Wednesday, October 31, 2012

உங்களுக்கு தெரியுமா இந்த செய்திகள்.!

 

  1. அன்டார்டிகா நிலப்பரப்பு மட்டுமே எந்த ஒரு நாட்டுக்கும் சொந்தம் இல்லாதது
  2. தீக்கோழியின் முட்டையை முழுமையாக அவிக்க  4 மணித்தியாலங்கள் பிடிக்கும் .
  3. ஒரு கிங் கோப்பராவின் விஷம் 01 யானையை அல்லது 25 மனிதர்களை கொல்லக்கூடியது .
  4. வாழைப்பழம் மனிதனை சந்தோசமாக வைத்திருக்கும் ஒரு விதமான இரசாயான  பொருளைக் கொண்டுள்ளது.
  5. கண்களை திறந்தபடி உங்களால் தும்ம முடியாது. 
  6. கட்டைவிரலின் நகத்தினைவிட  நடுவிரல் நகத்தின் வளர்ச்சி  அதிகமானது.
  7. குதிரைகளால் வாந்தி எடுக்க முடியாது .
  8. வெனிசுவேலா நாட்டில் உள்ள ஏஞ்சல் எனும் நீர்விழ்ச்சி கனடாவின் நயகரா நிர்விழ்சியை விட 20 மடங்கு உயரமானது .
  9. எறும்புகள் ஒரு போதும் தூங்குவதில்லை
  10. கிறிஸ் நாட்டின் தேசிய கீதம் 158 வரிகளை உள்ளடக்கியது .
  11. நலமாக இருக்கும் ஒரு மனிதக் கண்ணால் 17000 நிறங்களை பிரித்தறிய முடியும் .
  12. 80 வீதமான குத்துசசண்டை வீரர்கள் மூளை பாதிப்பினால் அவதியுறுகின்றனர்.
  13. ஒப்பிட்டு அளவில் மனித உடலில் உள்ள மிகப்பலமான தசைப்பகுதி நாக்கு ஆகும் .
  14. கேன்(தகர டப்பாக்கள் )கண்டு பிடிக்கப்பட்டு 48 ஆண்டுகளின் பின்னரே Can opener  கண்டு பிடிக்கப்பட்டன .
  15. ஒரு பெண் மக்றல் மீன் ஒரு நாளைக்கு சராசரியாக (500000) ஜந்து இலட்சம் முட்டைகளை இடும்.
  16. தேனீக்கள் மணிக்கு பதினைந்து மைல் வேகத்தில் பறக்க கூடியவை .
  17. உலகின் மிகச்சிறிய நாடு வத்திக்கான் (௦.17  சதுர மைல்கள்) சனத்தொகை  10000 ..இரண்டாவது சிறிய நாடு மொனாக்கோ (௦.7 சதுரமைல்கள் )
  18. ஒரு மனித இதயம் 1.5 மில்லியன் கலன் இரத்த சுற்றோட்டத்தை ஏற்படுத்துகிறது .
  19. 60 வயதினை அடையும் போது மனிதனின் நாக்கில் இருக்கும் சுவை அரும்புகளில் 80 வீதமானை இறந்துவிடும் .
  20. வளர்ந்த ஓட்டசிவிங்கியின் நாக்கின் நீளம் 21 அங்குலம் .இதை வைத்து அது தனது காதையும் சுத்தப்படுத்திக் கொள்ளும் .

Sunday, October 28, 2012

வெண்டைக்காய் சாப்பிடுங்கள் சர்க்கரை வியாதி கட்டுப்படும்!

வெண்டைக்காய் சாப்பிடும்படியும் அது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைப்பதாகவும் எனக்கு ஒரு மெயில் வந்தது .கண்டதையும் போர்வேட் செய்யும் நண்பர் அனுப்பிய மெயில் அது .உண்மைதான அது என சோதனை செய்து பார்க்க எனது தந்தைக்கு பரிந்துரைத்தேன் .அவரும் வெண்டைக்காய் உண்டு விட்டு இரத்தத்தில் வெல்லத்தின் அளவை பரிசோதித்துப்பார்த்த போது வெல்லத்தின் அளவு இரத்தத்தில் குறைந்து காணப்பட்டது .

சரி என்று சொல்லி அவர் சில தினங்கள் அம்முறையினை பின்பற்றி  வந்தபோது அவருக்கு தும்மல் தடிமன் வந்து விட்டது .எனவே அவர் இப்போது கிழமையில் முன்று தினங்கள் மட்டும் வெண்டைகாய் மருத்துவம் செய்து வருகிறார்.

சரி எப்படி அதைப்பின்பற்றுவது ? வழிமுறை இங்கே .உங்கள் உடல்நலத்துக்கு ஏற்ப எச்சரிக்கையோடு சொந்தப்பொறுப்பில் பின்பற்றவும். (ஹி..ஹி. நிதிமன்றம் கரிகாலனின் மனக்கண்ணில் )சரி ,இனி விபரங்கள்

  • ஒரு வெண்டைக்காய்  எடுத்து நன்கு கழுவிக் கொள்ள  வேண்டும். பின் அதன் இரு முனைகளையும்(அடி ,நுனி) நீக்கிவிட வேண்டும்.
  • முனைகளை நறுக்கியப்பின் சிறு சிறு துண்டுகளாக வெட்டி , ஒரு டம்ளர் நீரில் அந்த துண்டுகளை போட்டு, இரவில் படுக்கும் முன்பு ஊற வைத்து, மறக்காமல் மூடிவிட வேண்டும்.
  • பின் காலையில் எழுந்து, அந்த துண்டுகளை நீக்கிவிட்டுப்பார்த்தால் வழவழ நீர் இருக்கும் , அந்த நீரை குடிக்க வேண்டும்.
  • இதனை தினமும் காலையில் வெறும் வயிற்றில்  குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்துவிடும்.
  • சொல்லப்போனால் வெண்டைக்காயை வேக வைத்து சாப்பிடுவதை விட, இவ்வாறு சாப்பிடுவது தான், சிறந்த பலனைத் தரும்.
  • அடிக்கடி உங்கள் இரத்தத்தினை பரிசோதிக்க வேண்டும் .இரத்தத்தில் சர்க்கரை கூடினாலும் பிரச்சனை குறைந்தாலும் பிரச்சனை .

இதன் விஞ்ஞான ரீதியிலான விளக்கம் எனக்கு தெரியவில்லை .அத்துடன் மருத்துவ ரீதியில் வைத்தியர்கள் எப்படி இதை பார்க்கிறார்கள் என்பதும் தெரியவில்லை .வெண்டைக்காய் போலவே சிறு குறிஞ்சா .பாவக்காய் ,வெந்தயம் சின்ன சீரகம் போன்றவையும் இரத்தத்தில் வெல்லத்தின் அளவை குறைப்பதாக நீரிழிவு நோயாளிகள் சொல்கிறார்கள் .ஏன் கொய்யாப்பழம் கூட நீரிழிவை குறைப்பதாக சொல்கிறார்கள் .ஆனால் இதனால் ஏதாவது பின்விளைவுகள் வருமா என்பது பற்றி அலோபதி வைத்தியர்கள் தான் சொல்லவேண்டும் .பாவற்காய் அடிக்கடி சாப்பிடுவது உடலில் நீர்சத்தினை குறைக்கும் என்பதாக ஒரு தகவலும் உண்டு

நன்றி .உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்

விஷ் யு ஏ ஹாப்பி நியூ இயர்! இளையராஜா, கமல்ஹாசன்

 

இன்னும் சரியா இரு மாதங்களில் அதாவது டிசெம்பர் மாதம் 31 திகதி இரவு மணி 11.59. க்கு உலகெங்கும் இருக்கும் தமிழ் வானொலிகள் மற்றும் தொலைக்காட்சிகளில் ஒலிக்கப்போகும் ஒரு பாடல் .கடந்த இருபது வருடங்களாக ஆங்கிலப்புத்தாண்டை வரவேற்கும் ஒரு தமிழனின்  தமிழ் தேசிய கீதம் .ஆம்  சகலகலாவலவனின்” இளமை இதோ இதோ”.இருபது வருடங்களை கடந்தும் இந்தப்பாட்டை அடித்துக்கொள்ள   இசையாலும் சரி மேட்டாலும் சரி ஒரு பாடல் இன்னும் வரவில்லை .புத்தாண்டின் புத்துணர்ச்சியை கேட்பவர் மனதில் அப்படியே கொண்டு வருவதில் இப்பாடலுக்கு அருகில் எந்தப்பாடலும் கிட்ட நிற்க முடியாது .ஆப்படி ஒரு  புத்துணர்ச்சி தரும் இப்பாடல் .

பாடலுக்கு மெட்டமைத்து இசையமைக்கும் போதும் சரி அதைப்படமாகும் போதும் சரி இப்பாடல் ஆண்டுகளை கடந்தும் ஒ(ளி)லித்துகொண்டிருக்கும் என்று சம்பந்தப்பட்டவர்களே நினைக்கவில்லையாம் .ஆனால் காலங்களை கடந்தும் கமல்ஹாசன்,இளையராஜா இவர்களின் பெயரினை சொல்லும் என்பது மட்டும் நிச்சயம் .

ஆங்கில புத்தாண்டு கொண்டாடங்கள் பிரபல்யம் இல்லாத காலத்தில் வந்த இப்பாடல் ஆங்கில புத்தாண்டு கொண்டாடும் இக்  காலத்திலும் ஈடு கொடுத்து நிர்ற்பதால் இப்பாடலையே சகலாகலாவல்லவன் எனலாம்.

பாரதி ராஜா போன்றவர்களால் நல்லதொரு வழியில் சென்ற  தமிழ்சினிமா உலகம் ஏவிஎம் இன் சகலகலாவல்லவன் படத்தால்,இதன் வெற்றியால் மீண்டும் மசாலா பட தயாரிப்புக்கே திரும்பியதாக ஒரு குற்றசசாட்டு ஒன்று உண்டு .இது உண்மையும் கூட.

Saturday, October 27, 2012

பெண்கள் எந்த விசயத்தில் சிறப்பாக செயல்படுவார்கள்?ஆண்கள் எந்த விசயத்தில் சொதப்புவார்கள் ? ஒரு ஆய்வு

 

ப்படிப்பட்ட கேள்விகளுக்கு எல்லாம் விடை தெரிந்து கொள்ள ஆர்வமாகக் வந்திருப்பிர்கள். இக் கேள்விக்கெல்லாம் விடை தெரிந்தால் பலருடை குடும்ப வாழ்க்கை இனிதாகவே இருக்கும் .ஆனால் பெண்களின் மனதினை ஆழ்கடலுக்கு ஒப்பிடுவார்கள் .ஆனால் கொஞ்சம் முயற்சி செய்தால் அந்த ஆழ்கடலின் ஆழத்தினை அளவிட்டுப்பார்த்து விடலாம் .அதாவது பெண்களின் மனதை பற்றி அறிந்து கொள்ளலாம்

.

பெண்களின் மனதை அறிந்து கொள்ள தேவைபடுவது   எல்லாம் கொஞ்சம் அன்பும். பாசமும்,அக்கறையும் அத்துடன் நீங்கள் உண்மையான அக்கறையும் பாசமும் வைத்திருக்கின்றிர்கள் என்ற நம்பிக்கையுமே.இதைப்படிக்கும் .ஆண்களே சொல்லுங்கள் உங்களுக்கு உடல் நலம் இல்லாமல் போகும் பொது உங்கள் மனைவி உங்கள் மீது காட்டும் கரிசனைக்கும் ,உங்கள் மனைவிக்கு உடல் நலம் இல்லாமல் போகும் போது நீங்கள் காட்டும் கரிசனைக்கும் நிச்சயம் வேறுபாடு இருக்கும். இதை நீங்கள் கண்டிப்பாக ஒப்புக்கொண்டே ஆவீர்கள் .

சரி விடையத்துக்கு வருகிறேன் .பெண்களைப்பற்றி சில உளவியலாளர்கள் கண்டு பிடித்த சில அடிப்படை உண்மைகளை இனி நான் சொல்லப்போகிறேன் .நான் சொல்லுவது சரிதானா என நீங்கள் படித்துவிட்டு சொல்லுங்கள்,

