இந்த கொரோனா காலங்களில் .
எப்படி பொழுதை கழிப்பது என்பது ஆண்களாகிய எங்களுக்கு கஸ்டம் தான்.
குதிரை மாதிரி இரண்டு பக்கமும் பார்வையை திருப்பாது ஒரே நேர்கோட்டில் பார்வையை ஒட்டி ,வாழ்க்கைதேரை நகர்த்திக் கொண்டிருந்த எங்களுக்கு இந்த "ஸ்தம்பிதம்" ஒரு பெரும் வலிதான்.
இருந்தும் இந்த வலியும் கடந்து போகும்.போகவேண்டும். அதுதான் வாழ்க்கை. அதற்கு மத்தியில் இந்த பொழுதுகளை எப்படி நகர்த்தலாம் என்பதுக்கு சில ஆலோசனைகள்.
வீட்டில் இருக்கும் பொழுதுகளில் தேவை இல்லாமல் வாயை திறக்காதீர்கள்,சாப்பிடுவதற்கு மட்டுமே வாயை திறவுங்கள்,
மனைவி கோபத்தில் கத்துகிறாரா?
கண்டு கொள்ளளாதீர்கள். இன்றைய நாட்களில் மன அழுத்தம் எல்லோருக்கும் உண்டு. இரண்டு கைகள் தட்டினால் தான் சத்தம் வரும்.
ஒரு கை தட்டி ஒன்றும் ஆகப்போவதில்லை. எனவே நாவடக்கம் முக்கியம் இன் நாட்களில்.
பிடித்த புத்தகங்களை படிக்கலாம்,நிறைய புத்தகங்கள் இணையத்தில் கிடைக்கின்றன . இல்லை சினிமா பார்க்கலாம். அல்லது நல்ல இசையை ரசித்து கேளுங்கள் மனம் அமைதி அடையும்.
வீட்டு தோட்டத்தில் நேரம் செலவிடலாம். செடி,கொடி, வைத்து நீரூற்றுங்கள். மனம் அமைதி அடையும்.
உங்கள் வேலைக்கு தேவையான சில படிப்புகளை ஒன்லைன் மூலம் படிக்கலாம். இந்த இடைவெளியை பயன்படுத்தி வேலையில் ஒரு முன்னேற்றம் ஏற்படுத்தலாம்.
இன்னுமொரு நேரம் போவதும், மன அமைதியையும் கொண்டுவருவதுமான ஒரு விடையம்
சமைப்பது ,ஒரு ரெசிபியை யூடியிப்பில் பாருங்கள் , பொருட்களை தயார் படுத்துங்கள் , பிள்ளைகளையும் துணைக்கு அழைத்து கொள்ளுங்கள்,
சமைத்து அசத்துங்கள். உங்கள் மனைவியின் அன்பு உங்களுக்கு இரட்டிப்பாக கிடைக்கும்.😁
வீட்டில் நிறைய கடிதங்கள் வந்து இருக்கும்.அவற்றை எடுத்து தேவையானவற்றை வைத்து க் கொண்டு ,தேவை இல்லாதவைகளை கிழித்து ஏறியலாம்.
நேரமும் போகும் வீடும் சுத்தமாகும்.
உங்கள் போனில் அல்லது மனைவியின் போனில் எடுத்த படங்கள் பல்லாயிர கணக்கில் இருக்கும். தேவையானவற்றை வைத்து கொண்டு
தேவை இல்லாதவைகளை அழித்து விடுங்கள் .போனும் சுத்தமாகும் நேரமும் போகும்.
இவற்றை முயற்சி செய்து பாருங்கள் .பொழுது போகும்
தொடருவேன்

3 comments:
பயனுள்ள தகவல்கள்தான்
ஆலோசனைகள் அருமை நண்பரே...
- கில்லர்ஜி
thank you for your comments madurai thamilan and killerji
Post a Comment