Tuesday, February 18, 2025

ரொரண்டோ -சற்று முன்னர் !

 ருடம் பிறந்து ஒன்றரை மாதங்கள் ஆகிவிட்டது. எப்படி காலங்கள் நேரங்கள் நாட்கள் விரைவாக பறக்கின்றன என்பதை நினைத்தால் வியப்புதான் வருகின்றது. கடந்த சில தினங்களாக இங்கு ரொரன்டோவில் காலநிலை மிகவும் கடுமையாக இருக்கின்றது. அடுத்தடுத்து இரண்டு பனிப்புயல்கள் ரொரண்ரோவை தாக்கி நிறைய பனியை கொட்டி விட்டு சென்றிருக்கிறது , இன்று நண்பரோடு கதைத்தபோது நண்பர் சொன்னார் இப்பொழுதுதான் ரொறொண்டோவை பழைய மாதிரி பார்க்க முடிகிறது

 அவர் சொன்னதன் அர்த்தம் என்னவென்றால் ஒரு 8,9 வருடங்களுக்கு முன்னர் எல்லாம் இப்படித்தான் பனி கொட்டும். பூமி  வெப்பம் அடைவதன் காரணமாக இப்பொழுதெல்லாம் கொட்டும் பனியின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. இன்றைய தினம் மதியத்துக்கு பின்னர் அமெரிக்கன் டெல்டா விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று மினியாபொலிஸ் நகரிலிருந்து ரொறொன்றோ பியர்சன் விமான நிலையத்த்தில் தரையிறங்க முற்பட்ட  நிலையில் கடும் காற்று , பனி காரணமாக தலைகுப்புற கவிண்டதில் சிலர் காயம். எழுபத்துநாலு பயணிகள் நாலு விமான ஊழியர்கள் விமானத்தில் இருந்த நிலையில் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். விசாரணை நடக்கிறது விபரங்கள் பின்னர் தான் தெரியவரும். 

No comments: