அண்மையில் நான் படித்த ஒரு ஜென் கதை /இதில் இருக்கும் நீதி உனக்கு மரியாதை மற்றவர்கள் தர வேண்டும் என்றால் நீ மற்றவர்களுக்கு மரியாதை தர வேண்டும்.நீ நேசிக்கப்பட வேண்டும் என்றால் நீ மற்றவர்களை நேசிக்க வேண்டும்.
மனைவி உன்னை நேசிக்கவேண்டும் என்றால் நீ மனைவியை நேசிக்க வேண்டும் .அதாவது நாம் எதனை மற்றவர்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோமோ அதனை நாம் மற்றவர்களுக்கு கொடுத்தால் அது எமக்கு தானே கிடைக்கும் .இது தொடர்பான ஒரு கதை எனக்கு நினைவுக்கு வருகிறது,ஜென் கதை என்றுவிட்டு கதை சொல்கிறாரே கரிகாலன் என்கிறவர்கள் கொஞ்சம் பொறுமை கொள்ளவும் .
ஒரு ஊரில் ஒரு பெரிய மனிதர் இருந்தாராம் .ஊரில் என்ன நல்லது கெட்டது நடந்தாலும் வீடுகளுக்கு அவர் போகமாட்டாராம் .அவரின் சார்பாக அவரின் கைத்தடியினை தான் அனுப்பிவருவாராம்.அதற்குதான் எல்லோரும், மரியாதை தருவார்களாம் ஒரு நாள் பெரிய மனிதர் இறந்து விட்டார் ,நிறைய பேர் வருவார்கள் என்று பார்த்தால் நிறைய கைத்தடிகள் தான் வந்தனவாம் அஞ்சலி செலுத்த.
சரி இனி கதைக்கு போவோமா?
ஒரு ஜென் துறவி அவ்ரகுடு சீடர்களுக்கு அன்றைய போதனையில் அவரவரின் செயல்களுக்கான பிரதிபலனை பற்றி விபரித்து கொண்டிருகையில் அதனை ஒரு கதையின் மூலமாக விளக்க எண்ணி ஒரு கதை சொல்ல ஆரம்பித்தார் .
ஒரு விவசாயி ஒரு பவுண்டு வெண்னையினை ஒரு பேக்கரிக்காரருக்கு விற்று வந்தார் .
ஒரு நாள் அந்த பேக்கரிகாரர் விவசாயி கொடுக்கும் வெண்ணை ஒரு பவுண்டு சரியாக இருக்கிறதா என எடை போட்டு பார்த்தார் .அப்போது எடை குறைவாக் இருப்பதை கண்ட பேக்கரிகாரர் விவசாயி மீது கடும் கோபம கொண்டார் .
நீதிமன்றத்துக்கு இப்பிரச்சனையை கொண்டு சென்றார் பேக்கரிகாரர் .அப்போது நீதிபதி ,விவசாயியை பார்த்து வெண்ணையை அளந்து பார்க்க என்ன முறையினை அல்லது கருவியினை உபயோகிக்கிறாய் என கேட்டார் .அதற்கு அந்த விவசாயி “நியாயம் “என்று பதில் உரைத்தான்.பின்பு நீதிபதியிடம் நான் பழங்காலத்தவன் என்னிடம் சரியான எடை அளக்கும் கருவி இல்லை ,ஆகவே நான் ஒரு அளவு கோல் கொண்டு அளவு செய்வேன் என்றான் .
உடனே நீதிபதி விவசாயினை பார்த்த்து வேறு எப்படி வெண்னையினை அளவு செய்தாய் என்றார் .
அதற்கு அந்த விவசாயி “ஜயா பேக்கரிகாரர் என்னிடமிருந்து நீண்ட காலமாக வெ ண்னையினை வாங்கி வருவது வழக்கம் .நானும் அவரிடம் இருந்து ஒரு பவுண்டு ரொட்டியை வாங்கி வருவேன் ஒவ்வொரு நாளும் அந்த ரோட்டியை வாங்கி வந்ததும் அதே அளவுக்கு வெண்னையினை வெட்டி பேக்கரிக்காரருக்கு கொடுத்து வந்தேன் .ஆகவே குறை குற்றம் ஏதும் இருந்தால் அது என் குற்றம் இல்லை .அது பேக்கரிகாரரின் தவறுதான் .இது முற்றிலும் பேக்கரிக்காரை சார்ந்தது ஏன்று சொன்னார்;என்று சொல்லி கதையினை முடித்தார் துறவி .
பின்பு சீடர்களுக்கு “நாம் மற்றவர்களுக்கு என்ன செய்கிறோமோ அதே தான் எமக்கும் விதிக்கப்படும் என் சொல்லி அறிவுரையினை முடித்துக்கொண்டார்.
5 comments:
Why to go to Jen for this simple truth of life?
Further, it s already famously said in the Bible also.
அருமையான கதை
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
tha.ma 1
படித்தது தான்.
மீண்டும்
படித்ததில் மகிழ்ச்சி தான்.
வணக்கம் கரிகாலன்,
உங்கள் வலைப்பூ நன்றாக இருக்கின்றது தொடருங்கள்.
நேசமுடன் கோமகன்
Post a Comment