  • பெண்கள் பல திறன்  கொண்டவர்கள் .அவர்களால் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை செய்யமுடியும்..போனில் பேசிக்கொண்டே அலுவலக வேலையையும் கவனம் சிதறாமல் செய்து கொண்டு பொஸ் வருகின்றாரா எனவும் கவனிக்க அவர்களால் முடியும்.ஒரே நேரத்தில் அடுப்பில் நாலு கறி வைத்து  சரியாக உப்பு, புளி,காரம் போட்டு சமைக்க முடியும் .அவர்களின் முளையும் அதற்கேற்ப பல்முகத்தன்மை கொண்டதாக அமைந்துள்ளது ஆண்களால் இப்படி  ஒரே நேரத்தில் எல்லாவறையும் செய்ய முடியாது.
  • ஆண்கள் பொய் பேசினால் பெண்களால் உடனேயே  கண்டுபிடித்துவிடமுடியும்.ஆண்களின் முகபாவனை ,அங்க அசைவுகள் ,வார்த்தை உச்சரிப்பு இவரை வைத்து பொய் என்பதை கண்டுபிடிக்கிறார்கள் .ஆண்கள் பெண்களுடன் இருக்கும் போது இவற்றை எங்கு கவனிக்கிறார்கள் .விளைவு அவள் என்னை ஏமாற்றி விட்டாள் என்று சொல்லிகொண்டு தாடி வளர்த்துக்கொண்டு திரிகிறார்கள் .இதிலும் ஆண்கள் சொதப்பல் தான் .
  • குழப்பமான நேரங்களில் ஆண்கள் தனியாக அமர்ந்து யோசித்துக்கொண்டு இருப்பார்கள் ,ஆனால் பெண்கள் பிரச்சைகளை மனதில் போட்டு குழப்பிக்கொள்ளாமல் அன்புக்குரியவ்ர்களிடம் சொல்லிவிட்டு அதை மறந்துவிடுவார்கள் .
  • ஆண்களின் சிந்தனை, செயல் எல்லாம் மதிப்பு ,வெற்றி ,தீர்வு பரறறியே இருக்கும் பொதுவாக சுயநலவாதிகள் ,அனால் பெண்களின் சிந்தனைகள் எல்லாம் குடும்பம் ,நண்பர்கள்,உறவுகள் இப்படிதான் இருக்கும் .
  • பெண்கள் எதையும் யோசிக்காமல் பேசிக்கொண்டே இருப்பார்கள் ,ஆனால் ஆண்கள் எதையும் யோசிக்காமல் செய்வார்கள் .
  • உறவுக்குள் ஒரு பிரச்சனை என்றால் பெண்களால் அவர்களின் எந்த வேலையிலும் கவனம் செலுத்தமுடியாது .ஆண்கள் அப்படியல்ல .
  • ஒரு ஆண் சந்தோசமா இருக்க நல்ல வேலை வேண்டும் கூடுதலாக சந்தோசமாக இருக்க மது ,மாது ஏதாவது வேண்டும் .அனால் பெண்களுக்கு கணவன்,பிள்ளைகள் ,நல்ல உறவு நல்ல உறவினர்கள் ,நல்ல பொழுது போக்கு,நல்ல சந்தோசம் இப்படி எல்லாமே நல்லாகை இருந்தால் மட்டுமே அவர்கள் திருப்பி அடைவார்கள்
  • பெண்கள் எதனையும் சுற்றி வளைத்துத்தான் பேசுவார்கள்.ஆசைகளையும் ஒளிவு மறைவாகவே வெளிப்படுத்துவார்கள் ஆண்கள் நல்லதோ கெட்டதோ விடையத்தை பட்டேன போட்டு உடைத்துவிடுவார்கள்.ஆசையையும் கொட்டித்தீர்த்து விடுவார்கள் .
  • பெண்கள் இதயத்தால் சிந்தித்தால் ஆண்கள் மூளையால் சிந்திப்பார்கள்

இப்படிப்பட்ட, பெண்களை புரிந்து கொண்டவர்களை நாம் என்ன பெயரால் அழைக்கிறோம் தெரியுமா? “காதல் மன்னன் “என்று .அதாவது பெண்களின் மனதை புரிந்து கொண்டவன், பல பெண்களை வசிகரிப்பவனை பாருங்கள் என்னத்தை பார்த்து பெண்கள் இவனிடம் மயங்குகிறார்கள் என்ற கேள்வி நம்மிடம் எழும் .பெண்களை வசிகரிக்க,ஆழகு ,அந்தஸ்து ,பணம், படிப்பு தேவை இல்லை .தேவையானவை பெண்களின் மனதை புரிந்து கொள்ளும் ஆற்றல் மட்டுமே ..பெண்களே என்ன சொல்கின்றீர்கள் ?  

.இப்போது காதல் மன்னன் ஆக நீங்கள் தயாரா?இதை வாசித்த பின்னர் உங்கள் மனைவியின் அல்லது காதலியின் மனதினை புரிந்து கொள்ள நிங்கள் முயற்சி செய்வீர்களாயின் நீங்கள் காதல் மன்னன மட்டும் அல்ல நீங்கள் ஒரு மன்மத ராஜாவும் கூட .

சரி இங்கே ஒருவர் எமக்கு சொல்லித்தருகின்றார் எப்படி பெண்களை “பிக்கப் பண்ணுவது “என்று .படித்தும் புரிந்து கொள்ள முடியாதவர்கள் அதாவது பெண்களை புரிந்து கொள்ளமுடியாதவர்கள் அதன் காரணமாக பெண்களை “பிக்கப்”பண்ண முடியாதவர்கள் இவ் வீடியோவை பார்த்து பெண்களை “பிக்கப்" பண்ண  கற்றுக்கொள்ளலாம். எது வசதியோ அதனைப் பின்பற்றலாம் .முயற்சி திருவினையாக்கும் .

கரிகாலன் எப்படி என்று கேட்கலாம் ,நான் எங்கேயும் எப்போதும் ராஜா தான் அதாகப்பட்டது மன்மத ராஜா தான்!!!! 

வீடியோ :-

Friday, October 26, 2012

அல்லாவின் நாமமா அல்லது மகிந்தவின் நாமமா? எதை உச்சரிப்பது!

 

லங்கையில் ஒரு ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அத்துடன் அமைச்சரும் கூட அண்மையில் பாராளுமன்றத்தில் மகிந்தவை அளவுக்கதிகமாக் புகழப் போய் சிக்கலில் மாட்டுப்பட்டுப்போய் இருக்கிறார் .இலங்கையின் முஸ்லிம் சமய கலாசாரதுறை அமைசசர் ஏ.எச் .எம் .அஸ்வர் என்பவரே அவராவார்.

News Service

இவர் நீண்டகாலமாக ஜக்கிய தேசிய கட்சியில் இருந்துவிட்டு கதிரை ஆசையால் ஆளும்கட்சி பக்கம் தாவியவர்.அத்துடன் இவர்  இப்போது முஸ்லிம் சமய ,கலாசார அமைச்சராகவும் இருக்கிறார் .மதம் மாறியவர் ஏற்கனவே அம்மதத்தில் இருந்தவரை விட அதிக  சீன் காட்டுவார் .அதைப்போல இவரும் விசுவாசத்தில் சீன் காட்ட போய் அவர் சார்ந்த மதத்தினரால்  மதரீதியில் நடவடிக்கை மேற்கொள்ளும் நிலைக்கு உள்ளாகி இருக்கிறார் .

இலங்கை பாராளுமன்றத்தில் கிரிக்கெட் ஆட்ட சதி பற்றி நடைபெற்ற ஒரு விவாதத்தின் போது உரையாற்றிய அஸ்வர்

இலங்கை கிரிக்கெட்டில் ௭ந்தவித ஊழலும் மோசடியும் கிடையாது. தற்போது இலங்கையில்  விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் நடவடிக்கைகளை ஜனாதிபதி மேற்கொண்டு வருகின்றார். வடக்கு, கிழக்கிலும் கிரிக்கெட் துறை ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது.

எனவே, ஜனாதிபதி மஹிந்தவின் நாமத்தை மந்திரமாக உச்சரித்து வந்தால் நன்மை கிடைக்கும். வெற்றிக்கோப்பையை கைப்பற்ற வேண்டுமெனில் தொடர்ந்து மஹிந்த ராஜபக்‌ஷவின் பெயரை உச்சரியுங்கள் என விளையாட்டு வீரர்களுக்கு  அறிவுரையும் தெரிவித்தார் அஸ்வர்.

அதுதான் இப்போது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.அவரின் உரையானது முஸ்லிம்களின் ,இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்ப்பதாக உள்ளது என்பதால் இதற்காக அவர் தவ்பா செய்வதுடன் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என அகில இலங்கை உலமா கட்சி கருத்து  தெரிவித்துள்ளது.

அஸ்வரின் மகிந்தவின் நாமத்தினை உச்சரிப்பது சம்பந்தமாக உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்திருப்பதாவது, இஸ்லாத்தை பொறுத்தவரை இறைவனின் பெயரை உச்சரிப்பதால் மட்டுமே ஒருவனுக்கு நன்மை கிடைக்கும் என்றும் இறைவன் அல்லாதவன் பெயரை உச்சரிப்பதால் நன்மை கிடைக்கும் என ஒருவர் நம்பினால் அவர் இணைவைத்து விட்டார் என்பதே இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையாகும்.

இது பற்றி நன்கு தெரிந்திருந்தும் ஏ எச்.எம். அஸ்வர் இவ்வாறு பேசியிருப்பதன் மூலம் அவர் இஸ்லாத்தை வேண்டுமென்றே அவமதித்துள்ளதோடு தனது எஜமான விசுவாசத்துக்காக இறைவனைக்கூட உதாசீனம் செய்துள்ளமை முஸ்லிம் சமூகத்துக்கு மிகப்பெரிய அவமானமாகும். என்றும் சொல்லியுள்ளார் .அத்துடன் அவர் மேலும்

நாடாளுமனறம் என்பது மக்களின் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்கும் அவற்றுக்கான தீர்வுகளை பெறுவதற்குமான உயரிய இடமாகும். அப்படியான இடத்தில் பேசப்படும் அனைத்து விடயங்களும் பதிவு செய்யப்படுகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்வரின் இக்கூற்று இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் மிகப்பெரிய அழுக்காகவே பதிவு செய்யப்படும்.என்பதுடன் இவருடைய கூற்றை பார்க்கும் போது இவர் உணவு உண்ணும் போதும் பிஸ்மில்லாஹ் என்று இறைவன் நாமத்தை கூறாது பிஸ்மி மஹிந்த என்றே சொல்லி உணவு உண்ணுவார் போல இருக்கின்றது. இத்தகைய ஒருவர் முஸ்லிம் சமய கலாச்சார அமைச்சராக இருந்ததை எண்ணி வெட்கப்படுகிறோம்.

இன்றைய பதவிகள் என்பன உலகின் இன்பங்களாகவும் சோதனைகளாகவுமே உள்ளன. அப்பதவிகளுக்காக இஸ்லாத்தையே அவமதிப்பது என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். ஆகவே அஸ்வர் தனது இணைவைப்பு கருத்திற்காக மன்னிப்பு கோருவதோடு இதற்கெதிராக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை பகிரங்க தீர்ப்பு வழங்க வேண்டும் எனவும் உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது. என்று தனது அறிக்கையில் கேட்டுள்ளார் .

அமைச்சர் பாவம் . பிள்ளையார் பிடிக்கபோய் குரங்காய் வந்ததற்கு என்ன பண்ணுவார்.அமைச்சரின் நிலை யாருக்கு தெரியும்?எனக்கு ஒரு சந்தேகம் அமைச்சர் அடிக்கடி “அம்மாவின்” அமைச்சர்களின் அறிக்கைகளை இணையத்தில் படிப்பாரோ?

சரி இது இலங்கையில் பெரிய பிரச்னையாக வரும் என்று நினைக்கின்றிர்களா?இலங்கை விடையமே தெரியாத ஆளாக இருப்பிர்கள் போல் உள்ளதே ஒரே ஒரு வெள்ளை வாகனம் போதும் எல்லாவறையும் சமாளிக்க..

Thursday, October 25, 2012

மனிதனைப்போலவே பேசும் அமெரிக்க திமிங்கிலம் -ஆய்வாளர்கள் ஆச்சரியம்

 

மெரிக்காவைச் சேர்ந்த அதிசய வெள்ளைத்திமிங்கலம் ஒன்று மனிதனைப்போல பேச்சொலி எழுப்புவது ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.இந்த அதிசய திமிங்கிலத்தின் திறமையை கண்டுபிடித்த கதையே ஒரு சுவாரசியமான கதைதான்.

கலிபோர்னியாவில் இருக்கும் தேசிய கடல்வாழ் பாலூட்டிகள் ஆய்வுமையத்தில் பணிபுரியும் ஆழ்கடல் மூழ்குபவர் ஒருநாள் நீருக்குள் மூழ்கியிருந்தார். அவர் திடீரென நீரிலிருந்து மேலே வந்தார். வந்தவர் என்னை உடனடியாக நீரிலிருந்து மேலே வரச்சொல்லி கூப்பிட்டது யார் என்று கேட்டார்.

கரையில் நின்றவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. காரணம் அவரை நீரிலிருந்து மேலே வரும்படி அவர்கள் யாரும் சொல்லவில்லை. ஆனால் நீரில் மூழ்கியிருந்தவரோ தனக்கு மேலே வரச்சொல்லி குரல் கேட்டதாக அடித்துச் சொன்னார். அவர்கள் இருந்த இடத்தில் அவர்களைத் தவிர வேறு யாருமே இல்லை. சில திமிங்கலங்களைத்தவிர.

ஆய்வாளர்களுக்கு லேசாக சந்தேகம் தட்டியது. இந்த திமிங்கலங்கள் ஏதாவது குரல் எழுப்பியிருக்குமோ என்று சந்தேகப்பட்டவர்கள், அந்த திமிங்கலங்களை கண்காணிக்கத்துவங்கினார்கள். சில தினங்களிலேயே அவர்களின் சந்தேகம் நிஜமானது .

என் ஓ சி என்று பெயரிடப்பட்டிருந்த ஒன்பது வயது பெலூகா இன வெள்ளைத்திமிங்கிலம் தான் மனிதர்களை மாதிரி ஒலி எழுப்புகிறது என்று அவர்கள் கண்டுபிடித்தபோது அவர்களின் ஆச்சரியம் பலமடங்கானது.

காரணம் இதுநாள் வரை டால்பின்களை மட்டுமே மனிதனை மாதிரி ஒலி எழுப்புவதற்கு பயிற்றுவிக்க முடியும் என்று நினைத்திருந்த ஆய்வாளர்களுக்கு, இந்த வெள்ளைத்திமிங்கலம் எந்த பயிற்சியும் இல்லாமல், தானாகவே மனிதர்களைப் போல பேச முயல்வது மிகப்பெரிய ஆச்சரியமாக அமைந்தது.

அந்த பகுதி மீனவர்கள் மத்தியில் உலவும் நாடோடிக்கதைகளில் திமிங்கிலங்கள் மனிதனைப்போல பேசியதாக சம்பவங்கள் இடம்பெற்றிருந்தாலும் அதற்கான ஆவணப்படுத்தப்பட்ட சான்றுகள் எவையும் இல்லை.

எனவே இந்த குறிப்பிட்ட திமிங்கலம் எப்படி இந்த ஒலிகளை எழுப்புகிறது என்பதை தொடர்ந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர்.இதன்படி, இந்த என் ஓ சி எழுப்பும் ஒலிகளை பதிவு செய்த ஆய்வாளர்கள், இந்த ஒலிகள் மனிதர்களின் பேச்சு ஒலிகளைப்போலவே கால அளவிலும் ஓசையின் ஒலியை அளக்கப்பயன்படுத்தப்படும் மாத்திரை அளவிலும் அமைந்திருப்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்தனர். அடுத்த கட்டமாக இந்த திமிங்கிலம் இந்த ஒலியை எப்படி எழுப்புகிறது என்பதை ஆராய்ந்தனர்.

அவர்களுக்கு அங்கே மிகப்பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. திமிங்கலங்கள் வழமையாக ஒலி எழுப்புவதற்கு செய்யும் முயற்சிக்கு மாறாக இந்த என் ஓ சி திமிங்கலம், மனிதர்களைப்போல ஒலி எழுப்ப நினைக்கும்போது தனது மூக்குப்பகுதியில் இருக்கும் வெற்றிடத்தில் ஏற்படும் அழுத்தத்தை வேறு விதமாக மாற்றியமைத்தது.

நுரையீரலுக்குள் தண்ணீர் போகாமல் தடுப்பதற்காக, இதன் தலைக்கும் உடலுக்கும் இடையில் அமைந்திருக்கும் காற்றடைத்த பை போன்றதொரு உடலுறுப்பை, இந்த திமிங்கலம் கஷ்டப்பட்டு ஊதிப்பெரிதாக்கி மனிதனைப்போல பேச முயல்வதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.

சுருக்கமாக சொல்வதானால் மனிதனைப்போல பேசுவது என்பது இந்த வெள்ளைத்திமிங்கலத்துக்கு சுலபமான விடயமல்ல. ஆனால் அதற்கு அதில் ஆர்வம் இருக்கிறது. இந்த ஒலிகள் மூலம் அது மனிதர்களுடன் பேச விரும்புகிறது என்பதை அவர்கள் உறுதி செய்தனர்.

அதேசமயம், யாருடைய தூண்டுதலும் இல்லாமலே இந்த திமிங்கலம் இந்த sமுயற்சியில் ஏன், அல்லது எப்படி ஈடுபட்டது என்கிற கேள்விக்கு மட்டும் ஆய்வாளர்களால் விடை காண முடியவில்லை.

அனால் எனக்கு ஒரு சந்தேகம் சிவனே என்று இருந்த இந்த திமிங்கிலம் மனிதனைப்போல பேச முயற்சித்து என்ன பாடுபடப்போகுதோ ,?

