Friday, July 15, 2005
லண்டன் மக்களுக்கு தைரியம் சொல்லும் ஒரு தளம்!
இலண்டனில் நடந்த குண்டுவெடிப்புகள் தொடர்பாக எல்லோரும் அறிந்திருப்பீர்கள்.அமெரிக்காவின் கூட்டாளியான பிரிட்டனை பழிவாங்கவும் உலகளாவிய ரீதியில் அமெரிக்காவுக்கும் அமெரிக்காவின் நண்பர்களுக்கும் ஒரு எச்சரிக்கை தரவுமே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.60 பேர் அளவில்
கொல்லப்பட்டும் நூற்றுக்கணக்கில் அப்பாவி மக்கள் காயப்பட்டதும் நடந்தது.
தமிழர்கள் என்றவகையில்
தமிழ் யுவதி ஒருவர் இதில் இறந்ததும் இன்னுமொரு தமிழ் இளைஞன் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் நடத்தப்பட்ட தாக்குதலின் விளைவாக அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் ஏற்பட்ட பயப்பீதியினைப் போலவே இப்பொதும் லண்டன் மக்களிடையும் மற்றும் பல நாட்டு மக்களிடமும் ஏற்பட்டுள்ளது.பயபீதி காரணமாக பாதாள ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும் செய்திகள் சொல்கின்றன.
இப்படி இருக்கும் நிலையில் "நாங்கள் பயப்படவில்லை" என்னும் பெயரில் ஒரு இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.இத்தளம் பாதிக்கப்பட்ட லண்டன் வாழ் மக்களுக்கு தைரியம் சொல்லுகிறது. உலகெங்கும், பல நாடுகளில் இருந்து பலர் தமது புகைப்படங்களுடன் தைரியமூட்டும் வார்த்தைகளையும் இணைத்து அனுப்பியுள்ளனர்.
நாளுக்கு நாள் பல நாடுகளில் இருந்து பலர் இணந்து வருகின்றனர்.இதுவரையில் 5 இலட்சத்துக்கு மேற்பட்டோர் இத்தளத்தினை பார்வையிட்டுள்ளனர்.மக்களின் உணர்வுகளை பிரத்திபலிக்கும் இத்தளம் we're not afraid எனும் வாசகங்கள் பொறிக்கப்பட்ட ரீசேர்ட்,பேக் போன்றவற்றை விற்பதுடன் விற்றுவரும் பணத்தில் ஒரு பகுதியினை லண்டன் செஞ்சிலுவை சங்கத்தின் குண்டுவெடிப்பு நிதியத்துக்கு வழங்குவதாகவும் தெரிவிக்கிறது.
http://www.werenotafraid.com/
லண்டன் வாழ் மக்களுக்கு நீங்கள் கூட இதன் மூலம் தைரியம் சொல்லமுடியும் உங்கள் சொந்த அல்லது நீங்கள் விருப்பும் படத்துடன் மற்றும் நீங்கள் விரும்பும் வாசகங்களுடன்.(காப்புரிமை தொடர்பாகவும்ஒரு கண்ணோட்டம் இடவும்.)ஆனால் சமய ரீதியான மற்றும் அரசியல் ரீதியானவற்றை அனுப்புவதை தவிர்க்குமாறும் தள நிர்வாகிகள் கேட்டுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment