நோரா வின்சென்ட்
இவர் ஒரு லெஸ்பியன் பெண். பெண்ணியவாதி. பத்திரிக்கை நிருபர்.
ஆனால் இவருக்கு ஆண்களின் உலகம் மேல் ஒரு கியூரியாசிட்டி இருந்துகொண்டே இருந்தது. ஆண்களை பெண்கள் கண்ணோட்டத்தில் மட்டுமே அறிந்து இருக்கிறோம். ஆனால் ஒரு சக ஆணாக, ஆண்களுடன் பழகினால் அந்த அனுபவம் எப்படி இருக்கும் என பார்க்க ஆசைப்பட்டார். நாம் நினைப்பது போல் ஆண்கள் அத்தனை மோசமானவர்களா என்ன?
அவ்வை சண்முகி கமல் போல நல்ல செலவு செய்து மேக்கப் போட்டுக்கொண்டார். அச்சு அசல் ஆணாக மேக்கப். நெட் என பெயரை மாற்றிக்கொண்டு 18 மாதம் முழு ஆண் மேக்கப்பில் வாழ்ந்தார். ஆண்கள் மட்டுமே இருக்கும் பவுலிங் கிளப்பில் உறுப்பினர் ஆனார். ஸ்ட்ரிப் கிளப்புக்கு போனார். கத்தோலிக்க பாதிரியாராக கூட ஆனார். கடைசிக்கு ஆண் வேடத்தில் ஒரு பெண்ணையும் காதலித்தார்
அந்த அனுபவங்களை தொகுத்து "self-made man" எனும் நூலாக எழுதினார்.
பவுலிங் கிளப்புக்கு சென்ற அனுபவத்தை கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்
"ஆண்கள் மிக கடுமையாக போட்டிபோடுவார்கள் என நினைத்தேன். அந்த பவுலிங் கிளப்பில் போட்டி மிக கடுமையானது. பணம் கட்டி எல்லாம் ஆடுவார்கள். அத்தனை கடுமையான போட்டி நடக்கும் இடத்திலும், என்னிடம் தோற்றால் பணத்தை இழக்கவேண்டி வரும் என்ற சூழலிலும் எனக்கு சரியாக பவுலிங் வராது என தெரிந்தவுடன் அவர்கள் என்னிடம் மிக தன்மையாக நடந்துகொண்டார்கள். எனக்கு பந்தை எப்படி பிடித்து பவுலிங் செய்ய வேண்டும் என என்னிடம் போட்டி போட்டவர்களே கற்றுக்கொடுத்தார்கள். ஆண்கள் என்றால் ஈவு இரக்க்மில்லாமல் போட்டியிடுவார்கள் என்ற என் நினைப்பில் மண் விழுந்தது...
தனக்கு சமமான போட்டியாளனாக நான் இல்லை என உணர்ந்தவுடன் அவர்கள் குரு ஸ்தானத்துக்கு மாறி எனக்கு விளையாட்டை கற்றுக்கொடுத்தார்கள். பெண்களிடம் இந்த தன்மையை நான் பார்த்தது இல்லை.."
பவுலிங் நடக்கும் இடத்துக்கு ஒரு தந்தை தன் மகனை கூட்டி வந்தார். ஒட்டுமொத்தமாக அனைத்து ஆண்களும் அவனை ஊக்குவித்து, பவுலிங் கற்றுக்கொடுத்தார்கள். தன் சொந்த மகனை போல நடத்தினார்கள்....."
ஆனால் அனைத்தையும் விட வியப்பளிக்கும் விசயம்....அவர்களிடம் இருக்கும் சப்போர்ட் முறைதான். ஆண்கள் அதிகமாக உணர்ச்சியை வெளிகாட்டுவதில்லை. தன் தாய் கான்சரில் இறந்ததை ஒரு ஆண் என்னிடம் வெறும் 20 வார்த்தைகளில் சொன்னார்.
ஆனால் அவர்களின் நண்பர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அனைவரும் ஒன்றுகூடுகிறார்கள். நினைத்து பார்க்கமுடியாத அளவு ஒற்றுமையுடன் பிரச்சனையை சரி செய்கிறார்கள். அவர்கள் மத்தியில் இருக்கும் நட்பு மிக ஆழமானது ஆகும். ஆனால் வார்த்தைகளில் அதை வெளிப்படுத்திக்கொள்வதில்லை..."
18 மாத அனுபவத்துக்கு பின் அவரது கருத்துக்களில் என்ன மாற்றம் ஏற்பட்டது?
"பெண்ணாக இருப்பதில் எத்தனை சலுகை இருக்கிறது என்பதை இப்போது தான் உணர்கிறேன். ஆணாக இருப்பது மிக கஷ்டமான விஷயம். ஆண்கள் நம் எதிரிகள் அல்ல. அன்புக்கு உரியவர்கள். நம் பரிவுக்கு உரியவர்கள்..."
படித்ததில் பிடித்தது ,,,, மீண்டும் சந்திப்போம் ...
1 comment:
ஆய்வு சிறப்பாக இருக்கிறது
Post a Comment