இந்த செய்தியை படிக்கேக்க எனக்கு சின்ன வயதிலை படிச்ச "சீச்சீ இந்தப்
பழம் புளிக்கும்" எண்ட நரியின் கதைதான் ஞாபகம் வருது பாருங்கோ.
இந்தப்பழம் நரிக்கு புளிக்கதொடங்க நரி இப்ப புது பழத்துக்கு ஆசைப்படுது
எண்டெல்லோ செய்தி வருது.சரி பாப்பம் அந்தப் பழம் நரிக்கு இனிக்குமோ
புளிக்குமோ எண்டு.
செய்தி இதுதான் நீங்களும் படிச்சு பாருங்கோ.
இந்திய கூறுவதற்காக ஒற்றையாட்சிக்கொள்கையினை விட்டுக்கொடுக்க முடியாது. அவ்வாறு விட்டுக்கொடுக்க ஹெல உறுமய முட்டாள்களின் கட்சியல்ல என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
இந்தியா கூறுவது போன்று நாம் நடப்பதற்கு இலங்கை, இந்தியாவின் ஒரு மாநிலம் அல்ல என்பதனையும், இலங்கை தொடர்பான அரசியல் முடிவுகளை இலங்கை அரசே தீர்மானிக்க வேண்டும் என்பதையும் இந்தியா உணர்ந்து கொள்ளவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒற்றை ஆட்சி முறையிலேயே இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்ற தனது கொள்கையில் இருந்து அரச தலைவர் மகிந்த ராஜபக்ஸ விலகுவாரே அனால் மறுகணமே அரசாங்கத்தில் இருந்து விலகி விடுவோம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
No comments:
Post a Comment