(வசனம் தேவையா இதுக்கு)
ஆஸ்பத்திரியில் இருக்கும் மனைவி கணவனிடம்:,
மனைவி: நான் செத்துப் போனா நீங்க என்ன செய்வீங்க?
கணவன்: நானும் செத்துப் போயிடுவேன்.
மனைவி: என் மேல உங்களுக்கு அவ்வளவு அன்பா?
கணவன்: அதெல்லாம் தெரியாது. ஆனால் பெரிய பெரிய சந்தோஷங்களை தாங்கிக்கிற சக்தி என்னுடைய இதயத்துக்கு இல்லைன்னு மட்டும் தெரியும்!
மனைவியை இழந்த கணவனிடம் நண்பன்,
நண்பன் : துக்கத்தை உனக்குள்ளேயே அடக்கி வைச்சுக்காதே. மனசு விட்டு அழுதிடு
.
கணவன்: நானும் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்துட்டேன், அழுகையே வர மாட்டேங்குதுடா.
நண்பன்: கவலைப்படாதே! உன்னுடைய மனைவி திரும்பவும் உயிருடன் வந்துட்டதா நினைச்சுக்கோ, அழுகை தன்னாலே வந்துடும்.
டீச்சர்:-உன்கிட்ட இருக்கிற திறமையை பற்றி சொல்லு
மாணவன் :-நான் பின்னாடி நடப்பேன்
டீச்சர் :-உண்மையாகவா எவ்வளவு தூரம்?
மாணவன் :-உங்க பொண்ணு எவ்வளவு தூரம் நடக்கிறாவோ அவ்வளவு தூரம்வரை!!
கணவன் :- டார்லிங் உன்னுடைய பிறந்தநாளுக்கு நெக்லஸ் வாங்கி வந்திருக்கேன் பாரு
மனைவி:-ஒரு கார் வாங்கி தந்திருக்கலாமே ?
கணவன் :-கார் கவரிங்க்கிலே வராது டார்லிங்
மனைவி :-??????????
மனைவி:- என்னங்க என்னை முதன்முதலா பார்த்தப்ப போட்டிருந்த கிரின் கலர் சேர்ட் எங்கங்க காணோம் போடிறதில்லையா? ?
கணவன்:- ராசியில்லைன்னு அப்பவே தூக்கி ஏறிஞ்சிட்டன் மீனு
சார் நீங்க எந்த கடவுளை கும்புடுவிங்க ?
கல்யாணத்துக்கு முன்னாடியா பின்னாடியா ?
கல்யாணத்துக்கு முன்னாடி சொல்லுங்களேன்
கல்யாணத்துக்கு முன்னாடி முருகன்தான் ரொம்ப பிடிக்கும் .
அப்போ பின்னாடி \
அதையேன் கேக்கிறிங்க கல்யாணத்துக்கு அப்புறம் நான் வேண்டாத தெய்வமே இல்லை
திடீரென ஏற்படும் பூகம்ப்த்தினால் ஒருபெண் கிழே விழுந்து விடுகிறாள் பின்பு வீட்டுக்கு வரும் கணவனிடம்
மனைவி:-எங்க திடீரென பூகம்பம் வந்து நான் கிழே விழுந்திட்டன்
கணவன்;-நல்லா யோசிச்சு பாரு ,பூகம்பம் வந்து நீ விழுந்தியா இல்ல, நீ விழுந்த பிறகு பூகம்பம் வந்துச்சா ?
செல்பேசி பேசி வாடிக்கையாளர் சேவைக்கு போன் போட்ட வாடிக்கையாளர்
மறுமுனை பெண் : என்ன சார் வேண்டும உங்களுக்கு ?
வாடிக்கையாளர் :-இந்தமாதம் என்னோட மொபைல் பில் எவ்வளவுன்னு
பெண் :-உங்க போன்ல இருந்து 611இந்த நம்பருக்கு கால் பண்ணினிங்கன்னா உங்கட கரண்ட் பில் எவ்வளவுன்னு சொல்லுவாங்க .
வாடிகையாளர் :-ஹாலோ உங்ககிட்ட கரண்ட் பில்லா கேட்டேன் என்னோட மொபைல் பில்தானே கேட்டேன் .எங்க வீட்டு கரண்ட் பில்லை சொல்ல நீங்க யார் ?
பெண் ;-??????????
ஒருவர்:- நேத்து ஆபீஸிலிருந்து வீட்டுக்குபோகும்போது பக்கத்து வீட்டுக்கு போய்ட்டேன்
மற்றவர் ;- அப்புறம்
ஒருவர்:- களைப்பா வ்ந்திருப்பிங்க காபியோட வாரேனுன்னு ஒரு குரல் கேட்கவும்இது நம்ம வீடு இல்லே ஏன்னு புரிஞ்சுகிட்டேன்
டாக்டர்;- ஆபரேசன் முடிஞ்சு நிங்க நடந்தே வீட்டுக்கு போகலாம்
நோயாளி :- ஆட்டோக்கு கூட காசு இருக்காதா டாக்டர்
டாக்டர் :-???????
6 comments:
அனைத்து ஜோக்கும் அருமை.
இரசித்தப் படித்துச் சிரித்தேன்.
ஹா..ஹா... எதையும் தாங்கும் இதயம் முதல் ஆட்டோ காசு வரை கலக்கல்...
நன்றிகள்
அருணா செல்வம்
மற்றும் திண்டுக்கல் தனபாலன்
கரிகாலன்
கார் கவரிங்க்கிலே வராது டார்லிங்\\ கார் டிங்கரிங்ல வருமே!!
அருமையான நகைச்சுவைகள். நன்றி.
அருமை ..அருமை.. ரசித்தேன். நன்றி..
Post a Comment