Friday, November 20, 2015

எங்கெல்லாம் இஸ்லாமிய புர்காவுக்குத் தடை?

லண்டனில் இருந்து வெளிவரும் பி.பி.சி இணையதளத்தின் தமிழ் பதிப்பு இன்றைய தினம் வெளியிட்டிருபதே   இக் கட்டுரை ஆகும்  உங்கள் வாசிப்புக்காக இங்கு தந்திருக்கிறேன் .பி.பி.சி தமிழுக்கு எனது நன்றிகள் உரித்தாகுக 
ஆப்ரிக்க நாடான செனகோல் , அங்கு ஜிஹாதி தாக்குதல்கள் நடக்கும் ஆபத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியில், பெண்கள் தங்கள் முழு உடல் மற்றும் முகத்தை மூடும் வண்ணம் அணியும் 'புர்கா'வை தடை செய்வது குறித்துப் பரிசீலித்துவருகிறது.

Image copyrightGetty

இந்த முழு முகத்தை மூடும் இஸ்லாமிய முகத்திரை, உடல் முழுவதையும் தளர்ச்சியாக மூடி , பார்ப்பதற்கு மட்டும் முகத்தில் ஒரு வலை வேலைப்பாடு செய்த திரையுடன் இருக்கும். பொது இடங்களில் முஸ்லீம் பெண்கள் இதை அணிகிறார்கள்.
ஆனல், கடந்த காலங்களில் இது இஸ்லாமியத் தீவிரவாதிகள் வெடி பொருட்களை தாங்கிச்செல்ல உதவுவதால், இது ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று சிலர் வாதிடுகிறார்கள்.
நைஜீரியாவிலிருந்து செயல்படும் தீவிரவாத குழுவான, பொக்கோ ஹராமிடமிருந்து அச்சுறுத்தல்கள் வரும் நிலையில், இந்த புர்கா பயன்பாடு குறித்து மேலும் கடுமையான விதிகள் கொண்டுவரப்படவேண்டும் என்று செனகோலின் உள்துறை அமைச்சர் அப்துலாயே தாவுதா முயற்சி செய்துவருகிறார்.
இந்த ஆலோசனகள் இஸ்லாத்துக்கு விரோதமானதாகப் பார்க்கப்படக்கூடாது என்று செனகோல் அரசு கூறுகிறது.

Image copyrightAFP
Image captionபுர்காவுக்கு தடை குறித்து செனகோல் பரிசீலனை

செனகோல் ஒரு முஸ்லீம் பெரும்பான்மை நாடு. ஆனால் , தனிமனித சுதந்திரம் மற்றும் மதச் சுதந்திரம் ஆகியவைகளின் அடிப்படையில் இந்த உடையை அணிய பெண்களுக்கு இருக்கும் உரிமையை முன்வைக்கும் பலர் இந்த விவாதங்களால் சீற்றமடைந்திருக்கிறார்கள்.
ஆனால் செனகோல் மட்டுமே இந்த உடையை தேசப்பாதுகாப்பு என்ற காரணத்தினால் தடை செய்ய முயலவில்லை. வேறு நான்கு ஆப்ரிக்க நாடுகளும் இதைப் போல நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றன.
பொக்கோ ஹராமின் நிழல்
மத்திய ஆப்ரிக்காவில் உள்ள மூன்று நாடுகள் சமீபத்தில் புர்காக்கள் அணிவதை நாடெங்கிலும் தடை செய்திருக்கின்றன. சாட், கேபோன் மற்றும் காங்கோ ப்ரேஸ்ஸவில் ஆகிய நாடுகள்தான் இந்த உடையை நாடளாவிய அளவில் தடை செய்த நாடுகள். கேமரூன் நாடு அதன் வட கோடி பகுதியில் இந்த உடைக்கு கடந்த ஜூலை மாதம் தடை விதித்தது.
ஜூன் மாதம் சாட் நாட்டின் மிகப்பெரிய நகரான , என்'ஜமெனாவில் நடந்த தற்கொலை குண்டு தாக்குதல் சம்பவம் ஒன்றில் 33 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, சாட் அரசு இந்த உடைக்குத் தடை விதித்தது.

Image copyrightAFP
Image captionகேமரூனின் வட பகுதியில் புர்காவுக்குத் தடை

இதையடுத்து, காங்கோ-ப்ரேஸ்ஸவில் மற்றும் கேபோன் ஆகிய நாடுகளும் பின்னர் கேமரூனில் நடந்த ஒரு தாக்குதலை அடுத்து இதே போன்ற நடவடிக்கைகளை எடுத்தன. கேமரூன் சம்பவத்தில், இரண்டு புர்கா அணிந்த பெண் தற்கொலை குண்டுதாரிகள் , நைஜீரிய எல்லையில் , ஃபோட்டோகொல் என்ற இடத்தில் தங்களை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
இப்போது செனகோல் அந்த நாடுகளைப் பின்பற்றி அதே போன்ற ஒரு நடவடிக்கையை எடுக்கலாமா,வேண்டாமா என்று யோசித்து வருகிறது.
செனகோலில் இது போன்ற ஒரு தாக்குதல் நடைபெற்றதில்லை. ஆனால் இரண்டு வாரங்களுக்கு முன்னர், நாட்டில் முதன் முறையாக, பயங்கரவாதம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டதை அடுத்து, அதிகாரிகள் இது குறித்து எச்சரித்தனர்.
ஆனால் ஆப்ரிக்காவில் மட்டும் இந்த புர்கா தடை விதிக்கப்பட்டிருக்கவில்லை.
நவநாகரீக பிரான்ஸ் விதித்த தடை
கடந்த 2010ம் ஆண்டில் ஐரோப்பாவில் முதன்முறையாக பிரான்ஸ் பொது இடங்களில் புர்காவுக்குத் தடை விதித்தபோது அதற்கெதிராக பெரும் சீற்றம் எழுந்தது.

Image copyrightAFP
Image captionஇஸ்லாமிய முக்காடு , முகத்திரையின் பல்வேறு வடிவங்கள்

பிரெஞ்சு செனட், முகத்தை மட்டுமோ அல்லது முழு உடலையுமோ மூடும் புர்க்காக்களை மட்டுமல்லாமல், ஒரு தனி நபரின் அடையாளத்தை மறைக்கும், முகமூடிகள், பலக்ளாவாக்கள் , தலைக்கவசங்கள் அல்லது தலைமறைப்புகள் ஆகியவற்றையும் தடை செய்யும் ஒரு சட்டத்துக்கு ஏறக்குறைய ஏகமனதான ஆதரவுடன் வாக்களித்தது.
மேற்கு ஐரோப்பாவிலேயே மிக அதிகமாக, பிரான்சில்தான் முஸ்லீம்கள் வசிக்கிறார்கள். அங்கு முஸ்லிம்களின் மக்கள் தொகை சுமார் 50 லட்சம். அவர்களில் சுமார் 2,000 பெண்கள்தான் புர்காக்களை அணிகிறார்கள் என்று கணிக்கப்படுகிறது.
அப்போதிருந்த பிரெஞ்சு அதிபர் நிக்கொலாஸ் சார்க்கோஸி, முகத்திரை பிரெஞ்சு மண்ணில் இருக்கவேண்டிய அவசியமில்லை என்று கூறினார்.
அது "ஒற்றுமை மற்றும் அதனுடன் இணைந்த மதச்சார்பின்மை" ஆகியவைகளுக்கான பிரெஞ்சு தேசிய முன்மாதிரியுடன் ஒத்துப்போகாதது என்று அவர் கருதினார்.
இந்த விழுமியங்கள் 2004ல் கொண்டுவரப்பட்ட சட்டம் ஒன்றின் மூலம் உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த சட்டத்தின் மூலம் எந்த ஒரு மதச் சார்பையும் வெளிப்படுத்தும் குறியீடுகளையோ அல்லது உடைகளையோ அணிவது தடை செய்யப்பட்டிருக்கிறது.
பிரான்சின் புர்கா தடை சட்டத்தின் மூலம் முகத்திரை அணியும் பெண்களுக்கு அபராதம் விதிப்பதை அறிமுகப்படுத்தியிருந்தது. புர்கா அணியும் பெண்களுக்கு 32,000 அமெரிக்க டாலர்கள் வரை அபராதம் மற்றும் ஓராண்டு சிறை தண்டனை ஆகியவை விதிக்கப்படும்.

Image copyrightAFP
Image captionபிரான்ஸின் போலிஸ் நீதிமன்றத்தில் முகத்திரை தடையை மீறி அணிந்ததற்காக இரு பெண்கள் அபராதம் விதிக்கப்படும் நிலையில்

இந்தத் தடை முஸ்லீம் பெண்களை இலக்கு வைப்பதாக விமர்சிக்கப்பட்டு , 2014ல் இதற்கெதிராக ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ஆனால் அந்த நீதிமன்றம் இந்த சட்டத்தை சட்டபூர்வமானதென்று கூறிவிட்டது.

Image copyrightGETTY
Image captionபெல்ஜியத்தில் புர்கா தடைக்கு எதிராக முஸ்லீம் பெண்கள் ஆர்ப்பாட்டம்

பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் பிற நாடுகள்
கடந்த 2012ல் பெல்ஜியம் இதைத் தொடர்ந்து பொது வெளியில் தனிப்பட்ட அடையாளங்களை மறைக்கும் எந்த ஒரு ஆடையையும் அணிய, பாதுகாப்பு காரணங்களைக் காட்டி, தடை விதித்தது.
2007ம் ஆண்டிலேயே முழுத்திரைக்கு தடை விதித்திருந்த நெதர்லாந்து பின்னர் இத்தடையை , பொதுப் போக்குவரத்து, பல்கலைக்கழகங்கள் மற்றும் சில குறிப்பிட்ட தொழில்கள் என்று வேறு பல துறைகளுக்கு விஸ்தரித்தது.
உதாரணமாக நீதிமன்ற ஊழியர்கள் "அரச பக்கசார்பின்மை " என்ற அடிப்படையில் இது போன்ற ஆடைகளை அணியத் தடைவிதிக்கப்பட்டார்கள். மற்றவர்கள் அவர்களது அன்றாட வேலையில் , வருபவர்களுடன் முகத்துக்கு முகம் உரையாட வேண்டிய தேவை இருந்தால், இந்த மாதிரியான ஆடைகளை தவிர்க்குமாறு வேண்டிக்கொள்ளப்பட்டார்கள்.
மேற்கு ஐரோப்பிய நாடுகளில் மூன்றில்தான் நாடளாவிய புர்கா தடை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. பிற நாடுகள் பிராந்திய அளவில் தடைகளை விதித்திருக்கின்றன.
ஸ்பெயினின் பார்சிலோனா நகர் 2010லிருந்து சந்தைகளிலும், பொதுக் கட்டிடங்களிலும், முழு முகத்திரைகள் அணிந்து வருவதைத் தடை செய்திருக்கிறது. டென்மார்க்கில் நீதிமன்ற அறைகளை இந்த ஆடைகள் அணிந்து வரத் தடை இருக்கிறது.
ஜெர்மனியின் ஹெஸ் மாகாணம் முழுமையிலும், இத்தாலியின் பல நகரங்களிலும் தடைகள் இருக்கின்றன. இத்தாலியத் தடைகள் 1970களில் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ளன.

Image copyrightGETTY
Image captionஇத்தாலியின் வரெலோ நகரில் முகத்திரை மற்றும் உடல் முழுவதையும் மறைக்கு நீச்சல் உடைக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது

சில நாடுகள் வேறு திசையில்
ஆனால் அதே வேளை, சில நாடுகள் தடை என்ற நிலைப்பாட்டிலிருந்து விலகிச் சென்றுள்ளன. பல ஆண்டுகளாக இருந்த தடைகள் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளன.
துருக்கி பல தசாப்தங்களாக அமலில் இருந்த முகத்திரைத் தடையை 2013ம் ஆண்டில் விலக்கிக்கொண்டது. கல்வி மற்றும் பொதுத்துறைகளில் மத விதிமுறைகளைப் பின்பற்றும் முஸ்லிம் பெண்கள் வேலைக்குச் செல்வதற்கு இந்த முகத்திரைத் தடை தடையாக இருக்கிறது என்ற கவலைகள் எழுந்த நிலையில், ஆளும் ஏ.கே கட்சி இந்த முடிவை எடுத்தது.
ஆனால் துருக்கியில் அதிகார மையமாக இருக்கும் மதச்சார்பற்ற குழுக்கள் இது குறித்து கவலைகளைத் தெரிவித்தன. இது பாரம்பரியமாக மதச்சார்பற்ற நாடாக இருந்து வந்திருக்கும் துருக்கியை இஸ்லாம் ஆள்வதற்கு வழிவகுக்கும் முதல் நடவடிக்கை என்று அவர்கள் கூறினர்.
ஆனால் அவர்களின் விமர்சனங்கள் புறந்தள்ளப்பட்டு , விதிமுறைகள் தளர்த்தப்பட்டன. தலையை மட்டும் மறைக்கும் துணி ( அல்லது ஹிஜாப்) போடுவது அனுமதிக்கப்பட்டது. ஆனால் முழு உடலையும் மறைக்கும் ஆடைகள் இன்னும் தடை செய்யப்பட்டுள்ளன.

Image copyrightGETTY

சிரியாவும் 2011லிருந்து ஆசிரியைகளை முகத்தை மறைக்கும் நிக்காப் என்ற திரை அணிய அனுமதித்திருக்கிறது. இதற்கு முன்பு, பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு ஆளாகிவிடுவார்களோ என்ற கவலை அதிகரித்து வந்த நிலையில் , உயர்கல்வி அமைச்சர் நாட்டின் பல்கலைக்கழகங்களில் இது போன்ற முகத்திரைகளுக்குத் தடை விதித்திருந்தார். அது இப்போது ரத்து செய்யப்பட்டது.
துனிசியாவும் 2011 ஜனவரியிலிருந்து தலையங்கி அணிவதற்கு இருந்த தடையை விலக்கிக்கொண்டது.
அதற்கு முன்னர் வரை, ஹிஜாப்புகள் அணிவதற்கு எதிராக வீதிகளிலேயே கடுமையான பிரசாரம் இருந்தது. ஹிஜாப் அணிந்த பெண்கள் போலிசாரால் தடுக்கப்பட்டு , தலையங்கிகளை அகற்றுமாறு உத்தரவிடப்பட்டனர். இது மாதிரி அங்கிகள் 'மதக்குழு'வாதத்தைக் காட்டுவதாக அரசால் கருதப்பட்டது.
b.b.c /tamil

Saturday, September 19, 2015

போலி அரிசியைத் தொடர்ந்து போலி முட்டை - சீனர்களின் கைவரிசை

பிளாஸ்டிக் அரிசியை தயாரித்து வந்த சீனர்கள் தற்போது போலியான கோழி முட்டைகளையும்  உற்பத்தி செய்யத் தொடங்கி விட்டனர்.
போலி முட்டை தயாரிக்க 7 வித இரசாயனங்களை பயன்படுத்துகின்றனர். அதில் கால்சியம் கார்பனேட், ஸ்டார்ச், ரெசின், ஜெலட்டின் போன்ற ரசாயனங்கள் அடங்கியுள்ளன.
போலி முட்டை தயாரிக்க உதவும் கால்சியம் கார்பனேட் ஒரு பாத்திரத்திலும், மஞ்சள் கருவுக்கு நிறம் சேர்க்க மஞ்சள் வண்ணக்கலவையும், மஞ்சள் கரு மற்றும் வெள்ளைப் பகுதி உருவாக்கும் மோல்டுகள் அருகருகே இருப்பதையும் படத்தில் காணலாம்.

               

ரசாயனங்களைக் கலந்து போலியாகத் தயாரிக்கப்பட்ட மஞ்சள் கரு மோல்டில் ஊற்றப்படுகிறது. மஞ்சள் கருவின் மேலே கால்சியம் கார்பனேட் மற்றும் சில ரசாயனங்கள் உதவியால் வெள்ளைக்கரு உருவாக்கப்படுகிறது.
சற்று நேரத்தில் மஞ்சள் கருவைச் சுற்றி வெள்ளைப்பகுதி தயார். பின்னர் இது ஒரு மணி நேரம் காய வைக்கப்படுகிறது. பாரபின் மெழுகில் தோய்த்தெடுக்கப்படும் போலி முட்டையின் மேல் செயற்கை ஓடு பொருத்தப்படுகிறது.

கவலைப்படாத வாடிக்கையாளர்கள்

இந்த போலி முட்டை ஓடு, நிஜமான  கோழி முட்டையின் ஓட்டைவிட எளிதாக உடையக் கூடியது. ஆனால் அதைப் பற்றிய கவலை சீன வாடிக்கையாளர்களுக்கு இல்லை.நிஜ முட்டைக்கும் போலி முட்டைக்கும் சுவையில் பெரிய வித்தியாசமில்லை என்று சொல்வதை விட போலி முட்டையின் சுவை அதிகமாக இருப்பதாக கூறுகிறார்கள்.
அரை அவியல் தயார் செய்யும்போது மஞ்சள் கரு கொஞ்சம்கூட சிதறாமல் பந்துபோல் முழுதாக நிமிர்ந்து நிற்கிறது. மேலும், வெள்ளைக்கரு பரவும்போது நுரையும் அதிகமாக எழுகிறது.

                    
                  

பாதிப்புக்கள் 

போலி முட்டையை உண்பதால் உடலில் மெது மெதுவாக விஷம் ஏறுகிறது. இதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் உணவுத்துறை  வல்லுனர்கள்  எச்சரிக்கை விடுக்கிறார்கள்.

உணவு கலப்படம் மற்றும் போலி உணவுகளால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சீனாவில் இறப்பவர்கள் எண்ணிக்கை சமீப காலத்தில் அதிகரித்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.இருந்தும்  சீனர்கள் எதையும் பற்றி கவலைப்படாமல்  இதை ருசித்து வருகின்றனர் .

நன்றி 


Monday, September 07, 2015

கொத்துரொட்டி -- 008

நீண்ட காலங்களுக்கு முன்னர் நான் பின்தொடர்ந்த ஒரு இணைய விவாத
தளத்தில் நடந்த சம்பவம் இது .அந்த தளத்தில் எந்த நாட்டு மாம்பழங்கள்
 சுவையானவை என்பது தொடர்பாக பெரும் விவாதம் தொடர்ந்து வந்தது. ஒரு
தமிழ்நாட்டுக்காரர் வந்து சேலம் மாம்பழத்தின் பெருமைகளை சொன்னார் .

உடனே இன்னொரு தமிழ்நாட்டுக்கரர் வந்து மல்கோவா மாம்பழம் தான் சிறந்தது என மறுத்துரைக்க  இடையே ஒரு யாழ்ப்பாணத்துக்காரர் வந்து  யாழ் கறுத்தக்கொழும்பானுக்கு நிகர் எதுவுமே இல்லை என்று சொல்ல இன்னொரு

இந்திய பெண்மணி  வந்து அல்போன்சா மாம்பழதுக்கு  நிகர் எதுவுமே இல்லை
 என்று ஒரே போடாக போடா இன்னொரு மெக்சிக்கன் நாட்டு பெண்  வந்து
எனது நாட்டு பழம்தான் சிறந்தது என்று சொல்ல ஒரு ஆபிரிக்கர் வந்து தமது

நாட்டுபழம் தான் சிறப்பானது என்று சொல்ல இப்படியே சில நாட்களுக்கு
விவாதம் களை கட்டியது

இப்படி விவாதம்  தொடர இடையே வந்தார்  ஒரு அமெரிக்கப் பெண்மணி
அவர்  அமெரிக்க மாம்பழம் தான் சிறந்து என்று சொல்லவில்லை .சுருக்கமாக அவர் சொன்னது வேறு .

நீங்கள் மாம்பழங்களை பரிசோதிப்பதற்காக இலங்கை இந்தியா ,மெக்சிக்கோ ,ஆபிரிக்கா எல்லாம் செல்ல தேவையே  இல்லை .உன் பிராவுக்குள் இருக்கும் மல் கோவாவை  எடுத்து லேசாக காட்டிப்பார் ,பாதிப்பேர் சும்மவே  சொக்கிப் போய்விடுவார்கள் அப்போது தெரியும் உண்மை உங்கள் எல்லோருக்கும் என்றார் குறும்பாக

உன்மைதானா  சொல்லுங்கள் நண்பர்களே .


மாம்பழம் சாப்பிடுவது  "அதுக்கு" மிகவும் நல்லது என்று ஆய்வுகள்

சொல்கின்றன . வாலிப வயோதிக அன்பர்கள் சாப்பிட்டு  பயன்பெறுக .நம்பள்கி  உங்கள் ஆலோசனை இந்த விடையத்தில் தேவைப்படுகிறது .


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$



நேதாஜியை பற்றிய ஒரு தகவல் அண்மையில் படிக்க கிடைத்து ,உண்மையில் காந்தியை விட நான் மிகவும் மதிக்கும் ஒரு தலைவர்  நேதாஜி . அவரைபற்றிய தகவலை பெருமையுடன் இங்கு பகிர்நதுள்ளேன் .

நேதாஜி அவர்கள் முதல் முறையாக ஹிட்லரை சந்திக்க சென்ற பொது ஹிட்லருடைய ஆட்கள் நேதாஜியை ஒரு அறையில் உக்கார வைத்தனர் . நேதாஜி அவர்கள் ஒரு புத்தகத்தை படிக்க ஆரம்பித்து விட்டார். ஹிட்லருடைய ஆட்கள் ஹிட்லருக்கு தெரிவிக்க சென்றனர்.

ஹிட்லர் போன்ற வேடமணிந்த பலர் வந்தபோதும் நேதாஜி கண்டுகொள்ளாமல் படிப்பதை தொடர்ந்தார். இதில் என்ன விஷயம் என்றால் பல சமயங்களில் ஹிட்லர் போன்ற வேடமணிந்தவர்களை கண்டு பல மனிதர்கள் தாங்கள் ஹிட்லரை சந்தித்தாக சொல்லியிருக்கிறார்கள்.

கடைசியில் ஹிட்லரே வந்து நேதாஜியின் தோளில் கை வைத்தவுடனே நேதாஜி அவர்கள் “ஹிட்லர்” என்றார். ஹிட்லருக்கு ஒரே வியப்பு.

ஹிட்லர் நேதாஜியிடம் ” எப்படி நீங்கள் என்னை கண்டுபிடித்தீர்கள் இதற்கு முன் நீங்கள் என்னை சந்தித்தது கிடையாது ” என்று கேட்டார்.

நேதாஜி அவர்கள் “இந்த உலகத்தில் சுபாஷ் சந்திர போசின் தோளில் கை வைக்க ஹிட்லரை தவிர வேறு யாருக்கும் தைரியம் கிடையாது” என்றார்…!


அபூர்வமான ஒரு புகைப்படம் .





$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$



இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் ஆலயத்தில் கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த நாகர்களின் கிணற்றையும், நாகக்கல்லையும் அடையாளம் கண்டிருப்பதாக யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் சி பத்மநாதன் தெரிவித்தார்.

வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் சிறியதொரு கிணறு காணப்படுகிறது. மூன்றடிக்கு மூன்றடி நீல அகலங்களுடன் சதுரவடிவிலான இந்த கிணறு சுமார் இருபது அடி ஆழம் கொண்டிருப்பதாகவும், இந்த கிணற்றின் உட்சுவர் கருங்கற்களினால் அமைக்கப்பட்டிருப்பதாகவும்

இந்த கிணற்றின் கருங்கற்களில் தமிழ் பிராமி எழுத்துக்களில் “மணி நாகன்” என்று எழுதப் பட்டிருப்பதாக தெரிவித்த பத்மநாதன், தமிழ் பிராமி எழுத்துருக்கள் கி மு இரண்டாம் நூற்றாண்டில் இருந்து கிபி இரண்டாம் நூற்றாண்டுவரையில் புழங்கியதால், இந்த கிணறும் அந்த காலகட்டத்தைச் சேர்ந்தது என்று தாம் கருதுவதாகவும் விளக்கினார்.

இலங்கையின் பூர்வீக குடியினரான நாகர்களின் கல்வெட்டுக்களில் காணப்படும் தமிழ் பிராமி எழுத்துருக்கள், நாகர்களும் தமிழரும் ஒன்றே என்கிற தமது கருதுகோளுக்கான மற்றும் ஒரு வலுவான ஆதாரமாக அமைந்திருப்பதாகவும் தெரிவித்தார் பத்மநாதன்.


வந்தாறு மூலையில் இருக்கும் இந்த கிணறு இரண்டாயிரம் ஆண்டு பழமையானது என்கிறார் பத்மநாதன்




இந்த கல்லும் இரண்டாயிரம் ஆண்டு பழமையானது என்று கருதப்படுகிறது



$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


நன்றாக படித்த ஒருவன் கிராமத்துக்கு  போனான்

அங்கே ஒரு செக்குமாடு மட்டும் தனியா செக்கு சுத்திக்கொண்டு இருந்தது.

அவனுக்கு ஒரே ஆச்சரியம். பக்கத்தில ஒரு குடிசைக்குள்ள ஒரு விவசாயி

உணவு அருந்திக் கொண்டு  இருந்தார்

விவசாயிடம் படித்தவன் கேட்கிறான்

படிச்சவன் : மாடு மட்டும் தனியா செக்கு சுத்திட்டு இருக்கே?

விவசாயி : அது பழகின மாடு தம்பி.., அதுவே சுத்திக்கும்..,

படிச்சவன் : நீங்க உள்ளே வந்த உடனே அது சுத்தறத நிறுத்திட்டா..? எப்படி கண்டுபிடிப்பீங்க..?
விவசாயி : அது கழுத்தில ஒரு சலங்கை இருக்கு தம்பி.., சுத்தறதை நிறுத்திட்டா அந்த சலங்கை சத்தம்வராது. அதை வெச்சி கண்டுபிடிச்சிடுவேன்.

படிச்சவன் : அது சுத்தறதை நிறுத்திட்டு., ஒரே இடத்துல நின்னு.., தலைய மட்டும் ஆட்டினா..! அப்ப எப்படி கண்டுபிடிப்பீங்க..?

விவசாயி : இதுக்குதான் தம்பி., நான் என் மாட்டை கல்லூரிக்கெல்லாம் படிக்க அனுப்பலை..!



$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

ரஜனியின் அடுத்த படம்  வரப்போவதாகவும்  இதுதான் அடுத்த படத்தின்
கெட்டப் என்று ஒரு புகைப்படத்தையும்  கண்டத்தின் விளைவு ,நான் கமலின்
ரசிகனுமல்ல ரஜனியின் ரசிகனும் அல்ல .தமிழ் படங்கள் பார்ப்பது மிகவும்

குறைவு . இது  நகைச் சுவைக்காக  மட்டும்.முக நூலில்  கண்டது உங்களுக்காக  தந்திருக்கிறேன் .







சரி சரி ரஜினி ரசிகர்களே  உணர்ச்சி வசப்படவேண்டாம்.இதனையும் பாருங்கள் .




 கொத்துரொட்டி  எட்டு உங்களை  மகிழ்வித்து இருக்கும் என நம்புகிறேன் மீண்டும் சந்திக்கிறேன் .உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது .



Tuesday, August 25, 2015

கொத்து ரொட்டி -007

ங்கு கனடாவில் கோடைகாலம் நிறைவுக்கு வந்து கொண்டிருக்கிறது .கலைநிகழ்சிகள் ,ஒன்று கூடல்கள்,களியாட்ட நிகழ்வுகள் போன்ற இன்னபிற நிகழ்வுகளும் ஓய்வுக்கு வந்து கொண்டிருகின்றன.இறைச்சியை சுட்டு சுட்டு சாப்பிட்டு உடல் நிறைதான் அமோகமாக ஏறி விட்டது .இனி அதில் கொஞ்சம் கவனம் செலுத்தவேண்டும்.  உடல் நிறையை குறைக்கவேண்டும் .

எப்படி கோடைகாலம் போனது என்றே தெரியவில்லை .கனடாவில் வரும் ஒக்ரோபர் மாதம் பொதுத்தேர்தல் வர இருக்கிறது .கடந்த இருமுறை பதவிக்கு வந்த அடிப்படைவாத கட்சி இம்முறை பதவிக்கு வருவது கடினம் என்றே கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன ,கனேடிய பொருளாதாரத்தின் இறங்கு முகம் அக்கட்சிக்கு பாதகமாக போகிறது .

தாராளவாத கட்சி இம்முறை புதிய தலைவரின் கீழ் தேர்தலில் போட்டி இடுகிறது .பழைய தலைவர் கடந்த முறை தேர்தலில் தோல்வி  அடைந்தவுடன் துண்டை உதறிக்கொண்டு தன்னுடைய சொந்த வேலையை கவனிக்க போய்விட்டார் .இங்கு யாரும் 90 வயது வரை ஒட்டிக்கொண்டு இருப்பதில்லை .இம்முறை ஆளும்கட்சியை சேர்ந்த 19 பாராளுமன்ற உறுப்பினர்கள் தாம் தேர்தலில் போட்டி இடுவதில்லை
என் அறிவித்துள்ளனர் .காரணமாக தெரிவித்துள்ளது தமது குடும்பத்துடன் தாம்  போதிய நேரத்தினை செலவழிக்க வேண்டும்  என்பதாக  சொல்லி யிருக்கிறார்கள் .

இங்கு அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு சம்பளம் மட்டுமே கிடைக்கும் கிம்பளம் எல்லாம் நினைத்துப்பார்க்கவே முடியாது .கனேடிய அரசியல் ,தேர்தல்  பற்றி நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன் .

சரி சரி இதையும் பார்த்து தொலையுங்கள்




செய்தி : மத்திய பிரதேச மாநில வனத்துறை அமைச்சர் கௌரி ஷங்கர் ஷெஜ்வார் விதிஷாவில் நடந்த சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது தேசிய கொடியை ஏற்றி வைத்து முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் உரையை வாசித்த பிறகு கிட்டத்தட்ட கீழே விழ பார்த்தார்.

###############################################################################


வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால் சந்தர்ப்பம் கிடைக்கும்வரை காத்திருக்காமல் அந்த சந்தர்ப்பத்தினை நாமே உருவாக்கவேண்டும் என்பதை வலியுறுத்தும் ஒரு குட்டிக்கதை அண்மையில் படித்ததது 

அந்த இராணுவப்படை அணியில் இருக்கும் ஜோனுக்கு யுத்த முனைக்கு  செல்வதற்கான உத்தரவுடன் மேலதிகமான பயிற்சியும் எடுக்கும்படி உத்தரவு வந்தது .பயிற்சி நாள் வந்தது  ஜோன் பயற்சிக்கு வரவில்லை .இது பற்றி விசாரிக்க  வந்த பயிற்சி அதிகாரி  ஜோன் அறைக்கு சென்றார் .அங்கு ஜோன் சில காகிதங்களை எடுப்பதும் உற்றுப் ,பார்ப்பதும் இது இல்லை இது இல்லை என்று எறிவதுமாக இருப்பதைக் கண்டு குழம்பிப் போனவராக என்ன நடக்கிறது என்று ஜோனின் சகபாடிகளிடம் கேட்க  சில நாட்களாக ஜோன் இப்படிதான்  செய்கிறான் .அவனின் நடவடிக்கைகள் எல்லாம் ஒரு மாதிரியாக இருக்கிறது என சொன்னார்கள் .

சில நாட்களில் ஜோனுக்கு மருத்துவ பரிசோதனை க்கு அழைப்பு வந்துது .சென்றுவந்த சில நாட்களில் மனநலம் சரி இல்லாததால்  இராணுவத்தை விட்டு விலக்கப் படுகிறாய்  என ஜோனுக்கு கடிதம் வந்தது .கடிதத்தினை வாசித்த ஜோன் "இதுதான் அது", "இதுதான் அது" என துள்ளிக்குதித்தான் ,இப்போது சொல்லுங்கள் 

ஜோன் எப்படி சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக உருவாக்கினான் என்று ?

################################################################################

கனடாவில் அண்மையில் ஒரு புள்ளிவிபரம் எடுத்தார்கள்  குறிப்பாக பெண்களிடம். நீங்கள் "உறவு" கொள்ள எந்த இடத்தை விரும்புவீர்கள் என்று கேட்டார்கள் .பெரும்பாலான பெண்கள் காரில் வைத்து உறவு கொள்ள பிடிக்கும் என சொன்னதுடன் இன்னும் கணிசமான பெண்கள் சமையலரையில் வைத்து உறவு கொள்ள பிடிக்கும்  எனவும்  சொல்லியிருந்தனர் . இது ஜேர்மனியை சேர்ந்த ஒரு செய்தி ஜெர்மனியைசெ சேர்ந்த ஒரு   இணைய தளம்  சாலையில் வாகன ஓட்டிகளின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளன என்பது தொடர்பான ஆய்வு ஒன்றை நடத்தியது.

சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள இதன் முடிவுகள் ஆவன   56 சதவிகிதத்தினர் தங்களின் காரில் ஒருமுறையாவது காம விளையாட்டுகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.மேலும் 10 சதவிகிதத்தினர் கார்கள் நிறுத்துமிடத்தில் மட்டுமே தாங்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக கூறியுள்ளனர்.இதே போல் 47சதவிகிதத்தினர் தங்களது கார்கள் வசதியாகவும் கதகதப்பாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் தனியாக வசிப்பவர்களை விட கூட்டுக்குடும்பமாக வசிப்பவர்கள் தான் இது போன்று வாகனங்களில் காம விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர் என்றும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது .

சில காலத்துக்கு முன்னர் இங்கு கனடாவில் ஒரு ஜோடி ஆற்றம் கரைக்கு அருகினில் இரவு நேரம் காரை நிறுத்திவிட்டு இருவரும் 
"உல்லாசமாக"(தமிழக பத்திரிகைகள் சொல்வது போல ) இருக்க ஆண் கடமையே கண்ணாக  இருந்த வேளையில்  எதேச்சையாக கார் நகர்ந்து ஆற்றினுள் விழ இதன் பின்னர் மீது அணியினர் வந்து மீட்டபோது  பெண் இறந்துவிட ஆண் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டார் .

################################################################################

ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அல்லது சட்டசபை உறுப்பினரை மக்கள் தேர்ந்தெடுப்பது என்பது  அவர்கள் சபை சென்று தமது பிரதிநிதியாக செயற்படவேண்டும் என்பதற்காக தான் .உண்மையில் பதவியால் கிடைக்கும் சலுகைகளை அனுபவித்துக்கொண்டு சட்டசபைக்கு போகாமல் இருப்பதும் அதற்கு பல காரணங்களை சாட்டாக சொல்வதும் சம்பந்தப்பட்டவர்களுக்கு அழகு அல்ல .போகமுடியாவிடால் இனி தேர்தலில் போட்டி போடாதீர்கள் 

அதே போல சட்டசபைக்கு வருபவர்களுக்கு தகுந்த பாதுகாப்பை ஆளும்கட்சி செய்து கொடுக்கவேண்டும்  இது தான் உண்மையாக ஜனநாயகம் .எதிர்கட்சிதான் ஒழிய எதிரிக்கட்சி அல்ல என்பதையும் சம்பந்தப்படவர்கள் உணரவேண்டும் .யார் யாரைப் பற்றி நான் குறிப்பிடுகிறேன் என்பது உங்களுக்கு புரியும் என நினைக்கிறேன் 

##############################################################################



கொத்துரொட்டி ஏழினை ரசித்திருப்பீர்கள்  என் நம்புகிறேன் .மீண்டும் உங்களை  விரைவினில் சந்திக்கிறேன் -------கரிகாலன் -------------


Saturday, August 15, 2015

இந்திய மைலாய் படுகொலை!

இது 2004 ம்  ஆண்டில் நான் எழுதிய ஒரு பதிவு .காலத்தின் தேவை கருதி மீளவும் பதிவிடுகிறேன் 


தமிழர் உரிமைப் போராட்டத்தின் திருப்பு முனையாக ஏற்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் (ஜுலை 29.1987) விளைவாக இலங்கைக்கு வந்த இந்தியப் படைகள் (IPKF) ஏற்கனவே திட்டம் இட்டபடி புலிகளிடம் இருந்து
ஆயுத களைவு என்ற பெயரில் ஒரு முழு யுத்தத்தினையே நடத்தத் தொடங்கின.வேறு வழிவகை அறியா
விடுதலைப் புலிகளும் மக்கள் ஆதரவினை மட்டும் நம்பி உலகின் நாலாவது பெரிய இராணுவத்தினை எதிர்த்து போர்புரிந்துவெற்றியும் பெற்றனர்.

ஒரு நாளில் யாழ்ப்பாணத்தினைக் கைப்பற்றுவோம் என சொன்ன இந்திய அமைதிப்படையினர் யாழ்பாணத்தினைக் கைப்பற்ற 1 மாதம் எடுத்தது. யாழ்ப்பாணத்தினை கைப்பற்றிய பின்பு ஏனையபகுதிகளையும் கைப்பற்றிய இந்தியப் படைகள் 200 மீட்டருக்கு ஓன்று என்று ரீதியில் முகாம்களை அமைத்தது.புலிகளும் தமது பிரதான முகாம், தலைமை என்பனவற்றை வன்னிக்கு மாற்றிவிட்டு மற்றைய பகுதிகளில்
தமது குறிப்பிட்டளவு போராளிகளை நிறுத்தியிருந்தனர். தினமும் எதாவது ஒரு பகுதியில் போராளிகளைத்தேடும் இந்திய இராணுவத்தினருக்கும் போராளிகளுக்கும் இடையில் மோதல்கள் இடம் பெற்ற வண்ணமே இருக்கும்.



இப்படி தான் 1989 ம் ஆண்டு ஓகஸ்ட் 2ந் திகதி வல்வெட்டித்துறையில் இருக்கும் ஊரிக்காடு ,பொலிகண்டி
இராணுவ முகாம்களிலிருந்து புலிகளை அழிக்கும் நோக்குடன் புறப்பட்டனர் இந்தியப் படையினர். இந்த இந்திய இராணுவவீரர்களுக்கு தலைமை தாங்கியது. முறையே மேஜர் சுதர்சன் சிங்,.கப்டன் கோபாலகிருஸ்ன
மேனன் ,கப்டன் கபூர் என்போராவார்.இவர்களை எதிர் கொண்டு புலிகள் நடத்திய தாக்குதலில் 09 சீக்கிய சிப்பாய்கள் கொல்லப்பட ஆயுதம் தாங்கியபுலிகளை அழிக்க திராணியற்ற இந்திய படைகள் அப்பாவி மக்கள் மீது தனது வெறியாட்டத்தினை வழமை போல தொடங்கியது.




ஒகஸ்ட் 2 ந் திகதி இச் சம்பவம் நடைபெற 3,4 திகதிகளில் வல்வெட்டித்துறையிலும் அதைச் சூழ உள்ள பகுதிகளிலும் ஊரடங்கு சட்டத்தினை பிரகடனப்படுத்திவிட்டு வெறியாட்டம் ஆடினர். யாருமே வல்வெட்டிதுறைக்குள் போகவே ,அங்கிருந்து தப்பி வரவோ முடியவில்லை.வெறியாட்டம் முடிந்து இந்திய இராணுவம் முகாம்களுக்கு திரும்பிய பின் வல்வெட்டித்துறைக்கு சென்று
பார்த்தவர்களால் நடைபெற்ற கொடூரங்களை ஜீரணிக்க முடியவில்லை.


63 பொதுமக்கள் சுட்டும் ,வெட்டியும், எரித்தும் கொல்லப்பட்டிருந்தனர். இதில் பலர் நிலத்தில் கிடத்தி முதுகில் சுடப்பட்டிருந்தனர்.ஆண்,பெண்,முதியோர் வேறுபாடு இன்றி.
100 பேர் அளவில் காயமடைந்திருந்தனர்.
123 வீடுகள் முற்றாக எரிக்கப்பட்டு நாசமாக்கப்பட்டன.
45 கடைகள் சூறையாடப்பட்டு தீயிடப்பட்டன.
வல்வை சனசமூக நிலையம் (நூலகம்) தீயிடப்பட்டிருந்தது,பல ஆயிரக்கணக்கான நூல்கள்.தளபாடங்கள் கொழுத்தப்பட்டிருந்ததுடன் நூலகத்தில் இருந்த காந்தி,நேரு,நேதாஜி, இந்திராகாந்தி போன்ற தலைவர்களின் படங்கள் கூட நொருக்கப் பட்டு தீயிடப்ப்ட்டு இருந்தன.
176 மீன்பிடி வள்ளங்கள் எரிக்கப்பட்டன.
எங்கும் சடலங்கள்,அவல ஓலங்கள், தீக்கொழுந்துகள்,காயமடைந்த ,கொல்லப்பட்ட உறவினர்களின்
அவலக்குரல்கள். காலங்கள் பல சென்றாலும் இன்றும் வல்வெட்டிதுறை மக்களின் மனங்களில் இரண வடுவாக அச்சம்பவம் இருந்து வருகிறது. ஒரே குடும்பத்தில் 3 பேர் கூட கொல்லப்பட்டிருந்தனர். வல்வெட்டிதுறையில் நடைபெற்ற இக்கோர தாண்டவம் பற்றி எந்த ஒரு இந்திய ஊடகமும் செய்தி வெளியிடவில்லை. இன்று கூட எத்தனை இந்தியருக்கு இது பற்றி தெரியும் என்பது கேள்விக் குறியே?

முதன் முதலாக லண்டனில் இருந்து வெளிவரும் FINANCIAL TIMES இன் டெல்லி நிருபர் DAVID HOUSEGO நேரில் சென்று பார்த்த பின்பே FINANCIAL TIMES இன் 17.08.89 இதழில் இச் செய்தி வந்தது.

அதன் பின்னரே லண்டனில் இருந்து வெளிவரும் TELEGRAPH பத்திரிகையும் 13.08.89 இல் இச் செய்தியைப் பிரசுரித்திருந்தது. 24.08.89 லேயே இந்தியாவில் இருந்து வெளிவரும் INDIAN EXPRESS பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.இந்திய அரசானது திட்டமிட்டே இச் செய்திகளை இந்தியாவில் இருட்டடிப்பு செய்தது இதற்கு இந்திய
பத்திரிகைகள், பிற ஊடகங்கள் யாவும் துணை போயிருந்தன. தமிழர் எனும் காரணத்தினால் இந்திய அரசோ, இலங்கை அரசோ இவர்களுக்கு நீதி வழங்க முன்வரவில்லை. வல்வெட்டித்துறை மட்டுமல்ல ஈழத்தின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு குடிமகனும் இந்திய இராணுவம் புரிந்த கொலைகள், கொள்ளைகள்,பாலியல் கொடுமைகள்
,சித்திரவதைகள், வீடழிப்பு ,சொத்தழிப்பு போன்றவற்றை சந்தித்தே இருக்கின்றனர். உண்மை சிலருக்கு சுடலாம் ஆனால் இவை என்றும் மறைந்துவிடாது மக்களின் மனங்களில் இருந்தும், வரலாற்றின் பக்கங்களில் இருந்தும்.!


லண்டனில் இருந்து வெளிவரும் the sunday telegraph நாளிதழ் வெளியிட்ட ஆசிரிய தலையங்கம் இதுதான்.என்னால் இதுக்கு சுட்டி கொடுக்க முடியவில்லை

.editorial The sunday telegraph 13.08.89


over 50 tamil civilians, including women and children appear to have been murdered in raid on a village by indiantroops who were originally sent to sri lanka to restore peace.so india joins the melancholy list powers which,though democratic and based on the rule of law, have not always prevented a breakdown of moral restraint among their armed forces serving abroad.it is indias My Lai or perhaps it is hear amritsar

from Nehru onwards india's leaders have lectured the world about how to behave but,if anything this massacre is worse than My Lai . then American troopas simply ran amok in the Sri Lankan village, the Indians seem to have been more systematic;the victims being forced to lie down, and then shot in the back. yet India would long have
had us believe that such horrors are largely perpetrated by western powers with imperialist antecedents.


such horrors accur when troops are cooped up in a situation ahich looks likely to have no solution or end, and have themselves been the victim of terrorist atrocities. post colonial indians, then, are no different from the rest of humanity.the massacre does not mean that India's policical system is any less democratic and legally-based than did My Laiof America's . but we await the naming by New Delhi of the Indian version of Lieutenant gallery, the American officer in command at My Lai,and his punishment


My Lai என்பது என்ன ?

1968 ம் ஆண்டு மார்ச் மாதம் 16 ந் திகதி வியட்நாமில் நிலை கொண்டிருந்த அமெரிக்கப் படைகளின் ஒருபிரிவு வியட்நாமின் குவாங்கை மாகாணத்தில் இருக்கும் மைலாய் கிராமத்தினுள் லெப். வில்லியம் கெலிஎன்னும் அதிகாரியின் கீழ் புகுந்து அப்பாவி வியட்நாமிய மக்கள் பல நூறு பேரை கொன்று குவித்ததுடன் பல பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். வீடுகள் கொழுத்தப்பட்டன.ஆடு மாடுகள் போல மக்களை ஓட்டி சென்று வயல்வெளிகளில் வைத்து சுட்டுக் கொன்றனர். 4 மணித்தியாலங்களாக நடந்த இந்த வெறியாட்டம் உயர் இராணுவஅதிகாரிகளால் அமெரிக்க மக்களுக்கு தெரியாமல் மறைக்கப்பட்டது.இராணுவ அறிக்கை ஒன்று மைலாயில்நன்கு திட்டமிட்ட ஒரு இராணுவ நடவடிக்கை மூலம் பலநூறு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று கூறியது.இதைப் பற்றி அறிந்த ஒரு இராணுவவீரன் உயர் அதிகாரிகளுக்கும்,அரசியல் தலைவர்களுக்கு விசாரணை வேண்டி எழுதினான், ஆனால் எதுவுமே நடைபெறவில்லை.பின்னர் 1969 ஆண்டு டிசம்பர் மாதம் 03ம் திகதி"லைவ்" பத்திரிகை மேற்படி இராணுவவீரனால் எடுக்கப்பட்ட படங்களை பிரசுரித்த பின்னரே இச் சம்பவம்பற்றி அமெரிக்க மக்களுக்கும் வெளி உலகுக்கும் தெரிய வந்தது. இருந்தும் தமது வீரர்கள் இவ்வாறு
காட்டுமிராண்டித்தனமாக நடந்திருக்க மாட்டார்கள் என்று சொல்லி பல அமெரிக்கர்கள் இதனை நம்ப மறுத்தனர்.

