Friday, November 20, 2015

எங்கெல்லாம் இஸ்லாமிய புர்காவுக்குத் தடை?

லண்டனில் இருந்து வெளிவரும் பி.பி.சி இணையதளத்தின் தமிழ் பதிப்பு இன்றைய தினம் வெளியிட்டிருபதே   இக் கட்டுரை ஆகும்  உங்கள் வாசிப்புக்காக இங்கு தந்திருக்கிறேன் .பி.பி.சி தமிழுக்கு எனது நன்றிகள் உரித்தாகுக 
ஆப்ரிக்க நாடான செனகோல் , அங்கு ஜிஹாதி தாக்குதல்கள் நடக்கும் ஆபத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியில், பெண்கள் தங்கள் முழு உடல் மற்றும் முகத்தை மூடும் வண்ணம் அணியும் 'புர்கா'வை தடை செய்வது குறித்துப் பரிசீலித்துவருகிறது.

Image copyrightGetty

இந்த முழு முகத்தை மூடும் இஸ்லாமிய முகத்திரை, உடல் முழுவதையும் தளர்ச்சியாக மூடி , பார்ப்பதற்கு மட்டும் முகத்தில் ஒரு வலை வேலைப்பாடு செய்த திரையுடன் இருக்கும். பொது இடங்களில் முஸ்லீம் பெண்கள் இதை அணிகிறார்கள்.
ஆனல், கடந்த காலங்களில் இது இஸ்லாமியத் தீவிரவாதிகள் வெடி பொருட்களை தாங்கிச்செல்ல உதவுவதால், இது ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று சிலர் வாதிடுகிறார்கள்.
நைஜீரியாவிலிருந்து செயல்படும் தீவிரவாத குழுவான, பொக்கோ ஹராமிடமிருந்து அச்சுறுத்தல்கள் வரும் நிலையில், இந்த புர்கா பயன்பாடு குறித்து மேலும் கடுமையான விதிகள் கொண்டுவரப்படவேண்டும் என்று செனகோலின் உள்துறை அமைச்சர் அப்துலாயே தாவுதா முயற்சி செய்துவருகிறார்.
இந்த ஆலோசனகள் இஸ்லாத்துக்கு விரோதமானதாகப் பார்க்கப்படக்கூடாது என்று செனகோல் அரசு கூறுகிறது.

Image copyrightAFP
Image captionபுர்காவுக்கு தடை குறித்து செனகோல் பரிசீலனை

செனகோல் ஒரு முஸ்லீம் பெரும்பான்மை நாடு. ஆனால் , தனிமனித சுதந்திரம் மற்றும் மதச் சுதந்திரம் ஆகியவைகளின் அடிப்படையில் இந்த உடையை அணிய பெண்களுக்கு இருக்கும் உரிமையை முன்வைக்கும் பலர் இந்த விவாதங்களால் சீற்றமடைந்திருக்கிறார்கள்.
ஆனால் செனகோல் மட்டுமே இந்த உடையை தேசப்பாதுகாப்பு என்ற காரணத்தினால் தடை செய்ய முயலவில்லை. வேறு நான்கு ஆப்ரிக்க நாடுகளும் இதைப் போல நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றன.
பொக்கோ ஹராமின் நிழல்
மத்திய ஆப்ரிக்காவில் உள்ள மூன்று நாடுகள் சமீபத்தில் புர்காக்கள் அணிவதை நாடெங்கிலும் தடை செய்திருக்கின்றன. சாட், கேபோன் மற்றும் காங்கோ ப்ரேஸ்ஸவில் ஆகிய நாடுகள்தான் இந்த உடையை நாடளாவிய அளவில் தடை செய்த நாடுகள். கேமரூன் நாடு அதன் வட கோடி பகுதியில் இந்த உடைக்கு கடந்த ஜூலை மாதம் தடை விதித்தது.
ஜூன் மாதம் சாட் நாட்டின் மிகப்பெரிய நகரான , என்'ஜமெனாவில் நடந்த தற்கொலை குண்டு தாக்குதல் சம்பவம் ஒன்றில் 33 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, சாட் அரசு இந்த உடைக்குத் தடை விதித்தது.

Image copyrightAFP
Image captionகேமரூனின் வட பகுதியில் புர்காவுக்குத் தடை

இதையடுத்து, காங்கோ-ப்ரேஸ்ஸவில் மற்றும் கேபோன் ஆகிய நாடுகளும் பின்னர் கேமரூனில் நடந்த ஒரு தாக்குதலை அடுத்து இதே போன்ற நடவடிக்கைகளை எடுத்தன. கேமரூன் சம்பவத்தில், இரண்டு புர்கா அணிந்த பெண் தற்கொலை குண்டுதாரிகள் , நைஜீரிய எல்லையில் , ஃபோட்டோகொல் என்ற இடத்தில் தங்களை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
இப்போது செனகோல் அந்த நாடுகளைப் பின்பற்றி அதே போன்ற ஒரு நடவடிக்கையை எடுக்கலாமா,வேண்டாமா என்று யோசித்து வருகிறது.
செனகோலில் இது போன்ற ஒரு தாக்குதல் நடைபெற்றதில்லை. ஆனால் இரண்டு வாரங்களுக்கு முன்னர், நாட்டில் முதன் முறையாக, பயங்கரவாதம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டதை அடுத்து, அதிகாரிகள் இது குறித்து எச்சரித்தனர்.
ஆனால் ஆப்ரிக்காவில் மட்டும் இந்த புர்கா தடை விதிக்கப்பட்டிருக்கவில்லை.
நவநாகரீக பிரான்ஸ் விதித்த தடை
கடந்த 2010ம் ஆண்டில் ஐரோப்பாவில் முதன்முறையாக பிரான்ஸ் பொது இடங்களில் புர்காவுக்குத் தடை விதித்தபோது அதற்கெதிராக பெரும் சீற்றம் எழுந்தது.

Image copyrightAFP
Image captionஇஸ்லாமிய முக்காடு , முகத்திரையின் பல்வேறு வடிவங்கள்

பிரெஞ்சு செனட், முகத்தை மட்டுமோ அல்லது முழு உடலையுமோ மூடும் புர்க்காக்களை மட்டுமல்லாமல், ஒரு தனி நபரின் அடையாளத்தை மறைக்கும், முகமூடிகள், பலக்ளாவாக்கள் , தலைக்கவசங்கள் அல்லது தலைமறைப்புகள் ஆகியவற்றையும் தடை செய்யும் ஒரு சட்டத்துக்கு ஏறக்குறைய ஏகமனதான ஆதரவுடன் வாக்களித்தது.
மேற்கு ஐரோப்பாவிலேயே மிக அதிகமாக, பிரான்சில்தான் முஸ்லீம்கள் வசிக்கிறார்கள். அங்கு முஸ்லிம்களின் மக்கள் தொகை சுமார் 50 லட்சம். அவர்களில் சுமார் 2,000 பெண்கள்தான் புர்காக்களை அணிகிறார்கள் என்று கணிக்கப்படுகிறது.
அப்போதிருந்த பிரெஞ்சு அதிபர் நிக்கொலாஸ் சார்க்கோஸி, முகத்திரை பிரெஞ்சு மண்ணில் இருக்கவேண்டிய அவசியமில்லை என்று கூறினார்.
அது "ஒற்றுமை மற்றும் அதனுடன் இணைந்த மதச்சார்பின்மை" ஆகியவைகளுக்கான பிரெஞ்சு தேசிய முன்மாதிரியுடன் ஒத்துப்போகாதது என்று அவர் கருதினார்.
இந்த விழுமியங்கள் 2004ல் கொண்டுவரப்பட்ட சட்டம் ஒன்றின் மூலம் உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த சட்டத்தின் மூலம் எந்த ஒரு மதச் சார்பையும் வெளிப்படுத்தும் குறியீடுகளையோ அல்லது உடைகளையோ அணிவது தடை செய்யப்பட்டிருக்கிறது.
பிரான்சின் புர்கா தடை சட்டத்தின் மூலம் முகத்திரை அணியும் பெண்களுக்கு அபராதம் விதிப்பதை அறிமுகப்படுத்தியிருந்தது. புர்கா அணியும் பெண்களுக்கு 32,000 அமெரிக்க டாலர்கள் வரை அபராதம் மற்றும் ஓராண்டு சிறை தண்டனை ஆகியவை விதிக்கப்படும்.

