Saturday, October 06, 2012

த(கொ)லைக்கு விலை பேசும் முஸ்லிம்கள்!


த(கொ)லைக்கு விலை பேசும் முஸ்லிம்கள்!


ஜேர்மனியில் மறைந்து வாழும் ஈரான் நாட்டைச் சேர்ந்த "ராப்” இசைக்கலைஞரான ஷாஹின் நாஜாஃபிக்கு (Shahin Najafi) ஈரானிய ஷியா  முஸ்லிம்கள்  ம்ரணதண்டனை விதித்துள்ளனர்.
அவரது  த(கொ)லைக்கு 100,000 டொலர் விலை வைத்துள்ளனர். ஈரானிய மதகுருக்களுக்கு எதிராகப் பாட்டெழுதிப் பொது மேடைகளில் பாடி வருவதால் நாஜாஃபி மீது சமய நிந்தனைக் குற்றம் சாட்டப்பட்டு அவருக்குத் இத் தண்டனையானதுத ஈரானிய  ஷியா முஸ்லிம் சமூகத்தினால் விதிக்கப்பட்டுள்ளது.

ஈரானிய  இமாம்களைப்(மதகுரு) பற்றி கேலி செய்யும் பாடல்களை நாஜாஃபி பாடியதால் அவரிற்கு  ஈரானின் ஷியா சமயத் தலைவரான அயாதுல்லா சாஃபி (Ayatollah Safi) கோல்படுயகானி  மரணதண்டனை விதித்து தீர்ப்பு கூறியதாக அந்நாட்டு பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டன. வெகுகாலமாக ஈரானிய சமயப் பெருமக்களோடு கருத்து வேறுபாடு கொண்டதனால் நாஜாபி 2005 முதல் ஜெர்மனியின் கோலோனில் மறைந்து வாழ்ந்து வந்தார்.

இந்த வருடம் மே மாதத்தில் “nagi” என்ற பாடல் தொகுப்பை வெளியிட்டார் ஷாஹின் நாஜாஃபி. இப் பாடல் தொகுப்பில்  ஈரானிய சமூகத்தைப் பற்றியும் ஈரானிய அரசியலைப் பற்றியும் விமர்சித்த பாடல்களும் இடம்பெற்றிருந்தன.
இதனை தொடர்ந்தே ஃபத்வா எனப்படும் சமயத்தீர்ப்பு வெளிவந்திருப்பதால் ஐரோப்பாவில் வாழும் இஸ்லாமியத் தீவிரவாதி யாராவது நாஜாஃபியைக் கொல்லும் ஆபத்து உள்ளது.
எனவே இவர் தற்போது  காவல்துறையினரின் பாதுகாப்பில் இருக்கிறார். ஈரானின் ஷியா மதகுருவான சஃபி மீது காவல்துறையில் முறையீடும் செய்துள்ளார். 

இது தொடர்பாக நாஜாஃபி  கூறும் பொழுது  தனக்கு சமயத்தை(இஸ்லாத்தினை) இழிவுபடுத்தும் நோக்கம் எதுவுமில்லை என்றும், சமூக நடப்பையே தனது பாடலில் வெளிப்படுத்தியதாகவும், இதனைத் திரித்துக் கூறி தன் மீது வெறுப்பைப் பரவ விட்டிருப்பதாகவும் கூறினார்.
நான் இளைஞன், என்னால் இசைநிகழ்ச்சி நடத்தாமல் சும்மா இருக்க இயலாது என்றும்  ஒரு பேட்டியில் தெரிவித்தார்.

கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ளாமல் கருத்துக்களை வாளால் எதிர்கொ(ள்)ல்லும் சம்பவங்களின் தொடர்ச்சியாக இடம்பெறும் சம்பவங்களில் ஒரு சம்பவமே இது.

இது தொடர்பாக பத்திரிகையில் ( Newyork Times) வந்த செய்தியின் சுட்டி:-

http://www.nytimes.com/2012/05/15/world/middleeast/shanin-najafi-iranian-born-rapper-faces-death-threats-over-song.html?_r=0

Tuesday, October 02, 2012

மூத்த வலைப்பதிவர் மறைவு !!!!!! கண்ணீர் அஞ்சலிகள்!!

 

ன்றைய பொழுது தற்செயலாக யாழ் இணையம் சென்றபோது பார்த்த செய்தி மனதினை அதிர செய்தது .ஆம் மூத்த  வலைப்பதிவர் ஈழநாதன் தனது 31 வயதினில் அகாலமரணம் என்ற செய்தியே தான் அது .2007 ம் ஆண்டுக்கு பின்னர் வலை பதிபவ்ர்களுக்கு அவரை தெரிந்திருக்க நியாயம் இல்லைதான் .அதற்கு இரு வருடங்களுக்கு முன்பு 2004ம் ஆண்டின் தொடக்கத்தில்    இருந்து  2007 ஆண்டுவரை வலைபதிவிலும். யாழ் இணையத்திலும் எழுதிவந்தவர். அபொழுது எல்லாம் திரட்டியே இல்லாத காலம்.மதி கந்தசாமியின் ஒரு வலைப்பதிவில் எல்லா வலைபதிவுகளும் தொகுகப்பட்ட காலம்

.கரிகாலன் ஆகிய நான் ,ஈழநாதன் ,சயந்தன் ,வசந்தன் .மதி கந்தசாமி இப்படி சிலர் தான் ஈழத்தினை சேர்ந்த பதிவர்கள் மற்றவர்கள் தமிழகத்தினை சேர்ந்த உறவுகள்.சண்டை சச்சரவு அற்ற பதிவுகள் ,விட்டுக்கொடுப்புகள் ,நாகரிகமான ஆரோக்கியமான் கருத்தாடல்கள் , இப்படி இருந்த காலம் .அப்பொழுது தனது நிறைந்த தமிழ் அறிவாலும் இலக்கிய திறனாலும் உதவி செய்யும் பண்பாலும் எல்லோரையும் கவர்ந்தவர் ,”ஈழநாதம்” அவரது பிரதான் வலைபதிவு ,அதை விட  மேலும் 4,5 வலைபதீவுகள் வைத்திருந்தார் .ஈழத்து நூல்களை இணையத்தில் ஏற்றும் திட்டமான நூலகம் திட்டத்தின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவர்.அதை விட யாழ் இணையத்தில் நிறைய பங்களிப்புகள் செய்தவராவார்.

2007ம் ஆண்டின்பின்பு எந்தொரு இடத்திலும் அவரது எழுத்துகள் காணப்படவில்லை.யாருடனும் தொடர்பில் இல்லை .சிங்கப்பூரில இருந்து எழுதிய அவர் என்ன ஆனார் என்று தெரியாமல் இருந்தது .நுலகம் சார்ந்தவர்களுடன்  கேட்டபோது தங்களுடன் தொடர்பு இல்லை என்று சொன்னார்கள் ..இப்படி  ஆட்கள் காணமல் போவது ஈழத்தவர் வாழ்வில் சகயம் என்பதால் பலரும் இதுபற்றி அலட்டிக்கொள்ளவில்லை .

இப்போது செய்தி வந்திருகிறது தனது மனைவி ,பிள்ளை இவர்களை தவிக்கவிட்டு அகால மரணம் அடைந்திருப்பதாக .நல்லதொரு நண்பனை இழந்த துயரம் எனக்கு ,நல்லதொரு மகனை ,கணவனை தகப்பனை இழந்ததொரு துயரம் அவரின் குடும்பத்திற்கு .

அவரின் பிரிவால துயருறும் அவரின் குடும்பத்தினருக்கு  எனது ஆழ்ந்த

அனுதாபங்கள்!

.நண்பனே உனக்கு எனது கண்ணிர் அஞ்சலிகள்!

