Sunday, April 05, 2020

மீண்டும் கரிகாலன்!,எழுத வருகிறேன் !

நீண்ட நாட்களின் பின்னர் இன்று  எனது வலைபதிவில் எழுதுகிறேன் ,இனி தொடர்ந்து எழுதலாம் என நினைத்துக்கொண்டு இருக்கிறேன் . இடைபட்ட காலத்தில் உலகில் என்னென்னவோ நடந்து கொண்டு இருக்கிறது  உங்களுக்கு தெரியும் .வாழ்க்கை மிகவும் அழகானது ,எங்கள் வாழ்கையை தீர்மானிப்பது நாங்கள் தான் .மற்றவர்களின் பங்கும் இதில் உள்ளது என்றாலும் பெரும்பகுதி எமது பங்குதான்

இன்றைய இந்த ஆபத்தான நேரத்தில் சரியான திட்டமிடல் மிகவும் அவசியும் ,பலருக்கு பொருள்  இழப்பு .,பணஇழப்பு  இருந்தாலும்  மிகவும் பெறுமதியானது உயிர் ,அது இருந்தால் எதனையும் சம்பாதித்து கொள்ளலாம் .
எனவே எமது உயிர் முக்கியம் அத்துடன் எமது குடும்பத்தினரின் உயிரும் முக்கியம் ,சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் .எங்களை, ,குடும்பத் தினரை பாதுகாப்போம் ,இதன் மூலம் மற்றவர்களையும் பாதுகாப்போம் ,

இதுதான் இன்று உலகெங்கும் நிலை ,நான் வாழும் கனடாவிலும் இதுதான் நிலை .இங்கும் வீதிகள் வெறிச்சோடி இருக்கின்றன ,மக்கள் நடமாட்டம் மிகவும் குறைவு ,கடைகளில் பொருட்கள் கிடைத்தாலும்  விரைவாக காலி ஆகின்றமை
பல் இலட்சக்கணக்கானோர் வேலை இழப்பு இப்படி பல,

வரும் நாட்களில் இது பற்றி நிறைய எழுத எண்ணி இருக்கிறேன் .
துவண்டது தமிழ்மணம் மட்டும் அல்ல நானும் தான்  இப்போது தமிழ்சரத்தின்வருகையோடு ,அதன் துணை கொண்டு பயணிக்க எண்ணி இருக்கிறேன். சிக்கல் இல்லாமல் தமிழ் சரத்தில்  இந்த பதிவு  வருகிறதா 
  என்னவோ தெரியவில்லை ......பார்ப்போம், 
.

அடுத்து நான் பல வருடங்களாக  கூகிள் தமிழ் எழுதிதான் பயன்படுத்தி வருகிறேன்   ,இருந்தும் அதில் ஒரு சிக்கல் ,சொற்களை அடித்து விட்டு என்டர் தட்டும்  போது சில வேளைகளில் வேறு சொல்லாக மாறிவிடுகிறது என்பதுடன்  அர்த்தமும்  மாறிவிடுகிறது ,கவனிக்காமல் அப்படியே விட்டால் சிக்கல் ஆகிவிடுகிறது .

எது பயன்படுத்துவதற்கு  மிகவும் எளிமையான ,வசதியான தமிழ் எழுதி என்பதை தெரியப்படுத்தினால்  நன்றி உடையவனாக இருப்பேன் ,


மீண்டும் சந்திப்போம்…..
கரிகாலன்

4 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களின் வரவு நல்வரவாகுக
nhm writer பயன்படுத்தி எழுதிப்பாருங்களேன்

கரிகாலன் said...


உங்கள் கருத்துக்கு நன்றி கரந்தை ஜெயகுமார் ....
நீங்கள் சொன்ன செயலியை பயன்படுத்தி பார்த்து விட்டு சொல்கிறேன்
நன்றி.

KILLERGEE Devakottai said...

தங்களது மறுவரவு நல்வரவாகுக! எமது வாழ்த்துகளும் கூடி...
- கில்லர்ஜி

கரிகாலன் said...

நன்றி கில்லர்ஜி ...
உங்கள் வாழ்த்து எனக்கு உற்சாகம் ஊட்டுகிறது ,உங்கள் எழுத்துக்களை
முன்பிருந்தே படித்து வருகிறேன் .உங்களிடம் பிடித்ததில் ஒன்று உங்கள் மீசை , முன்பு உங்கள் இலங்கை பற்றிய பதிவில் அந்த மீசைமுறுக்கு அருமை .அண்மையில் கூட உங்கள் அரபி பதிவு பாத்தேன் அருமை .
நன்றி