Image copyrightAFP
Image captionபிரான்ஸின் போலிஸ் நீதிமன்றத்தில் முகத்திரை தடையை மீறி அணிந்ததற்காக இரு பெண்கள் அபராதம் விதிக்கப்படும் நிலையில்

இந்தத் தடை முஸ்லீம் பெண்களை இலக்கு வைப்பதாக விமர்சிக்கப்பட்டு , 2014ல் இதற்கெதிராக ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ஆனால் அந்த நீதிமன்றம் இந்த சட்டத்தை சட்டபூர்வமானதென்று கூறிவிட்டது.

Image copyrightGETTY
Image captionபெல்ஜியத்தில் புர்கா தடைக்கு எதிராக முஸ்லீம் பெண்கள் ஆர்ப்பாட்டம்

பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் பிற நாடுகள்
கடந்த 2012ல் பெல்ஜியம் இதைத் தொடர்ந்து பொது வெளியில் தனிப்பட்ட அடையாளங்களை மறைக்கும் எந்த ஒரு ஆடையையும் அணிய, பாதுகாப்பு காரணங்களைக் காட்டி, தடை விதித்தது.
2007ம் ஆண்டிலேயே முழுத்திரைக்கு தடை விதித்திருந்த நெதர்லாந்து பின்னர் இத்தடையை , பொதுப் போக்குவரத்து, பல்கலைக்கழகங்கள் மற்றும் சில குறிப்பிட்ட தொழில்கள் என்று வேறு பல துறைகளுக்கு விஸ்தரித்தது.
உதாரணமாக நீதிமன்ற ஊழியர்கள் "அரச பக்கசார்பின்மை " என்ற அடிப்படையில் இது போன்ற ஆடைகளை அணியத் தடைவிதிக்கப்பட்டார்கள். மற்றவர்கள் அவர்களது அன்றாட வேலையில் , வருபவர்களுடன் முகத்துக்கு முகம் உரையாட வேண்டிய தேவை இருந்தால், இந்த மாதிரியான ஆடைகளை தவிர்க்குமாறு வேண்டிக்கொள்ளப்பட்டார்கள்.
மேற்கு ஐரோப்பிய நாடுகளில் மூன்றில்தான் நாடளாவிய புர்கா தடை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. பிற நாடுகள் பிராந்திய அளவில் தடைகளை விதித்திருக்கின்றன.
ஸ்பெயினின் பார்சிலோனா நகர் 2010லிருந்து சந்தைகளிலும், பொதுக் கட்டிடங்களிலும், முழு முகத்திரைகள் அணிந்து வருவதைத் தடை செய்திருக்கிறது. டென்மார்க்கில் நீதிமன்ற அறைகளை இந்த ஆடைகள் அணிந்து வரத் தடை இருக்கிறது.
ஜெர்மனியின் ஹெஸ் மாகாணம் முழுமையிலும், இத்தாலியின் பல நகரங்களிலும் தடைகள் இருக்கின்றன. இத்தாலியத் தடைகள் 1970களில் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ளன.

Image copyrightGETTY
Image captionஇத்தாலியின் வரெலோ நகரில் முகத்திரை மற்றும் உடல் முழுவதையும் மறைக்கு நீச்சல் உடைக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது

சில நாடுகள் வேறு திசையில்
ஆனால் அதே வேளை, சில நாடுகள் தடை என்ற நிலைப்பாட்டிலிருந்து விலகிச் சென்றுள்ளன. பல ஆண்டுகளாக இருந்த தடைகள் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளன.
துருக்கி பல தசாப்தங்களாக அமலில் இருந்த முகத்திரைத் தடையை 2013ம் ஆண்டில் விலக்கிக்கொண்டது. கல்வி மற்றும் பொதுத்துறைகளில் மத விதிமுறைகளைப் பின்பற்றும் முஸ்லிம் பெண்கள் வேலைக்குச் செல்வதற்கு இந்த முகத்திரைத் தடை தடையாக இருக்கிறது என்ற கவலைகள் எழுந்த நிலையில், ஆளும் ஏ.கே கட்சி இந்த முடிவை எடுத்தது.
ஆனால் துருக்கியில் அதிகார மையமாக இருக்கும் மதச்சார்பற்ற குழுக்கள் இது குறித்து கவலைகளைத் தெரிவித்தன. இது பாரம்பரியமாக மதச்சார்பற்ற நாடாக இருந்து வந்திருக்கும் துருக்கியை இஸ்லாம் ஆள்வதற்கு வழிவகுக்கும் முதல் நடவடிக்கை என்று அவர்கள் கூறினர்.
ஆனால் அவர்களின் விமர்சனங்கள் புறந்தள்ளப்பட்டு , விதிமுறைகள் தளர்த்தப்பட்டன. தலையை மட்டும் மறைக்கும் துணி ( அல்லது ஹிஜாப்) போடுவது அனுமதிக்கப்பட்டது. ஆனால் முழு உடலையும் மறைக்கும் ஆடைகள் இன்னும் தடை செய்யப்பட்டுள்ளன.

Image copyrightGETTY

சிரியாவும் 2011லிருந்து ஆசிரியைகளை முகத்தை மறைக்கும் நிக்காப் என்ற திரை அணிய அனுமதித்திருக்கிறது. இதற்கு முன்பு, பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு ஆளாகிவிடுவார்களோ என்ற கவலை அதிகரித்து வந்த நிலையில் , உயர்கல்வி அமைச்சர் நாட்டின் பல்கலைக்கழகங்களில் இது போன்ற முகத்திரைகளுக்குத் தடை விதித்திருந்தார். அது இப்போது ரத்து செய்யப்பட்டது.
துனிசியாவும் 2011 ஜனவரியிலிருந்து தலையங்கி அணிவதற்கு இருந்த தடையை விலக்கிக்கொண்டது.
அதற்கு முன்னர் வரை, ஹிஜாப்புகள் அணிவதற்கு எதிராக வீதிகளிலேயே கடுமையான பிரசாரம் இருந்தது. ஹிஜாப் அணிந்த பெண்கள் போலிசாரால் தடுக்கப்பட்டு , தலையங்கிகளை அகற்றுமாறு உத்தரவிடப்பட்டனர். இது மாதிரி அங்கிகள் 'மதக்குழு'வாதத்தைக் காட்டுவதாக அரசால் கருதப்பட்டது.
b.b.c /tamil

9 comments:

காரிகன் said...

நண்பர் கரிகாலன்,

இன்றைய சூழலுக்குத் தேவையான பதிவு. பாராட்டுக்கள்.

அந்த முதல் படம் 16ஆம் நூற்றாண்டில் எடுக்கப்பட்டதோ?

கரிகாலன் said...

நன்றி நபர் காரிகன் .

அந்தப்படம் இருபதாம் நூற்றாண்டில் தான் எடுக்கப்பட்டதுதான் .இப்படியான
உடையில் பார்க்கும் போது அவர்களின் மேல் எழும் பரிதாபத்தினை அடக்க வார்த்தைகளே இல்லை .

தருமி said...

அட.... எதிர்ப்பு தெரிவிக்க படை ஏதும் வரவில்லை. அதென்னமோ.... சிலருக்கு மட்டும் தான் அந்தக் ”கொடுப்பினை” இருக்கு. :(

ராஜ நடராஜன் said...

புர்காவிற்கு ஆதரவாக சில பதிவுகளும்,எதிர்ப்பாக பல நாடுகள் என்ற உங்கள் கூற்றுக்குமிடையிலான உண்மை நிலை என்னவென்றால் சவுதி அரேபியா தவிர ஏனைய வளைகுடா நாடுகளில் பழக்க தோசமாக பழைய தலைமுறை அம்மாக்கள் தவிர இளைய தலைமுறை முகத்தை முழுவதும் மூடும் புர்காவை அணிவதில்லை.அதே நேரத்தில் தங்கள் கலாச்சார விழுதாக ஜீன்ஸ்க்கு மேல் ஒரு கருப்பு கவசம் செய்து கொள்கிறார்கள்.

புர்காவை தடை செய்து விட்டால் தீவிரவாதத்தை தடை செய்து விட முடியுமா? பிரஸ் டி.வி யில் ஜார்ஜ் கேலவே கமெண்ட் என்ற ஒரு நிகழ்ச்சியை நடத்துகிறார்.இஸ்லாமிய தீவிரவாதத்தின் கூறுகள் ஒசாமா பின் லேடனில் துவங்கி பின் டோனி பிளேர்,ஜார்ஜ் புஷ்சின் கூட்டுச் சதியால் ஈராக்,லிபியா,சிரியா என துவங்கி இப்பொழுது பிரான்ஸ் குண்டு வெடிப்பில் நிலை கொண்டுள்ளது.

மாட்டுகறி உண்பது ஒருவரின் உணவின் தனி உரிமை மாதிரி புர்கா அணிவது பெண்களுக்கு வசதியாக இருந்தால் அவர்கள் உடுத்தலாம்.ஆனால் ஆண்களின் கட்டாயம் என்ற மத வற்புறுத்தல் கூடாது.

சவுதியில் பெண்கள் கார் ஓட்டக்கூடாது என்ற் சட்டத்துக்கு மாறாக குவைத்தில் பெண்கள் கார் ஓட்டுகிறார்கள். ஒருவர் கூட முகம் மூடும் புர்கா அணிவதில்லை.அப்படி அணிபவர்கள் காரோட்டியோடு பின் சீட்டில் இருக்கும் பழைய தலைமுறையினர் மட்டுமே.

மேற்கத்திய கலாச்சாரமாக பிக்னி உடுத்துவது இயல்பாக இருப்பது மாதிரி புர்கா அணிவது சூடான வளைகுடா தேசத்திற்கு குளிர் சாதன வசதியில்லாத காலத்தில் இயல்பான ஒன்றாக இருக்கலாம். கோடை காலத்தில் ஏப்ரல் மே மாத வேர்வை சூட்டுக்கே ஆ,ஊ என சர்பத் குடிப்பவர்கள்,வேப்ப மர நிழலை தேடிய நாம் வளைகுடாவின் 50 டிகிரிக்கும் மேலான கோர வெயிலை அரேபியர்கள் வனாந்தரத்தில் மண் வீடுகளில் எப்படி அனுபவித்திருப்பார்கள் என்ற புரிதலில் புர்காவின் தேவையின் அடிப்படை ஒளிந்துள்ளது.

ராஜ நடராஜன் said...

பரவாயில்லையே! அனுமதி தடங்கல் இல்லாமல் பின்னூட்டம் வந்து விழுகிறேதே! நன்றி.

கரிகாலன் said...

நன்றி நண்பர் காரிகன் என்று வரவேண்டியது தவறுதலாக வந்துவிட்டது மன்னிக்கவும் .

நன்றி தருமி "கொடுப்பினை" வாய் வார்த்தையால் வந்தால் விவாதம் செய்யலாம் ,வீடு தேடி நேரில் வந்தால் .....................

நன்றி ராஜ நடராஜன் .பெண்கள் விரும்பினால் என்று நீங்கள் சொல்லாம் ஆனால் நிஜத்தில் பெண்கள் விரும்பவைக்கப்படுகிறார்கள் .அதை விட நாம் வாழும் நாட்டின் சட்ட திட்டங்களுடன்
ஒத்துப் போக வேண்டும் அல்லவா? இந்தியாவில் சீக்கியர்கள் கத்தி வைத்துகொள்ள அனுமதி உண்டு என்றால் மேலை நாடுகளில் கதி வைத்திருப்பது தண்டனைக்கு உரிய குற்றம் ,
அதை விட அந்தக் காலத்தில் பின்பற்றிய எல்லாவற்றையுமா முல்லிம்கள் இப்போதும் பின்பற்றுகிறார்கள் .அதை விட இது இஸ்லாமியர்களின் உடை அல்ல இது அரேபியர்களின் உடை .நான் சிறுவனாக இருந்த காலங்களில் இலங்கையில் சேலையை உடுத்தி தலையை மட்டும் சேலை தலைப்பால் முடி இருப்பார்கள் .ஹலால் என்பதை நான் இலங்கையில் முன்னர் கேள்விபட்டதே இல்லை
.வளைகுடாவின் 50 டிகிரிக்கும் மேலான கோர வெயிலை அரேபியர்கள் வனாந்தரத்தில் மண் வீடுகளில் எப்படி அனுபவித்திருப்பார்கள் என்ற புரிதலில் புர்காவின் தேவையின் அடிப்படை ஒளிந்துள்ளது.

////வளைகுடாவின் 50 டிகிரிக்கும் மேலான கோர வெயிலை அரேபியர்கள் வனாந்தரத்தில் மண் வீடுகளில் எப்படி அனுபவித்திருப்பார்கள் என்ற புரிதலில் புர்காவின் தேவையின் அடிப்படை ஒளிந்துள்ளது.///////

ராஜ நடராஜன்
சத்தியமாக இப்படியொரு கோணம் இருக்கும் என்பதை நான் நினைத்துப்பார்க்க வில்லை .அரபிய ஆண்கள் இப்படி ஒரு காரணத்துக்காக அணிவ தாக நான் கேள்விப்பட்டதுண்டு .

கரிகாலன் said...

/////பரவாயில்லையே! அனுமதி தடங்கல் இல்லாமல் பின்னூட்டம் வந்து விழுகிறேதே! நன்றி.////

முன்பு எல்லாம் மட்டுறுத்தல் வைக்கும்படி தமிழ்மணம் அறிவுறுத்தி இருந்து ஆபாசபின்னுட்டங்கள் பெயரிலாதவர்கள் இப்படி பல தொல்லைகள் முன்பெல்லாம் இருந்தது இப்பொழுது அவை மிகவும் குறைவு.இப்போது பதிவர்கள் எல்லாம் பண்பானவர்கள் ஆயிற்றே
அதனால் மட்டுறுத்தல் எடுத்தாயிற்று நடராஜன் இரண்டாயிரத்து நாலில் இருந்து எழுதுகிறேன்
என்று சொல்லமுடியாது வலைப்பதிவு வைத்திருக்கிறேன் .பக்கத்தில் இருக்கும் ஆபாச பின்னுட்டங்கள் என்னும் பதிவை பார்க்கவும்

ராஜ நடராஜன் said...


Kuwait Police Busted ISIL Cell....

In a preemptive move and in a major blow to the terrorist elements in Kuwait, security forces have busted and dismantled a multi-national cell for the so-called Islamic State in Iraq and the Levant (ISIL) including five Syrians, two Australians, a Lebanese, an Egyptian and one national.

The vigilance of security agencies has led to the apprehension of a dangerous ISIL cell in Kuwait, the Ministry of Interior announced in a press statement Saturday, adding that the cell was providing the main organization in Syria with new recruiters, money, weaponry and logistical support.

It stated that five of the cell members were arrested and four others are still fugitive outside the country. The ringleader is a 45-year-old Lebanese national, born in Kuwait, named Osama Khayat.

It added that the cell included a Kuwaiti national named Rakan Al-Ajmi and was responsible for the logistical matters.

The Interior Minister said that the cell dismantling comes in continuation of the security agencies following up, monitoring and crackdown on extremists in the state.

It pointed out that Khayat, the cell coordinator, was arrested first, and during cross examination, he gave detailed information about the cell members and roles.

The suspect, who has been using his website for propaganda work for ISIL, confessed that he has been in contact with the group leaders in Syria and has made several arms' deals for the main organization, including deals for purchasing FN-6 missiles and others weaponry from Ukraine.

Khayat told investigators that the purchased weaponry was being shipped to Turkey and being smuggled into Syria later.

He admitted that he has printed and dispatched stamps and seals with the ISIL logo for the main organization and transferred money to ISIL related bank accounts in Turkey.