தமிழை விற்று பிழைப்பவன் எல்லாம் நூறு ஆண்டுகள் வாழும்போது  தமிழக்காக உழைப்பவர் எல்லோரும்  அற்ப ஆயுளில் போவதென்பது  தமிழே நீ கொண்டுவந்த சாபமா ??

 

eelanathan

பட உதவி(நன்றி) :-யாழ் இணையம்

Tuesday, September 18, 2012

மனைவிகளின் அகராதி (Dictionary) : உங்கள் முதுகை காப்பற்ற என்னால் ஆனா சில உதவிகள்!

 

உண்மையிலே பெண்களை புரிந்து கொள்வது என்பது மிகவும் கடினம் .பெண்களின் மனதினை கடலின் ஆழத்துக்கு ஒப்பிடுவது வழமை .உண்மையில் பெண்கள் என்ன நினைகிறார்கள் என்பதை அறிவது கடலின் ஆழத்தினை அறிவதை விட கடினம் .

ஒரு பெண் ஒரு விடயத்தில் வேண்டாம் வேண்டாம் என்றால் வேண்டும் வேண்டும் என்பதாகவே அர்த்தம் கொள்ளவேண்டும் .காதலிக்கும் பொது நோ என்றால்  எஸ் என்பதாகவே அர்த்தம் பெண்கள் அகராதியில் .எனக்கு திருமணமாகி கிட்டத்தட்ட எழு வருடங்கள் ஆகிவிட்டன இப்போதும் கூட சில விடையங்களில் மனைவி என்ன சொல்ல வருகிறார் என்பதில் “ங்கே” தான்.

ஒவ்வொரு விடயங்களுக்கும் ஒவ்வொரு மாதிரி கதைப்பது மட்டுமல்ல சில விடையங்களில் ஆலோசனை சொல்லிவிட்டு நான் அதன்படி நடந்து அந்த விடையம் பாதகமாக முடிந்தால் எனது மனைவி சொல்லுவார் பாருங்கள் ஒரு வசனம் அப்படியே கோபம் பொத்துக்கொண்டு வரும்.

:”உங்களுக்கு எங்கே போச்சு மதி ?நீங்கள் எல்லோ யோசிச்சு செய்திருக்கோணும்” இப்படி பந்தை தூக்கி என்னில் போடுவார் .சரி நீளமாய் கதைத்து ஒரு பிரயோசனமும் இல்லை .உங்களிடமே சொந்த கதை சோக கதை நிறைய இருக்கும் எண்டு நினைக்கிறான் . என்ன கொஞ்சத்தை பகிருங்கள் .

இப்ப உங்களுக்கு உதவ சில மனைவிமார்களின் அகராதி தாறன் .நான் பெற்ற இன்பம் பெறுக இவ் !வையகம்.

 

மனைவி  

 

அர்த்தம்

நமக்கு வேணும்

எனக்கு வேணும்

உங்கள் முடிவு

நான் சொல்லுறதுதான் சரி .பிறகு உங்கள் விருப்பம்

தாரளமாக செய்யுங்கள்

எனக்கு விருப்பமில்லை

உங்களுக்கு என்ன விருப்பமோ

பின்னாடி எப்படியும் என்னட்டை தான் வரவேணும்

எனக்கு ஏதும் வருத்தமில்லை

வருத்தமாய் இருக்கிறேன்

நிங்கள் ரொம்ம மேன்லியக இருக்கிங்க

மூஞ்சையை பார் .சேவ் பண்ணவும்

இந்த கிச்சன் சரியான கஸ்டமா இருக்கு

வேற வீடு பார்க்கவும்

உங்களுக்கு என்னில் விருப்பமோ?

பெரிசா எதோ கேட்டகப் போறேன்

என்னை உங்களுக்கு நல்ல பிடிக்குமோ?

உங்களுக்கு பிடிக்காத ஒரு விடையத தினை   செய்திருக்கிறேன்

நான் நல்ல குண்டா இருக்கிறேனோ ?

அழகாய் இருப்பதாக சொல்லவேண்டும்

சரி

இல்லை

இல்லை

சரி

ஒன்றும் இல்லை

நிறைய இருக்கு

நான் அதைபற்றி பேச விரும்பவில்லை

இப்படி ஏத்திவிட்டுதான் பேச்சை ஆரம்பிக்கவேண்டும்

தோள்மூட்டெல்லாம் ஒரே வலி வரும் பொது கடையில் சாப்பாடு வாங்கிவரவும்
தோள்மூட்டெல்லாம் ஒரே வலி (படுக்கையில்) வாலைச்சுருட்டிக்கொண்டு தள்ளிப் படுக்கவும்
அப்பா,அம்மாவிடம் இருந்து போன் காசு அனுப்ப தயாரா இருக்கவும்
புடைவை கடையில்:- சீப்பான புடவையா எடுங்கோ விலை கூடிய புடவையா எடுங்கோ என்று என்வாயால் சொல்லவேண்டும்

இந்த அகராதி  நீண்டுகொண்டே போகும்  .நிளும் காலம்  உங்கள் ஆயுளையும் மன(ண)வழ்க்கையையும் பொறுத்து அமையும்

சாந்தியும் ??????சமாதானமும் ??????? உண்டாக கடவதாக.

சரி ஒரு ஜோக் :-

கணவன் :- அம்மா போன் பண்ணியவ வயிற்றுவலியாம் டாக்டரிடம்         

                     காட்டவேனும்  பணம் அனுப்ப சொல்லி

மனைவி:- இதற்க்கு எல்லாம் டாக்ரரிடம் கட்ட தேவையில்லை .சுக்கு                  தண்ணி      குடிச்ச வயிற்று வலி போய்விடும் பணம் அனுப்ப

தேவையில்லை

கணவன் :- சரி உங்கடை அம்மாவுக்கு போன் பண்ணி சொல்லிவிடுகிறேன்

மனைவி :- ????????????

Thursday, September 13, 2012

என்னை யாராவது கொன்று விடுவார்கள்: பயத்தில் 11 வயது பாகிஸ்தான் கிறிஸ்துவ சிறுமி

 

என்னை யாராவது கொன்று விடுவார்கள், எனக்கு பயமாக இருக்கிறது என பாகிஸ்தானில் மத நிந்தனை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 11 வயது சிறுமி கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் குரான் புத்தகத்தில் இருந்த பக்கங்களை கிழித்து எரித்ததாக 11 வயது கிறிஸ்துவ சிறுமி ரிம்ஸா மாஸி மீது குற்றம் சாட்டப்பட்டது.

இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த முஸ்லிம் இமாம் காலித் ஜடூன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் ரிம்ஸா வீட்டை முற்றுகையிட்டு மத நிந்தனை புகார் கூறியதை அடுத்து சிறுமி கைது செய்யப்பட்டார்.

இவ்வழக்கின்படி சிறுமிக்கு ஆயுள் தண்டனை கிடைக்கலாம் என்ற நிலையில், இமாம் போலியாக ஆதாரங்களை உருவாக்கி இருப்பதாக மற்றொரு முஸ்லிம் மத தலைவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதையடுத்து ரிம்ஸா விடுதலை செய்யப்பட்டு ஹெலிகாப்டர் மூலம் அடையாளம் தெரியாத பகுதிக்கு பெற்றோருடன் கொண்டு செல்லப்பட்டார். அதன் பின் இமாம் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் சி.என்.என் பத்திரிகை நிருபர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ரிம்ஸாவுடன் பேசினார்.

அப்போது தன்னை யாராவது எப்படியும் கொன்று விடுவர் என பயப்படுவதாக ரிம்ஸா மிரட்சியுடன் தெரிவித்துள்ளார்.

மேலும் குரான் புத்தக பக்கங்களை எரிக்கவேயில்லை என அவர் மறுப்பு தெரிவித்தார்.

ரிம்ஸாவின் வக்கீல் குறிப்பிடுகையில், சிறுமி மீது இமாமுக்கு விருப்பம், அதற்கு சிறுமி ஒத்துக் கொள்ளவில்லை.

அதனால் ஏற்பட்ட விரோதம் காரணமாக மத நிந்தனை குற்றச்சாட்டை அவர் சுமத்தி இருக்கிறார் என்று தெரிவித்தார்.

 


Wednesday, September 12, 2012

ஈராக் பெண்களை அச்சுறுத்தும் இஸ்லாமிய மத வெறியர்கள்!

 

அமெரிக்க படைகள் ஈராக்கில் இருந்து வெளியேறிய பின்னரும், அங்குள்ள ட்ரென்ட்,
அமெரிக்க நாகரீகத்தை ஒட்டியே உள்ளதால், தீவிர மத அமைப்பு ஒன்று ‘பேஷன் போலீஸ்’ என்று ஒரு கண்காணிப்பு பிரிவை அமைத்துள்ளது.
‘பேஷன் போலீஸ்’ முழு ஈராக்கிலும் இல்லை என்றாலும், இரு நகரங்களில் தீவிரமாக இயங்குகிறது.

இஸ்லாமிய கலாசார முறைப்படி உடை அணியாத பெண்களை குறி வைக்கிறது ‘பேஷன் போலீஸ்’.

கசிமியா நகரில் ‘பேஷன் போலீஸ்’ செயல்படுவது மட்டுமன்றி, வீதிகளில் அறிவிப்பு பலகைகளும் உள்ளன.
“மத கலாச்சாரத்தை பின்பற்றாவிட்டால் தண்டனை அடைய நேரிடும்’ என்கிறது ஒரு அறிவிப்பு பலகை. “‘அபயா’ அணிந்து வெளியே செல்லாத பெண்கள் தண்டிக்கப்படுவார்கள்” என்கிறது மற்றொரு அறிவிப்பு பலகை. அபயா என்பது, தோளில் இருந்து கால் வரை அணியப்படும் உடை.

தலைநகர் பாக்தாத்தில் இருந்து 130 கி.மீ. தொலைவில் உள்ள மற்றொரு நகரமான திவானியாவில், போஸ்டர்கள்
ஒட்டப்பட்டுள்ளன. ஜீன்ஸ் அணிந்த பெண்ணின் போட்டோ ஒன்றை போட்டு, அதன்மேல் சிவப்பு வர்ணத்தில் பெரிய அளவு X ஒன்று போடப்பட்டுள்ள போஸ்டர் அது.
மற்றொரு போஸ்டர், பெண்கள் முழுமையாக தமது தலைமுடியை மறைத்துக் கொள்ள வேண்டும் என்கிறது.

மயாடா ஹமீத் என்ற 32 வயது பெண், தமக்கு ‘பேஷன் போலீஸ்’ எச்சரிக்கை விடுத்துள்ளது என்கிறார்.
“அவர்கள் (‘பேஷன் போலீஸ்’) தொலைவில் இருந்தே என்னை வாட்ச் பண்ணியபடி இருந்தார்கள்.
அப்போதே புரிந்து விட்டது, விபரீதமாக ஏதோ நடக்க போகிறது என்று. சற்று நேரத்தில் ஒருவர் எனக்கு அருகே வந்து
, “இது முதல் எச்சரிக்கை. இஸ்லாமிய கலாசார ஆடைகளை அணியாவிட்டால், இரண்டாவது எச்சரிக்கை கிடையாது.
தண்டனைதான் வழங்கப்படும்” என எச்சரித்துவிட்டு சென்றார்” என்றார்.

‘பேஷன் போலீஸ்’ என்பது, சீருடை அணிந்த ஒரு பிரிவல்ல. அதிகாரபூர்வ காவல்துறையும் அல்ல. சாதாரண
மக்கள் போலவே அவர்கள் நடமாடுகிறார்கள். கலாசார உடை அணியாதவர்களை எச்சரிக்கும்போதுதான் அவர்கள் ‘பேஷன் போலீஸ்’ ஆள் என்று தெரியவருகிறது.

ஈராக்கிய அரசு, இந்த ‘பேஷன் போலீஸ்’ தமது போலீஸ் பிரிவு அல்ல என்கிறது. தலைநகர் பாக்தாத்தில்
செய்தியாளர் மாநாட்டில் பேசிய போலீஸ் பிரிவு தலைவர், “பெண்கள் உடை அணிவது தொடர்பான தடைகள்
அல்லது நடைமுறைகள் எதையும் நாம் அறிவிக்கவில்லை. எந்த உடை அணிவதற்கும் அவர்களுக்கு சுதந்திரம் உள்ளது என்பதே அரசின் நிலைப்பாடு.

உடை அணிவது பற்றிய எச்சரிக்கைகளுடன் சில அறிவிப்பு பலகைகள் குறிப்பிட்ட சில நகரங்களில் யாராலோ வைக்கப்பட்டுள்ளதாக எமக்கு தகவல்
கிடைத்துள்ளது. அந்த அறிவிப்பு பலகைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

பாக்தாத்தில் உள்ள ஷீட்டி பிரிவு மதகுரு ஷேக் மாஜின் ஷாடி, “பேஷன் போலீஸ் நடமாட்டம் பற்றி
நாமும் அறிந்தோம். அது, எமது மதப் பிரிவால் உருவாக்கப்பட்ட அமைப்பு அல்ல என்பதைதான் என்னால் கூறமுடியும்.
பெண்களுக்கு அவர்கள் விரும்பிய உடை அணியும் சுதந்திரம் உள்ளது என்பதே, எமது பிரிவின் கொள்கை.

ஆனால், மத முக்கியத்துவம் உள்ள இடங்களுக்கும், மத சடங்குகள் நடைபெறும் இடங்களுக்கும் பெண்கள் கலாசார
உடை அணிய வேண்டும் என்பதை நாம் வலியுறுத்துகிறோம். இஸ்லாம் மட்டுமன்றி, மற்ற மதங்களும் அதைதான் சொல்கின்றன” என்று தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட இரு நகரங்களிலும் உள்ள நிலைமை பற்றி குறிப்பிடும் மதகுரு ஷேக் மாஜின் ஷாடி, “அந்த நகரங்களை சேர்ந்த பெண்கள், கலாசார உடைகளை அணியத் துவங்கியுள்ளார்கள் என அறிகிறோம். காலப்போக்கில் அனைவரும் காலாசார உடை அணிபவர்களாக இருப்பார்கள். அரசால் அதை தடுக்க முடியாது என்பதே அங்குள்ள நிலைமை” என்கிறார்.

யார் என்ன சொன்னாலும் பெண்கள் எப்படி உடை அணிவது என்பதை பெண்கள் தான் தீர்மானிக்கவேண்டும் .மதவாதிகள் அல்ல என்பதே எனது கருத்து .

Thursday, August 30, 2012

அப்பாவுக்கு என்ன தெரியும்?---தந்தையைப் பற்றி மகன் சொல்கிறார்!!!

 

சில தினங்களுக்கு முதல் என்றொரு விபரம் ஒன்றை பெறுவதற்காக எனதுபழைய டயரியை புரட்டினேன்.தேடிய விபரம் கிடைத்ததுடன் நான் அதில் எழுதி வைத்திருந்த சில விடயங்களையும் காணமுடிந்தது.டயரி எழுதுவது என்றால் ஒவ்வொரு வருடமும் டயரி வாங்கி ஒவ்வொரு நாளும் எழுதி வந்திருக்கும் ஒரு நல்ல ஒரு மனிதராக என்னை கற்பனை பண்ணினால் அதற்கு நான் பொறுப்பு அல்ல .2000 ம் ஆண்டில் வாங்கிய டயரி. முக்கியமான விடையங்கள் .திகதிகள் , முக்கியமான்வ்ர்களின் பிறந்த நாட்கள் .சில வங்கி விபரங்கள் இவையே அதில் உள்ளவை அத்துடன் நான் ரசித்த சில குறிப்புக்கள்,பெரும்பாலும் பத்திரிகைகளில் வந்தவை .

அப்படியான ஒரு குறிப்புதான் . இப்பொது நான் குறிப்பிடப்போவது .பொதுவாக தாய்க்கும் மகனுக்கும் இடையேயான உணர்வுகள்தான் பொதுவாக எல்லோராலும் குறிப்பிடப்படும் .அரிதாகவே தகப்பனுக்கும் மகனுக்குமான உறவுகள்  பேசப்படும்.

அப்படிபட்ட  சிலருக்கு வரும் ஒரு உணர்வே இது படித்து விட்டு சொல்லுங்கள்

 


5 வயது

என் தந்தையால் செய்ய முடியாது ஒன்றும் இல்லை

7 வயது

என் தந்தைக்கு பல விடையங்கள் பற்றி நன்கு தெரியும் 

10 வயது

என் தந்தைக்கு எல்லா விடயங்களைப பற்றியும் தெரியாது 

12 வயது

என் தந்தைக்கு ஒன்றுமே தெரியாது

14 வயது

அவரா!  அவருக்கு காலம் மாறியது எங்கே புரிகிறது?

21 வயது

கிடக்கிறது கிழம்.  அவரிடம் போய் யோசனை கேட்பதா?

30 வயது

எதோ கொஞ்சம் தெரியும் .


40 வயது

அவர் என்ன நினைக்கிறார் என்பதை தெரிந்து கொள்வதில்
தப்பில்லை

55 வயது
 
அவரின் யோசனைகளை கேட்டு பின் முடிவு
எடுக்கலாமே .

60 வயது

என் தந்தையர் இது போன்ற விடையங்களில் எவ்வளவு சிறப்பாக தீர்மானம் எடுப்பார் தெரியுமா?

65 வயது

அவர் இல்லாதது உண்மையிலே பெரிய கஷ்டமாக இருகிறது .அவரின் ஆலோசனையைக் கேட்க முடியாமல் போனது பெரிய நஷ்டம்.

70 வயது

அவருடைய அறிவும் அனுபவமும் எங்கே? நான் எங்கே?

நிச்சயமாக இப்படிப்பட்ட ஒரு மனப்பாங்கு எனக்கு ஒரு காலத்திலும் வந்ததில்லை .அதற்கு எனது தந்தையின் படிப்பு ,உத்தியோகம் ,வசதி அந்தஸ்து.அனுபவம் ,உலக அறிவு காரணமாக  இருந்திருக்கலாம் என நினைக்கிறேன் .மேற்படி காரணிகள் இல்லாவிட்டால் இப்படிப்பட்ட எண்ணம் எனக்கும்  வந்திருக்குமோ?

கடந்த தந்தையர் தினம் ,இங்குள்ள வானொலி ஒன்றில தந்தையர் தின சிறப்பு நிகழ்வாகக் நேயர்கள் வந்து தமது தந்தை எப்படி தமக்கு ஒரு வழிகாட்டியாகக் இருந்தார் என்று  தமது கருத்துக்களை சொல்லி தந்தைக்காக பாடலகள் கேட்டுக்கொண்டிருந்தனர்.

ஒரு நேயர் வந்தார் .அறிப்பாளர் கேட்டார் உங்ககள் தந்தைபற்றி சொல்லுங்கள்  என்று.நேயர் சொன்னார் .எது என்றாலும் போட்டு அடி அடி என்று அடிப்பார் என்றார்.துணுக்குற்ற அறிவிப்பாளர் சொன்னார் குழப்படி என்றால் உங்களை திருத்த தந்தை தண்டித்திருப்பார்.அதற்கு அந்த நேயர் சொன்னார் அபப்டி அல்ல எதுவென்றாலும் போட்டு விளாசு விளாசு என்று விலாசிவிடுவார் என்று .இப்படி ஒரு தந்தையர் தின உரையாடலை எதிபாராத அறிவிப்பாளர் கேட்டார் .சர இப்பொது உங்கள் தந்தை எங்கே என்று?

மிகவும் வெறுப்பான தொனியில் வந்தாது பதில் ,வேறு வழியில்லாமல் இப்பொது வந்து என்னோடுதான் இருக்கிறார்.என்று.

உண்மையில் அறிவிப்பாளர் மட்டும் அல்ல நானும் திடுக்குறேன் அன் நேயர் பதில் கண்டு .அன்று  நித்திரை வரவில்லை ,ஒரு மகன் தனது தந்தையை பற்றி தந்தையர் தினநிகழ்வில் இப்படி கதைப்பாரனால் எவ்வளவு வெறுப்பு இருக்க வேண்டும் தந்தைமேல் ,இங்கு யார் மேல் பிழை ,யார் சரி என்றுஎன்னால் ஒரு தீர்மானத்துக்கு வரமுடியவில்லை.அனால் அன்று இரவு முழுவதும் அர்த்த நேயரின் அந்த வெறுப்பை கக்கும் குரல் என்னை துங்க விடவில்லை என்பதே நிஜம்.

மீண்டும் சந்திப்பேன்.

Friday, August 24, 2012

மைக்ரோசொப்ட் தனது லோகோவை மாற்றியது!!!!

 
மைக்ரோசொப்ட் நிறுவனத்தினை தெரியாதவர்களே இருக்கமுடியாது. விண்டோஸ் முலம மிகவும் பிரபல்யம் அடைந்த இந்த  software நிறுவனம் ஓகஸ்ட் 23ந திகதிமுதல் புதிய சின்னத்தை(லோகோ) அறிமுகம் செய்தது.


இதற்கு முன் பறக்கும் கொடி போல நான்கு நிறங்களின் தனித்தனி சதுரங்கள் மைக்ரோசாப்ட் நிறுவன லோகோவாக இருந்தது.
இப்போது சிவப்பு, பச்சை, நீலம், பழுப்பு ஆகிய நான்கு கட்டங்கள் ஒரே அளவுடன் இருப்பது போல எளிமையாக லோகோ வடிவமைக்கப்பட்டுள்ளது.
new-microsoft-logo-2
மைக்ரோசொப்ட் நிறுவனம் தொடங்கப்பட்டு 37 ஆண்டுகள் ஆகின்றன.(1975) அப்போது முதல் 5வதாக வெளியிடப்படும் புதிய லோகோ இது.
எனினும் கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் புதிய லோகோ அறிவிக்கப்பட்டுள்ளது.  அதாவது பொது நிறுவனம் ஆனபின்பு .
மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது மென்பொருள் கண்டுபிடிப்புகளில் புதிய அத்தியாயத்துக்குள் நுழைவதை குறிக்கும் வகையிலும், நவீன வர்த்தக உலகில் எளிமையாக அனைவரையும் கவரும் வகையிலும் இருக்கும் என்று மைக்ரோசொப்ட் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாறி வரும் உலகிற்கு ஏற்றமாதிரி அண்மையில் புதிய ஈமெயில் சேவை ,விண்ட்டோஸ் 8 இப்படி பல தரும் மைக்ரோசொப்ட் தனது லோகோவினையும் நவீன்ப்டுத்தி சுருக்கமாக சொன்னால் எளிமைபடுத்தி இருக்கிறது.
இது காலம் கடந்து வந்திருக்கும் ஞானோதயம்,எளிமை இதைத்தானேக் google பின்பற்றி சாதனை படைகிறது