Wednesday, September 12, 2012

ஈராக் பெண்களை அச்சுறுத்தும் இஸ்லாமிய மத வெறியர்கள்!

 

அமெரிக்க படைகள் ஈராக்கில் இருந்து வெளியேறிய பின்னரும், அங்குள்ள ட்ரென்ட்,
அமெரிக்க நாகரீகத்தை ஒட்டியே உள்ளதால், தீவிர மத அமைப்பு ஒன்று ‘பேஷன் போலீஸ்’ என்று ஒரு கண்காணிப்பு பிரிவை அமைத்துள்ளது.
‘பேஷன் போலீஸ்’ முழு ஈராக்கிலும் இல்லை என்றாலும், இரு நகரங்களில் தீவிரமாக இயங்குகிறது.

இஸ்லாமிய கலாசார முறைப்படி உடை அணியாத பெண்களை குறி வைக்கிறது ‘பேஷன் போலீஸ்’.

கசிமியா நகரில் ‘பேஷன் போலீஸ்’ செயல்படுவது மட்டுமன்றி, வீதிகளில் அறிவிப்பு பலகைகளும் உள்ளன.
“மத கலாச்சாரத்தை பின்பற்றாவிட்டால் தண்டனை அடைய நேரிடும்’ என்கிறது ஒரு அறிவிப்பு பலகை. “‘அபயா’ அணிந்து வெளியே செல்லாத பெண்கள் தண்டிக்கப்படுவார்கள்” என்கிறது மற்றொரு அறிவிப்பு பலகை. அபயா என்பது, தோளில் இருந்து கால் வரை அணியப்படும் உடை.

தலைநகர் பாக்தாத்தில் இருந்து 130 கி.மீ. தொலைவில் உள்ள மற்றொரு நகரமான திவானியாவில், போஸ்டர்கள்
ஒட்டப்பட்டுள்ளன. ஜீன்ஸ் அணிந்த பெண்ணின் போட்டோ ஒன்றை போட்டு, அதன்மேல் சிவப்பு வர்ணத்தில் பெரிய அளவு X ஒன்று போடப்பட்டுள்ள போஸ்டர் அது.
மற்றொரு போஸ்டர், பெண்கள் முழுமையாக தமது தலைமுடியை மறைத்துக் கொள்ள வேண்டும் என்கிறது.

மயாடா ஹமீத் என்ற 32 வயது பெண், தமக்கு ‘பேஷன் போலீஸ்’ எச்சரிக்கை விடுத்துள்ளது என்கிறார்.
“அவர்கள் (‘பேஷன் போலீஸ்’) தொலைவில் இருந்தே என்னை வாட்ச் பண்ணியபடி இருந்தார்கள்.
அப்போதே புரிந்து விட்டது, விபரீதமாக ஏதோ நடக்க போகிறது என்று. சற்று நேரத்தில் ஒருவர் எனக்கு அருகே வந்து
, “இது முதல் எச்சரிக்கை. இஸ்லாமிய கலாசார ஆடைகளை அணியாவிட்டால், இரண்டாவது எச்சரிக்கை கிடையாது.
தண்டனைதான் வழங்கப்படும்” என எச்சரித்துவிட்டு சென்றார்” என்றார்.

‘பேஷன் போலீஸ்’ என்பது, சீருடை அணிந்த ஒரு பிரிவல்ல. அதிகாரபூர்வ காவல்துறையும் அல்ல. சாதாரண
மக்கள் போலவே அவர்கள் நடமாடுகிறார்கள். கலாசார உடை அணியாதவர்களை எச்சரிக்கும்போதுதான் அவர்கள் ‘பேஷன் போலீஸ்’ ஆள் என்று தெரியவருகிறது.

ஈராக்கிய அரசு, இந்த ‘பேஷன் போலீஸ்’ தமது போலீஸ் பிரிவு அல்ல என்கிறது. தலைநகர் பாக்தாத்தில்
செய்தியாளர் மாநாட்டில் பேசிய போலீஸ் பிரிவு தலைவர், “பெண்கள் உடை அணிவது தொடர்பான தடைகள்
அல்லது நடைமுறைகள் எதையும் நாம் அறிவிக்கவில்லை. எந்த உடை அணிவதற்கும் அவர்களுக்கு சுதந்திரம் உள்ளது என்பதே அரசின் நிலைப்பாடு.

உடை அணிவது பற்றிய எச்சரிக்கைகளுடன் சில அறிவிப்பு பலகைகள் குறிப்பிட்ட சில நகரங்களில் யாராலோ வைக்கப்பட்டுள்ளதாக எமக்கு தகவல்
கிடைத்துள்ளது. அந்த அறிவிப்பு பலகைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

பாக்தாத்தில் உள்ள ஷீட்டி பிரிவு மதகுரு ஷேக் மாஜின் ஷாடி, “பேஷன் போலீஸ் நடமாட்டம் பற்றி
நாமும் அறிந்தோம். அது, எமது மதப் பிரிவால் உருவாக்கப்பட்ட அமைப்பு அல்ல என்பதைதான் என்னால் கூறமுடியும்.
பெண்களுக்கு அவர்கள் விரும்பிய உடை அணியும் சுதந்திரம் உள்ளது என்பதே, எமது பிரிவின் கொள்கை.

ஆனால், மத முக்கியத்துவம் உள்ள இடங்களுக்கும், மத சடங்குகள் நடைபெறும் இடங்களுக்கும் பெண்கள் கலாசார
உடை அணிய வேண்டும் என்பதை நாம் வலியுறுத்துகிறோம். இஸ்லாம் மட்டுமன்றி, மற்ற மதங்களும் அதைதான் சொல்கின்றன” என்று தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட இரு நகரங்களிலும் உள்ள நிலைமை பற்றி குறிப்பிடும் மதகுரு ஷேக் மாஜின் ஷாடி, “அந்த நகரங்களை சேர்ந்த பெண்கள், கலாசார உடைகளை அணியத் துவங்கியுள்ளார்கள் என அறிகிறோம். காலப்போக்கில் அனைவரும் காலாசார உடை அணிபவர்களாக இருப்பார்கள். அரசால் அதை தடுக்க முடியாது என்பதே அங்குள்ள நிலைமை” என்கிறார்.

யார் என்ன சொன்னாலும் பெண்கள் எப்படி உடை அணிவது என்பதை பெண்கள் தான் தீர்மானிக்கவேண்டும் .மதவாதிகள் அல்ல என்பதே எனது கருத்து .

Thursday, August 30, 2012

அப்பாவுக்கு என்ன தெரியும்?---தந்தையைப் பற்றி மகன் சொல்கிறார்!!!

 

சில தினங்களுக்கு முதல் என்றொரு விபரம் ஒன்றை பெறுவதற்காக எனதுபழைய டயரியை புரட்டினேன்.தேடிய விபரம் கிடைத்ததுடன் நான் அதில் எழுதி வைத்திருந்த சில விடயங்களையும் காணமுடிந்தது.டயரி எழுதுவது என்றால் ஒவ்வொரு வருடமும் டயரி வாங்கி ஒவ்வொரு நாளும் எழுதி வந்திருக்கும் ஒரு நல்ல ஒரு மனிதராக என்னை கற்பனை பண்ணினால் அதற்கு நான் பொறுப்பு அல்ல .2000 ம் ஆண்டில் வாங்கிய டயரி. முக்கியமான விடையங்கள் .திகதிகள் , முக்கியமான்வ்ர்களின் பிறந்த நாட்கள் .சில வங்கி விபரங்கள் இவையே அதில் உள்ளவை அத்துடன் நான் ரசித்த சில குறிப்புக்கள்,பெரும்பாலும் பத்திரிகைகளில் வந்தவை .

அப்படியான ஒரு குறிப்புதான் . இப்பொது நான் குறிப்பிடப்போவது .பொதுவாக தாய்க்கும் மகனுக்கும் இடையேயான உணர்வுகள்தான் பொதுவாக எல்லோராலும் குறிப்பிடப்படும் .அரிதாகவே தகப்பனுக்கும் மகனுக்குமான உறவுகள்  பேசப்படும்.

அப்படிபட்ட  சிலருக்கு வரும் ஒரு உணர்வே இது படித்து விட்டு சொல்லுங்கள்

 


5 வயது

என் தந்தையால் செய்ய முடியாது ஒன்றும் இல்லை

7 வயது

என் தந்தைக்கு பல விடையங்கள் பற்றி நன்கு தெரியும் 

10 வயது

என் தந்தைக்கு எல்லா விடயங்களைப பற்றியும் தெரியாது 

12 வயது

என் தந்தைக்கு ஒன்றுமே தெரியாது

14 வயது

அவரா!  அவருக்கு காலம் மாறியது எங்கே புரிகிறது?

21 வயது

கிடக்கிறது கிழம்.  அவரிடம் போய் யோசனை கேட்பதா?

30 வயது

எதோ கொஞ்சம் தெரியும் .


40 வயது

அவர் என்ன நினைக்கிறார் என்பதை தெரிந்து கொள்வதில்
தப்பில்லை

55 வயது
 
அவரின் யோசனைகளை கேட்டு பின் முடிவு
எடுக்கலாமே .

60 வயது

என் தந்தையர் இது போன்ற விடையங்களில் எவ்வளவு சிறப்பாக தீர்மானம் எடுப்பார் தெரியுமா?

65 வயது

அவர் இல்லாதது உண்மையிலே பெரிய கஷ்டமாக இருகிறது .அவரின் ஆலோசனையைக் கேட்க முடியாமல் போனது பெரிய நஷ்டம்.

70 வயது

அவருடைய அறிவும் அனுபவமும் எங்கே? நான் எங்கே?

நிச்சயமாக இப்படிப்பட்ட ஒரு மனப்பாங்கு எனக்கு ஒரு காலத்திலும் வந்ததில்லை .அதற்கு எனது தந்தையின் படிப்பு ,உத்தியோகம் ,வசதி அந்தஸ்து.அனுபவம் ,உலக அறிவு காரணமாக  இருந்திருக்கலாம் என நினைக்கிறேன் .மேற்படி காரணிகள் இல்லாவிட்டால் இப்படிப்பட்ட எண்ணம் எனக்கும்  வந்திருக்குமோ?

கடந்த தந்தையர் தினம் ,இங்குள்ள வானொலி ஒன்றில தந்தையர் தின சிறப்பு நிகழ்வாகக் நேயர்கள் வந்து தமது தந்தை எப்படி தமக்கு ஒரு வழிகாட்டியாகக் இருந்தார் என்று  தமது கருத்துக்களை சொல்லி தந்தைக்காக பாடலகள் கேட்டுக்கொண்டிருந்தனர்.

ஒரு நேயர் வந்தார் .அறிப்பாளர் கேட்டார் உங்ககள் தந்தைபற்றி சொல்லுங்கள்  என்று.நேயர் சொன்னார் .எது என்றாலும் போட்டு அடி அடி என்று அடிப்பார் என்றார்.துணுக்குற்ற அறிவிப்பாளர் சொன்னார் குழப்படி என்றால் உங்களை திருத்த தந்தை தண்டித்திருப்பார்.அதற்கு அந்த நேயர் சொன்னார் அபப்டி அல்ல எதுவென்றாலும் போட்டு விளாசு விளாசு என்று விலாசிவிடுவார் என்று .இப்படி ஒரு தந்தையர் தின உரையாடலை எதிபாராத அறிவிப்பாளர் கேட்டார் .சர இப்பொது உங்கள் தந்தை எங்கே என்று?

மிகவும் வெறுப்பான தொனியில் வந்தாது பதில் ,வேறு வழியில்லாமல் இப்பொது வந்து என்னோடுதான் இருக்கிறார்.என்று.

உண்மையில் அறிவிப்பாளர் மட்டும் அல்ல நானும் திடுக்குறேன் அன் நேயர் பதில் கண்டு .அன்று  நித்திரை வரவில்லை ,ஒரு மகன் தனது தந்தையை பற்றி தந்தையர் தினநிகழ்வில் இப்படி கதைப்பாரனால் எவ்வளவு வெறுப்பு இருக்க வேண்டும் தந்தைமேல் ,இங்கு யார் மேல் பிழை ,யார் சரி என்றுஎன்னால் ஒரு தீர்மானத்துக்கு வரமுடியவில்லை.அனால் அன்று இரவு முழுவதும் அர்த்த நேயரின் அந்த வெறுப்பை கக்கும் குரல் என்னை துங்க விடவில்லை என்பதே நிஜம்.

மீண்டும் சந்திப்பேன்.

Friday, August 24, 2012

மைக்ரோசொப்ட் தனது லோகோவை மாற்றியது!!!!

 
மைக்ரோசொப்ட் நிறுவனத்தினை தெரியாதவர்களே இருக்கமுடியாது. விண்டோஸ் முலம மிகவும் பிரபல்யம் அடைந்த இந்த  software நிறுவனம் ஓகஸ்ட் 23ந திகதிமுதல் புதிய சின்னத்தை(லோகோ) அறிமுகம் செய்தது.


இதற்கு முன் பறக்கும் கொடி போல நான்கு நிறங்களின் தனித்தனி சதுரங்கள் மைக்ரோசாப்ட் நிறுவன லோகோவாக இருந்தது.
இப்போது சிவப்பு, பச்சை, நீலம், பழுப்பு ஆகிய நான்கு கட்டங்கள் ஒரே அளவுடன் இருப்பது போல எளிமையாக லோகோ வடிவமைக்கப்பட்டுள்ளது.
new-microsoft-logo-2
மைக்ரோசொப்ட் நிறுவனம் தொடங்கப்பட்டு 37 ஆண்டுகள் ஆகின்றன.(1975) அப்போது முதல் 5வதாக வெளியிடப்படும் புதிய லோகோ இது.
எனினும் கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் புதிய லோகோ அறிவிக்கப்பட்டுள்ளது.  அதாவது பொது நிறுவனம் ஆனபின்பு .
மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது மென்பொருள் கண்டுபிடிப்புகளில் புதிய அத்தியாயத்துக்குள் நுழைவதை குறிக்கும் வகையிலும், நவீன வர்த்தக உலகில் எளிமையாக அனைவரையும் கவரும் வகையிலும் இருக்கும் என்று மைக்ரோசொப்ட் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாறி வரும் உலகிற்கு ஏற்றமாதிரி அண்மையில் புதிய ஈமெயில் சேவை ,விண்ட்டோஸ் 8 இப்படி பல தரும் மைக்ரோசொப்ட் தனது லோகோவினையும் நவீன்ப்டுத்தி சுருக்கமாக சொன்னால் எளிமைபடுத்தி இருக்கிறது.
இது காலம் கடந்து வந்திருக்கும் ஞானோதயம்,எளிமை இதைத்தானேக் google பின்பற்றி சாதனை படைகிறது








Sunday, August 12, 2012

பிளாக்பெரி போன் : சோகத்தில் ஒரு கனேடிய நகரம்!

 

 பிளாக்பெரி போன்களின் தாயகம் கனடா என்பது பலருக்கு தெரியாத விடையம்.பிளாக்பெரி போன்களை தயாரிக்கும் RIM  research in mortion நிறுவனம்  இருபது வருடங்களுக்கு  முன்பு வோட்டலூ என்ற நகரத்தில் தான் தனது முதலாவது ஸ்மார்ட்போன் ஆன பிளாக்பெரி  தயாரிப்பை தொடங்கியது

வோட்டலூ நகரம் என்பது ரொரன்டோ நகரத்தில் இருந்து 100 km தொலைவில்அமைந்திருக்கும் ஒரு சிறிய நகரம் ,சனததொகை அண்ணளவாகஒரு லட்சம் பேர்.

.ஒரு பல்கலைக்கழகமும அங்கு அமைத்திருக்கிறது .20ஆண்டுகளுக்கு முன் 1992ஆம் ஆண்டில் மைக் லசாரிடிஸ், ஜிம் பால்சிலி எனற இருவரின் முயற்சியால் வாட்டர்லூ நகரம், உலக தொழில்நுட்ப வரைபடத்தில் முக்கியத்துவம் பெற்றது.

ஒரு லட்சம் பேர் வசிக்கும் அந்த குட்டி நகரத்தில் அடுத்த சில ஆண்டுகளில் அபரிமித வளர்ச்சி. எங்கு திரும்பினாலும்
பிளாக்பெரி ஸ்மார்ட்போன் போஸ்டர்கள், பேனர்கள்.

சொந்த கட்டிடங்களும், வாடகை கட்டிடங்களுமாக ரிம் நிறுவனத்தின் அலுவலகங்கள், போன் தொழிற்சாலைகள்தான் நகரின் மூலை
முடுக்குகளில் எல்லாம் வியாபித்திருந்தன.நகரத்துகே தனி மரியாதை

உலகம் முழுவதும் பரந்து விரிந்தது அதன் போன் சாம்ராஜ்யம். உள்ளூர் தொழிலதிபர் முதல் அமெரிக்க
ஜனாதிபதி ஒபாமா வரை பிளாக்பெரி போன் வைத்திருப்பதை கவுரவமாக கருதியதுண்டு.

10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் 16,500 ஊழியர்கள். அதில் வாட்டர்லூ நகரில் மட்டும் 9,000 பேர். இப்படி
உலா வந்த பிளாக்பெரி கடந்த 8 ஆண்டுகளில் முதல் முறையாக கடந்த 3 மாதத்தில் நஷ்ட கணக்கை வெளியிட்டுள்ளது.

இதற்கு காரணம் ஆப்பிள் ஐபோன், கூகுளின் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் வருகை. மற்றும் அவை பெற்றுள்ள வரவேற்பும் . கடந்த ஆண்டில் மொத்த
ஸ்மார்ட்போன் விற்பனையில் 11 சதவீதமாக இருந்த பிளாக்பெரி, கடந்த 3 மாதங்களில் 5 சதவீதமாக இறங்கி விட்டது.
இதனால் 6,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பப் போவதாக அறிவித்துள்ளது நிர்வாகம்.ஆனால்   இந்தமாதம் அறிமுகப்படுத்த உள்ள  4G LTE BLACK BERRY PLAYBOOK ஆனது நிலைமையை ஒரளவு சமாளிக்கும் என எதிர்பாகிறது நிறுவனம் .

இந்தியாவிலும் பிளாக்பெரி போன்களின் விற்பனை  சரிவதாக அண்மையில் புள்ளிவிபரங்கள் தெரிவித்திருந்தன .

எல்லாம் சரி.இந்த வோட்டலூ என்ற பெயரை எங்கோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கிறது என்று  யோசிக்கிரிகளா? நெப்போலியனின் சரித்திரம் படித்தவர்களுக்கு தெரியும்.மேற்படி பிளாக்பெரி போன்களின் சரிவுக்கு இந்த நகரத்தின் பெயரும் கூட கரணமாக இருக்கலாம் .

 ஆம், வாட்டர்லூ என்றால் மோசமான தோல்வி என்றும் பொருள்.

Tuesday, July 31, 2012

குளிர்பானம் குடித்த இருவருக்கு அடி, உதை: பாகிஸ்தானில் பரபரப்பு

பாகிஸ்தானில் கூல்டிரிங்ஸ் குடித்த 2 பேரை பொலிஸ் அதிகாரி ஒருவர் அடித்து கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் முஸ்லிம்கள் நோன்பு இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் பாகிஸ்தானின் டமானிகோ என்ற சுற்றுலா தலத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் ஏராளமானோர் வந்திருந்தனர்.
இங்குள்ள உயரமான பகுதியில் இருந்து தலைநகர் இஸ்லாமாபாத் நகரின் அழகை கண்டு ரசித்து கொண்டிருந்தனர். அப்போது அன்வர் அப்பாஸ், மாலிக் சயீத் என்ற 2 இளைஞர்கள் காரில் அமர்ந்து கூல்டிரிங்ஸ் குடித்துக் கொண்டிருந்தனர்.
அதை பார்த்த பொலிஸ் அதிகாரி ஒருவர் ஆத்திரம் அடைந்து இருவரையும் தாக்கினார். ரம்ஜான் மாதத்தில் காலை முதல் மாலை வரை முஸ்லிம்கள் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
அந்த நேரத்தில் கூல்டிரிங்ஸ் குடித்ததால் இருவரையும் பொலிஸ் அதிகாரி கைது செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு பாகிஸ்தானில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இதுகுறித்து இஸ்லாமாபாத் பொலிஸ் கமிஷனர் பானியாமின் கூறுகையில், சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதுகுறித்து கைது செய்யப்பட்ட அப்பாஸ் கூறுகையில், நான் ரம்ஜான் நோன்பு கடைபிடிக்கவில்லை. எனினும், மக்கள் முன்னிலையில் கூல்டிரிங்ஸ் குடிப்பது தார்மீக அடிப்படையில் தவறு என்பதை அறிவேன்.
அதற்காகதான் யாரும் இல்லாத இடத்தில் கூல்டிரிங்ஸ் குடித்தேன். அதை ஏற்காமல் அதிகாரி தனது பெல்ட்டை கழற்றி அடித்தார். பின்னர் அங்கிருந்து துரத்திவிட்டார்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தேன். அவர்கள் என்னிடம் மன்னிப்புக் கேட்டு கொண்டு புகாரை வாபஸ் பெற வேண்டுகோள் விடுத்தனர் என்றார்.
இதுகுறித்து இஸ்லாமாபாத் பார் அசோசியேஷன் முன்னாள் பொதுச் செயலாளர் ரியாசட் அலி ஆசாத் கூறுகையில், பொது இடங்களில் உண்பதற்கு தடை எதுவும் பாகிஸ்தான் சட்டத்தில் இல்லை.
எனினும் ரம்ஜான் மாதத்தில் தார்மீக அடிப்படையில் பொது இடங்களில் உண்ண கூடாது என்று வேண்டுகோள் விடுக்கலாம். அதற்காக தாக்குதல் நடத்துவதற்கு பொலிசுக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்தார்.
tamilwin