The ministry statement pointed that Khayat gave the names of the five cell members in Kuwait and were all arrested: namely Abdulkarim Mohammad Selem (Syrian national born in 1962) who has Ukraine-based arms company and was about to purchase shoulder-fired missiles and telecommunication devices; Hazem Mohammad Khair Tartari (Syrian national born in 1984) works at a local company; Wael Mohammad Ahmad Baghdadi (Egyptian national born in 1987) ISIL member; Rakan Nasser Muneer Al-Ajmi (Kuwaiti national born in 1988) and was offering Logistical support to the terrorists; Abdulnasser Mahmoud Al-Shawa (Syrian national born in 1987).

Investigations also unveiled names of other four members who still at large abroad, the MoI said.

The fugitive suspects are: Australian-Lebanese nationals Hesham Mohammad Thahab and Rabia Thahab; Syrian Waleed Nasif, who works as currency exchanger in a Turkish city bordering Syria; Mahammad Hekmat Tartari (Syrian national born in 1980), who was in charge of financial matters and external liaison.

The arrested suspects and seized items were all referred to relevant investigation bodies, the ministry said.

It reiterated firm determination to confront any attempt from extremist and terrorist groups to jeopardize the country's security and people's safety.

It also urged all people to cooperate with security bodies for securing the homeland.

வேகநரி said...

இந்த பர்தா ஹிஜாப்புகளுக்கு எல்லா நாடுகளிலும் தடை விதிக்கணும் அல்லாவிடில் மதவாதிகள் 16ஆம் நூற்றாண்டிற்கு உலகை திருப்பி கொண்டு சென்று விடுவார்கள்.
ராஜ நடராஜன் said...
//மாட்டுகறி உண்பது ஒருவரின் உணவின் தனி உரிமை மாதிரி புர்கா அணிவது பெண்களுக்கு வசதியாக இருந்தால் அவர்கள் உடுத்தலாம்.//
மாட்டுகறி உண்ணுங்க, பன்றிகறி உண்ணுங்க, அது உங்க தனி மனித உரிமை. மாட்டிறைச்சியில் பிரியாணி எப்படி தாயாரிப்பது என்ற செய்முறைகள் தமிழகத்திலே தாராளமா கிடைக்கும்.
பர்தா, ஹிஜாப்பால் பெண்களை மூடி வைக்க வேண்டும் என்று ஆசைபடுபவர்கள் தங்களது ஆசைக்கு வீட்டில் பர்தா, ஹிஜாப்பால் தங்களது சகோதரி மனைவிகளை மூடி திருப்திபட்டு கொள்ளலாம். ஆனால் வீட்டிற்க்கு வெளியில் இந்த செயல்களை நடை முறைபடுத்துவதை பொறுப்புள்ள அரசு அனுமதிக்க முடியாது.
//வளைகுடாவின் 50 டிகிரிக்கும் மேலான கோர வெயிலை அரேபியர்கள் வனாந்தரத்தில் மண் வீடுகளில் எப்படி அனுபவித்திருப்பார்கள் என்ற புரிதலில் புர்காவின் தேவையின் அடிப்படை ஒளிந்துள்ளது.//
உண்மையிருக்கலாம். அது அந்த காலம்.அறிவியல் மிக குறைவான காலம். வளைகுடாவின் வெப்பத்தின் ஓரளவு நெருக்கமாக உள்ள சில ஆஸ்திரேலியா பிரதேசங்களில் உள்ள பெண்கள், அங்கே சுற்றுலா செல்லும் ஆஸ்திரேலியா பெண்கள்,மற்றய மேற்குலக பெண்கள் என்ன உடை அணிகிறார்கள் என்பதை அறிந்து வளைகுடாவின் கோர வெயிலை அனுபவிக்கும் அரேபிய பெண்கள் அவர்கள் உடைகளை தங்கள் பின்பற்ற வேண்டும்.

//இப்போது பதிவர்கள் எல்லாம் பண்பானவர்கள் ஆயிற்றே//
ஹா! ஹா! ஹா!
அமெரிக்காவில் குடியேறி தங்கிவிட்ட பதிவுலக ராதாரவின்னு ஒரு கேவலமான அடி மட்ட இஸ்லாம் ரவுடி இருக்கான் எல்லோருமே எச்சரிக்கையா இருங்க!