Sunday, December 06, 2015

ஒரு அவசர உதவி .இலங்கையில் தமிழக உறவின் சடலம் !

மழையில் சிக்கி தமிழக உறவுகள்  சொல்லணா துயரங்களை அனுபவித்துவரும் நிலையில் இன்றைய தினம் இலங்கையின் திருகோணமலை கடற்பகுதியில் ஒரு தமிழக உறவின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது .அந்த சடலத்தில் ஒரு அடையாள அட்டையும் கண்டெடுக்கப்பட்டுள்ளது . கண்டெடுக்கப்பட்ட சடலத்திலிருந்து மீட்கப்பட்ட சாரதி அடையாள அட்டையில், அவர் சென்னை சூளைமேடு காமராஜ் நகர், என்.ஜி.ஓ காலனியை சேர்ந்த வாகனச்சாரதியான என்.பூமிதுரை என குறிப்பிடப்பட்டுள்ளது.வீட்டு இலக்கம் 13/15

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டு இவர் இலங்கை கடற்பரப்பில் கரையொதுக்கியிருக்கலாம் என அந்த சந்தேகிக்கப்படுகிறது. நிலாவெளி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சடலம் தற்போது திருகோணமலை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. சடலம் உருகுலைந்துள்ளமையினால், அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

சக வலைபதிவர்கள்  இயலுமானவ்ர்கள் தயவு செய்து இந்த தகவலை அவர்களின் குடும்பத்தினருக்கு உரிய முறையில் தெரிவித்து ஆக வேண்டிய காரியங்களை தூதுவராலயதின் ஊடாக   செய்யலாம் என்பதனையும் தெரிவித்து விடவும் .சடலம் அடையாளம் காணப்படவில்லை என்பதனையும் கவனத்தில் கொள்ளவும் .தயவு செய்து  சென்னையில் உள்ளவர்கள் இதனை செய்யலாம் .

அடையாள அட்டையின் படம் கீழே இணைத்துள்ளேன் .



3 comments:

ராஜ நடராஜன் said...

இதுவரைக்கும் தகவல் விசாரிப்பு ஏதாவது வந்ததா?

வலிப்போக்கன் said...

இன்னும் அவதி தீராததால்..தகவல் போய் சேரவில்லை..நண்பரே...

கரிகாலன் said...

நன்றி ராஜ நடராஜன் மற்றும் வழிபோக்கன் .

மேலதிக தகவல்கள் ஏதும் தெரியவில்லை .நான் இருப்பது கனடாவில் இலங்கை
இணையதளங்களில் வந்த செய்தியையே பகிர்ந்தேன் .அவர்களின் குடும்பத்தினர் எப்படியும் தகவலை அறிந்திருப்பார்கள் இப்பொழுது