தினமலர் வாரமலரில் "இது உங்கள் இடம்" பகுதி வருகின்றது.
நாளிதழிலும் அப்படி ஒரு பகுதி வருகின்றது. வாசகர்களின்
கருத்துக்களை தாங்கிய கடிதங்களை அப்படியே? வெளியிடுகின்றனர்.அதில்
ஒரு கடிதம் இது.
இருக்கும் வரை இரத்ததானம்.
ஜூலை 14ம் தேதி ரத்த தான தினம். இப்போதெல்லாம் சாலை விபத்துகள் சர்வ சாதாரணமாகி விட்டது. அந்த வகையில் படுகாயம் அடைந்தவர்களை காப்பாற்ற ரத்தம் அவசியமாகிறது.
நம்மில் ரத்த தானம் செய்வது என்ற பழக்கம் சொல்லும்படி இல்லை. ரத்த தானம் செய்தால் உடல் நிலை பாதிக்கப்படும் என்ற தவறான எண்ணம் இருப்பதால் ரத்த தானம் செய்ய பலரும் தயங்குகின்றனர். இந்த தயக்கத்தை முதலில் மக்களிடமிருந்து போக்க வேண்டும்.
ரத்த தான தினம் வர மூன்று வாரங்களுக்கு முன்பே, இலங்கை பண்பலை வானொலியில் இது பற்றி சொல்ல ஆரம்பித்து விட்டனர். "ரத்த தானம் செய்ய முன் வருவோர் எங்கள் வானொலி நிலையம் வந்து அதற்கான விண்ணப்பப் படிவத்தை பெற்றுச் சென்று பல உயிர்கள் காக்க உதவுங்கள்...' என பெரிதாய் விளம்பரம் செய்து வருகின்றனர்.
ஆனால், இங்கோ வானொலியில் பாடல் மட்டுமே கேட்க முடிகிறது. ரத்த தானம் பற்றி முன்பே மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முன்வருவதில்லை. ரத்த தான தினத்தன்று மட்டும் ஏதாவது நாலு வார்த்தை சொல்வர்.
ரத்த தானத்தை ஊக்குவிக்க, வானொலி நிலையங்கள் மட்டுமல்லாமல் மற்ற தொலை தொடர்பு சாதனங்களும் முன்வரலாமே!
நன்றி-தினமலர்.
2 comments:
சிங்கை வானொலி ஒலி 96.8 விளம்பரத்தோடு நில்லாமல் அவர்களே ரத்ததான முகாம்களை நடத்துகிறார்கள்.
ஜோ.
சிங்கை வானொலி தாமே ரத்த தான
முகாங்களை நடத்துவது நல்ல விடயம்.
விடயத்தினை அறியதந்ததுக்கு நன்றி.
Post a Comment