Monday, November 11, 2024

வினை விதைத்தவன் தினை அறுப்பான் - கனடா-ஜஸ்டின் ரூடோ

           தமிழில் ஒரு பழமொழி  இருக்கிறது தலை போன பின்பு சாண் போனால் என்ன முழம் போனால் என்ன என்று ,கிட்டத்தட்ட 

அதே  போல ஒரு நிலைதான் கனேடிய மக்களுக்கு  எவ்வளவு சேதத்தை உண்டாக்க  முடியுமோ எல்லாவற்றையும் செய்தாகி

விட்டது .இப்போது கடுப்பாடுகள் .யாரை ஏமாற்ற இதை செய்கிறார்கள் ?மக்கள் எல்லாவற்றையும் 

பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் .பதில் வரும் வருடம் கடுமையாக, கண்டிப்பாக கிடைக்கும் ,

       

Monday, July 22, 2024

கனடாவுக்கு படிக்க வந்தால், படித்துமுடித்துவிட்டு உங்கள் நாட்டுக்குத் திரும்பிப் போங்கள்.

 கனடாவுக்கு படிக்க வந்தால், படித்துமுடித்துவிட்டு உங்கள் நாட்டுக்குத் திரும்பிப் போங்கள் என்று கூறியுள்ளார் கனடாவின் புலம்பெயர்தல் துறை அமைச்சர்.

கனடாவில் நிலவும் வீடுகள் தட்டுப்பாடு முதலான சில பிரச்சினைகள், கனடா பிரதமரின் அரசியல் வாழ்க்கைக்கு பெரும் சவாலாக மாறியுள்ளன.

ஆகவே, கனடாவுக்கு கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்களுக்கு வழங்கப்படும் விசா எண்ணிக்கையை கணிசமாக குறைத்துள்ளது னடா

இந்நிலையில், சர்வதேச மாணவர்கள் தொடர்பில் மேலும் ஒரு கட்டுப்பாட்டைக் கொண்டுவர கனடா அரசு முயற்சி செய்துவருகிறது.

அதாவது, கனடாவுக்கு கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்களில் யார் கனடாவில் தொடர்ந்து தங்கியிருக்கலாம், யார் வெளியேறவேண்டும் என்பது குறித்து முடிவு செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுவருகிறார்கள்.

அது குறித்து பேசிய கனடா புலம்பெயர்தல் துறை அமைச்சரான மார்க் மில்லர், கனடாவுக்கு படிக்க வருபவர்கள், படித்துமுடித்துவிட்டு தங்கள் நாட்டுக்குத் திரும்பிப் போகவேண்டும், ஆனால், இப்போதைய நிலைமை அப்படி இல்லை என்று கூறியுள்ளார். அத்துடன்  சர்வதேச மாணவர்கள் எனும் போர்வையில் நிறைய குற்றாவாளிகள் வந்து விடடார்கள் என்பதையும் சொல்லி இருக்கிறார்.

 வரும் வ்ருடங்க்ளில் சர்வதேச மானவ்ர்களின் எண்ணிக்கையை  கனேடிய அரசு பெருமளவில் குறைக்க இருக்கிறது ...

Sunday, March 31, 2024

திமுக -இரு பக்கங்கள்.

 திமுக என்ற கட்சிக்கு இரண்டு பக்கங்கள் இருக்கிறது.

ஒன்று அதிகாரத்தால் கோடீஸ்வரர்களாகி ” குறுநில மன்னர்கள் “போல்  இருப்போர் ஒரு பக்கம்.

இன்னொரு பக்கம் – கட்சி- கொள்கை- கரைவேட்டி- தலைவர் என்று கூறிக் கொண்டே வாழ்க்கை முழுவதும், தான் இருந்த இடத்திலிருந்து சற்றும் உயர்வை நோக்கி நகராமல், டீயோடும், பண்ணோடும் இருப்போர்.

பவா சமத்துவன்

Wednesday, February 28, 2024

கொண்டாடுங்கள்!

  வாழ்க்கையில் உங்களுடன் கூட இருக்கும்  

 போதே மதிப்பளியுங்கள்,கொண்டாடுங்கள் .

கால ஒட்டத்தில்,  ஒரு நாள் நீங்கள் உணரும் பொழுதுகளில் அவர்கள் உங்களுடன்

இல்லாமல் போய் இருக்கலாம் . அந்த தருணங்களில்

 கழிவிரக்கம் ,குற்றஉணர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக 

கொன்று கொண்டு இருக்கும் . எனவே இருக்கும் பொழுதுகளிலே கொண்டாடுங்கள் .