மேதை.
10) ஒரு சினிமாவ ஒருதரம் ரசித்துவிட்டால் தொடர்ந்து
அதே பாணியில் படம் எடுப்பது.
11) பெற்றோர் பிறந்த நாள் தெரியாதவன், தலைவன் போஸ்டருக்கு பாலூத்தறது.
12) மழை பெய்து தேங்கிய நீரில் நீந்திக் கொண்டே பேருந்து செல்வது.
14) கீழே விழும் புத்தகத்தை பெண்ணிடம் எடுத்துக் கொடுத்ததும் காதல் வருவது.
15) அரசியல்வாதி ஆவதற்கு அதிகப்பட்ச தகுதி TV சேனல் ஆரம்பிப்பது.
16) பேருந்தில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வது வீரம் சாகசம்னு நினைப்பது.
17) நகைக் கடைகளுக்கு நடிகைகளை வச்சு மட்டுமே திறப்புவிழா நடத்துவது.
18) இடுப்பு வலி வராத கர்ப்பிணிக்கும்பணத்திற்காக சிசேரியன் செய்வது.
19) பரிட்சை எழுதாதவனுக்கு"பாஸ்" என்று தேர்வு முடிவு வருவது.
20) இலவசங்களுக்காகவும் பணத்திற்காகவும்தன் உரிமை அறியாமல் ஓட்டை விற்பது.
21) Ambulance உம் , காவல் துறையும் அழைத்ததும் வருமோ இல்லையோ pizza வருவது.

22) இலவசமா கிடைக்கற அரிசி தரமில்லாம இருக்கும், இலவசமா கிடைக்கற sim card credit (balance) oh da இருக்கும்.
23) கல்விக் கடனுக்கான வட்டி விகிதம் வாகனக் கடனின் வட்டி விகிதத்தை விட அதிகம்.
24) இட்லி ஒரு ரூபாய்க்கும் குடி தண்ணீர் 40 ரூபாய்க்கும் விற்கப்படுவது.
25) குடி தண்ணீருக்கு பஞ்சமுண்டு, சாரயத் தண்ணீருக்கு பஞ்சமில்லை.
26) மின்சாரம் தட்டுப் பாட்டிலும் AC பேருந்து நிறுத்தம் அமைக்கும் அளவிற்கு பெருந்தன்மை இருப்பது.
27) வடக்கே படிப்பவனுக்கு வேலு நாச்சியாரைத் தெரியாது, தெற்கே படிப்பவனுக்கு ஜான்சிராணி முதல் அனைவரையும் தெரிந்து இருப்பது.
28) சட்டசபை போவாங்க சட்டகிழிய சண்டை போடறதுக்கு மட்டும், அதுக்கு கூட முன்ன நாலு கார் பின்ன நாலு கார் கண்டிப்பா போகணும்.
29) இலவசங்களை காட்டி காட்டியே மக்களை அடிமைப் படுத்த நினைப்பது.
30) ஆ ஊ னா தற்கொலை பண்ணிக்கறது.
31) பதவியில் இருந்துக் கொண்டு தன் சொந்த விருப்பு வெறுப்புகளையும் அரசியல் ஆக்குவது.
32) நான்கு வாரங்களில் சிவப்பழகு, முடியால் மலையைக் கட்டி இழுக்கலாம் என்று மடத்தனமாக விளம்பரம் செய்வது...
33) வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் என போஸ்டர் அடிப்பது
34) கண்ட கண்ட இடங்களில் எல்லாம் கூ ச்சம் இல்லாமல் ஒண்ணுக்கு
அடிப்பது
35) பல் விழுந்த பாட்டியானாலும் பஸ்ஸில் பக்கத்தில் அமர்ந்தால் கற்பே பறிபோன மாதிரி கூ ச்சல் போடுவது
36) ஊழலில் ஊறித்திளைத்த அதிமுகாவையும் ,திமுகாவையும் இன்னமும்
நம்புவது .
37) எந்த வியாதிஎன்று டாக்டரிடம் போனாலும் ஊசி போட்டு அனுப்புவது .
38) வெத்திலையை போட்டுவிட்டு பஸ்ஸின் ஜன்னல் வழியா துப்புவது
39) வருகின்ற படம் ஒன்னுவிடாம பாத்துட்டு ஒரு வாட்டி பாக்கலாம் என
அட்வைஸ் பண்ணுவது
40) காலை முதல் மாலை வரை பிச்சை எடுத்துவிட்டு மாலை ஆனதும் டாஸ்மார்க்கில் ஏத்திக்கொண்டு தியேட்டர் வாசலில் படம் பார்க்க கியூவில் நிற்பது .
இன்னும் நமக்கே நமக்குன்னு நிறைய இருக்கு.. நான் இதோடு நிறுத்திக்கிறேன்.தேவைபட்டால் இன்னமும் வரும்
8 comments:
:)
இதை நீண்டநாட்களாக வைத்துகொண்டு யோசித்துக்கொண்டே இருந்தேனா இன்று துணிவு வந்து பதிவிட்டிருக்கிறேன் .பதிவர்கள் எப்படி எடுதுக்கொள்(ல்)கிரார்களோ தெரியவில்லை.பார்ப்போம்
நன்றி திருப்பூர் தியாகு .எப்படி ஊர் நிலவரம் ?
வேதனையான உண்மைகள்
படிக்கும்போதே வேதனையாக இருக்கிறது. என்ன செய்வது? அனைத்துமே வணிக மயம்.
அது என்ன அதிசய உண்மைகள் தெரியாதவை தெரிந்தால்தான் அதிசயம் ஆனால் இது எல்லோருக்கும் தெரிந்த உண்மைகள்தானே. மிக நல்ல தொகுப்பு... ரசித்து மகிழ்ந்தேன்,,,பராட்டுக்கள்
உண்மைதான் நண்பர்களே தமிழ்நாட்டில் நடப்பவை தமிழ்நாட்டில் நீண்ட காலம்
வாழ்ந்தவன்,அக்கறை உள்ளவன் என்ற முறையில் எனக்கு கவலைதான்
என்ன செய்வது மக்கள் மாறவேண்டும் முதலில் பின்னர் மாற்றம்வரும்
தன்னாலே
உண்மைகள்
உண்மைகள்
Post a Comment