Saturday, March 08, 2025
மகளிர் தின நல் வாழ்த்துக்கள் !
Sunday, March 02, 2025
எலன் மாஸ்க்கும் கனேடிய குடியுரிமையும் !
ஈலன் மாஸ்க்கினை தெரியாதவர்கள் இன்றைய காலத்தில் இருக்க மாட் டார்கள் .டெஸ்ல்லா கார்களுக்கு சொந்தக்காரர் மட்டுமல்ல ஸ்ரார் லிங் ,ஸ்பேஸ் எக்ஸ் , எக்ஸ் போன்ற நிறுவனங்களுக்கும் சொந்தக்காரர் ஆவார் .. இவர் டிரம்புக்குடனான அரசியலுக்கு வரும் வரையில் இவர் ஒரு தீவிர வலதுசாரி என்ற விபரம் பலருக்கும் தெரியாத உண்மை ...
தென்னாப்பிரிக்காவில் பிறந்தாலும் இவரின் தாய் கனடாவை சேர்ந்தவர் என்பதால் இவர் கனடாவின் ஒரு பிரஜை என்பதும் குறிப்பிடத்தக்கது .அதாவது அமெரிக்க,கனடா நாடுகளின் குடியுரிமையை இவர் வைத்தது இருக்கிறார் .
பிரச்சனை இங்கு எப்படி வந்தது என்றால் ட்ரம்பின் ஆதரவாளராக இவர் செயற்பட தொடங்கிய பின்னர், கனடாவை பற்றி விமர்சனம் செய்த பின்னர்தான் கனேடிய மக்கள் கொதித்து எழுந்து இருக்கிறார்கள் .
இவரின் கனேடிய குடியுரிமையை பறிக்க வேண்டும் என்று பெரும்பாலான மக்கள் கருதி அண்ணளவாக 250,000 பேர் பாராளுமன்றத்தில் மனு ஒன்றை கொடுத்து இருக்கிறார்கள் .பொதுவாக இப்படியான மனுவை பாராளுமன்றம் பரிசீலிக்க 500பேர் கையெழுத்து வைத்தாலே போதும் என்ற நிலையில் இங்கு 250,000 பேர் கையொப்பம் இட்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .குற்றச்சாட்டுக்களாக 25% வரி விதிப்பு ,கனடாவை அமெரிக்காவின் 51 வது மாநிலமாக இணைக்க திட்டமிடல் ,கனேடிய தேர்தல்களில் பாதிப்பை ஏற்ப்படுத்த முயற்சித்தது போன்றவை இதில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றது ,
இனி பாராளுமன்றம் என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும் ,குடியுரிமை பறிக்கப்பட போகிறதா ? இது தேச துரோக குற்றசாட்டுக்களில் அல்லது தகவல் மோசடி குற்றச்சாட்டுக்களில் சிக்கும் போதுதான் ஒருவரின் குடியுரிமையை பறிக்க முடியும் .இலகுவாக அவரது குடியுரிமையை பறிக்க முடியாது என்றே சட்டவல்லுனர்கள் கருத்து தெரிவித்து உள்ளார்கள் ..
இருந்தாலும் அரசியலில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலைதான் இப்போது காணப்படுகிறது ,கீரியும் பாம்புமான ரஸ்யாவும் ,அமெரிக்காவுமே கைகுலுக்கி கொண்டுஇருக்கின்றன.இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று சில காலங்களுக்கு முன்னால் நினைத்து தான் பார்த்து இருக்க முடியுமா ?
மாற்றம் ஒன்றே மாறாதது
Saturday, February 22, 2025
பார்த்தது ,படித்தது , கேட்டது !
பார்த்தது ,படித்தது , கேட்டது
திருமண அழைப்பிதழ்களில் மணமகன் பெயருக்கு முன், திருவளர்ச்செல்வன், திருநிறைச்செல்வன் என்றெல்லாம் இருப்பதை, பார்த்து இருப்பீர்கள். இதன் அர்த்தம் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை.
திருவளர்ச்செல்வன், திருவளர்ச்செல்வி என்றால், அந்த குடும்பத்தின் மூத்த மகன் அல்லது மூத்த மகளின் திருமணத்தை குறிக்கும். திருமணம் நடக்கும் மகன் அல்லது மகளுக்கு, இளையவர்கள் உள்ளதை இது குறிக்கிறது. இதன் மூலம், தங்கள் வீட்டில் இளைய மகன், மகள் உள்ளதால், திருமண வயது நிரம்பினால் தொடர்பு கொள்ளலாம் என்பதை, மற்றவர்களுக்கு மறைமுகமாகத் தெரிவிக்கிறது.
திருநிறைச்செல்வன், திருநிறைச்செல்வி என்றால், தங்கள் வீட்டில் திருமணங்கள் நிறைவு பெற்றன. இனிமேல், மணம் முடிக்க மக்கள் இல்லை என்பதை குறிக்கிறது. நம் முன்னோர், எந்த தகவலையும் எவ்வளவு சுருங்கக்கூறி, தெளிவுபடுத்தினர் என்பதற்கு இந்த வார்த்தைகளும் ஓர் உதாரணம்.
நன்றி -தினமலர்
Wednesday, February 19, 2025
படித்ததில் பிடித்தது ! நீங்களும் படித்து பாருங்களேன்.
பார்த்தது ,படித்தது , கேட்டது
திருமண அழைப்பிதழ்களில் மணமகன் பெயருக்கு முன், திருவளர்ச்செல்வன், திருநிறைச்செல்வன் என்றெல்லாம் இருப்பதை, பார்த்து இருப்பீர்கள். இதன் அர்த்தம் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை.
திருவளர்ச்செல்வன், திருவளர்ச்செல்வி என்றால், அந்த குடும்பத்தின் மூத்த மகன் அல்லது மூத்த மகளின் திருமணத்தை குறிக்கும். திருமணம் நடக்கும் மகன் அல்லது மகளுக்கு, இளையவர்கள் உள்ளதை இது குறிக்கிறது. இதன் மூலம், தங்கள் வீட்டில் இளைய மகன், மகள் உள்ளதால், திருமண வயது நிரம்பினால் தொடர்பு கொள்ளலாம் என்பதை, மற்றவர்களுக்கு மறைமுகமாகத் தெரிவிக்கிறது.
திருநிறைச்செல்வன், திருநிறைச்செல்வி என்றால், தங்கள் வீட்டில் திருமணங்கள் நிறைவு பெற்றன. இனிமேல், மணம் முடிக்க மக்கள் இல்லை என்பதை குறிக்கிறது. நம் முன்னோர், எந்த தகவலையும் எவ்வளவு சுருங்கக்கூறி, தெளிவுபடுத்தினர் என்பதற்கு இந்த வார்த்தைகளும் ஓர் உதாரணம்.
நன்றி -தினமலர்
Tuesday, February 18, 2025
ரொரண்டோ -சற்று முன்னர் !
வருடம் பிறந்து ஒன்றரை மாதங்கள் ஆகிவிட்டது. எப்படி காலங்கள் நேரங்கள் நாட்கள் விரைவாக பறக்கின்றன என்பதை நினைத்தால் வியப்புதான் வருகின்றது. கடந்த சில தினங்களாக இங்கு ரொரன்டோவில் காலநிலை மிகவும் கடுமையாக இருக்கின்றது. அடுத்தடுத்து இரண்டு பனிப்புயல்கள் ரொரண்ரோவை தாக்கி நிறைய பனியை கொட்டி விட்டு சென்றிருக்கிறது , இன்று நண்பரோடு கதைத்தபோது நண்பர் சொன்னார் இப்பொழுதுதான் ரொறொண்டோவை பழைய மாதிரி பார்க்க முடிகிறது
அவர் சொன்னதன் அர்த்தம் என்னவென்றால் ஒரு 8,9 வருடங்களுக்கு முன்னர் எல்லாம் இப்படித்தான் பனி கொட்டும். பூமி வெப்பம் அடைவதன் காரணமாக இப்பொழுதெல்லாம் கொட்டும் பனியின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. இன்றைய தினம் மதியத்துக்கு பின்னர் அமெரிக்கன் டெல்டா விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று மினியாபொலிஸ் நகரிலிருந்து ரொறொன்றோ பியர்சன் விமான நிலையத்த்தில் தரையிறங்க முற்பட்ட நிலையில் கடும் காற்று , பனி காரணமாக தலைகுப்புற கவிண்டதில் சிலர் காயம். எழுபத்துநாலு பயணிகள் நாலு விமான ஊழியர்கள் விமானத்தில் இருந்த நிலையில் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். விசாரணை நடக்கிறது விபரங்கள் பின்னர் தான் தெரியவரும்.
Monday, November 11, 2024
வினை விதைத்தவன் தினை அறுப்பான் - கனடா-ஜஸ்டின் ரூடோ
தமிழில் ஒரு பழமொழி இருக்கிறது தலை போன பின்பு சாண் போனால் என்ன முழம் போனால் என்ன என்று ,கிட்டத்தட்ட
அதே போல ஒரு நிலைதான் கனேடிய மக்களுக்கு எவ்வளவு சேதத்தை உண்டாக்க முடியுமோ எல்லாவற்றையும் செய்தாகி
விட்டது .இப்போது கடுப்பாடுகள் .யாரை ஏமாற்ற இதை செய்கிறார்கள் ?மக்கள் எல்லாவற்றையும்
பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் .பதில் வரும் வருடம் கடுமையாக, கண்டிப்பாக கிடைக்கும் ,
Monday, July 22, 2024
கனடாவுக்கு படிக்க வந்தால், படித்துமுடித்துவிட்டு உங்கள் நாட்டுக்குத் திரும்பிப் போங்கள்.
கனடாவுக்கு படிக்க வந்தால், படித்துமுடித்துவிட்டு உங்கள் நாட்டுக்குத் திரும்பிப் போங்கள் என்று கூறியுள்ளார் கனடாவின் புலம்பெயர்தல் துறை அமைச்சர்.
கனடாவில் நிலவும் வீடுகள் தட்டுப்பாடு முதலான சில பிரச்சினைகள், கனடா பிரதமரின் அரசியல் வாழ்க்கைக்கு பெரும் சவாலாக மாறியுள்ளன.
ஆகவே, கனடாவுக்கு கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்களுக்கு வழங்கப்படும் விசா எண்ணிக்கையை கணிசமாக குறைத்துள்ளது கனடா
இந்நிலையில், சர்வதேச மாணவர்கள் தொடர்பில் மேலும் ஒரு கட்டுப்பாட்டைக் கொண்டுவர கனடா அரசு முயற்சி செய்துவருகிறது.
அதாவது, கனடாவுக்கு கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்களில் யார் கனடாவில் தொடர்ந்து தங்கியிருக்கலாம், யார் வெளியேறவேண்டும் என்பது குறித்து முடிவு செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுவருகிறார்கள்.
அது குறித்து பேசிய கனடா புலம்பெயர்தல் துறை அமைச்சரான மார்க் மில்லர், கனடாவுக்கு படிக்க வருபவர்கள், படித்துமுடித்துவிட்டு தங்கள் நாட்டுக்குத் திரும்பிப் போகவேண்டும், ஆனால், இப்போதைய நிலைமை அப்படி இல்லை என்று கூறியுள்ளார். அத்துடன் சர்வதேச மாணவர்கள் எனும் போர்வையில் நிறைய குற்றாவாளிகள் வந்து விடடார்கள் என்பதையும் சொல்லி இருக்கிறார்.
வரும் வ்ருடங்க்ளில் சர்வதேச மானவ்ர்களின் எண்ணிக்கையை கனேடிய அரசு பெருமளவில் குறைக்க இருக்கிறது ...