Tuesday, June 19, 2012

லண்டன் ஒலிம்பிக்சின் தொடக்க விழா நிகழ்வில் இடம்பெறப்போகும் இசைஞானி இளைஜராஜா ,மாதங்கியின் பாடல்கள்

 

உலகெங்கினும்  வாழும் தமிழர்கள் எல்லாம் மகிழக்கூடிய ஒரு செய்தி இன்று மாலை காதிலும் கண்ணிலும் கேட்க பார்க்க முடிந்தது .சரி எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளலாம் எண்டால் கடந்த ஆறு வருடங்களாக தினமும் பார்க்கும் தமிழ்மணத்தினை  இரு தினங்களாக  காணவில்லை.கையும் ஓடவில்லை.காலும் ஓடவில்லை .எத்தனயோ விடயங்களை ஒரே நாளில் பறிகொடுத்த பரம்பரையில் வந்தவர்கள் தானே நாம் .இதுவும் கடந்து  போகும்.

சரி தலைப்பில் எதோ சொல்லிவிட்டு விடயம் எங்கே எண்டு கேளாததையங்கோ விசியதுக்கு வாறன்,


லண்டன் ஒலிம்பிக்ஸ் தொடக்கவிழா நிகழ்வில், தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல் ஒன்று இடம் பெற இருப்பதாக பிரிட்டிஷ் ஊடகச் செய்திகள் கூறுகின்றன. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் நடக்கும் பல்வேறு கலை கலாச்சார நிகழ்வுகளில் ஒன்று, தேர்ந்தெடுக்கப்பட்ட உலகப் பாடல்கள் அடங்கிய ஒரு நிகழ்ச்சி.

அதில் இடம் பெறும் 86 பாடல்களில் தமிழ்த் திரைப்படப் பாடலும் ஒன்று என்று பிரிட்டிஷ் பத்திரிகைகள் சில கூறுகின்றன.

பெரும்பாலும் பிரிட்டிஷ் இசைக் கலைஞர்களின் பாடல்களே இடம்பெறும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ள வெகு சில வேற்று மொழிப்பாடல்களில் ஒன்று, தமிழ்த் திரை இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையில், எஸ்.பி.பாலசுப்ரமண்யம் பாடிய " நான்தான் ஒங்கப்பண்டா" என்ற பாடல்தான்.

கமலஹாசன் மற்றும் ஸ்ரீபிரியா நடிப்பில் 1981ல் வெளியான 'ராம் லக்ஷ்மண்' என்ற படத்தில் வரும் பாடல் இது.

சடுகுடு அல்லது கபடி விளையாட்டு வீர்ர் ஒருவர் அந்த விளையாட்டின் போது பாடுவது போல் அமைந்திருக்கும், விறுவிறுப்பான இசையுடன் கூடிய இந்தப் பாடல், அந்தப் படம் வெளியான போது பெரிய அளவில் ஹிட் ஆனதாக நினைவில்லை.

ஆனால் இப்போது சர்வதேசப் புகழ் பெற்ற பிரிட்டிஷ் இசைக்குழுவான பீட்டில்ஸ் மற்றும் பிற பிரபல பிரிட்டிஷ் இசைக்கலைஞர்களான ஏமி வைன்ஹவுஸ், ரோலிங் ஸ்டோன்ஸ், ஷுகர் பேப்ஸ் போன்றோரின் பாடல்களுடன் இந்தப் பாடலின் ஒலிக்கீற்றும் இந்த தொடக்க விழா நிகழ்வில் இடம்பெறலாம் என்று பிரிட்டிஷ் பத்திரிகைகளில் கசிந்து வந்துள்ள செய்திகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து ஒலிம்பிக் ஏற்பாட்டுக்குழுவினர் அதிகாரபூர்வமாக்க் கருத்து எதையும் தெரிவிக்க மறுத்துவிட்டனர். ஆஸ்கார் விருது பெற்ற "ஸ்லம் டாக் மிலியனேர்" போன்ற படங்களை இயக்கிய டானி போய்ல் அவர்கள் ஒலிம்பிக் தொடக்கவிழா நிகழ்ச்சிகளை கருத்துருவாக்கி வருகிறார்.

அவரது மேற்பார்வையில், சுமார் 27 மிலியன் பவுண்ட் செலவில் உருவாகிவரும் இந்த தொடக்கவிழா நிகழ்ச்சியில் இடம்பெறும் மற்றுமொரு தமிழ்க் கலைஞர், இலங்கையைப் பூர்விகமாகக் கொண்ட பிரிட்டனில் வாழும் மியா என்ற மாதங்கி அருள்பிரகாசம். இவரது, பிரபலமான "பேப்பர் ப்ளேன்ஸ்", (காகித விமானங்கள்) என்ற பாடல் இந்தப் பட்டியலில் இடம்பெறுவதாக செய்திகள் கூறுகின்றன.

குடியேறிகளின் அனுபவத்தைச் சொல்லும் இந்தப் பாடல் 2007ம் ஆண்டு இயற்றப்பட்ட பாடல், அவரது இரண்டாவது ஆல்பமான "கலா" என்ற ஆல்பத்தில் இடம்பெற்றிருந்த்து. உலக அளவில் பல லட்சக்கணக்கானோர் பார்த்து ரசிக்க இருக்கும் ஒலிம்பிக் தொடக்கவிழாவில் இரண்டு தமிழர்களின் இசையும் இடம்பெறப்போகிறது என்பது தமிழ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்திதான்.

 



இதுதான் செய்தி ,செய்தியை அப்படியே தந்திருக்கிறேன்.மிகுதி விபரங்கள்

சில தினங்களில் தெரியவரும் தானே .சிந்திப்போம்  ஹி ஹி சந்திப்போம்

 


Friday, June 15, 2012

கோக் vs பெப்சி:- குடிக்கலாம்- இரசிக்கலாம்

 


மேலே நீங்கள் பார்க்கும் படத்தில் காணும் கட்டடத்தின்,இரண்டாவது மாடியில் கொக்கா கோலா மென்பான நிறுவனத்தினர் தமது அலுவலகத்தினை அமைத்தனர்.தமது விளம்பரப் பலைகையினையும் நாட்டினார். இது நடந்து சில நாட்களின் பின்னர் அவர்களின் விளம்பரப்பலகையின் கீழே பெப்சி கம்பனி தனது விளம்பரப் பலகையை நிறுவியது அதிரடியாக.அதிலே இடம் பெற்ற வாசகங்களை படத்தினைப் பார்த்துப் படித்துகொள்ளுங்கள்.சரியான நெத்தியடி கோக்கிற்கு.


சரி இந்த சம்பவம் எங்கு நடந்தது? படத்தில் தெரியும் தமிழ் எழுத்துக்கள்,ஆட்டோ,பெண் போன்றவற்றினை வைத்து பார்த்தால் எங்கு நடந்தது என்பதை சொல்லவும் வேண்டுமா? கோக்கிற்கும் பெப்சிக்கும் இடையில் இப்படி ஆரோக்கியமான விளம்பர போட்டிகள் அடிக்கடி நடப்பது எல்லோரும் அறிந்ததே.மேலே குறிப்பிட்டதை போல பெப்சிக்கும் கோக்கிற்கும் இடையில் நடைபெற்ற மற்றுமொரு சுவாரசியமான விளம்பரப் போட்டி.


ஒரு முறை கோக் கம்பனியின் விளம்பரம் இப்படி இருந்தது.ஒரு குரங்கு ஒரு பெரிய மரப்பலகையினை ஒவ்வொரு ஆணிகளாக எடுத்து சுத்தியல் மூலம் அறைந்து கொண்டு இருந்தது.கருமமே கண்ணாக ஒவ்வொரு ஆணியாக அறைந்துகொண்டிருந்த குரங்கின் அருகில் கோக் போத்தல்கள்.உடனே தொலைக்காட்சி திரையில் இந்தவாசகங்கள்.
"கடமையே கண்ணாக இருப்பவர்கள் அருந்துவது கோக்"


பார்த்தார்கள் பெப்சி கம்பனிகாரர்கள்.உடனேயே அவர்களும்கொண்டுவந்தார்கள் பதிலடியாக ஒரு விளம்பரம்.ஒரு கடற்கரை, குளியல் உடையில் ஆண்கள் பெண்கள்.ஒரு ஜீப் வருகிறது.அதில் நீச்சல் உடையில் இளம்பெண்கள்அமர்ந்திருக்க அவர்களின் மத்தியில் தொப்பி அணிந்தபடி கோக் விளம்பரத்தில் வந்தது போல ஒரு குரங்கு அதிரடி இசை ஒலிக்க. இப்போது திரையில் தெரிந்தன இந்த வாசங்கள்
"வாழ்க்கையை அனுபவிக்க தெரிந்தவர்கள் அருந்துவது பெப்சி"


இது எப்படி இருக்கு? நான் பார்த்தவரையில் கோக்கின் தோற்றம் ,விளம்பரம் போன்றவற்றினை பார்த்தால் 35 வயது பெண்ணை பார்ப்பது போல ஒர் பிரமையும்.பெப்சியின் விளம்பரங்களை பார்த்தால்16 பெண்ணைபார்ப்பது போல் ஒரு பிரமையும் தெரிகின்றது.
ஹி.ஹீ,ஹீ . உங்களுக்கு எப்படி?


காதைக் கிட்ட கொண்டு வாங்கோ ஒரு ஜோக்.


ஒரு ஆராச்சியாளர் அடிக்கடி ஆராய்சிக்காக வடதுருவத்துக்கு போவார்.ஆனால் தனது உதவியாளார்கள் இருவரை மட்டும் அழைத்துப் போவார்.அதில் ஒருவர் 50 வயது பெண். கடிகாரம்,கலண்டர் எதுவும் எடுத்துப்போகமாட்டார் பேராசிரியார்.ஆனால் சரியாக ஆறாவது மாதம் தனது ஆராய்சியை முடித்துக்கொண்டு வீடு திரும்பி விடுவார்.இப்படி அடிக்கடி நடக்க ஆச்சரியம் தாளாத ஆராச்சியாளரின் நண்பர் கேட்டார்.என்னப்பா நீ கலண்டர் ,கடிகாரம் கொண்டு போவதில்லை ஆனால்எப்படி சரியாக 6வது மாதம் வீடுதிரும்ப முடிகிறது என்று?ஆராச்சியாளர் சொன்னார் எல்லாம் அந்த 50 வயது பெண் உதவியாளார் மூலம் தான் என்று. நண்பருக்கு சந்தோஷம் தாளமுடியவில்லை.ஒரு கிளுகிளுப்பான கதை கிடைக்கப்போகிறதே என்று?ஆராச்சியாளார் சொன்னார் நண்பனே எப்போது அந்த 50வயது பெண் அழகாக எனக்கு தெரிகிறாளோ அப்போது நான் முடிவு செய்து கொள்வேன்,எனது ஆராய்ச்சியை முடித்து வீடு திரும்ப வேண்டிய காலம் வந்து விட்டது என்று.