மேலதிக விபரம் தேவைப்படுவோருக்காக.-

யாழ்ப்பாணத்தில் என் பணி - லெப். ஜெனரல் எஸ்.சி பாண்டே

MASSEACRE AT VALVETTITURAI INDIA'S MY LAI - GEORGE FERNANDEZ

வல்வை படுகொலைகள் தொடர்பாக யாழ்பாணத்தில் இருந்து
வெளிவரும் உதயன் பத்திரிகை 02-08-2004 ல் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. அதற்கு சுட்டி கொடுக்க முடியவில்லை. ஈழநாதனுடைய வலைப்பதிவில் அக் கட்டுரை இடம்பெற்றிருக்கிறது.அங்கு சென்று பார்க்கலாம்.

https://en.wikipedia.org/wiki/1989_Valvettiturai_massacre

http://tamilnation.co/indictment/indict053.htm

Wednesday, July 15, 2015

சிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம்!

சிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம் - விஞ்ஞானியின் ஆச்சரியமான உண்மை சம்பவம் !

இம்முறை சிறுநீரக செயல்பாட்டை நமது பாரம்பரிய முறையில் எளிமையாக மிக குறைந்த செலவில் திருப்ப பெற்ற ஒரு விஞ்ஞானியின் உண்மை சம்பவம் என்பதாலும், தேதி வாரியாக செயல்பாடுகள் (ஆங்கில வலைப்பூவில் அவரது மகன் ) பதிவு செய்யப்பட்டுள்ளதாலும், மற்றவர்களுக்கு நிச்சயம் பயனளிக்குமென்பதாலும் இதனை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இன்று எதுவென்றாலும் மருத்துவமனை, மாத்திரைகள், மருந்துகள் என்று இன்றைய சமூகம் உள்ளது. ஒரு சிறு தலைவலி போல் இருந்தால் கூட உடனடி மாத்திரை. உணவே மருந்து என்று வாழ்ந்த தமிழன், இன்று மருந்தே உணவு என்று வாழ்கிறான் என்று சிலர் கூறுவது உண்மையாகத்தான் உள்ளது.

கடந்த சில வருடங்களாக நமது ஊரில், குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு சிறுநீரக செயலிழப்பு (Kidney failure) அதிகம் நடைபெறுகிறது. இதற்கு பல பெரிய வைத்தியர்கள் கொண்டு பல ஆயிரங்கள் செலவு செய்தும் முழு பலன் அடைவதில்லை.

இங்கு முழுவதுமாய் செயலிழந்த, இன்றைய தொழிற்நுட்ப வைத்தியர்களால் இனி ஒன்றுமே செய்ய இயலாது என்று கை விடப்பட்ட ஒர் சிறு நீரகத்தின் செயல்பாட்டை 5%திலிருந்து 80%மாய், இரண்டே மாதத்தில் மாற்றிய ஒர் கதையை இங்கு கூறுகிறேன். நான் கதையென்று சொன்னவுடன், ஏதோ கட்டு கதையென்றோ, எங்கெனும் புத்தகத்தில் படித்தது என்றோ நினைக்க வேண்டாம். இது நானே அருகில் அமர்ந்து கண்டு வியந்த உண்மை.

மதுரையில் எனது பேராசிரியர் திரு. சண்முகம் அவர்களுக்கு 2006ல் திடீரென்று சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அவரது சிறுநீரக செயல்பாடு 5%க்கும் (ஒரு நாளைக்கு 50 மில்லி லிட்டர் சிறுநீர் வெளியேற்றம்) கீழ் சென்றுவிட்டது. இந்த செயலிழப்புக்கு முக்கிய காரணம் அவர் கொழுப்பை (Cholesterol) கட்டுபடுத்த உட்கொண்ட ஒரு வகை மருந்துகள் (statin drugs) என்பது தனிக்கதை.

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியபின் தினமும் மூன்று முறை பெரிடொனியல் டயாலிசிஸ் (Peritoneal dialysis) அவரே செய்து கொண்டார். டயாலிசிஸினால் அனைத்துச் சத்துக்களும் ஊறியப் பெற்று துரும்பாய் இளைத்து, நடக்க கூட சக்தியின்றி சோர்ந்து போனார். அவரது மகன் திரு.பாரி அவர்கள் கணிணி வல்லுநராக இருந்தாலும் ஆன்மீகம், யோகா, இலக்கியம், சுற்றுபுறவியல் போன்றவற்றில் அதிக ஈடுபாடு உள்ளவர்.

அவர் இயற்கை வழியின் படி, பழங்கால மருத்துவத்தில் கூறியுள்ள இஞ்சி ஒத்தட முறையை தந்தைக்கு கூறினார்.

எனது பேராசிரியர் அடிப்படையில் ஒர் ஆய்வாளர் என்பதால், தன் சிறு நீரகத்தையே ஆய்வு பொருளாய் கொண்டு இந்த இயற்கை வழியை பரிசோதித்தார். ஆம் உண்மையிலேயே அவர் ஆய்வுதான் செய்தார்,

தினமும் எவ்வளவு சிறுநீர் வெளியெறுகிறது என்று அளந்து, குறித்து வைப்பார். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை, சிறுநீரை ஆய்வகத்திற்கு அனுப்பி அதிலுள்ள, அனைத்து சத்து மற்றும் உப்பு பொருட்களின் அளவை அறிந்து அதையும் ஆய்வு செய்வார்.

மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுக் கட்டுப்பாட்டையும் கடுமையாக பின்பற்றினார். இதன்மூலம் இரண்டே மாதத்தில் சிறுநீரக செயல்பாடு தினமும் 50 மில்லிலிட்டர் (5%) சிறுநீரக வெளியேற்றத்திலிருந்து 650-700 மி.லி சிறுநீர் (80%) வெளியேற்றம் என்று தனது செயல்பாட்டை திரும்ப பெற்று, இன்று முழுவதும் குணமடைந்துள்ளார்.

இஞ்சி ஒத்தடம்:
=============

இஞ்சி ஒத்தட முறையை கீழே விரிவாக கூறியுள்ளேன். எனது ஆசிரியருக்கு சில மாதங்கள் நானே, இந்த ஒத்தடம் கொடுத்து உள்ளேன் என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்.

1. ஒரு பானையில் மூன்று லிட்டர் நீரை கொதிக்க வைக்கவும்.

2. 125கி இஞ்சியை துண்டு துண்டாக நறுக்கி, மிக்சி அல்லது அம்மியில் அரைத்து கொள்ளவும்.

3. அரைத்த இஞ்சியை ஒரு துணியில் சிறு மூட்டை போல் கட்டவும்.

4. இப்போழுது கொதிக்கும் நீரில் இஞ்சிச் சாரை நன்கு பிழிந்துவிட்டு,
துணி முடிச்சையும் போட்டு ஒரு தட்டை கொண்டு மூடவும்.

5. அடுப்பை குறைந்த எரி நிலையில் (சிம்) 20 – 25 நிமிடங்கள் வைக்கவும்.

6. பிறகு அடுப்பை அணைத்துவிட்டு மூடிய நிலையிலே 5 நிமிடங்கள் விடவும்.

7. சிகிச்சைக்கான நபரை சட்டையை கழற்றிவிட்டு தலைக்குப்புற படுக்க சொல்லவும்.

8. பிறகு ஒரு சிறு துணியை, கொதிக்கும் இஞ்சி நீரில் நனைத்து புழிந்து, வேறு ஒரு கிண்ணத்தில் புழியவும். அந்த துண்டை சிறுநீரகம் அமைந்துள்ள முதுகின் அடிபகுதியில் விரித்து போடவும்.

9. சூடு தணிந்தவுடன் துணியை மீண்டும் நனைத்து, விரித்து தொடரவும். இவ்வாறாக நீர் ஆ றும் வரை தொடர்ந்து அரை மணி நேரம் செய்யவும்.

பாதத்தின் நான்காம் விரல்:

நம் முன்னோர்கள் அறிவாளிகள். நமது சடங்குகள் அனைத்திற்கும் ஒர் அறிவியல் காரணமுண்டு. உதாரணமாக, பெண்ணின் கால் இரண்டாம் விரலில் அவளின் கர்பப்பையின் நரம்பு முடிவுகள் உள்ளன. அதன் செயல்பாட்டை ஊக்குவிக்கவே திருமணத்தின் அன்று பெண்ணின் இரண்டாம் விரலில் மெட்டி அணிவிக்கப்படுகிறது. அதை போலவே பாதத்தின் நான்காவது விரலில் சிறுநீரக நரம்புத் தொடர்கள் முடிவடைகின்றன. ஆகவே, அமைதியான இடத்தில் அமர்ந்து முழுமனதுடன் நான்காம் விரலை தினமும் சிறிது நேரம் சுற்றி சுற்றி அமுக்கிவிடுவார் (மசாச்). இச்செய்கை சிறுநீரகத்தை புத்துணர்வு அடைய செய்யும்.

உணவு முறை
============

சிறுநீரக செயல்பாட்டை சீர் செய்வதற்கு, உணவுக் கட்டுபாடு மிகவும் அவசியமானதாகும்.
சோடியம்: உப்பை தவிர்ப்பதன் மூலம் சோடியம் அளவை குறைக்கலாம். எனவே உணவில் அரை உப்பு சேர்த்து கொள்ளவும். உப்புக்கு பதில் எலுமிச்சை சாறு, மிளகு அல்லது குறைந்த அளவு சோடியமுள்ள ஏதெனும் தாவர இலைகளை சேர்த்து கொள்ளவும். நீ ங்கள் பெரிடோனில் டயாலிசிஸ் செய்தால் உப்பை குறைக்க வேண்டாம், ஏனெனில் டயாலிசிஸினால் அதிக அளவில் சோடியம் வெளியெற்றப்படுகிறது.

பொட்டாசியம், பாஸ்பரஸ்:
=======================

உணவில் பொட்டாசியம், பாஸ்பரஸ் அளவையும் குறைத்துக் கொள்ளவும். பயிர் வகைகளை தவிர்க்கவும். காய்கறிகளிலுள்ள பொட்டாசியம் அளவை சமைப்பதன் மூலம் குறைக்களாம். மேலும், காய்களை துண்டுதுண்டாக நறுக்கி ஒர் பானை நீரில் 4 மணி நேரத்திற்கு ஊறவைத்து உண்பதன் மூலமும் பொட்டாசியம் அளவை குறைக்களாம். பாஸ்பரஸ் நிறைந்த பா ல் மற்றும் பால் பொருட்கள் தவிர்க்கவும்.

புரதங்கள் (ப்ரோடீன்):
=================

புரதங்கள் மனித உடலுக்கு இன்றியமையாதது. டயாலிசிஸ் செய்பவர்கள் அதிகம் புரதத்தை இழக்கிறார்கள் எனவே அவர்கள் புரதம் நிறைந்த உணவுகளை சேர்த்துகொள்ள வேண்டும். குறிப்பாக ஊறவைத்த, முளை கட்டிய பயிர்கள் மிகச்சிறந்த புரத பொருளாகும்.

நீர்:
==

நீரின்றி அமையாது இவ்வுலகமென்பது போல், நமது சிறுநீரக செயல்பாட்டுக்கும் அதன்மூலம் இரத்த அழுத்த கட்டுபாட்டுக்கும் நீரின் அளவு முக்கியமானது. தினமும் 1.4 லிட்டர் நீர் அருந்தவும். அதிக நீர் உயர் இரத்த அழுத்திற்க்கு வித்திடும். நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் பழங்கள், சாம்பார், இரசம் முதலியவையும் நமது நீர் தேவையை பூர்த்தி செய்கிறது என்பதை நினைவில் கொள்க.
சேர்த்து கொள்ள வேண்டியவை

ஒமம்:
=====

ஒம இலை சிறுநீரக செயல்பாட்டுக்கு மிகவும் நல்லது. எனவே தினமும் உணவுடன் சிறிது ஒம இலையை சேர்த்து கொள்ளவும்.

புளி:
====

புளியிலுள்ள டார்டாரிக் அமிலம், சிறுநீர ஆக்சலேட் கற்கள் உருவாக்கத்தை தடுகிறது. புளியை அதிகம் உணவில் சேர்த்து கொள்வதால்தான் இந்தோனேசிய மக்களுக்கு அதிகம் சிறுநீரக பிரச்சினைகள் ஏற்படுவதில்லையென்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மஞ்சள்:
=======

மஞ்சள் சிறுநீரக செயல்யிழப்பை தவிர்க்கவும், இழந்த செயல்பாட்டை புத்துணர்வு அடையவும் செய்யும் மகிமையுடையது என்று சித்த மருத்துவத்தின்படியும், இக்கால அறிவியலின்படியும் நிருபிக்கபட்டுள்ளது.

காய்கறிகள்:
==========

பூண்டு, வெங்காயம், காரட், கத்திரிக்காய், முள்ளங்கி, பச்சைப் பட்டாணி, முட்டைக்கோஸ், காலிபிளவர்.

பழங்கள்:
=======

ஆப்பிள், திராட்சை, எலுமிச்சை, பேரிக்காய், அன்னாசி, ப்ளம்ஸ், தர்பூசணிஎண்ணெய்: நல்லெண்ணெய், ஆலிவ்

தவிர்க்க வேண்டியவை
*********************************

காய்கறிகள்: தக்காளி, புழுச்சைகீரை, உருளை, சர்க்கரைவள்ளி கிழங்கு
பழங்கள்: வாழை, மாம்பழம், பப்பாளி, ஒரேன்சு , உலர் பழங்கள்

இந்த மருத்துவத்தின் செயல்முறை காணொளியை கிழே காணலாம்



அருமை நண்பர்களே !...

இவ்வியாதியால் பலரும் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளார்கள் , பணம் பிரச்சினையால் சரியாக மருத்துவமும் பார்க்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள் .. எனவே இந்த தகவலை பலருக்கும் தயவு செய்து பகிரவோ  அல்லது தனி நிலைத் தகவலாகவோ உங்கள் Time Line ல்பதிவு செய்து உதவுமாறு மிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் 

Friday, July 03, 2015

முஸ்லிம் பெண்களின் குவளையில் தண்ணீர் அருந்திய கிறிஸ்த்துவ பெண்: உயிருக்கு போராடும் பரிதாபம்

பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் பெண்மணி ஒருவரின் உடல் நிலை மோசமான நிலையில் உள்ளதால், அவரது கணவர் அந்நாட்டு ஜனாதிபதிக்கு கருணைமனு அனுப்பியுள்ளார்.
பாகிஸ்தானை சேர்ந்த ஆசிக் மசிஹ், ஆசியா பீபி என்ற தம்பதியினருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இவர்கள் கிறிஸ்த்துவ மதத்தை சேர்ந்தவர்களாவர், இந்நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு யூன் மாதம் வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்த ஆசியா, தாகம் மிகுதியால் முஸ்லிம் பெண்கள் தண்ணீர் அருந்திய அதே குவளையில் தண்ணீர் அருந்தியுள்ளார்.
இதற்கு வயலில் வேலை பார்க்கும் முஸ்லிம் பெண்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், பெண்கள் மத தலைவரை சந்தித்து, ஆசியா மத நிபந்தனையை மீறி விட்டார் என புகார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக நடைபெற்ற வழக்கில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஆசியாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 5 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வந்த அவரது குடலில் இரத்தக்கசிவு ஏற்பட்டு, உணவு உண்ணுவதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறார்.
இந்நிலையில், ஆசியாவின் கணவர் தனது மனைவிக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு அந்நாட்டு ஜனாதிபதியிடம் கருணை மனு அளித்துள்ளார்.
கடந்த ஆண்டு, ஆசியாவின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பதற்காக லாகூர் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அவரது தண்டனை மீண்டும் உறுதிசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

        

நன்றி /லங்கா சிறி