Saturday, April 20, 2013

நீரிழிவு பற்றிய சில தவறான புரிதல்கள் !

 

லகில் நீரிழிவு என்னும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளோர் அதிகம் உள்ளனர். உலகிலே அதிகமானோர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவை அனைத்திற்கும் வாழ்க்கை முறையும், பழக்கவழக்கங்களும் தான் பெரும் காரணம். ஆனால் பெரும்பாலான மக்கள் மனதில், இந்த சர்க்கரை நோயைப் பற்றிய தவறான கருத்துக்கள் நிலவுகின்றன. மேலும் அந்த தவறான கருத்துக்களால், அவர்கள் சர்க்கரை நோய் வருவதற்கான காரணத்தை சரியாக புரிந்து கொள்ளாமல், மூடநம்பிக்கையுடன் நம்பிக் கொண்டிருக்கின்றனர். இதனால் சர்க்கரை நோய் வராது என்று நினைத்தாலும், வந்துவிடுகிறது. எனவே அவ்வாறு சர்க்கரை நோயை பற்றி தவறாக நினைத்து, நீரிழிவு வந்தவர்களிடம், இந்த நோய் வருவதற்கான உண்மையான காரணத்தை கேட்டு தெரிந்து கொண்டு, அதனை உங்களுக்காக கொடுத்து இருக்கிறேன் . சரி, இப்போது சர்க்கரை நோயைப் பற்றி மக்கள் மத்தியில் இருக்கும் தவறான கருத்துக்கள் என்னவென்று பார்த்து, மனதில் இருந்து அதனை மாற்றிக் கொள்ளலாமா!

உண்மை -1

"சர்க்கரை சாப்பிடாமல் இருந்தால், சர்க்கரை நோய் வராது" என்று நினைப்பது. உண்மையில் நீரிழிவானது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் ஏற்படும் ஒன்று. அதற்கு சர்க்கரை சாப்பிடாமல் இருந்தால் மட்டும் சர்க்கரை நோய் வராது என்பதில்லை. மேலும் அவ்வாறு சர்க்கரை சாப்பிடாமல் இருந்தால், கார்போஹைட்ரேட்டானது, உடலில் உள்ள குளுக்கோஸை உடையச் செய்துவிடும்.

உண்மை - 2

"இன்சுலின் எடுத்துக் கொண்டால், உடலில் சர்க்கரை நோயானது முற்றிவிட்டது. ஆகவே நாம் வாழ்வின் இறுதி நிலைக்கு வந்துவிட்டோம்" என்று எண்ணுவது. நீரிழிவு நோய்க்கு புற்றுநோயைப் போன்று எந்த ஒரு நிலையும் இல்லை. உண்மையில் இன்சுலின் எடுத்துக் கொண்டால், உடலில் உள்ள சர்க்கரையின் அளவானது கட்டுப்படுவதோடு, நீண்ட நாட்கள் நன்கு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும் என்பதால் தான்.

உண்மை - 3

"நீரிழிவு இருப்பதால், கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை தொடவே கூடாது" என்று இருப்பது. கார்ப்போஹைட்ரேட் தான் உடலின் எரிபொருள். அத்தகைய எரிபொருளானது நீரிழிவு நோயாளிகளுக்கும் மிகவும் முக்கியம். எனவே கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை முற்றிலும் தவிர்க்காமல், அதனை உட்கொண்டு, தினமும் உடற்பயிற்சி மற்றும் வேண்டிய மருந்துகளை சரியான உட்கொள்ள வேண்டும். எனவே சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை உண்பதை தவிர்த்து, நார்ச்சத்துள்ள கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை உட்கொள்வது நல்லது.

உண்மை - 4

"நீரிழிவு இருக்கும் போது இனிப்புள்ள காய்கறிகளை சாப்பிட்டால், நீரிழிவு அதிகரிக்கும்" என்று நினைப்பது. நீரிழிவு உள்ளவர்கள் அதிகமாக கிளைசீமிக் இன்டெக்ஸ் உள்ள உணவுகளை உண்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவானது அதிகரிக்கும். அதற்காக இனிப்பாக இருக்கும் காய்கறிகளான பூசணிக்காயில், கிளைசீமிக் இன்டெக்ஸானது இல்லை. சொல்லப்போனால், இது உடலில் இன்சுலின் சுரப்பைத் தடுக்கும் பொருட்களை எதிர்த்துப் போராடுவதில் சிறந்தது.

உண்மை - 5

"நீரிழிவு நோயாளிகள் எந்த ஒரு இனிப்புகளையும் உணவில் சேர்க்க கூடாது" என்று எண்ணுவது. உண்மையில் இந்நோய் உள்ளவர்கள் இனிப்புகளை முற்றிலும் தவிர்க்கக் கூடாது. எனவே இயற்கை இனிப்புகளான தேன் மற்றும் பழங்களை சாப்பிட வேண்டும். ஆனால் செயற்கை முறையில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை அதிகப்படியான அளவில் சாப்பிட்டால், அவை புற்றுநோயை உண்டாக்கும்,

உண்மை - 6

"என் குடும்பத்தில் யாரக்கும் நீரிழிவு இல்லை. எனவே எனக்கும் நீரிழிவு வராது "என்று நினைப்பது. நீரிழிவு பெரும்பாலும் ஒரு பரம்பரை நோயாக இருக்கலாம். ஆனால், இவை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை. அதாவது போதிய உடற்பயிற்சி, டென்சனான வாழ்க்கை போன்றவையும் நீரிழிவை உண்டாக்கும்.

உண்மை - 7

"குண்டாக இல்லாவிட்டால், நீரிழிவு நோய் வராது" என்று இருப்பது. உண்மையில் அதிகப்படியான உடல் எடை நீரிழிவு வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் தான். அதே சமயம், நீரிழிவு உடலுக்கு வேண்டிய எடை இல்லாவிட்டாலும், ஏற்படும். எனவே உடல் எடை குறையும் போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

உண்மை - 8

"குழந்தைகளுக்கு டைப்-2  நீரிழிவு வராது" என்பது. பொதுவாக அனைவரும் குழந்தைகளுக்கு டைப்-1 நீரிழிவு தான் ஏற்படும் என்று நினைக்கிறோம். ஆனால் குழந்தைகள் அதிகப்படியான ஜங்க் உணவுகளை சாப்பிட்டாலும் டைப்-2 நீரிழிவானது ஏற்படும்.

உண்மை - 9

"கர்ப்பகால நீரிழிவானது தற்காலிகமானது" என்று நினைப்பது. உண்மை தான், கர்ப்பகால நீரிழிவு பிரசவத்திற்கு பின் போய்விடும். ஆனால் அந்த நீரிழிவு முற்றிய நிலையில், பிற்காலத்தில் அது டைப்-2 நீரிழிவாக வந்துவிடும்.

உண்மை - 10

"நான் இன்சுலின் எடுக்கிறேன். ஆகவே நான் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம்" என்பது. நீரிழிவைக் கட்டுப்படுத்துவதற்கு, டயட் மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றம் நிச்சயம் வேண்டும். எனவே இன்சுலின் எடுத்தால், எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று இருந்தால், பின் நீரிழிவானது முற்றி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

நன்றி -இணையம்

Thursday, April 18, 2013

அழகாய் இருக்கிறீர்கள் !! பயமாய் இருக்கிறது!!!!!!!!திருவிழாவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆண்கள்

 

அழகாக இருந்ததால் திருவிழாவிலிருந்து வெளியேற்றப்பட்ட அமீரக ஆண்கள்

வுதி தலைநகர் ரியாத்தில் நடைபெற்ற கலாச்சார திருவிழாவின்பொழுது ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த 3 பேர் மிகவும் அழகாக இருந்ததால் அவர்களை மத சட்டங்களை அமல்படுத்தும் பொலிசார் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினர்.

ரியாத்தில் வருடாந்திர கலாச்சார திருவிழா கடந்த ஞாயிறன்று நடைபெற்றது. அப்போது பல்வேறு கூடாரங்கள் அமைக்கப்பட்டதுடன் பல்வேறு பிரதிநிதிகளும் நிறுத்தப்பட்டனர்.

ஐக்கிய அரபு அமீரக கூடாரத்தில் மத சட்டங்களை அமல்படுத்தும் பொலிசார் அங்கு நின்று கொண்டிருந்த அமீரக பிரதிநிதிகளில் 3 பேரை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.

அவர்கள் 3 பேரும் மிகவும் அழகாக இருப்பதாகவும், அதனால் அங்கு வரும் பெண்கள் அவர்கள் அழகில் மயங்கக்கூடும் என்று கமிஷன் உறுப்பினர்கள் அஞ்சினார்கள். இதையடுத்து தான் அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள் என்று விழா ஏற்பாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த 3 பேரையும் அபுதாபிக்கு அனுப்பி வைக்க விழா நிர்வாகம் ஏற்பாடு செய்ததாகவும் செய்திகள் அறிய முடிகிறது.பேசாமல் கண்களையும் மறைத்து விடலாமே .

Sunday, April 14, 2013

இந்தியர்கள் வெளியே ! சீனர்கள் உள்ளே ! ,கனேடியர்கள் வெளியே இந்தியர்கள் உள்ளே !!

 

ன்ன இது தலையங்கம் என் எண்ணுகிறீர்களா ?அண்மையில் உலகில் நடைபெற்ற இரு சம்பவங்களின்,,நிகழ்வுகளின் தலைப்பு தான் இது .இனி விடையத்துக்கு வருகிறேன்.

 

இந்தியர்கள் வெளியே ! சீனர்கள் உள்ளே!

இது நடைபெற்றது இலங்கையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் கொழும்பு துறைமுகத்தில் டோக்யார்டில் பணியாற்றும் 2000 இந்தியத் தொழிலாளர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளப்போவதாக செய்திகள் வந்தன .டோக்யார்ட்டில் கப்பல்கள் புதிதாக் கட்டும் மற்றும் பழுதுபார்க்கும் பணிகளில் ஈடுபட்டிருக்கும் இவர்களை வெளியே அனுப்பிவிட்டு அந்த இடங்களிற்கு இலங்கை பணியாளர்களை நியமிக்கப் போவதா இலங்கை சொன்னாலும் அந்த இடங்களில் சீனர்கள் வந்து அமர்வார்கள் என்பதே கடந்த கால நிகழ்வுகள் .அத்துடன் கொழும்பு துறைமுக விரிவாக்கப் பணிகளில் சீனர்களே ஈடுபடப்போகிறார்கள்.எனவே ஒன்றும் ஒன்றும் இரண்டு தானே .

 

கனேடியர்கள் வெளியே ! இந்தியர்கள் உள்ளே!

இது நடைபெறுவது கனடாவில் .இங்கு கனடாவில் உள்ள பிரபல வங்கிகளில் ஒன்று ரோயல் வங்கி .இங்கு பணியில் இருந்த பல கனேடியர்களை பணியில் இருந்து நீக்கிவிட்டு அவர்களின் இடத்துக்கு இந்தியாவில் இருந்து பணியாளர்களைக் கொண்டு வந்து இருக்கிறது இந்த வங்கி  இந்த விடையமே கடந்த வாரங்களின் சூடான விவாத பொருளாய் இருக்கிறது கனேடிய  ஊடகங்களில் .அதுவும் இவர்களுகான பயிற்சியினை முன்னாள்  ஊழியர்களை கொண்டு செய்ய சொன்னது வேறு பெரும் பிரச்சனையை கிளப்பியது .கனேடிய மக்களின் பணத்தில் இலாபம் கொழிக்கும் இந்த கனேடிய வங்கிக்கு கனேடிய ஊழியர்கள் வேண்டாமா என்ற வகையில் விவாத சென்றது .

பின்பு ரோயல் வங்கி பிரச்சனை பெரிதாவதை உணர்ந்து ஒரு அறிக்கை மூலம் விளக்கம் தந்தது இப்படி

45  கனேடிய ஊழியர்களின்  பணியிடங்களை IGATE என்ற இந்திய நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கியிருப்பதை உறுதி செய்ததுடன்  வேலை நீக்கம் செய்யப்படவுள்ள 45 கனடிய மக்களின் தகவல் தொழில்நுட்பப் பணிகளை இனி குறைந்த அளவிலான தற்காலிக இந்திய பணியாளர்களை கொண்டே செய்து முடித்து விட முடியும் என வங்கி கூறி உள்ளதுடன் .

இந்த நடவடிக்கையினை கனடியர்களின் பணிகளை பிற நாட்டினருக்கு கொடுப்பதாக விமர்சிப்பது பெருந்தவறு எனக் கூறியுள்ள றோயல் வங்கி , ஒப்பந்த அடிப்படையில் வேலைகள் ஒரு நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளதே தவிர அந்நாட்டு மக்களை றோயல் வங்கியின் பணியாளர்களாக மாற்றவில்லை என்றும் விளக்கமளித்துள்ளது. 

மேலும் தற்போது வேலை நீக்கம் செய்யப்படவுள்ள 45 பேருமே ஓய்வு பெறும் வயதினர் என்பதையும் , இவர்களில் சிலர் விருப்ப  ஓய்வு பெற சம்மதம் தெரிவித்துள்ளனர் என்பதையும் வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. வங்கியின் செயல்பாடுகள் அனைத்தும் அரசு விதிமுறைப்படியே நடைபெறுவதை உறுதி செய்த பின்னரே மாற்றங்களை ஏற்படுத்தி வருவதாக ஒப்புக் கொண்டுள்ளது அந்த வங்கி. அதாவது பந்தினை தூக்கிப கனேடிய குடிவரவு துறையின் மீதே போட்டுள்ளது வங்கி .இதனால் கனேடிய மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டிய நிலையில் உள்ளது கனேடிய குடிவரவு துறை .

இதற்கு இடையில் சில தினங்களுக்கு முன்னர் ஒரு மகாநாட்டில் உரையாற்றிய iGATE  ன் தலைவர் ப .முர்த்தி என்பவர் தாங்கள் பல் நாடுகளில் பல சவால்களை சந்தித்தாலும் தாங்கள் தங்கள் தொழிலில் முன்னேறி வருவதாகவும் கனடாவில் 500 வேலை வாய்ப்புக்களை உருவாக்க்ப்போவதாகவும் சொல்லி இருக்கிறார் .

சரி அந்த 500 வேலைகளுக்கும் பணிக்கு அமர்த்த போவது வெளிநாட்டவரையா ?அல்லது கனேடியர்களையா?

அது சரி ஏன் வங்கி இப்படி  செய்யவேண்டும் என்கிறிர்களா?

கனேடியர்களுக்கு கொடுப்பதை விட குறைந்த சம்பளம் கொடுத்தால் போதும் .தமது கொமிசன் போக மிகுதியைதான் IGATE பணியாளர்களுக்கு கொடுக்கும் அத்துடன் எந்த நேரமும் வேலை இல்லை என்று வீட்டிற்கு அனுப்பலாம் .அத்துடன் பணியாளர்,மருத்துவப காப்புறுதி இன்ன பிற விடையங்கள் தொடர்பாக வங்கிக்கு எந்த பொறுப்பும் இல்லை..இப்பொது புரிகிறதா விடையம் ?

இருந்தாலும் கனேடிய்ர்களால் இலாபம் ஈட்டும் இவ் வங்கி கனேடியர்கள் பணிக்கு தேவை இல்லை என சொல்லுவதாகவே  மக்கள் பலர் கருதுகிறார்கள் .சரி பார்ப்போம் என்ன நடக்கிறது என்று ?

மீண்டும் வருவேன் ---கரிகாலன்---

Friday, April 12, 2013

மு.க .அழகிரியையும் விட்டுவைக்காத விக்கிலிக்ஸ்!!!!

 

திமுக தலைவர் கருணாநிதியின் மகனான முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி மற்றும் நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் பற்றியும் அமெரிக்க தூதரக ஆவணங்களில் கூறப்பட்டிருப்பதை விக்கிலீக்ஸ் வெளிப்படுத்தியிருக்கிறது.

"தென்னிந்தியாவில் ஓட்டுக்குப் பணம்" என்ற தலைப்பிட்டு 2009 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் அனுப்பி வைத்திருக்கும் அறிக்கையில் இடம் பெற்றுள்ள தகவல்கள்:

சென்னை மற்றும் ஹைதராபாத் நகரின் குடிசை பகுதிகளுக்கு நாங்கள் சென்ற போது தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளிடம் ஏழை மக்கள் பணத்தை எதிர்பார்ப்பதை அறிய முடிந்தது.

அதிமுக, திமுக என்ற இரண்டு பெரிய அரசியல் கட்சிகளுமே தேர்தலில் ஓட்டுக்காக பணம் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர் என்று சென்னையில் குடிசைப் பகுதிகளில் தொண்டாற்றும் என்.ஜி.ஓ பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

அதுவும் அதிகாலை 2 மணி முதல் 4 மணிக்குள்தான் இந்த பண பட்டுவாடா நடைபெறுகிறது. இது பற்றி எங்களிடம் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் கார்த்தி சிதம்பரம் பேசினார்.

 

சிவகங்கை தொகுதியில் அவரது தந்தை போட்டியிடுவதால் அவர்தான் பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.

"ஒவ்வொரு கிராமத்து தலைவர்களும் இரண்டு விஷயத்தை எங்களிடம் எதிர்பார்ப்பாங்க.. சிலர் உள்ளூர் கோயில்களுக்கு நன்கொடை.. இன்னும் சிலர் சமூக நலக் கூடங்கள் கட்டித் தர கோரிக்கை விடுப்பாங்க.. இப்படி வரும் ஒவ்வொரு கோரிக்கையையும் நிறைவேற்றிக் கொடுக்க முடியாது..

இதனால சிலவற்றை கொடுத்து என்னுடைய தந்தைக்கு வாக்களிக்க வைப்போம். ஆனா ஓட்டுக்குப் பணம் கொடுக்கமட்டோம். கிராமங்களில் பணம் கொடுப்பது என்பது சாத்தியமானது அல்ல என்று கார்த்தி சிதம்பரம் கூறினார்.

ஆனால் தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவரோ, சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரத்தின் தேர்தல் பணி சிறப்பானதாக இருக்கிறது. கொஞ்சம் பணமும் மக்களுக்கு அவர் கொடுத்திருக்கிறார் என்றார். அண்மையில் தென் தமிழ்நாட்டில் மதுரைக்குப் போயிருந்தோம். அங்கு முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி போட்டியிடுவது பற்றிதான் எங்கும் பேச்சாக இருந்தது. அவரது அடியாட்கள் பலம் பற்றி பேசுகின்றனர்.

சிறிதுகாலத்துக்கு முன்புதான் 2003 ஆம் ஆண்டு கொலை வழக்கு ஒன்றில் அவர் விடுதலையாகி இருந்தார். 2007ஆம் ஆண்டு அழகிரியின் செல்வாக்கு பற்றி கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டது.

அதில் அழகிரிக்கு செல்வாக்கு இல்லை என்று சொல்லப்பட்டிருந்தது. இதனால் அவரது ஆதரவாளர்கள் மதுரையில் பத்திரிகை அலுவலகத்தை தீ வைத்து எரித்ததில் மூன்று பேர் இறந்து போயிருந்தனர்.

மதுரை அருகே திருமங்கலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அழகிரி வாக்காளர்கலுக்குப் பணம் கொடுத்திருக்கிறார். மதுரையின் முன்னாள்மேயரும் அழகிரியின் நம்பிக்கைக்குரியவருமான எம். பட்டுராஜன் என்பவர் எங்களிடம்.

இதுல ஒன்னும் ரகசியம் எதுவும் இல்லை. ஒரு ஓட்டுக்கு திருமங்கலத்தில் ரூ5 ஆயிரம் கொடுத்தோம் என்றார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எஸ். கண்ணன் என்பவர் இ ஒரு ஓட்டுக்கு ரூ5 ஆயிரம் கொடுத்ததால் திருமங்கலத்தில் எல்லாமே மாறிப்போனது என்றார். மதுரையின் தி ஹிந்து ஆசிரியராக இருக்கும் எஸ். அண்ணாமலையும் ஓட்டுக்கு ரூ5 ஆயிரம் கொடுக்கப்பட்டதை உறுதிப்படுத்துகிறார்.

அத்துடன் தி ஹிந்து பத்திரிகையில் பணியாற்றும் திருமங்கலத்தைச் சேர்ந்த அனைத்து ஊழியர்களுமே பணம் வாங்கியிருக்கின்றனர் என்றும் அவர் கூறினார். திருமங்கலத்தில் செய்தததைப் போலவே பார்லிமென்ட் தேர்தலிலும் செய்யப்பட்டது. துக்ளக் வார இதழைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர்இ மதுரை லோக்சபா தொகுதியில் பணம் கொடுக்கப்பட்டது உண்மைதான் என்கிறார்.

மதுரையில் ஒரு ஓட்டுக்கு ரூ1000 ஆயிரம் கொடுக்கவே அழகிரி விரும்பினார் என்கிறார் துக்ளக் பத்திரிகையாளர். ஒரு வாரம் கழித்து மீண்டும் அந்த பத்திரிகையாளரை சந்தித்த போது மதுரையில் ஒரு ஓட்டுக்கு ரூ500 கொடுக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.

ஓட்டுக்குப் பணம் பற்றி கார்த்தி சிதம்பரம் கூறுகையில், கோடீஸ்வரரான அனில் அம்பானியே தேர்தலில் நின்றாலும் ஓட்டுக்குப் பணம் கொடுத்தாதான் ஜெயிக்க முடியும் என்கிறார் என்று அதில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அத்துடன் ஏராளமானோரிடம் அமெரிக்க அதிகாரிகள் பேசி அவர்களது கருத்தையும் மேற்கோள் காட்டி அறிக்கையைத் தயாரித்திருக்கின்றனர் என விக்கிலீக்ஸ் தகவல் குறிப்பிடுகின்றது.

நன்றி -----தமிழ்வின்

Tuesday, April 09, 2013

யாருமே ஏழை இல்லை --- ஜென் கதை

 

ரு ஏழை ஒருவன் ஜென் துறவியைப் பார்ப்பதற்காக போய் இருந்தான் .அவரிடம்  “குருவே நான் ஒரு ஏழை .என்னிடம் என் உயிரைத்தவிர வேறு எந்த சொத்தும் இல்லை .நான் வசதியுடன் வாழ வழிசொல்லுங்கள்” என்று கேட்டான் .அதற்கு அந்த குரு “நான் ௫௦௦௦ தருகிறேன்  உன் கைகளை வெட்டிக்கொடு”  என்றார் .அதற்கு அவன் என்னால் 5000 ரூபாவுக்காக  கைகளை வெட்டிக்கொடுக்க முடியாது என்றான்.

“சரி நான் உனக்கு 15000 ருபாய் தருகிறேன் உன் கால்களை எனக்கு கொடு என்றார் .அதற்கும் அவன்  ஒப்புக்கொள்ளவில்லை “வேண்டும் என்றால் 50000 ருபாய் தருகிறேன் உன் கண்களையாவது கொடு”என்று கேட்டார் அதற்கும் அவன் முடியாது என்றான் .உனக்கு இருபது இலட்சம் வேண்டுமானாலும் தருகிறேன் ,உன் உயிரைக்கொடு” என்றார் .அதற்கும் அந்த ஏழை நீங்கள் சொல்வதை என்னால் செய்யமுடியாது என்றான் .

அதைக்கேட்ட அந்த குரு அவனிடம் “உன்னிடம் உன் உயிரைத்தவிர வேறு எந்த சொத்தும் இல்லை மேலும் எவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்தாலும் ,கொடுக்க விரும்பாத விலை மதிப்பற்ற உயிரைக் கொண்டுள்ள நீ எவ்வாறு ஏழை ஆக முடியும் .ஆகவே முயற்சி செய் ,உழைத்து முன்னேறு என்றார் .

Saturday, March 30, 2013

ஜென் கதை ---செயலின் பிரதிபலன் !

 

ண்மையில் நான் படித்த ஒரு ஜென் கதை /இதில் இருக்கும் நீதி உனக்கு மரியாதை மற்றவர்கள் தர வேண்டும் என்றால் நீ மற்றவர்களுக்கு மரியாதை தர வேண்டும்.நீ நேசிக்கப்பட வேண்டும் என்றால் நீ மற்றவர்களை நேசிக்க வேண்டும்.

மனைவி உன்னை நேசிக்கவேண்டும் என்றால் நீ மனைவியை நேசிக்க வேண்டும் .அதாவது நாம் எதனை மற்றவர்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோமோ அதனை நாம் மற்றவர்களுக்கு கொடுத்தால் அது எமக்கு தானே கிடைக்கும் .இது தொடர்பான ஒரு கதை எனக்கு நினைவுக்கு வருகிறது,ஜென் கதை என்றுவிட்டு கதை சொல்கிறாரே கரிகாலன்  என்கிறவர்கள் கொஞ்சம் பொறுமை கொள்ளவும் .

ஒரு ஊரில் ஒரு பெரிய மனிதர் இருந்தாராம் .ஊரில் என்ன நல்லது கெட்டது நடந்தாலும் வீடுகளுக்கு அவர் போகமாட்டாராம் .அவரின் சார்பாக அவரின் கைத்தடியினை தான் அனுப்பிவருவாராம்.அதற்குதான் எல்லோரும், மரியாதை தருவார்களாம் ஒரு நாள் பெரிய மனிதர் இறந்து விட்டார் ,நிறைய பேர் வருவார்கள் என்று பார்த்தால் நிறைய கைத்தடிகள் தான் வந்தனவாம் அஞ்சலி செலுத்த.

சரி இனி கதைக்கு போவோமா?

ஒரு ஜென் துறவி அவ்ரகுடு சீடர்களுக்கு அன்றைய போதனையில் அவரவரின் செயல்களுக்கான பிரதிபலனை பற்றி விபரித்து கொண்டிருகையில் அதனை ஒரு கதையின் மூலமாக  விளக்க எண்ணி ஒரு கதை சொல்ல ஆரம்பித்தார் .

ஒரு விவசாயி ஒரு பவுண்டு வெண்னையினை ஒரு பேக்கரிக்காரருக்கு விற்று வந்தார் .

ஒரு நாள் அந்த பேக்கரிகாரர் விவசாயி கொடுக்கும் வெண்ணை  ஒரு பவுண்டு சரியாக இருக்கிறதா என எடை போட்டு பார்த்தார் .அப்போது எடை குறைவாக் இருப்பதை கண்ட பேக்கரிகாரர் விவசாயி மீது கடும் கோபம கொண்டார் .

நீதிமன்றத்துக்கு இப்பிரச்சனையை கொண்டு  சென்றார் பேக்கரிகாரர் .அப்போது நீதிபதி  ,விவசாயியை பார்த்து வெண்ணையை அளந்து பார்க்க என்ன முறையினை அல்லது கருவியினை உபயோகிக்கிறாய் என கேட்டார் .அதற்கு அந்த விவசாயி “நியாயம் “என்று பதில் உரைத்தான்.பின்பு நீதிபதியிடம் நான் பழங்காலத்தவன் என்னிடம் சரியான எடை அளக்கும் கருவி இல்லை ,ஆகவே நான் ஒரு அளவு கோல் கொண்டு அளவு செய்வேன் என்றான் .

உடனே நீதிபதி விவசாயினை பார்த்த்து வேறு எப்படி வெண்னையினை அளவு செய்தாய் என்றார் .

அதற்கு அந்த விவசாயி “ஜயா பேக்கரிகாரர் என்னிடமிருந்து நீண்ட காலமாக வெ ண்னையினை வாங்கி வருவது வழக்கம் .நானும் அவரிடம் இருந்து ஒரு பவுண்டு ரொட்டியை வாங்கி வருவேன் ஒவ்வொரு நாளும் அந்த ரோட்டியை வாங்கி வந்ததும் அதே அளவுக்கு வெண்னையினை வெட்டி பேக்கரிக்காரருக்கு கொடுத்து வந்தேன் .ஆகவே குறை குற்றம் ஏதும் இருந்தால் அது என் குற்றம் இல்லை .அது பேக்கரிகாரரின் தவறுதான் .இது முற்றிலும் பேக்கரிக்காரை சார்ந்தது ஏன்று  சொன்னார்;என்று  சொல்லி கதையினை முடித்தார் துறவி .

பின்பு சீடர்களுக்கு “நாம் மற்றவர்களுக்கு என்ன செய்கிறோமோ அதே தான் எமக்கும் விதிக்கப்படும் என்  சொல்லி அறிவுரையினை முடித்துக்கொண்டார்.

Friday, March 29, 2013

ஜெனிவாவுக்கு பழிதீர்க்குமா சிறிலங்கா? – நடுக்கத்தில் இந்தியா

 

புதினப்பலகை இணையதளத்தில் வெளிவந்த   கட்டுரை இது .நன்றியுடன் இங்கே பயன்படுத்தி இருக்கிறேன் .நட்பு நாடு ,நட்பு நாடு என்கிறார்களே நட்பு நாட்டின் இலட்சணத்தை பார்திர்களா?

சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கு இடையில் ஏற்பட்டுள்ள இராஜதந்திர ரீதியான முறுகல், இந்தியாவின் மோட்டார் வாகன ஏற்றுமதியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறிப்பாக மனிதஉரிமைகள் விவகாரத்தில் இந்தியா இராஜதந்திர ரீதியாக எடுத்துள்ள நிலைப்பாடு, இந்தியாவின் மோட்டார் வாகன ஏற்றுமதித்துறையில் தாக்கத்தை செலுத்தியுள்ளது.


கடந்த ஆண்டு ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களித்ததை அடுத்து, இந்திய வாகனங்களின் இறக்குமதிக்கான தீர்வைகளை சிறிலங்கா அதிகரித்தது.
இந்த ஆண்டும் சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களித்துள்ளதால், கடந்த ஆண்டைப் போலவே அது மோட்டார் வாகனத்துறையில் எதிர்விளைவை ஏற்படுத்தக் கூடும் என்று இந்திய உற்பத்தியாளர்கள் அச்சம் கொண்டுள்ளனர்.
கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கான தீர்வையை 120 தொடக்கம் 291 வீதத்தில் இருந்து 200 தொடக்கம் 350 வீதமாக அதிகரித்தது சிறிலங்கா.


அதுபோலவே,முச்சக்கரவண்டிகளுக்கான இறக்குமதித்தீர்வை 51 தொடக்கம் 61 வீதத்தில் இருந்து 100 வீதமாக அதிகரிக்கப்பட்டது.
இருசக்கர வாகனங்களுக்கான இறக்குமதித் தீர்வையும் 61வீதத்தில் இருந்து 100 வீதமாக அதிகரிக்கப்பட்டது.
ஐந்து மாதங்களுக்கு முன்னர் சுங்க வரியையும் சிறிலங்கா அதிகரித்தது.
இந்தியாவின் டாடா மோட்டோர்ஸ், மகிந்திரா அன் மகிந்திரா, ரிவிஎஸ், ஹீரோ மோட்டோர் கோர்ப்பரேசன், பசாஜ் ஓட்டோ அன் மாருதி சுசுகி, போன்ற நிறுவனங்கள் சிறிலங்காவை தமது முக்கிய ஏற்றுமதிச் சந்தையாக கொண்டுள்ளன.
சிறிலங்கா அரசாங்கம் இறக்குமதி தீர்வையை அதிகரித்ததால், இந்திய வாகனங்களின் விலை அதிகரித்து அவற்றுக்காக கேள்வி குறைந்துள்ளது.
ஏற்றுமதித் தீர்வை அதிகரிக்கபட்டதால், டாடா நனோ கார் ஆரம்பத்தில் விற்கப்பட்ட விலையை விட இரட்டிப்பாக அதிகரித்தது.
சிறிலங்காவில் ஆரம்பத்தில் 9.25 இலட்சம் இலங்கை ரூபாவுக்கு விற்கப்பட்ட நனோ கார், தீர்வை அதிகரிப்பினால், 15.5 இலட்சம் ரூபாவாக அதிகரித்தது.
இதுபோலவே, 14 இலட்சம் ரூபாவாக விற்கப்பட்ட டாடா 207 கார், 25 இலட்சம் ரூபாவாக அதிகரித்தது.


சிறிலங்காவின் தீர்வை அதிகரிப்பினால் இந்திய வாகனங்களின் இறக்குமதி வெகுவாக குறைந்துள்ளது.
கடந்த நிதிஆண்டின் இறுதிக் காலாண்டில் 20 ஆயிரம் தொடக்கம் 22 ஆயிரம் வரையாக இருந்த ஒரு மாதத்துக்காக பஜாஜ் வாகனங்களின் இறக்குமதி, இந்த நிதிஆண்டின் முதல் காலாண்டில் மாதம் ஒன்றுக்கு 8 ஆயிரம் தொடக்கம் 10 ஆயிரம் வரையாக குறைந்து விட்டது என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
சிறிலங்காவின் வாகனச்சந்தையில் இந்தியா மிகப்பெரிய பங்கை வகித்து வருகிறது.
அதில் பஜாஜ் நிறுவனம் மட்டும் 60 வீத பங்கைக் கொண்டுள்ளது.
கடந்த ஆண்டில் இந்தியா 6 பில்லியன் டொலர் பெறுமதியான வாகனங்களை ஏற்றுமதி செய்தது.


இதில் சிறிலங்காவுக்கான ஏற்றுமதி 800 மில்லியன் டொலர் என்பது குறிப்பிடத்தக்கது.