Tuesday, October 23, 2012

எகிப்தியர்கள் பாலியல் வெறியர்களா?

 

நேற்று எகிப்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் கடந்த கால சம்பவங்களின் நீட்சியாகவே  பலரால் கருதப்படுகிறது .நேற்றிரவு எகிப்தின் கெய்ரோ நகரின் தாகிர் சதுக்கத்தில் நடைபெற்ற ஒரு அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தினை நேரடி ஒளிபரப்பு செய்ய பிரான்சின் தொலைக்காட்சியான பிரான்ஸ் –24 ஆனது தனது பெண் அறிவிப்பாளரை அனுப்பி இருந்தது .சோனியா திதிரி என்கிற அப்பெண் அறிவிப்பாளர் தனது நேரடி ஒளிபரப்பை தொடர்ந்தபோது அவரை சுற்றியிருந்து பார்த்துக்கொண்டிருந்த  ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாலியல் ரீதியிலான தாக்குதல்களை அவர்மேல் நடத்த தொடங்க ,முத்தமிட முயற்சிக்க அது நேரடி ஒளிபரப்பில் ஒளிபரப்பாக உலகெங்கிலும் பரபரப்பு ஏற்பட்டது .

பின்பு ஒருவாறு அவருடைய இன்னுமொரு பத்திரிகையாளர் நண்பர் மூலமாக அவர் இத்தாக்குதலில் இருந்து மீண்டு கொண்டாலும் இச்சம்பவத்தின் அதிர்ச்சி விலகாமல் அவர் காணப்பட்டாராம் .பின்பு அவருக்கு பதிலாக வேறு ஒருவரை வைத்து நேரடி ஒளிபரப்பு இடம்பெற்றது .அவர் மீதான பாலியல் ரீதியான தாக்குதல் சம்பவத்தினை அவர் சார்ந்த தொலைக்காட்சி நிறுவனம் இப்போது உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டிருக்கிறது .

இது மட்டும் அல்ல கடந்த காலங்களில் பல பெண் நிருபர்களின் மீது பாலியல் ரீதியான பல தாக்குதலகள் இடம்பெற்றுள்ளன .எகிப்தின் கடந்த காலத்தில் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் (கோஸ்னி முபாறுக்) போது அரசு தரப்பாலும்,எதிர் தரப்பாலும் பல பாலியல் ரீதியான பல சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டன .அப்போது உள்நாட்டு ,வெளிநாட்டு பெண் பத்திரிகையாளர்கள் மட்டும் அல்ல பல உள்நாட்டு பெண்கள் மீதும் சந்தடி சாக்கில் பாலியல் வல்லுறவுகள் மேற்கொள்ளப்பட்டன .

இணையத்தில் தேடினால் நிறைய சம்பவங்கள் காணக்கிடைக்கிறது .அமெரிக்க பெண் நிருபர் ,இங்கிலாந்து பெண் நிருபர் ,இப்படி பட்டியல் நீளுகிறது ,

சரி ஏன் இப்படி பெண் நிருபர்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள் என்று பார்த்தால் அது அவர்களின் மத நம்பிக்கையில் போய் நிற்கிறது .முக்காடு இல்லாமல் இப்படியான் தொழில்களில் ஈடுபடும் பெண்கள் மீது தாக்குதல் நடத்த அவர்களுக்கு  அதிகாரத்தினை கொடுக்கிறது.

தாக்குதல் என்றால் என்னவகை என்று கேள்வி எல்லாம் கேட்ககூடாது .அது பாலியல் வகையான தாக்குதலாக கூட இருக்கலாம் .அதற்கும் ஆண்களுக்கு  அனுமதி உண்டு.

இப்போது உங்களுக்கு ஏன் தாக்குதல் நடைபெறுகிறது என்பதில் சந்தேகம் இல்லை தானே .

சரி இவ்வளவு சொல்லிவிட்டேன் அந்த வீடியோவினையும் தந்துவிடுகிறேன் .

நேர்முக வர்ணனையில் பெண் அறிவிப்பாளர். .சிவனே????????என்று பின்னணியில் நிற்கும் கூட்டம்,அவர்களின் முகபாவனை .அறிவிப்பாளர் மீது திடீரென கை வைப்பவர் .செய்தியாளரை விட்டு விலகும் கமெரா .

ஏவ்பி செய்தி நிறுவனத்தின் செய்தி

நன்றி