இந்திய வம்சாவளி தமிழர்களின் வெறுப்பை சம்பாதித்திருக்கும் இந்தியத் தூதரகத்தின் முன் மறியற்போராட்டம் - ரி.சென்னன்.
இலங்கையின் இந்திய தூதுவராலயத்தின் முன் பாரிய மறியற் போராட்டம் ஒன்று விரைவில் நடத்தப்படும் என்று இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி தலைவர் ரி.சென்னன் தெரிவித்துள்ளார்.
இலங்கைளிலுள்ள ஓட்டு மொத்த இந்திய வம்சாவளி மக்களின் தேவைகள் மற்றும் விருப்புகள் ஆகியவற்றினை கருத்திற் கொண்டு செயற்படாத இலங்கைக்கான இந்திய தூதரகம் மீது மக்கள் வெறுப்புக் கொண்டுள்ளனர்.
இது சம்பந்தமாக இந்திய வம்சாவளி மக்களின் பலத்த எதிர்ப்பை வெளிப்படுத்து முகமாக இலங்கையின் இந்திய தூதுவராலயத்தின் முன் பாரிய மறியற் போராட்டம் ஒன்று விரைவில் நடத்தப்படும் என்று இலங்கை தொழிலாளர் ஜக்கிய முன்னணி தலைவர் ரி.சென்னன் முன்னணியின் பணிமனையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்.
இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் விடயத்தில் இந்திய தூதரகம் அக்கறை காட்டுவதாக தெரியவில்லை. இதனால் இந்திய தூதராலயம் மீதும், இந்திய அரசாங்கத்தின் மீதும் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். அம் மக்கள் இன்று யாருமற்ற அநாதைகளாக இருந்து வருகின்றனர். அம் மக்களுக்கு குரல் கொடுக்க எவருமில்லை.
இந்திய வம்சாவளி மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்பு இ.தொ.க மட்டுமல்ல. மேலும் பல் வேறு அமைப்புகள் மலையகத்தில் உள்ளதென்பதை இந்தியத் தூதுவர் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்திய தூதுவர் இ.தொ.கவை தவிர்ந்த எனைய இந்திய வம்சாவளி அமைப்புகளை புறக்கணித்து வருகின்றார். இப் புறக்கணிப்பு நீண்ட காலமாகவே இடம் பெற்று வருகின்றது. என்று அவர் தெரிவித்துள்ளார்.
சங்கதி.
No comments:
Post a Comment