Friday, March 29, 2013

ஜெனிவாவுக்கு பழிதீர்க்குமா சிறிலங்கா? – நடுக்கத்தில் இந்தியா

 

புதினப்பலகை இணையதளத்தில் வெளிவந்த   கட்டுரை இது .நன்றியுடன் இங்கே பயன்படுத்தி இருக்கிறேன் .நட்பு நாடு ,நட்பு நாடு என்கிறார்களே நட்பு நாட்டின் இலட்சணத்தை பார்திர்களா?

சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கு இடையில் ஏற்பட்டுள்ள இராஜதந்திர ரீதியான முறுகல், இந்தியாவின் மோட்டார் வாகன ஏற்றுமதியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறிப்பாக மனிதஉரிமைகள் விவகாரத்தில் இந்தியா இராஜதந்திர ரீதியாக எடுத்துள்ள நிலைப்பாடு, இந்தியாவின் மோட்டார் வாகன ஏற்றுமதித்துறையில் தாக்கத்தை செலுத்தியுள்ளது.


கடந்த ஆண்டு ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களித்ததை அடுத்து, இந்திய வாகனங்களின் இறக்குமதிக்கான தீர்வைகளை சிறிலங்கா அதிகரித்தது.
இந்த ஆண்டும் சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களித்துள்ளதால், கடந்த ஆண்டைப் போலவே அது மோட்டார் வாகனத்துறையில் எதிர்விளைவை ஏற்படுத்தக் கூடும் என்று இந்திய உற்பத்தியாளர்கள் அச்சம் கொண்டுள்ளனர்.
கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கான தீர்வையை 120 தொடக்கம் 291 வீதத்தில் இருந்து 200 தொடக்கம் 350 வீதமாக அதிகரித்தது சிறிலங்கா.


அதுபோலவே,முச்சக்கரவண்டிகளுக்கான இறக்குமதித்தீர்வை 51 தொடக்கம் 61 வீதத்தில் இருந்து 100 வீதமாக அதிகரிக்கப்பட்டது.
இருசக்கர வாகனங்களுக்கான இறக்குமதித் தீர்வையும் 61வீதத்தில் இருந்து 100 வீதமாக அதிகரிக்கப்பட்டது.
ஐந்து மாதங்களுக்கு முன்னர் சுங்க வரியையும் சிறிலங்கா அதிகரித்தது.
இந்தியாவின் டாடா மோட்டோர்ஸ், மகிந்திரா அன் மகிந்திரா, ரிவிஎஸ், ஹீரோ மோட்டோர் கோர்ப்பரேசன், பசாஜ் ஓட்டோ அன் மாருதி சுசுகி, போன்ற நிறுவனங்கள் சிறிலங்காவை தமது முக்கிய ஏற்றுமதிச் சந்தையாக கொண்டுள்ளன.
சிறிலங்கா அரசாங்கம் இறக்குமதி தீர்வையை அதிகரித்ததால், இந்திய வாகனங்களின் விலை அதிகரித்து அவற்றுக்காக கேள்வி குறைந்துள்ளது.
ஏற்றுமதித் தீர்வை அதிகரிக்கபட்டதால், டாடா நனோ கார் ஆரம்பத்தில் விற்கப்பட்ட விலையை விட இரட்டிப்பாக அதிகரித்தது.
சிறிலங்காவில் ஆரம்பத்தில் 9.25 இலட்சம் இலங்கை ரூபாவுக்கு விற்கப்பட்ட நனோ கார், தீர்வை அதிகரிப்பினால், 15.5 இலட்சம் ரூபாவாக அதிகரித்தது.
இதுபோலவே, 14 இலட்சம் ரூபாவாக விற்கப்பட்ட டாடா 207 கார், 25 இலட்சம் ரூபாவாக அதிகரித்தது.


சிறிலங்காவின் தீர்வை அதிகரிப்பினால் இந்திய வாகனங்களின் இறக்குமதி வெகுவாக குறைந்துள்ளது.
கடந்த நிதிஆண்டின் இறுதிக் காலாண்டில் 20 ஆயிரம் தொடக்கம் 22 ஆயிரம் வரையாக இருந்த ஒரு மாதத்துக்காக பஜாஜ் வாகனங்களின் இறக்குமதி, இந்த நிதிஆண்டின் முதல் காலாண்டில் மாதம் ஒன்றுக்கு 8 ஆயிரம் தொடக்கம் 10 ஆயிரம் வரையாக குறைந்து விட்டது என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
சிறிலங்காவின் வாகனச்சந்தையில் இந்தியா மிகப்பெரிய பங்கை வகித்து வருகிறது.
அதில் பஜாஜ் நிறுவனம் மட்டும் 60 வீத பங்கைக் கொண்டுள்ளது.
கடந்த ஆண்டில் இந்தியா 6 பில்லியன் டொலர் பெறுமதியான வாகனங்களை ஏற்றுமதி செய்தது.


இதில் சிறிலங்காவுக்கான ஏற்றுமதி 800 மில்லியன் டொலர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, February 26, 2013

சிரிக்க நான் ரெடி ! நீங்கள் ரெடியா ? நகைச்சுவை

 

(வசனம் தேவையா இதுக்கு)

ஆஸ்பத்திரியில் இருக்கும் மனைவி கணவனிடம்:,

மனைவி: நான் செத்துப் போனா நீங்க என்ன செய்வீங்க?

கணவன்: நானும் செத்துப் போயிடுவேன்.


மனைவி: என் மேல உங்களுக்கு அவ்வளவு அன்பா?

கணவன்: அதெல்லாம் தெரியாது. ஆனால் பெரிய பெரிய சந்தோஷங்களை தாங்கிக்கிற சக்தி என்னுடைய இதயத்துக்கு இல்லைன்னு மட்டும் தெரியும்!


மனைவியை இழந்த கணவனிடம் நண்பன்,


நண்பன் : துக்கத்தை உனக்குள்ளேயே அடக்கி வைச்சுக்காதே. மனசு விட்டு அழுதிடு

.
கணவன்: நானும் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்துட்டேன், அழுகையே வர மாட்டேங்குதுடா.

நண்பன்: கவலைப்படாதே! உன்னுடைய மனைவி திரும்பவும் உயிருடன்    வந்துட்டதா நினைச்சுக்கோ, அழுகை தன்னாலே வந்துடும்.


டீச்சர்:-உன்கிட்ட இருக்கிற திறமையை பற்றி சொல்லு

மாணவன் :-நான் பின்னாடி நடப்பேன்

டீச்சர் :-உண்மையாகவா எவ்வளவு  தூரம்?

மாணவன் :-உங்க பொண்ணு எவ்வளவு தூரம் நடக்கிறாவோ  அவ்வளவு தூரம்வரை!!


 

கணவன் :- டார்லிங் உன்னுடைய பிறந்தநாளுக்கு நெக்லஸ் வாங்கி வந்திருக்கேன் பாரு

மனைவி:-ஒரு கார் வாங்கி தந்திருக்கலாமே ?

கணவன் :-கார் கவரிங்க்கிலே  வராது டார்லிங்

மனைவி :-??????????


மனைவி:- என்னங்க என்னை முதன்முதலா பார்த்தப்ப போட்டிருந்த  கிரின் கலர் சேர்ட் எங்கங்க காணோம் போடிறதில்லையா? ?

கணவன்:- ராசியில்லைன்னு அப்பவே தூக்கி ஏறிஞ்சிட்டன் மீனு


சார் நீங்க எந்த கடவுளை கும்புடுவிங்க ?

கல்யாணத்துக்கு முன்னாடியா பின்னாடியா ?

கல்யாணத்துக்கு முன்னாடி சொல்லுங்களேன்

கல்யாணத்துக்கு முன்னாடி முருகன்தான் ரொம்ப பிடிக்கும் .

அப்போ பின்னாடி \

அதையேன் கேக்கிறிங்க கல்யாணத்துக்கு அப்புறம் நான் வேண்டாத தெய்வமே இல்லை


 

திடீரென ஏற்படும் பூகம்ப்த்தினால் ஒருபெண் கிழே விழுந்து விடுகிறாள் பின்பு வீட்டுக்கு வரும் கணவனிடம்

மனைவி:-எங்க திடீரென பூகம்பம் வந்து நான் கிழே விழுந்திட்டன்

கணவன்;-நல்லா யோசிச்சு பாரு ,பூகம்பம் வந்து நீ விழுந்தியா இல்ல, நீ விழுந்த பிறகு பூகம்பம் வந்துச்சா ?


செல்பேசி பேசி வாடிக்கையாளர்  சேவைக்கு போன் போட்ட வாடிக்கையாளர்

மறுமுனை பெண் : என்ன சார் வேண்டும உங்களுக்கு ?

வாடிக்கையாளர் :-இந்தமாதம் என்னோட மொபைல் பில் எவ்வளவுன்னு 

பெண் :-உங்க போன்ல இருந்து 611இந்த நம்பருக்கு கால் பண்ணினிங்கன்னா உங்கட கரண்ட் பில் எவ்வளவுன்னு சொல்லுவாங்க .

வாடிகையாளர் :-ஹாலோ உங்ககிட்ட கரண்ட் பில்லா கேட்டேன் என்னோட மொபைல் பில்தானே கேட்டேன் .எங்க வீட்டு கரண்ட் பில்லை சொல்ல நீங்க யார் ?

பெண் ;-??????????


ஒருவர்:- நேத்து ஆபீஸிலிருந்து வீட்டுக்குபோகும்போது பக்கத்து வீட்டுக்கு போய்ட்டேன்

மற்றவர் ;- அப்புறம்

ஒருவர்:- களைப்பா வ்ந்திருப்பிங்க காபியோட வாரேனுன்னு ஒரு குரல் கேட்கவும்இது நம்ம வீடு இல்லே ஏன்னு புரிஞ்சுகிட்டேன்


டாக்டர்;- ஆபரேசன் முடிஞ்சு நிங்க நடந்தே வீட்டுக்கு போகலாம்

நோயாளி :- ஆட்டோக்கு கூட காசு இருக்காதா டாக்டர்

டாக்டர் :-???????

Friday, February 22, 2013

இலங்கை இராணுவத்தினரும் முஸ்லிம் ஊர்காவல் படையினரும் இணைந்து செய்த தமிழர் மீதான படுகொலை

 

ஒரு வரலாற்று பார்வை :-

அம்பாறை உடும்பன் குளப்படுகொலையின் 27 வது நினைவு தினம் கடந்த பத்தொன்பதாம்  திகதியாகும் சிறிலங்கா இராணுவத்தினராலும், முஸ்லீம் ஊர்காவல் படையினராலும் 130க்கு மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 

1986ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 19ம் திகதி அம்பாறை மாவட்டம் உடம்பன்குளத்திலுள்ள மலையடிவார வயல்களில் தங்களது பிள்ளைகளுடன் தங்கியிருந்து வயலில் அறுவடை செய்து கொண்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்களை கொண்டை வெட்டுவான் இராணுவ முகாமிலிருந்து கவச வாகனங்களில் சென்ற சிறீலங்கா இராணுவத்தினரும் இஸ்லாமிய ஊர்காவல்படையினரும் சுற்றிவழைத்து கைது செய்து ஆண் பெண் குழந்தைகள் என்ற பேதமின்றி கூட்டுப்படுகொலை செய்தனர்

இங்கு பிடிக்கப்பட்ட ஆண்களையும் பெண்களையும் குழந்தைகளையும் கொடூரமாக சித்தரவதை செய்து படுகொலை செய்தனர். பெண்களை கூட்டாக பாலுறவுக்குட்படுத்தி படுகொலை செய்ததாக உயிர்தப்பியவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறீலங்கா படையினரின் தாக்குதலில் படுகாயமடைந்திருந்த பலர் உயிருடன் தீவைத்து எரிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் நடந்து இரண்டு நாட்களின் பின்னர் 21.02.1986 அன்று வணபிதா சந்திரா பெர்ணான்டோவின் ,தலைமையில் அங்கு சென்று குழுவினர் அரைகுறையாக எரிந்த நிலையிலிருந்த தொண்ணூற்றெட்டுப் பேரினது உடல்களை எடுத்து அடக்கம் செய்தார்கள். இந்த சம்பவத்தில் 130க்கும் அதிகமானோர் படுகொலை செய்ப்பட்டிருந்தனர்

இந்த இனப்படுகொலைத் தாக்குதலுக்கு சிறீலங்கா இராணுவத்தின் லெப்டினன்ட் சந்திரபால என்பவர் தலைமை தாங்கியதாகவும் . முஸ்லீம் ஊர்காவல் படையை சேர்ந்த 12 பேர் இந்த படுகொலையில் சம்பந்தப்பட்டிருந்ததாகவும் அப்போது குற்றம்சாட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

சரி குற்றவாளிகள் என்ன ஆனார்கள் என்கிறிர்களா? குசும்புதானே  உங்களுக்கு

எத்தனை எத்தனையோ படுகொலைகள்.ஒன்றிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்ட கதையே இல்லை .இலங்கையில் நாயைக் கொன்றால் விசாரணை உண்டு .தண்டனை உண்டு .ஆனால் மனிதனை கொன்றால் எதுவுமே கிடையாது அந்த மனிதன் தமிழனாக இருக்கும் பட்சத்தில்.

இதுதான் இலங்கையின் உண்மை நிலை 

Wednesday, February 20, 2013

முஸ்லிம் பதிவரின் ம(த)னக்குமுறல் !!!!!!!!!

அண்மையில் வலையில் எதிர்பாராமல் ஒரு பதிவரின் மத (ன) குமுறலை படிக்க நேர்ந்தது மத வெறி எப்படி மனிதத்தினை கொல்கிறது பார்த்திர்களா?

முஸ்லிம் பெண்களின் காதல் சமுதாயத்தின் மானக்கேடு காரணங்களும் எச்சரிக்கைகளும் இது அவரின் பதிவு .எப்படி எப்படி மதவெறி இஸ்லாமியர்களை ஆட்டுகிறது என்பதற்கு ஒரு உதாரணம்

இனி அவரின் பதிவு :-------

பாதுகாப்பு கோரி காதல் ஜோடி பர்வானா & சுப்ரமணியன் எஸ்.பி., யிடம் மனு.

கடலூர்:(( JULY – 2010)  சிதம்பரம் அண்ணாகுளம் கீழக்கரையைச் சேர்ந்தவர் இன்ஜினியர் சுப்ரமணியன்(25).சிதம்பரம் மாரியம்மன் கோவில் தெரு கவுஸ்மொய்தீன் மகள்பர்வானா(19). இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இது பர்வானா பெற்றோருக்கு தெரிய வந்ததால் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி பதிவுத் திருமணம் செய்து கொண்டனர்.பின்னர் சுப்ரமணியன், பர்வானா இருவரும் தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கோரி பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தனர். இதனையடுத்து மனு மீது நடவடிக்கை எடுக்க எஸ்.பி., சிதம்பரம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

முஸ்லிம் பெண், ஹிந்து காதலனுடன் தலைமறைவு.

மதுரை; (ஜூன்.2010) கடந்த மாதம் திருச்செந்தூருக்கு அருகில் உள்ள முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ஊரில் ஒரு தீன்குலப்பெண் மதுரையில் ஹாஸ்டலில் தங்கி M.PHIL  படித்து வந்தவர். ஹிந்து காதலனுடன். வீட்டுக்கு தெறியாமல் தலைமறைவு. மாற்றுமத ஹாஸ்டல் தோழிகள்தான் காதலுக்கு உதவி புரிந்து, வீட்டை விட்டு வெளியேற திட்டம் வகுத்து. ஜோடிகளை சேர்த்து வைத்துள்ளார்கள். செய்தி அறிந்த பெண்ணின் தாயார் அதிர்ச்சியில் கோமா நிலையில். இருக்கிறார்.

கடந்த சில மாதங்களாக இப்படியான செய்திகள் தொடர்ந்து வருகிறது.

முஸ்லிம் சகோதர, சகோதரிகளே!!  எச்சரிக்கை – கவனம் – உஷார்.

மார்க்கம் அறியாத பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளுக்கும் மார்க்கத்தை கற்றுக்கொடுக்காமல்.  வீட்டிலும் மார்க்கத்தை பேணாமல்.  தங்களின் பொறுப்பை மறந்து..,.

தங்களது பிள்ளைகளுக்கு ””செல்லம்” ”பாசம்” ஃபேஷன்” என்ற பெயரில் சுதந்திரம் கொடுத்து. பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்வதாக கருதி அவர்கள் வழிகெட காரணமாகிறார்கள்.

ஏற்கனவே ஈமான் என்றால்? என்ன இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் எப்படி வாழ வேண்டும். என்ற அடிப்படை மார்க்க அறிவு கூட இல்லாமல். ஹிஜாப் முறையை சரிவர பேணாமல்,, அன்னிய ஆண்கள் (மஹ்ரம்) விஷயத்தில் எச்சரிக்கை இல்லாமல், வளரும் நம்முடைய சமுதாய பெண் பிள்ளைகள், கல்வி கற்க வேண்டி வீட்டை விட்டு வெளியேறி,பள்ளிக்கூடம். காலேஜ், ட்யூசன், கம்ப்யூட்டர் கிளாஸ்,ட்ரைனிங்கிளாஸ் , ஹாஸ்டல், இண்டெர்நெட் கஃபே,ஸ்கூல்-டூர், காலேஜ்-டூர், என்று போகும் இடங்களில், மாற்று மத பெண்களுடனும், ஆண்களுடனும், பழகும் வாய்ப்பும், நட்பும், தோழமையும், ஏற்பட்டு அவர்களது பழக்க வழக்கங்களையும் அவர்களது கலாச்சாரத்தையும். பின்பற்ற ஆரம்பிக்கிறார்கள். இதன் காரணமாக சில மாற்று மத இளைஞர்கள் நமது முஸ்லிம் தீன் குலப்பெண்களுக்கு அண்ணன்களாகவும். நண்பர்களாகவும், ஆகிவிடுகிறார்கள்.

இவ்வாறு அண்ணன்களாகவும், நண்பர்களாகவும், பழகும் மாற்றுமத இளைஞர்கள். காதலர்களாக ஆகிவிடுகிறார்கள்.

இன்றைய இளம்பெண்கள் காம உணர்வால் தூண்டப்பட்டு காதல் எனும் வலையில் சிக்கி மானத்தையும் வாழ்க்கையையும் இழக்கக்கூடிய நிலைமை உருவாக “சினிமா’ முதல் காரணமாக இருக்கிறது.

“சினிமா’ என்றவுடன் தியேட்டர்தான் ஞாபகம் வரும். ஆனால் இன்று ஒவ்வொரு முஸ்லிம் வீடும் தியேட்டராகவே இருக்கிறது.

அதுதான் ( T.V ) தொலைக்காட்சி. (எல்.சி.டி – 20 இன்ச் முதல் 60 இன்ச் வரை திரைகள் வசதிக்கு ஏற்றவாறு)

கேபில் கனெக்சன் போதாது என்று டிஷ்கள். மற்றும் DVD  பிளேயர்கள் with USB-PORT.

வீடியோ-மொபைல்கள்@இண்டெர்னெட்,. >>>   DESK-TOP கம்ப்யூட்டர்@இண்டெர்நெட். வசதி இருப்பின் >>>

லேப்டாப் கம்ப்யூட்டர் @USB இண்டெர்நெட்மோடம். என்று இந்த “சினிமா’” அனாச்சாரங்களும் ஆபாசங்களும் நமது வீட்டிலிருந்து – பாக்கெட்டு வரை கிடைக்க >>  பெண்களின் பெற்றோர்களும், பெண்ணின் கணவனும். உழைக்கிறார்கள்.

கேட்டதை வாங்கி கொடுப்பவர்களே!!

  • மேற்கண்ட சாதனங்களை பிள்ளைகள் எப்படி பயன்படுத்துகிறார்கள்.
  • யார் யாருடன் தொடர்பு கொள்கிறார்கள். எத்தனை சிம் கார்டுகள் உபயோகிக்கிறார்கள்.
  • மாற்று மத தோழிகள் வீட்டுக்கு சென்று என்ன செய்கிறார்கள். அவர்களது வீட்டில் ஆண்களோடு பழகுகிறார்களா?
  • தனி அறையில் இருந்து T.V  யில் எந்தெந்த சேனல்கள் பார்க்கிறார்கள். என்ன சி.டி.பார்க்கிறார்கள்.
  • கம்ப்யூட்டரில் (இண்டெர்நெட்டில்) தனிமையில் இருந்து என்ன பார்க்கிறார்கள் என்ன செய்கிறார்கள்.
  • இ-மெயிலில், சாடிங்கில் யார் யாருடன் தொடர்பு கொள்கிறார்கள்…

என்பதை கேட்டு தெறிந்து கொள்கிறீர்களா? அல்லது எச்சரிக்கை உணர்வோடு கண்காணிக்கிறீர்களா?

என்னோட பிள்ளையை நானே கண்காணிப்பதா? சந்தேகப்படுவதாக ஆகாதா? என்று கருதாமல். என்னுடைய பிள்ளையின் வாழ்க்கை, குடும்ப மானம், இஸ்லாத்தின் கண்ணியம். இவற்றை முன்னிறுத்தி. கவனமாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.. இது விசயத்தில் சிந்தித்து செயல் பட வேண்டியது. ஒவ்வொரு தீன்குலப்பெண்ணின் பெற்றோருக்கும். ஒவ்வொரு தீன்குலப்பெண்ணின் கணவனுக்கும். மிக மிக அவசியம். என்பதை மேற்காணும் செய்திகள் நமக்கு உணர்த்துகின்றன.

முஸ்லிம் பெண்களின் வாழ்வை நாசமாக்க வேண்டும். கற்பை சூரையாட வேண்டும், என்று திட்டமிட்டு செயல்படும் நாசகார கும்பல்கள். ஹிந்து மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் பயிற்சி கொடுத்து வருகின்றன.

முஸ்லிம் பெண்களை கவர்வது எப்படி, நல்லவர்களாக அன்பை பொழிபவர்களாக நடித்து வலையில் சிக்கவைப்பது எப்படி, மயக்க மருந்துகள் கொடுத்து வீடியோ பிடித்து மிரட்டி பணிய வைப்பது. இந்த காரியங்களுக்கு தோழிகளாக இருந்து எப்படி செயல்பட வேண்டும் என்று பயிற்சிகளும் கொடுக்கிறார்கள்.

ஒரு முஸ்லிம் பெண்ணை திருமணம் முடித்தாலோ. அல்லது திருமணமான பெண்ணை தன் வலையில் சிக்க வைத்தாலோ – அவர்களுக்கு ஒரு லட்ச ரூபாயும் அன்பளிப்பும். வழங்கப்படுகிறது.

இந்த செய்தியை (எச்சரிக்கையை) பலமுறை இந்த குழுமத்தில் பார்த்து இருக்கிறோம்.

நம் சமுதாய பெண்களின் பெற்றோர்களிடமும், கணவன்மார்களிடமும், விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

ஈமானுக்கு சோதனையான காலம் இது.

விபச்சாரத்தின் அழைப்பு வீட்டுக்குள்ளும், பாக்கெட்டுக்குள்ளும், வந்துவிட்டது, முஸ்லிம் பெண்களுக்கு (ஷைத்தான்கள்) மொபைல்களின் மூலமும் இண்டெர்னெட்டின் மூலமும் நேரடியாகவும் அழைப்பு விடுகிறார்கள்.

நமது பெண்கள் பலர் பழியாகிவிட்டார்கள். இனி இப்படியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க

மார்க்கத்தை பின்பற்றுங்கள், ஈமானை உறுதிப்படுத்துங்கள். முஸ்லிம் பெண்களிடத்தில் தொழுகையை நிலைநிருத்தும்படி ஏவுங்கள்.

முஸ்லிம் சகோதரர்களே!! மணப்பெண் தொழுகையாளிதான் என்பதை உறுதி செய்த பின் மணமுடியுங்கள்.

தொழுகை மானக்கேடான காரியத்தை விட்டும் பாதுகாக்கும்.இது அல்லாஹ்வின் வாக்கு.

பெற்றோர்களே!! உங்கள் பிள்ளைகளை நரகத்தின் தீயிற்கு இறையாக வளர்க்காதீர்கள். உங்கள் குழந்தைகள் உங்களுக்கு எதிராக சாட்சி சொல்லும் நிலைக்கு ஆகிவிடாதீர்கள். பெண்கள் உங்கள் அமானிதம் பேணி வளருங்கள்.

இவ்வுலகில் – நாகரிகத்தையும், கவுரவத்தையும்,  அந்தஸ்தையும் விட. மானம், மரியாதையும். ஈமானும் இறையச்சமும்தான் முக்கியம்.

அல்லாஹ். அர்ரஹ்மான் நம் அனைவரையும். மானக்கேடான விஷயத்தில் இருந்து பாதுகாத்து, ஈமானோடு வாழவைத்து முஸ்லிமாக மரணிக்க செய்வானாக!  ஆமீன்.

சிந்திப்போம் செயல்படுவோம்.

உங்கள் மார்க்க சகோதரன்,

S.N.அப்துல் அலீம் ( சவூதி ஓஜர் –ரியாத் )  அய்யம்பேட்டை

எங்கள் இயக்கமும்+மார்க்கமும் தீனுல் இஸ்லாமாகும்,அதன் உறுப்பினர்களாகிய நாங்கள் முஸ்லிம்கள்.

மார்க்க கல்வியை தேடுவது (கற்பது) அனைத்து முஸ்லிம்கள் ( ஆண்-பெண் ) மீதும் (கட்டாய) கடமையாகும்.

அவரின் கருத்து இது. கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன

Thursday, January 03, 2013

என்ன ஆச்சு ? லண்டனில் இந்திய டாக்டர்கள் சஸ்பென்ட்?பேஸ் பேஸ் ரொம்ப நல்லா இருக்கு !!!!!!!!

 

நேற்றைய  தினம் முன்னர் பிரிட்டனில் வசிக்கும் இந்தியர்கள் அவமானத்துக்கு உள்ளாக வேண்டிய ஒரு நிலை ஒரு செய்தியால் ஏற்பட்டிருக்கிறது  .

பல்வேறு புகார் குற்றச்சாட்டுகளுக்காக பிரிட்டனில் பணிபுரிய அனுமதி மறுக்கப்பட்ட, அல்லது சஸ்பென்ட் செய்யப்பட்ட வெளிநாட்டு டாக்டர்களில் அதிக எண்ணிக்கையானவர்கள், இந்தியாவை சேர்ந்த டாக்டர்கள். என்ற ஒரு தகவலை  பிரிட்டனின் ரெலிகிராப் பத்திரிக்கை புள்ளிவிபரம் சகிதம் வெளியிட்திருக்கிறது.இது கடந்த ஜந்து ஆண்டு கால புள்ளிவிபரம் .அந்த பத்திரிகை வெளியிட்ட அந்த புள்ளிவிபரம் பின்னர்  ஜி.எம்.சி.யால்  உறுதி செய்யப்பட்டுள்ளது.(பிரிட்டன் மெடிக்கல் கவுன்சில் )

இவர்கள் மீதான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட காரணங்கள், பற்றி அப்பத்திரிகை தெரிவித்திருப்பவை   நோய்கள் பற்றிய தவறான, உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் முடிவுகளை எடுத்தல், போதிய ஆங்கில புலமை இல்லாமையால் நோயாளிகள் சொல்வதை புரிந்து கொள்ளாமை, மற்றும் பாலியல் ரீதியான சேஷ்டைகள் (sexual misbehaviour)

கடந்த 5 ஆண்டுகளில் பிரிட்டன் மெடிக்கல் கவுன்சிலினால்  நடவடிக்கை எடுக்கப்பட்ட டாக்டர்களில் 63 சதவீதமானோர், வெளிநாடுகளில் படித்துவிட்டு பிரிட்டனுக்கு வந்த டாக்டர்கள். இவர்களில் அதிக எண்ணிக்கையானவர்கள் இந்திய டாக்டர்கள், அதற்கு அடுத்த இடத்தில், நைஜீரியா, மற்றும் எகிப்து நாட்டு டாக்டர்கள் உள்ளனர்.

இப்போது சொல்லுங்கள் படிப்புக்கும் பண்புக்கும்  எதாவது  சம்பந்தம் இருக்குதா என்று ?




இனி அடுத்த செய்தி

சென்னையை சேர்ந்த தமிழரான  எம். ஜி வெங்கடேஷ் மன்னார் என்பவர்  கனடாவின் உயரிய விருதை பெறுகிறார். இவருக்கு சமூக சேவைக்காக, கனடாவின்  உயரிய விருதான,   ஆர்டர் ஆப் கனடா என்ற விருது வழங்கப்படுவதாக  கனடாவின்  கவர்னர் ஜெனரல் அறிவித்துள்ளார்.ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு எதிராக  வெங்கடேஷ் சிறப்பாக பணியாற்றியதற்காக இந்த விருது வழங்கப்படுவதாக  கூறியுள்ளார்.   சென்னையில் பிறந்த வெங்கடேஷ் மன்னார், சென்னை ஐ.ஐ.டி.,யில்  பிடெக் பட்டம் முடித்துள்ளார். பின்னர்  அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன்  பல்கலை.யில் மேல்படிப்பை முடித்தார்.இந்த செய்தியால் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

.

கனேடிய பிரதமர் ஸ்ர்ரிபன் காப்பருடன்  வெங்கடேஷ் மன்னார் .



கடந்த முறை பல சர்ச்சைகளுக்கு உள்ளாகி பின்னர் காலநிலையால் ஒத்தி வைக்கப்பட்ட இளையராஜாவின்  எங்கேயும் எப்போதும் ராஜா இசை நிகழ்ச்சி தற்போது மீண்டும் பெப்ரவரி பதினாறாந்திகதி மீண்டும் இடம்பெற இருக்கிறது ரொறன்ரோவில். .பல நுற்றுக்கணக்கான இசைக்கலைஞர்கள் ,நடிகர்கள் கலந்து கொள்வதாக பத்திரிகைகளில் விளம்பரங்கள் காண முடிகிறது .சர்ச்சைகள் இல்லாமல் சுபமாக நடந்து முடியும் என் நம்புகிறேன் .

 

பிறந்திருக்கும் இப் புதிய ஆண்டு எல்லோருக்கும் நல்லதொரு ஆண்டாக அமைய எனது வாழ்த்துக்கள்.

Monday, November 19, 2012

துப்பாக்கி -- ஸிலிப்பர் கில்லர் - -சிறுவர்கள்

 

Terror: Children train with pistols

நன்றி ---மிரர்

ன்று வெளியான இங்கிலாந்தின மிரர் பத்திரிகையில் வெளிவந்த படத்தினையே மேலே பார்க்கிறீர்கள் பாகிஸ்தானில் உள்ள வடக்கு வாஸிரிஸ்தான் பகுதியில் சுமார் 5 வயதான இளம் சிறுவர்களை  மூளைச் சலவை செய்து, ஜிகாதி எனப்படும் தற்கொலைப் படையினராக அல்குவைதா தீவிரவாதிகள் மாற்றும் படமே இதுவாகும் .இந்தப்பகுதி ஆப்கானுக்கு மிகவும் அருகில் இருக்கும் பகுதியாகும்  

ஏற்கனவே இறந்த தீவிரவாதிகளின் ஆதரவற்ற குழந்தைகளை , தந்தையர் வழியிலேயே(ஜிகாதி) அவர்களும் செல்ல வேண்டும் என்று போதிக்கப்பட்டு மூளைச் சலவை செய்யப்பட்டு, அவர்களுக்கு குண்டு வெடிப்பு பயிற்சி தரப்படுகிறது. .

தலிபான்களுக்காகப் போராடும் கூலிப் படையினரைத் தயார் செய்து அனுப்பும் அமைப்பாக அல்குவைதா மாறியுள்ளது தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 20 வருடங்களில் 200க்கும் மேற்பட்ட தீவிரவாதச் சதிச் செயல்கள் இந்த அமைப்பினால் நிகழ்த்தப் பட்டுள்ளன. அல்குவைதா அமைப்பு வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், சிரியா, சோமாலியா உள்ளிட்ட நாடுகளுக்கும் தீவிரவாத நடவடிக்கைகளைப் பரப்ப சிறுவர்களைத் தயார் செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன என்று தீவிரவாதம் குறித்த ஆய்வுப் பிரிவின் தலைவர் நீல் டோய்ல் தெரிவித்துள்ளார்.

இன்று வெளியான இந்த செய்தி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளதுடன் அனைத்துலக ஊடகங்களில்  இடம்பெற்றுள்ளதும் குறிப்பிட்டத்தக்கது .உணமையில் இது ஒரு கண்டிக்கப்பட வேண்டிய செயல்.உணமையில் இவ் சிறுவர்கள் எதையும் ஆராய்ந்து பார்க்க முடியாதவர்கள் .எது சரி எது  பிழை என உணரமுடியாதவர்களை தீவிரவாதிகள் தமது நலன்களுக்காக,மதத்திற்காக பயன்படுத்துவது என்பது அவர்கள் வணங்கும் இறைவனாலேயே ஏற்றுக்கொள்ள முடியாதது .இது வன்மையாக கண்டிக்க கூடிய ஒரு செயல் ஆகும் .

மதம் என்பது மனிதனை வழிப்படுத்துவதற்கே  அன்றி மதமே வாழ்க்கை அல்ல என்பதை எப்போது புரிந்து கொள்வார்களோ?

Monday, November 12, 2012

வந்துட்டேன்யா…..வந்துட்டேன்யா …. மீண்டும் “வைகைப்புயல்” வடிவேலு

 

மிழ் சினிமாவுக்கு  1991ல் ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் அறிமுகமான வடிவேலு,கொஞ்சக்காலம் தமிழ் சினிமாவில் ஒரு கலக்கு கலக்கியவர் .ஆபாசமில்லாத அப்பாவி கிராமத்தானாக பல படங்களில் நடித்து பலருடைய  இதயங்களில் நகைசுவையால் கோலோச்சியவர்.வடிவேலுவின் மொழி நடை ,நடையுடை பாவனைகள் பலரையும் கவர்ந்தவை ,அவரின் நகைச்சுவை காரணமாகவே மதுரைத்தமிழ் உலகெங்கிலும் பிரசித்தி பெற்றது .

இப்படி தமிழ் திரையுலகில் கோலோச்சிய வைகைப்புயலின் வாழ்வில் ஏற்பட்ட   அரசியல் தொடர்பால்  அவரின் திரை உலக பயணம் ஒரு முடிவிற்கு வந்தது .இது உண்மையில் அவரின் ரசிகர்களுக்கு ஒரு பெரிய அடியாகும் .உண்மையில் அவர் கிழே உள்ள பேட்டியில் கூறியபடி அவருக்கு போட்டி அவர்தான் .இது உண்மையும்  கூட. அவரின் அரசியல் அவரின் தனிப்பட்ட விடையம் .நல்லதொரு நகைச்சுவை கலைஞன் அரசியலில் ஈடுபட்டு அரசியல் பண்ணப்பட்டதில் நொந்து போனது அவரின் நகைசுவையினை ரசித்த  ரசிகர்கள் தான் .அந்த ரசிகர்களின் வாதத்தினை போக்க வந்திருக்கும் ஒரு செய்தி இதுதான்

நீண்ட இடைவெளிக்கு பின்பு தற்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

மீண்டும் நடிப்பது குறித்து வடிவேலு கூறுகையில், நான் சினிமாவை விட்டு விலகி விடவில்லை. இன்னும் இந்த துறையில்தான் இருக்கிறேன். சில நாட்கள் ஓய்வில் இருந்தேன். தற்போது புதிய உத்வேகத்தோடு மீண்டும் நடிக்க வந்துள்ளேன்.

புதுப்படங்களுக்கு ஒப்பந்தமாகி இருப்பது எனக்கு புத்துணர்ச்சி அளிப்பது போல் உள்ளது. என் ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன்.

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ‘ஆப்பிரிக்காவில் வடிவேலு’ என்ற காமெடி கதையுடன் என்னை அணுகினார். அப்படத்தில் முக்கிய கேரக்டரில் நான் நடிக்கிறேன்.

கதை ஆப்பிரிக்காவில் நடப்பதுபோல் இருக்கும். எனவே படப்பிடிப்புக்காக அங்கு செல்ல இருக்கிறோம். ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கும்.

‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக உள்ளது. அதிலும் நான் நடிக்கிறேன்.

சந்தானத்துடன் போட்டி என்பதெல்லாம் இல்லை. சினிமா கடல் போன்றது. யாரும் இங்கு வரலாம். திறமையானவர்கள் நீண்ட காலம் நிலைக்க முடியும். எனக்கு நானே தான் போட்டி. வேறு யாரும் அல்ல.

பூபதிபாண்டியன் இயக்கும் ‘பட்டத்து யானை’ படத்தில் நடிக்க என்னை யாரும் அணுகவில்லை.

அரசியல் நெருக்கடிகள் எதுவும் எனக்கு தற்போது இல்லை என்றும் சினிமாவில் மட்டுமே எனது முழு கவனத்தையும் செலுத்த போகிறேன் எனவும் கூறியுள்ளார்.

உணமையில் இது அவரின் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி.இப்போதே  மேற்படி இரு படங்களை பற்றிய கற்பனை மனதினில் விரிகின்றது .வைகைப்புயலை மீண்டும் தமிழ்த்திரையுலகம் அழைத்துவரும் .எஸ் .ரவிக்குமாருக்கும் ,சிம்புதேவனுக்கும் வடிவேலுவின் ரசிகன் என்ற வகையில் எனது வாழ்த்துக்கள் .உண்மையில் எனது மனம் சோர்வுறும் வேளைகளில் எல்லாம் நான் எனது சோர்வை போக்க செய்வது வடிவேலுவின் நகைச்சுவைகளை பார்ப்பது ஆகும் .

நல்ல நடிகன் மட்டும் அல்ல நல்லதொரு பாடகனுமாகிய வடிவேலு பாடிய பல பாடல்கள் எம் மனதை மகிழ்விக்க வல்லன.அப்படிப்பட்ட சில பாடல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன .கேட்க விரும்பின் இங்கே சுட்டவும் .

நன்றிகள்  .