கனடாவும் நாடுகடத்தப்படும் இந்திய மாணவனும் !!
கனடாவில் கடந்த வாரம் செய்திகளில் அடிபட்ட ஒரு விடையம் இது .கனடாவுக்கு இந்தியாவில் இருந்து பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிப்பதற்காக வருகின்றனர் .மாணவர் அனுமதியுடன் வந்தாலும் பலருக்கு இங்கேயே படித்து வேலை எடுத்து இங்கு தங்கி விடவேண்டும் என்பதே பலருடைய எண்ணமும் கூட .இப்படி மாணவர் விசாவில், கனடாவில் கல்வி கற்க இந்தியாவில் இருந்து வரும் பலர் சாதாரண குடும்பங்களை
சேர்ந்தவர்கள் .தமது சொத்துக்களை விற்று பிள்ளைகளை படிக்க அனுப்புகின்றனர் .சிலர் படித்து இங்கு வேலைகள் எடுத்து இங்கு தங்குகின்றனர் .சிலர் இங்கே உள்ள நடைமுறைகள் ,வாழ்க்கைமுறை ,குளிர் இன்னபிற காரணிகள் பிடிக்காமல் மீண்டும் இந்தியா திரும்புவதும் நடக்கிறது
.
இங்கு பொதுவாக எனது அனுபவத்தில் இந்தியாவில் இருந்து குஜராத்திகள் ,பஞ்சாபிகள் ,அதிகமாக வந்த நிலையில் தற்போது மலையாளிகள் மற்றும் தமிழகத்தில் இருந்து அதிகமானோர் வருகின்றனர்.
இனி கடந்த வாரம் என்ன நடந்தது என்று பார்ப்போம் .
பஞ்சாபை சேர்த்த ஜோபன் தீப் சிந்து ஒரு மாணவராக கனடாவுக்கு வந்துள்ளார் .கடந்த வாரம் இவர் ஓடடிச்சென்ற பாரவூர்தி நெடுஞ்சாலையில் மறிக்கப்பட்டு சோதனை இடப்பட்ட போது இவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார் .காரணம் பின்னர் தான் வெளியாயிற்று ..கனடாவை பொருத்தவரை மாணவர்களாக வருபவர்கள் வாரத்துக்கு இருபது மணித்தியாலங்கள் மட்டுமே வேலை செய்ய அனுமதிக்கப்படுவர் .அனால் இந்த அளவை மீறி வேலை செய்ததற்காகவே இந்த மாணவர் கைது செய்யப்பட்ட நிலையில் கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட உள்ளார் .
இது தொடர்பான அதிகாரிகள் என்ன சொல்கின்றனர் என்றால் மாணவர்களாக மாணவர் விசாவில் வருபவர்கள் படிப்பையே முக்கியமாக கருத வேண்டும் .வேலை அவர்களுக்கு இரண்டாம் பட்சம் தான் என்று .அதற்க்கு அந்த மாணவர் தனது குடும்பத்தினர் தனது கல்விக் கட்டணத்தினை செலுத்த சிரமப்படுவதால் தான் மேலதிக வேலை செய்ததாகவும் சொல்கிறார் .
இங்கு என்ன முக்கிய விடையம் என்றால் இங்குள்ள மாணவர்களுக்கும் ,வெளிநாடுகளில் இருந்து கல்வி கற்க வருவோருக்கும் இடையில் கல்வி கட்டணங்களில் பாரிய வேறுபாடுகள் இருக்கின்றன .வெளிநாட்டு மாணவர்களுக்கு கல்வி கட்டணங்கள் பலமடங்கு அதிகம் .
ஆரம்பத்தில் அதற்கு சம்மதித்து வரும் மாணவர்கள் பின்பு கல்வி தொடர்பான கட்டணங்கள் செலுத்த சிரமப்படுவதால் இப்படியான
நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள் .சிலர் களவாக வேலை செய்கிறார்கள் .குறைந்த சம்பளங்களில் பலர் அவர்களை வேலைக்கு எடுக்கிறார்கள் .என்னைப் பொறுத்த வரை படிப்பதற்காக சட்டதிடங்களுக்கு உட்பட நடப்பேன் என்று வருபவர்கள் அந்த சட்டதிடங்களுக்கு உட்பட்டு நடக்கத்தான் வேண்டும்
இந்த இந்திய மாணவரை ஜீன்15 திகதிக்கு முன்னர் நாட்டைவிட்டு வெளியேறுமாறு அரசு உத்தரவு இட்டு இருக்கிறது .
இதற்கிடையில் அவரை நாடு கடத்தவேண்டாம் என்று நாற்பதாயிரம் பேர் கையெழுத்திட்டு ஒரு மகஜர் அனுப்பிவைத்திருக்கிறார்கள் அரசுக்கு .இனி என்ன நடக்கப்போகிறது என்பது வரும் நாட்களில் தெரியும் .
1 comment:
இங்கு வருவோர் கதையும் இதுவேதான். படிக்கவென்று போய்த் தங்க நினைப்பது - சூதாட்டம் போல. பாவம் அவர். ;(
Post a Comment